வயதான வாயேஜர்

நம்மில் பெரும்பாலோர் ஒன்றிரு நாட்களில் மதிப்பிழந்து ம(றை/ற)ந்து போகும் வாட்ஸப் தகவல்களை படித்து மிகப்பொறுப்பாக ஃபார்வார்டு செய்து கொண்டிருக்கையில், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத, பாதை பிறழாத விக்கிரமாதித்தனாய் பயணித்து வரும் பூமியின் தூதுவன் வாயேஜர்-1 கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருப்பதை பற்றி “வயதான வாயேஜர்”

அண்ணே, சித்திரமும் நாப்பழக்கமாண்ணே?!

செந்தில் இப்படி ஒரு கேள்வியை கவுண்டமணியிடம் கேட்டால், “ஏண்டா மாங்கா தலையா, உருப்படியான பழமொழிய இப்படியாடா நாசம் பண்ணுவே?” என்று அவர் திரும்பக்கேட்கலாம். அதற்கு செந்தில், “நான் நாசம் பண்ணலைண்ணே. புதுசா வந்திருக்கிற கம்ப்யூட்டர்தான் இப்படி பழமொழியை பாதியாக்கிருச்சாம்”, என்று பதில் சொல்லலாம். கணினி என்றால் ஓரமாய் உட்கார்ந்துகொண்டு “அண்ணே, சித்திரமும் நாப்பழக்கமாண்ணே?!”

பரோபகாரம் – நாட்டுக்கு நாடு

This entry is part 5 of 5 in the series பரோபகாரம்

தனி குடிமக்கள், நிறுவனங்கள், மஹா கோடீஸ்வரர்கள் போன்றவர்களை எல்லாம் தாண்டி, ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கு உதவுவது உருப்படியான செயல்முறையா? அந்த உதவிகளால் நாடுகள் பெரிதாக முன்னேறுகின்றனவா அல்லது அந்த உதவும் கரங்களையே நம்பி உருப்படாமல் போகின்றனவா என்றொரு பூதாகாரமான கேள்வி பரோபகார திட்டங்களை அலசும் வட்டங்களில் உலாவிக்கொண்டே இருக்கும்.

பரோபகாரம் – மஹா உதவல்கள்

This entry is part 4 of 5 in the series பரோபகாரம்

அமேசான் நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை 5.75 லட்சம். நிறுவனத்தின் CEO ஜெஃப் பெஸோஸ் அவர்கள் அத்தனை பேருக்கும் தன் சொந்தப் பணத்திலிருந்து இந்த வருடம் தலா ஒரு லட்சம் டாலர் (சுமார் எழுபது லட்சம் ரூபாய்) பொங்கல் போனஸ் கொடுத்தாலும்கூட, அவரது சொத்து 2020 ஆரம்பத்தில் இருந்ததைவிட இன்று அதிகமாக இருக்கும்! காரணம் கொரொனா தாண்டவத்தால் உலகமே தடுமாறிக்கொண்டிருந்த போன வருடம் மட்டும் அவரது சொத்து மதிப்பு அவ்வளவு உயர்ந்திருக்கிறது!

பரோபகாரம் – தன்னார்வுலா

This entry is part 3 of 5 in the series பரோபகாரம்

பிறருக்கு உதவுவது என்றால், பணத்தை நன்கொடையாகக் கொடுப்பது மட்டும்தான் என்பதில்லை. சிரமதானம் என்று சொல்லப்படும் உழைப்பை நன்கொடையாகக் கொடுக்கும் வழக்கு, நாலு பேருக்கு இலவசமாகச் சாப்பாடு போடுவது, கிட்னி / ரத்தம் / கண் தானம், அறிவுரை / புத்திமதி போன்றவை வழியாகப் பிறருக்கு வாழ்வில் முன்னேறச் சரியான “பரோபகாரம் – தன்னார்வுலா”

பரோபகாரம் – நம்பகத்தன்மை

This entry is part 2 of 5 in the series பரோபகாரம்

உலகின் பல நாடுகளில் ஒரு நாளைக்கு $2க்கும் குறைவான பணத்தில் வாழும் ஏழை மக்கள், மாத அல்லது வார சம்பளம் பெறுபவர்கள் இல்லை. அவர்கள் வருமானம் நாளுக்கு நாள் நிறைய வேறுபடுகிறது. நுண்கடன் அமைப்புகளால் அவர்கள் வருவாயை சீராக்க முடிந்தால் அதுவே அவர்களுக்கு பெரிய உபகாரமாக இருக்கும். அவர்களுக்கு நூறு ரூபாய் கடன் கொடுத்துவிட்டு, கட்டணங்களுடன் நூற்றி நாற்பது ரூபாயை திருப்பி கொடுத்தே ஆக வேண்டும் என்று அவர்கள் கழுத்தில் கை வைப்பதை விட, அத்தகைய சீரான வருவாய் நிலையை அடைய சேமிக்க உதவுதல், காப்புறுதி வழங்குதல் போன்ற உதவிகள் பன்மடங்கு பலனைத் தரும் என்கிறார் ரூட்மேன்.

பரோபகாரம் – கொடுக்கும் வழக்கு

This entry is part 1 of 5 in the series பரோபகாரம்

சுமார் 32 வருடங்களுக்கு முன், 1988 வாக்கில் மும்பையில் இருந்து சென்னை (அன்றைய வழக்கில் பம்பாயிலிருந்து மெட்ராஸ்) வருவதற்கான ரயிலைப் பிடிக்க விக்டோரியா டெர்மினஸ் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தேன். நல்ல உடை, ஷூ அணிந்து தலை வாரி, ஷேவ் செய்து கொண்டு பார்க்க டீசண்ட்டாக இருந்த ஓர் இளைஞர் “பரோபகாரம் – கொடுக்கும் வழக்கு”

கொரொனா தடுப்பூசி

ஃபைசர் (Pfizer) நிறுவனத்தின் மருந்து -70 டிகிரி செல்ஷியஸ் உறைநிலையிலும் மாடெர்னா நிறுவனத்தின் மருந்து -20 டிகிரி செல்ஷியஸ் உறைநிலையிலும் தொடர்ந்து பாதுகாக்கப்படவேண்டும். -20 டிகிரி வேண்டுமானால் நம்ம வீட்டு ஃபிரிஜ் லெவல்தான் என்று சொல்லலாம். ஆனால் -70 டிகிரி செல்ஷியஸ் என்பது அண்டார்டிகா உறைபனியின் வெப்ப நிலையைவிடக் கம்மி. அந்த அளவு தாழ்ந்த வெப்பநிலையை விடாமல் பராமரிக்கும் இயந்திரங்கள் உலகெங்கும் எளிதில் கிடைக்குமா என்பது அவிழ்க்கப்படவேண்டிய பெரிய முடிச்சு.

