நகரத்தில் வளர்ந்த பெண்ணான 18 வயது மாயாவிற்கு, கேட்டவரம்பாளையத்தின் இயற்கை அழகு மிகப் பிடித்து விடுகிறது. ஆனால் கிராமத்தின் பழக்க வழக்கங்கள் சில அவளுக்கு வியப்பையும், மெல்லிய அசூயையும் அளிக்கின்றன. கிராமத்து மனிதர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள். வாசுவிற்கு ஊரில் நல்ல மரியாதை. பட்டணத்துப் பெண்ணான மாயாவின் நடை, உடை, பாவனைகள்/நடத்தைகள் கிராம மக்களுக்கு புதிதாக இருக்கின்றன. கேட்டவரம்பாளையம் ஊருக்கு வந்த புதிதில், கிராமத்து மனிதர்கள், பெண்களின் சில கட்டுப்பெட்டித்தனங்கள் மேல் மனதுக்குள் சிறிய கேலியும், எள்ளலும் கொண்டிருக்கிறாள் மாயா.
Tag: வெங்கடேஷ்
உரூப்-ன் ‘உம்மாச்சு’
மனம் நொய்மையடைந்து வாழ்வில் சலிப்புற்றிருந்த மாயன் மலைக் காட்டுப் பகுதியில் ஒரு மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொள்கிறான். ஊரிலிருந்து வரும் மரக்காரும், ஹைத்ரோஸும் ஹஸ்ஸனுடன் மாயனின் உடலை லாரியில் ஊருக்கு எடுத்துப் போகிறார்கள். அப்பாவின் சாவிற்கு அப்துதான் காரணம் என்றெண்ணும் மரக்காரும், ஹைத்ரோஸும் அப்துவின் மேல் வன்மம் கொள்கிறார்கள். உம்மாச்சு நடைப் பிணமாகிறாள்.
ஹோசோவில் வாழ்தல்
அமெரிக்காவின் பூர்வகுடி இனங்களில் ஒன்றான ‘நவாஹோ’ மக்கள் தற்போது பெரும்பான்மையினர் வசிப்பது அதன் தென்மேற்கு மாநிலங்களான அரிசோனாவின் வடகிழக்கிலும், நியு மெக்ஸிகோவிலும்தான் (கொஞ்சமாக உடா-வில்). அவர்கள் பேசும் மொழி தென் அதபாஸ்கன் மொழியான நவாஹோ. சமீபத்திய இரண்டு தலைமுறைகள் காலனிய மொழியான ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டாலும், மூத்த தலைமுறயினர் அனைவரும் பேசும் மொழி நவாஹோதான்.
வண்ணங்களே வாழ்வு
அப்பாஸ் சித்தப்பாவின் திருமணத்திற்காக காப்பே ஒன்றைப் பின்னிக் கொண்டிருந்தாள். ஆனால் சித்தப்பா திரும்பி வருவதற்குள் பாட்டி இறந்துவிட்டாள். அப்பா, பாட்டியை ஒரு பசுமையான கல்லறையில் சிறப்பாக அடக்கம் செய்தார். அப்பாஸ் சித்தப்பாவிற்கு பாட்டியின் கூடாரத்தில் பாட்டி பின்னிக் கொண்டிருந்து முடிக்காமல் விட்ட பாதி காப்பேதான் பார்க்கக் கிடைத்தது. பாட்டியின் காப்பேயையாவது பார்க்க முடிந்ததே என்பதில் அவருக்கு ஒரு ஆசுவாசம்.
‘திதி’ – கன்னடத் திரைப்படம் குறித்து
கி.ரா – வின் ஒரு கரிசல் நாவலை படித்து முடித்த ஒரு மனம் நிறை உணர்வு ததும்பியது படம் பார்த்து முடித்ததும். இத்தனை இயல்பாய், இத்தனை இயற்கையாய் ஒரு படம் எடுக்க முடியுமா?. படம் நெடுகிலும் கேமரா எங்கிருந்தது?. படத்தில் யாருமே நடிகர்கள் இல்லை. நோடேகொப்புலுவின் மனிதர்களையே படம் பிடித்திருக்கிறார் இயக்குநர் ராம் ரெட்டி. கதை கூட அங்கு நடந்த உண்மையான சம்பவம்தான். படத்தின் ஆரம்ப காட்சியிலிருந்து, இறுதிக்காட்சி வரை ஒவ்வொரு ஃபிரேமிலும் அழகும், உண்மையும், இயல்பும்…ஒரு துளியும் செயற்கை கலக்காத, துருத்தித் தெரியும் காட்சிகளில்லாத…ஒரு அசல் கிராமம் மற்றும் அதன் மனிதர்கள். படத்தில் பின்னணி இசை என்ற ஒன்று கிடையாது.