அந்தக்காலத்து தீபாவளி

Any sufficiently advanced technology is indistinguishable from magic. – Arthur C. Clarke தீபாவளி சமயத்தில் ஒவ்வொரு வருடமும் அந்தக்காலத்தில் இந்தப் பண்டிகையை எப்படிக் கொண்டாடுவோம் என்று விவரித்து ஒரு சிறுகதையோ கட்டுரையோ வந்து சேரும். அந்தக்காலம் என்று கருதப்படுவது ஒரு நாற்பது ஐம்பது வருடங்களுக்கு “அந்தக்காலத்து தீபாவளி”

யோக்காய்

ஆனால் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இநோயு என்ரியோ என்ற ஒரு விஞ்ஞானி இந்த தத்துபித்து விஷயங்களில் இருந்து வெளிவந்தால்தான் ஜப்பான் ஐரோப்பிய நாடுகளைப் போல விஞ்ஞான வளர்ச்சியடைய முடியும் என்று முடிவு செய்து, ஒவ்வொரு பழங்கதையாய் உடைத்து நொறுக்கி, நிறைய சொற்பொழிவுகள் நிகழ்த்தி, கட்டுரைகள் எழுதி ஜப்பானிய சமூகத்தை யோக்காய்களின் பிடியில் இருந்து விடுவித்தார்….ஆங்காங்கே சில நிகழ்வுகளை விளக்கவும், தெரிந்த பிடித்த யோகாய்களை மறந்துவிட மனமில்லாத சமூகத்தாலும், இன்றும் பற்பல யோக்காய்கள் அங்கே சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றன.

சொல்வனம் வழங்கும்.. (பகுதி 2)

பதினான்கு அத்தியாயங்களுடன் வெளி வந்திருக்கும் இந்தப் புத்தகம் தத்துவம், கணிதம், கணினியியல், இயற்பியல், பெண்ணியம், வணிகவியல், மருத்துவம், ஜனநாயகம் முதலிய பல துறைகளில் புகுந்து ஆங்காங்கே நிலவும் பிரச்சினைகளை அலசுகிறது. வாரக்கணக்கில் குடும்பத்துடன் வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் இந்த சமயத்தில் மிக எளிய நடையில் பள்ளிக் குழந்தைகள் கூட புரிந்து கொள்ளும் வடிவில் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம், சுவையான விவாதங்களுக்கு தீனி போடும்.

புத்தக விமர்சனம்: வாஸ்லாவ் ஸ்மீல் Energy and Civilization -A History

ஆசிரியர் உண்மையிலேயே ஒரு பெரிய நிபுணர்தான். எடுத்துக்காட்டாக, நிலத்தில் ஓடும் மனிதர்களைப் பற்றி பேசும்போது, ​​தரவை அவர் இவ்வாறு பகுப்பாய்வு செய்கிறார்: ஓடுவதற்கு பெரும்பாலும் 700 முதல் 1,400 வாட் வரை ஆற்றல் தேவைப்படுகிறது, இது அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதத்தைப்போல் 10-20 மடங்கு அதிகம். மனிதர்களுக்கான இயங்கும் ஆற்றல் செலவு நிறைய. ஆனால் இந்த செலவை வேகத்திலிருந்து விலக்குவதற்கான தனித்துவமான திறனை மக்கள் கொண்டுள்ளனர். இயங்கும் மொத்த செலவில் 80% உடல் எடை ஆதரவு மற்றும் முன்னோக்கி நம்மைச் செலுத்தும் உந்துவிசைக்கே ஆகிறது. கால்களை முன்னும் பின்னுமாக இயக்குவதற்கு 7% செலவு. பக்கவாட்டு சமநிலையை பராமரித்தலுக்கு 2%. ஆனால் கைகளை ஆட்டி பேலன்ஸ் செய்வது ஒட்டுமொத்த செலவை சுமார் 3% குறைக்கிறது.

ராபர்ட் கனிகலின் The Man Who Knew Infinity: புத்தக விமர்சனம்

ராபர்ட் கனிகல் எழுதிய The Man Who Knew Infinity என்ற புத்தகத்தின் ஆங்கிலம் மற்றும் தமிழ் பிரதிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இரு வேறு நண்பர்களிடமிருந்து எனக்கு பரிசாய்க் கிடைத்தன. அதுவும் ஒரே டிசம்பர் வாரத்தில் இரு வேறு நாட்களில் இந்தப் புத்தகங்கள் என்னை வந்தடைந்தன (இதோ இதை தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் பிப்ரவரி 14ஆம் தேதியும்கூட புத்தக காதலர்களுக்கு விசேஷமான நாள்: இன்று சர்வதேச புத்தகப் பரிசு தினம் கொண்டாடப்படுகிறது). ஆங்கில புத்தகத்தைக் கொடுத்த நண்பரும் நானும் ஒவ்வொரு முறை நாங்கள் சந்திக்கும்போதும் புத்தக பரிவர்த்தனை செய்து கொள்வதை வழக்கமாக வைத்திருப்பவர்கள். அந்த வழக்கப்படி ஆங்கில பிரதி கிடைத்ததில் ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை. 2015ல் கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்வையொட்டிய இந்தப் புத்தகம் திரைப்படமாக வடிவெடுத்து வெளிவந்ததை நீங்கள் அறிந்திருக்கலாம். நான் படம் பார்த்திருந்ததால் கதையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பது நினைவில் நன்றாகவே பதிந்திருந்தது. எனவே, “அப்புறம் படிக்கலாம்,” என்று ஆங்கிலப் பிரதியை எடுத்து வைத்திருந்தேன்.

சித்தார்த்த முகர்ஜியின் The Gene – An Intimate History: புத்தக விமர்சனம்

தறிகெட்டு இயங்கும் மரபணுக்களின் அசாதாரண செயல்களை விவரிக்கும் கேன்சரின் கதை அது. நிறைய யோசித்தபின்,   மறுபுறம் மரபணுவின் இயல்பான செயல்பாட்டைப் பேசும் இன்னொரு கதை இருப்பதை உணர்ந்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். அந்த யிங் (Ying) கதையை பாலன்ஸ் செய்ய வந்திருக்கும் இந்த யாங் (Yang) கதை அதே சுவையுடன் வெகு நன்றாகவே வந்திருக்கிறது. கிரேக்க தத்துவஞானிகளில் துவங்கி கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளின் கதையை இந்தப் புத்தகம் சொல்கிறது. ஆங்காங்கே மன நோய்கள் விரவியிருக்கும் தன் குடும்ப வரலாற்றினூடே முகர்ஜி, மென்டல் மற்றும் டார்வின் போன்ற மகத்தான விஞ்ஞானிகளின் ஆய்வுகளில் துவங்கி மன நோய்களுக்கு மரபணு காரணமாகுமா என்று கேட்டுக் கொண்டு இன்று ஆய்வு செய்யப்படும் CRISPR/Cas-9 வரை வந்துவிடுகிறார்.

ரிச்சர்ட் தேலரின் Misbehaving: The Making of Behavioral Economics – புத்தக விமர்சனம்

மனித மனம் அங்கே ஒரு கணக்கு போடுகிறது. 1200 ரூபாய் சாமான் ஒன்று அறுநூறு ரூபாய்க்கு கிடைக்கும்போது பெரிய தொகை ஒன்று தள்ளுபடியாவதுபோல் தோன்றுகிறது. (பாதிக்குப் பாதி மிச்சம் செய்கிறோம்). ஆனால் 35000 ரூபாய் செலவு செய்யத் தயாராக இருக்கும்போது ஒப்பீட்டளவில் அதே அறுநூறு ரூபாய் நமக்கு அவ்வளவு பெரிய தள்ளுபடியாய் தெரிவதில்லை. என்றைக்கு இருந்தாலும் என்ன வாங்கினாலும் அறுநூறு ரூபாயின் மதிப்பு அறுநூறு ரூபாய்தானே? ஆனால் நடைமுறையில் மனித மனம் அப்படி யோசிப்பதில்லை.

யாதும் ஊரே – யாவரும் கேளிர் (குடிபுகல் – பாகம் 4)

அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என்று பல கண்டங்களுக்குள் புகுந்து ஆங்காங்கே நிலவும் சூழல்களை ஆய்ந்ததின் மூலம், எல்லைகள் இல்லாதபோதும்கூட குறிப்பிட்ட ஒரு பகுதியை வெற்றிடமாக்கி இன்னொரு பகுதியை மூச்சுத் திணறச் செய்யும் அளவு பெருந்திரள் குடியேற்றம் நிகழ்வதில்லை என்று முந்தைய பகுதிகளில் நிறுவி விட்டோம். ஆனால் அத்தனை நல்நோக்கங்கள் “யாதும் ஊரே – யாவரும் கேளிர் (குடிபுகல் – பாகம் 4)”

மூடாத எல்லைகள் – இல்லாத பிரச்சினைகள் (குடிபுகல் – பாகம் 3)

அண்மையில் தொழில்நுட்ப மாநாடு ஒன்றில் உரையாற்ற பெர்லின் சென்றிருந்தேன். சமயம் கிடைத்தபொழுது கொஞ்சம் ஊர் சுற்றினேன். ஊரைச் சுற்றி வரும்போது, பெர்லின் சுவற்றையும் செக்பாயிண்ட் சார்லியையும் பார்த்தேன். கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிகள் பல பத்தாண்டுகள் பிரிந்திருந்த கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். கிழக்கிலிருந்து மேற்கில் குடியேற  முயற்சித்து சுவரேறிய மக்களைச் சுடும் ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் இருந்த சுவற்றை (Berlin Wall) இன்னும் மறவாதிருந்த பெர்லின் குடிமக்கள் பலரிடம் பேசிக்கொண்டிருந்தேன். கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிகளை இணைக்க வழி வகுக்கும் வகையில் பெர்லின் சுவர் இடித்து தள்ளப்பட்ட நாள் இன்னும் எனக்கு நன்றாய் நினைவிருக்கிறது. அப்போது நான் லூயிசியானாவில் உள்ள பேட்டன் ரூஜில்…

மூடிய எல்லைகள் – முடியாத பிரச்சினைகள் (குடிபுகல் – பாகம் 2)

1970கள் அல்லது 80களில் வெளிவந்த பல இந்திய திரைப்படங்களில் வில்லன்கள் இந்தியாவுக்குள் தங்கம் கடத்திக் கொண்டு வருபவர்களாகச் சித்தரிக்கப்படுவார்கள். அந்தப் படங்களைப் பார்த்து வளர்ந்த காலத்தில் நாம் அந்த வில்லன்கள் தேசபக்தியில்லாத குண்டர்கள், அவர்களுக்கு சுயநலம்தான் முக்கியம் என்று நினைத்துக்கொள்வது வழக்கம். அப்போதெல்லாம் இந்தியா ஒரு மாபெரும் லைசன்ஸ் “மூடிய எல்லைகள் – முடியாத பிரச்சினைகள் (குடிபுகல் – பாகம் 2)”

குடிபுகல் சிக்கல்கள் – சாத்தியமான தீர்வுகள் (குடிபுகல் – பாகம் 1)

குறிப்பிட்ட ஒரு தேசம் அல்லது சமூகத்தில் உள்ள ஒரு சமயக் குழு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி, அதனுடன் போட்டியிடும் பிற சமூகக் குழுக்கள் தம்மை அச்சுறுத்துவதாக அவை எளிதில் கருதக்கூடும். அப்படிப்பட்ட அச்சங்கள் நியாயமாய் இருப்பதற்கான போதிய வரலாற்றுச் சான்றுகள் கூட இருக்கவே செய்கின்றன. அமெரிக்காவில் கணிசமான அளவில் வாழும் பெரும்பான்மை எண்ணிக்கை கொண்ட கிறித்துவர்கள் தம் உரிமைகளும் விழுமியங்களும் எப்போதும் ஆபத்தில் இருப்பதாய் உணர்கிறார்கள். நூற்று இருபது லட்சம் பேர் கொண்ட இந்தியாவில் எண்பது சதவிகிதத்தினர் இந்துக்கள். ஆனால் அவர்களில் பலர் தம் சமயம் ஆபத்தில் இருப்பதாய் நினைப்பதோடு எதிர்த்து நின்றுதான் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று உணர்வு பூர்வமாய் நம்புகிறார்கள். இது போலவே உலகில் வேறு பகுதிகளில் உள்ள யூதர்கள், முஸ்லிம்கள், மற்றும் பிறர், தம் தேசத்தில் பெரும்பான்மையினராய் இருந்தாலும் பிறரது அச்சுறுத்தலை உணர்கிறார்கள்.

சொல்வனம் வழங்கும்..

பன்னிரண்டு பகுதிகளாய் சொல்வனத்தில் வெளிவந்த அந்தத்தொடரில் தத்துவம், கணிதம், கணினியியல், இயற்பியல், பெண்ணியம், வணிகவியல் முதலிய பல துறைகளில் இருந்துவரும் பிரச்சினைகளை அலசவும், கருத்துக்களை விளக்கவும் உலகெங்கிலும் உருவாக்கப்பட்ட சிந்தனைச்சோதனைகளை தொகுத்து வழங்கி இருந்தேன். கடந்த ஒரு வருடமாக அந்தத் தொகுப்பை இன்னும் நிறைய பாலிஷ் செய்து, புதிதாக ஜனநாயகம், மருத்துவம் பற்றிய அத்தியாயங்களையும், ஆழ்ந்த அறிதல் (Deep Learning) முதலிய விவாதங்களையும் சேர்த்து ஒரு புதிய மின் புத்தகமாக “சிந்தனைச்சோதனைகள் – பணச்செலவில்லா பிரபஞ்சச்சுற்றுலா” என்ற பெயரில் வெளிக்கொணர்ந்து இருக்கிறோம். சொல்வனம் ஆசிரியர் குழுவின் உதவி/ஆசியுடன் .வெளிவரும் இப்புத்தகம், ஒரு சொல்வனம் பதிப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. புத்தகத்தை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வலை இணைப்புகளின் மூலமாகவோ அல்லது அருகிலிருக்கும் QR குறியீட்டை உபயோகித்தோ நீங்கள் வாங்கலாம்.

அணு விவாகம்

கல்பாக்கத்தில் இருந்து ஆரம்பித்து உலகெங்கிலும் ஒழுங்காக ஓடிக்கொண்டிருக்கும் அணு மின் நிலையங்களும் சரி, செர்நோபில், புகுஷிமா போல விபத்துக்குள்ளாகி பேரிடர் நிகழ்வித்த அணு மின் நிலையங்களும் சரி, மின்சார உற்பத்திக்கு அணுவைப்பிளக்கும் (Nuclear Fission) தொழில்நுட்பத்தையே நம்பி இருக்கின்றன. ஒழுங்காய் இருக்கும் குடும்பத்தை உடைத்துப்போடும் விவாகரத்தை போல, அணுவைப்பிளந்து இரண்டாக உடைக்கும்போதும் பல மோசமான பின் விளைவுகள் ஏற்படும். அத்தகைய விளைவுகளை சரியாக கையாள்வது மிக அவசியம். கூடங்குளத்தின் தயவில் சமீபத்தில் இந்த விளைவுகளைப்பற்றி சரியும் தவறுமாய் ஊடகங்கள் நிறைய விவாதித்திருக்கின்றன.

27 வயதான அமெரிக்கக் குடும்பம்

ஒரு திரைப்படத்தையோ தொலைக்காட்சி தொடரையோ பார்க்கும்போது வெறும் மேம்போக்கான ரசிகனாக மட்டும் இல்லாமல், அதன் படைப்பு நுணுக்கங்களை தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் உண்டு. இது ஏதோ நானும் படமெடுக்கிறேன் என்று எதிர்காலத்தில் நான் கிளம்புவதற்கான முன்னேற்பாடல்ல. ஆக்கத்தின் பின்னால் உள்ள செயல்முறைகளை நன்கு புரிந்துகொள்வது, ஒரு கல்வி ஆய்வு (academic analysis) பின்புலத்துடன் நிகழ்ச்சிகளை நான் ஆழ்ந்து அனுபவிக்க உதவும் என்ற என் எண்ணம்தான் இதற்கு காரணம். என் பொறியாளன் வேலையிலிருந்து ஓய்வு பெறும்போது இத்தகைய ஞானம் ஏதாவது தேவையற்ற புத்தகங்கள் எழுத உதவுமோ என்னமோ. அந்த நல்ல தொடர்கள் வரிசையில் சேர வேண்டிய ஆனால் மிகவும் வேறுவகையான புனைவு இருபத்தேழு வருடங்களாக அமெரிக்காவின் Fox தொலைக்காட்சி சேனலில் வந்து கொண்டிருக்கும் …
பெரியவர்கள் இது ஏதோ குழந்தைகளுக்கான டாம் & ஜெர்ரி போன்ற கார்ட்டூன் ஷோ என்று அலட்சியமாக ஒதுக்கி விடுவார்கள். 1988-1991களில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் “நான் இது வரை பார்த்ததிலேயே மிகவும் முட்டாள்தனமான ஷோ அது” என்று சொல்லி தனது அறியாமையை உலகுக்கு தெரிவித்தது இந்த அலட்சியத்தின் உச்சம். ஆனால் சிம்சன் தொடரோ அத்தகைய விமர்சனங்களை ஓரங்கட்டிவிட்டு புஷ் தம்பதிகளையே ஒரு எபிசோடில் கலாய்த்துவிட்டு இன்றும் உற்சாகமாய் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

எண்ணெய்யும் தண்ணீரும்: நிரந்தர சொர்க்கம்

நிகோலா டெஸ்லா பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்து மறைந்த ஒரு சுவாரசியமான மனிதர். செர்பியாவில் பிறந்து வளர்ந்து பின்னால் அமெரிக்காவில் தாமஸ் எடிசனின் கம்பனிக்கு வேலை செய்து, அதன்பின் எடிசனின் மிகப்பெரிய போட்டியாளராவும் மாறியவர் இந்த விஞ்ஞானி. இவர் வரலாறும், கொள்கைகளும், பணி புரிந்த விதமும், செய்த ஆய்வுகளும் வினோதமானவை. அவருடைய லட்சியங்களில் ஒன்றாக சொல்லப்படுவது உலகில் உள்ள எல்லோருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் இலவச மின்சார விநியோகம் செய்வது! இலவசம் என்றால், நிறைய வரிகளை விதித்து அதிலிருந்து கிடைக்கும் வருவாயை வைத்து இலவச மின்சாரம் வழங்குவது மாதிரியான அரசாங்க திட்டம் இல்லை. யார் தயவையும் நம்பாமல், தன்னுடைய கண்டுபிடிப்புகள், கருவிகள், திட்டங்கள் முதலியவைகளை மட்டுமே கொண்டு எல்லோருக்கும் தேவையான அளவு இலவச மின்சாரம் தருவது பற்றி இவர் யோசித்துக்கொண்டிருந்தார். அவர் கனவு நனவாகி இருந்தால் இந்த எண்ணெய் எரிவாயு துறையே தேவையற்ற ஒன்றாக போயிருக்கக்கூடும்!

எண்ணெய்யும் தண்ணீரும்: எரிவாயு பிரச்சினைகள்

பத்து வருடங்களுக்கு முன்  வேலை நிமித்தமாக  நானும்  ஒரு பிரிட்டிஷ் சக ஊழியரும் டென்மார்கில் உள்ள ஒரு சின்ன ஊரில் சில நாட்கள் கேம்ப் அடித்திருந்தோம்.  ஓரிரவு  ஏதோ ஒரு ரெஸ்டாரண்டில் உணவருந்தியபடி பேசிக்கொண்டிருந்த போது பேச்சு எங்கெங்கோ போய்விட்டு எண்ணெய் எரிவாயு பக்கம் திரும்பியது.  வடகடலில் (North “எண்ணெய்யும் தண்ணீரும்: எரிவாயு பிரச்சினைகள்”

எண்ணெய்யும் தண்ணீரும்: பன்னாட்டு பிரச்சினைகள்

மிர் என்ற சொல்லுக்கு ரஷ்ய மொழியில் அமைதி என்று அர்த்தம். மிர்-1 மற்றும் மிர்-2 என்று பெயரிடப்பட்ட அந்த இரு பெரிய ரஷ்ய நீர்மூழ்கி வாகனங்கள் சில வருடங்களுக்கு முன் சேர்ந்து செய்த குறும்பு நிச்சயம் உலக அமைதிக்காக இல்லை! அவை இயங்குவதற்கு முன்னேற்படாக, முதலில் அணுசக்தி ஆற்றலில் இயங்கி ஆர்டிக் கடலில் உறைபனியை ஒரு பெரிய சதுர வடிவில், கடல் நீர் தெரியும் அளவுக்கு வெட்டித்தள்ளியது. 2007 ஆகஸ்ட் 2ஆம் தேதி, ஒரு வியாழக்கிழமை. அது ஒரு நல்ல நாளாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மிர் நீர்மூழ்கிகள் ஒன்றன் பின் ஒன்றாக கடலுக்குள் இறக்கி விடப்பட்டன. சுமார் நாலேகால் கிலோமீட்டர் ஆழத்தை சென்றடைந்து, ஒரு வழியாக தரை தட்டியபின், வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ரோபாட் கரங்களின் உதவியுடன் ஒரு மீட்டர் உயரமுள்ள டைட்டேனியத்தால் செய்யப்பட்ட துருப்பிடிக்காத ரஷ்ய கொடியை அந்த நீர் மூழ்கிகள் கடலின் தரையில் நட்டன!

எண்ணெய்யும் தண்ணீரும்: இயற்கைவள சாபம்

அமெரிக்காவில் எண்ணெய் /எரிவாயு எடுப்பது எல்லாம் முற்றிலும் தனியார் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட தொழில். அரசாங்க நிறுவனங்கள் ஏதும் கிடையாது. எனவே, வேண்டும் என்கிறபோது வேலைக்கு ஆட்கள் எடுப்பதும், வேண்டாம் என்கிறபோது உடனே பணியாட்களின் சீட்டைக்கிழித்து வீட்டுக்கு அனுப்புவதும் ரொம்பவும் சகஜம். தனி மனிதர்களுக்கும், அவர்களை சார்ந்த குடும்பங்களுக்கும் இந்த  நிரந்தரமில்லா தன்மை பெரிய தலைவேதனைதான் என்றாலும், அவர்களுக்கு இது தெரிந்த/பழகிய விஷயம்தான். வேலை போய்விட்டது என்பதில் தனிமனித அவமானம் எதுவும் கிடையாது.

எண்ணெய்யும் தண்ணீரும்: விடாக்கண்டன்களும், கொடாக்கண்டன்களும்

பக்கத்தில் உள்ள படத்தை நீங்கள் எங்காவது பார்த்திருக்கலாம். அதில் இருப்பது ஒரு இளம் பெண்ணா அல்லது ஒரு வயது முதிர்ந்த பாட்டியா என்பது நீங்கள் படத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்பதை பொறுத்த விஷயம். பூமியில் எவ்வளவு எண்ணெய்யும் எரிவாயுவும் ஒளிந்திருக்கின்றன என்பதும் நாம் அலசும் விதம், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் முதலிய விஷயங்களைப் பொறுத்து பாட்டியிலிருந்து இளம்பெண்ணாக மாறிக்கொண்டிருக்கிறது! நாம் ஐந்தாம் வகுப்பில் தெரிந்து கொண்டதுபோல், இருந்து அழிந்த உயிரியல் எச்சங்கள் பூமிக்கடியில் புதைந்து போனபின், பூமியின் உள்ளே நிலவும் வெப்பமும், அழுத்தமும் பல்வேறு ரசாயன மாற்றங்கள் வழியே அவற்றை சமைத்து கச்சா எண்ணெய்யாகவும் எரிவாயுவாகவும் மாற்ற பல்லாயிரக்கணக்கான வருடங்கள் ஆகும் என்ற புரிதலில் மாற்றம் ஏதும் இல்லை.

எண்ணெய்யும் தண்ணீரும்: கடவுள் பாதி, மிருகம் பாதி

மூன்று வருடங்களுக்கு முன் கலிஃபோர்னியாவில் நடந்த ஒரு கான்பரன்ஸ்சுக்கு ஒரு விரிவுரை வழங்கப்போயிருந்தேன். பிணையத்தின் போக்குவரத்தில் அதிவேகமாக பயணம் செய்யும் விதம்விதமான குட்டி டிஜிட்டல் பொட்டலங்களை அடையாளம் கண்டுபிடித்து மேலாண்மை செய்வதை பற்றிய என் பேச்சைக்கேட்க கூட்டம் ஒன்றும் அலை மோதவில்லை. ஆனால் அதே மாநாட்டில் இன்னொரு உரை வழங்கிய ஈலோன் மஸ்க்குக்கு (Elon Musk) என்னையும் சேர்த்து நிறைய கூட்டம். டெஸ்லா மோட்டார்ஸ் என்ற முழுக்க முழுக்க மின்சாரத்தில் ஓடும் கார்களை தயாரிக்கும் கம்பெனியின் உயர் அதிகாரியான அவர் பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மின்சாரக்கார்கள் எப்படி உலகையே எதிர்காலத்தில் மாற்றப்போகின்றன என்பதுதான் அவரது உரையின் சாராம்சம் என்றாலும்…

எண்ணெய்யும் தண்ணீரும்: வீணாகிறதா எரிவாயு?

கடலிலோ, கரையிலோ எண்ணெய் கிணறுகளில் இருந்து எண்ணெய்யோடு மேலே வரும் எரிவாயு பிரித்தெடுக்கப்பட்டு உபயோகப்படுத்தப்படுவது தெரிந்த விஷயம். வெறும் எரிவாயுவை மட்டுமே தரும் கிணறுகளும் நிறைய வெட்டப்படுவது உண்டு. எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் எரிவாயுவும் சேதம் ஏதுமில்லாமல் சேமிக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டாலும், துரப்பண பணி சம்பந்தப்பட்ட பல்வேறு செயலாக்கங்களில் ஆங்காங்கே சில இடங்களில் குறைந்த அழுத்ததுடன் வந்து சேரும் எரிவாயுவை உபயோகத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாமல் போய் விடும். இந்த வகையில் சேரும் வாயுக்கள்தான் பெரிய ஜ்வாலையுடன் அணையா விளக்கு போல் விடாமல் எரிந்து கொண்டிருக்கும் சுடர்பிழம்பு (Flare) வழியாக எரிக்கப்படுகின்றன. அழுத்தம் மிகவும் குறைந்த சில வாயு ரகங்கள் நேராக வளிமண்டலத்தில் (atmosphere) கலந்து விடும்படி விடுவிக்கப்படுவதும் (Venting) உண்டு. 24 மணிநேரமும் விடாமல் இப்படி ஏராளமாய் எரிவாயு வீணடிக்கப்படுவது போல் தோன்றுவதால், பல நண்பர்கள் இந்த வீணடிப்பைத் தடுத்து அந்த வாயுவையும் உருப்படியாகப் பயன் படுத்த முடியாதா என்று கேட்டிருக்கிறார்கள்.

எண்ணெய்யும் தண்ணீரும்: அவதாரங்கள்

கட்டுப்பாட்டு அறையில், மின்னணு பேனலின் பின்புறம் அந்த விளக்கை பார்த்தபோது, அதிகம் சிவந்து ஒளிர்ந்தது அந்த ரிலேயில் இருந்த விளக்கா அல்லது என் குழுவில் இருந்த ஒரிசா மாநிலத்துக்காரரான அமுல்யகுமார் மொஹந்தியின் முகமா என்பது ஒரு பட்டிமன்றம் நடத்தி முடிவெடுக்க வேண்டிய விஷயம். சந்தேகம் இல்லாமல் ப்ரொடக்க்ஷன் குழுதான் எங்களை மாட்டி வைக்கப்பார்க்கிறது என்பதற்கு எங்களிடம் ஆதாரம் இருப்பதாக தோன்றியதால், அடுத்த அரைமணியில் என் குழு இன்னும் கோபத்துடன் பேசாமல் மும்பையில் இருக்கும் தலைமை அலுவலகத்தையே கூப்பிட்டு…

எண்ணெய்யும் தண்ணீரும்: மனிதரில் இத்தனை நிறங்களா?

அந்த வாரம் படகு பயிற்சிக்கு பதில், என் தவறுக்கு தண்டனையாக சாப்பர் பாதுகாப்பு பற்றி நான் எல்லோருக்கும் ஒரு வகுப்பு எடுக்க வேண்டும் என்று FPS முடிவு செய்தார்! ஒரு தண்டனையாக கொடுக்கப்பட்டாலும், தலையை தொங்கப்போட்டுக்கொண்டு இருந்த எனக்கு என்னவோ அது ஒரு நல்ல சந்தர்ப்பமாக பட்டது. நான் ONGCயில் சேர்வதற்கு முன்னால் ஹெலிகாப்டர் வடிவமைப்பு ஆய்வகத்தில் ஒரு வருடம் பணி புரிந்தவன் என்பது FPS உட்பட பெரும்பாலும் யாருக்கும் தெரியாது!

எண்ணெய்யும் தண்ணீரும்: அரபிக்கடலிலோர் அர்த்த ராத்திரியில்..

மணிக்கு மணி எண்ணை உற்பத்தி குறைந்து விடாமல் பார்த்துக்கொண்டால்தான் மாதாந்திர உற்பத்தி இலக்குகளை பிடிக்க முடியும் என்பதால், இரவு நேரங்களில் எண்ணெய் வருவது நின்று விட்டால் மறுநாள் வரை பொறுத்திருந்து பகல் நேரத்தில் நல்ல சூரிய வெளிச்சத்தில் ஹெலிகாப்டரில் போய் இறங்கி சாவகாசமாய் என்ன ஆயிற்று என்று ஆராய்வதெல்லாம் சரி வராது. இரவோ பகலோ உடனே கிளம்பி பழுதுகளை சரி செய்ய ஓட வேண்டும். எனவே அடுத்த அரைமணிக்குள் …

எண்ணெய்யும் தண்ணீரும்: நிலத்தடி பூதங்கள்

இப்படி நோண்டிக்கொண்டே போனால் இறுதியில் அந்த 2000 மீட்டர் தூரத்தையும் கடந்து எண்ணெய் பேசினை தொடும்போது உள்ளே சுமார் 2000 பி‌எஸ்ஐ அழுத்தத்தில் இருக்கும் கச்சா எண்ணையும் எரிவாயுவுமான குழம்பு பீரிட்டுக்கொண்டு பூதமாய் வெளிவரும். ஒரு ஒப்புமைக்கு சாதாரண கார் சக்கரத்தில் இருக்கும் காற்றின் அழுத்தம் வெறும் 40 பி‌எஸ்ஐ மட்டுமே என்பதை நினைவு படுத்திக்கொள்ளலாம்! எனவே அதற்கு கொடுக்கவேண்டிய மரியாதையை கொடுத்து ஜாக்கிரதையாக அந்த கிணற்றை இறுக மூடி வைத்துக்கொள்ள வேண்டும்.

எண்ணெய்யும் தண்ணீரும்

இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு பொறியாளர்களுடன் ஐந்தாவது பயணியாக நானும் பறந்து கொண்டிருந்தேன். மின்னணுவியல் மற்றும் கருவியியலில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றபின் பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் வடிவமைப்பு அலுவலகத்தில் ஒரு வருடம் பணி புரிந்துவிட்டு அப்போதுதான் ONGCயில் சேர்ந்திருந்தேன். எனவே முதன்முதலாக ஒரு வாரப் பயிற்சிக்காக BHS என்ற ஒரு offshore பிளாட்பாரதிற்குப் போக வேண்டியிருந்தது. விமான வடிவமைப்பாளர் சிக்கொர்ஸ்க்கியின் தயவில் தொழிற்சாலைகளில் எக்கச்சக்கமான எண்ணிக்கைகளில் உருவாகி வரும் ஹெலிகாப்டர், யோசித்தால் சாதாரண விமானம் போல் இல்லாது வெறும் காற்றையே ஒரு கயிறு போல் பிடித்துக் கொண்டு விறுவிறுவென்று செங்குத்தாக மேலே ஏற வல்லது.

இறுதிச்சுற்று சிந்தனைச்சோதனைகள்

பூமி ஒரு உருண்டையான கோளாக இல்லாமல் ஒரு கன வடிவத்தில் (Cube Shaped) இருந்தால் எப்படி இருக்கும் என்று பலர் கேட்டிருக்கிறார்கள், யோசித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட பூமியின் மேல் நடக்கும்போது நாம் தட்டையான ஒரு தளத்தின் இறுதிவரை நடந்து சென்றபின் 90 டிகிரி கோணத்தில் உள்ள அடுத்த பக்கத்திற்கு தாவ முடியுமோ?

சின்னச்சின்ன சிந்தனைச்சோதனைகள்

ஒரு கிராமத்தில் சில நூறு ஆண்கள் வாழ்வதாகக்கொள்வோம். அதில் பலர் தங்கள் முகத்தை தாங்களே சவரம் செய்து கொண்டு விடுகிறார்கள். மற்றவர்கள் சவரம் செய்துகொள்ள அதே கிராமத்தில் வாழும் நாவிதரை நாடுகிறார்கள். கிராமத்தில் இருப்பவர் ஒரே ஒரு ஆண் நாவிதர்தான். அவர் தனக்குத்தானே சவரம் செய்து கொள்கிறார். இப்போது நாவிதரிடம் சவரம் செய்து கொள்பவர்களை ஒரு அணியாகவும், தாங்களே சவரம் செய்து கொள்பவர்களை ஒரு அணியாகவும் பிரித்தால், நாவிதரை எந்த அணியில் சேர்க்க வேண்டும்?

பொருளாதார சிந்தனைச்சோதனைகள்

மிச்சிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் ஆக்ஸில்ராட், நீதி, நியாயம் என்றெல்லாம் சமூகம் நமக்கு போதிப்பதை ஓரங்கட்டிவிட்டு அறிவியல் பூர்வமாக வாழ்வில் நாம் எப்படி நடந்து கொள்வது லாபகரமானது என்று ஆய்ந்து பார்க்க முடிவெடுத்தார். இந்த ஆய்வுக்காக 1980 வாக்கில் அவர் ஒரு போட்டியை அறிவித்தார்.

வணிகவியல் சிந்தனைச்சோதனைகள்

இந்த நிகழ்ச்சியில் கடவுள் நம்பிக்கை உள்ள, தர்மநியாயத்தை கடைபிடிக்கும் இரண்டு குழந்தைகளுக்கு தாயான, படித்த, சமூகத்தில் நல்ல மதிப்புள்ள ஒரு பெண் என்றெல்லாம் தன்னை கூறிக்கொள்ளும் ஒரு போட்டியாளர், சற்றே பயமுறுத்தும் தோற்றத்துடன் காணப்படும் எதிராளியான ஒரு ஆணிடம், “என்னை பார்த்தாலே தெரியவில்லையா? கடவுள் மீதும், என் குழந்தைகள் மீதும் சாட்சியாக நான் “பிரி” பந்தைதான் எடுக்கப்போகிறேன். எனவே நீங்களும் “பிரி” பந்தையே தயவு செய்து தேர்ந்தெடுங்கள். நாம் பரிசுத்தொகையை பிரித்தெடுத்துக்கொண்டு…

இயற்பியல் சிந்தனைச்சோதனைகள்

ஒரு இரும்புப்பெட்டி. பெட்டிக்குள் ஒரு பூனை. அதே பெட்டிக்குள் ஒரு கண்ணாடிக்குடுவையில் கொஞ்சம் விஷம். தனியாக இன்னொரு பாத்திரத்தில் கதிரியக்கத்தன்மை உள்ள ஒரு சமாச்சாரம் அது ஒரே ஒரு அணுவாகக்கூட இருக்கலாம். அடுத்த ஒரு ஒரு மணிநேரத்தில் அந்தப்பெட்டிக்குள் கதிரியக்கம் நிகழும் சாத்தியக்கூறு 50 சதவீதம். கதிரியக்கம் நிகழ்ந்தால் அதை உணர ஒரு உணர்வி (Geiger Counter). கதிரியக்கம் நிகழ்ந்து விட்டால், அந்த உணர்வி இயங்கி ஒரு சுத்தியலால் அந்த விஷக்குடுவையை உடைத்து விடும். எனவே விஷம் பெட்டிக்குள் பரவி பூனை பரலோகம் போய்ச்சேரும்.

பெண்ணியல் சிந்தனைச்சோதனைகள்

உலகம் முழுதும் எல்லா நாடுகளிலும் தேர்வுகள் நடத்தி, பின்லாந்து நாட்டில் இருந்து ஜான் என்ற ஒரு ஆணும், தாய்லாந்தில் இருந்து ஜாய் என்ற ஒரு பெண்ணும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் இருவரையும் தனித்தனியே ஒரு விண்கலத்தில் அமர்த்தி செவ்வாய் கிரகத்துக்கும், வீனஸ் கிரகத்துக்கும் அனுப்பி வைக்கிறோம். விண்கலங்களில் தேவையான பிராணவாயு, தண்ணீர், எக்கச்சக்கமாக சாப்பாடு, தங்களை தாங்களே குளோனிங் செய்துகொள்ள தேவையான இயந்திரங்கள்…

கணிதசிந்தனைச்சோதனைகள்

ஹில்பர்ட் தனது கற்பனையில் கட்டிய விடுதியில் உள்ள மொத்த அறைகளின் எண்ணிக்கை முடிவிலி! அதனால் விடுதியின் விளம்பர வாசகமே, “ஹில்பர்ட் ஹோட்டலில் இடமில்லையாவது..?” என்பதுதான். எங்கள் விடுதி நிரம்பி இருந்தாலும், வரும் விருந்தினர்களை எப்போதும் திருப்பி அனுப்ப மாட்டோம் என்பது அவர்கள் தரும் உத்திரவாதம். விடுதி இருக்கும் ஊரில் ஒரு பெரிய கணித மாநாடு நடப்பதால் ஒரு வாரம் அத்தனை அறைகளும் புக் செய்யப்பட்டு…

தூக்கத்தைக்கெடுக்கும் சிந்தனைச்சோதனைகள்

ஒரு விஷமக்கார விஞ்ஞானி நீங்கள் தூங்கிக்கொண்டு இருக்கும்போது உங்களுக்கு மயக்க மருந்து கொடுத்து உங்கள் மூளையை மட்டும் எடுத்து ஒரு ஜாடியில் ஏதோ ஒரு ஸ்பெஷல் திரவத்தில் உயிரோடு இருக்கும்படி மிதக்க விடுகிறார். அதன்பின் ஒரு சக்தி வாய்ந்த கணினியை உங்கள் மூளையுடன் இணைத்து சாதாரணமாக கண், காது, மூக்கு, இத்யாதி வழியாக உங்கள் மூளைக்குள் வந்து சேரும் அத்தனை செய்திகளையும் உங்கள் மூளையுடன் இணைக்கப்பட்டு இருக்கும் ஒயர்களின் வழியாக அனுப்பி வைக்கிறார்! கணினி உங்கள் மூளைக்குள் அனுப்பி வைக்கும் சமிக்ஞைகள் அந்த விஞ்ஞானியின் கட்டுப்பாட்டில் இருப்பதால்…

புரிதல் பற்றிய சிந்தனைச்சோதனைகள்

ஒரு இருட்டு குகை. அதனுள் ஒரு வெற்று சுவற்றை பார்த்துக்கொண்டு நிற்கும்படி விலங்கிடப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பல கைதிகள். பிறந்ததில் இருந்து அங்கேயே அடைந்து கிடக்கும் அவர்கள் வெளி உலகையே அறியாதவர்கள். இந்தக்கைதிகள் இருக்கும் இடத்திற்குப்பின்னால் எரிந்துகொண்டு இருக்கிறது ஒரு தீப்பந்தம். அந்த தீப்பந்தத்துக்கும் கைதிகளுக்கும் இடையே ஒரு குட்டிச்சுவர். அதன்பின் பொம்மலாட்டக்காரர்கள் போல் பலர் அட்டையால் செய்யப்பட்ட மனித, விலங்கு உருவங்களை குச்சிகளில் ஒட்டி தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டு தலைக்குமேல் உயர்த்தியவாறு வருவதும் போவதுமாக இருக்கிறார்கள்.

கணினியியலில் சிந்தனைச்சோதனைகள்

ஒரு டியுரிங் தேர்வு முயற்சியில், 30% நடுவர்கள், தாங்கள் உக்ரைன் நாட்டைச்சேர்ந்த ஒரு பதின்மூன்று வயது  சிறுவனுடன் உரையாடிக்கொண்டு இருப்பதாக நம்பினார்கள் ஆனால் அவர்கள் ஊடாடிக்கொண்டு இருந்ததென்னவோ ஒரு கணினியுடந்தான் என்கிறது. இந்த அறிவிப்பை வைத்துக்கொண்டு டியுரிங் அறுபது ஆண்டுகளுக்கு முன் அமைத்துக்கொடுத்த ஒரு மைல் கல்லை தாண்டி இருக்கிறோம் என்று சொல்லலாம் என்றாலும், இதுவரை இத்தகைய சாதனைகளை புரிய மென்பொறியாளர்கள் பல்வேறு தகிடுதத்தங்களைத்தான் நம்பி இருக்கிறார்களேயொழிய நிஜமாகவே கணினிகள் நம்மைப்போல இன்னும் யோஜனை செய்ய ஆரம்பிக்கவில்லை என்பதுதான் உண்மை.

அன்றாட வாழ்வில் சிந்தனைச்சோதனைகள்

இனிவரும் காலங்களில் மேன்மேலும் செயற்கை அல்லது இயற்கை மாற்று உறுப்புக்களை நாம் பொறுத்திக்கொள்ளும்போது, எப்போது ஒரு மனிதர் தன் அடையாளத்தை இழக்கிறார்? நாம் அனைவரும் எப்படி சிந்திக்கிறோம், எந்த மாதிரி சட்டதிட்டங்களை ஆதரிக்கிறோம் என்பதெல்லாம் நமது பின்புலம், நாம் வாழும் சமூகத்தின் பின்னணிச்சூழல் என்ன என்பதைப்பொருத்ததே என்பது சரியா?

சிந்தனைச்சோதனைகள்

வெகு காலத்துக்கு முன்பே கேள்விகள் வழியே பிரச்சினைகளை அலசும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும் பழசும் புதுசுமாய் இவற்றில் பல வகைகள் உண்டு. அறிவியல், உளவியல், பொருளாதாரம், அரசியல், மதங்கள், நீதி, தர்மம், நெறிமுறை (Ethics), தத்துவம் என்று பல துறைகளையும், மனித சமூகத்தின் வாழ்முறையின் பல பக்கங்களையும் தொடும் சிந்தனைச்சோதனைகளை இந்த தொடரில் கொஞ்சம் அலசுவோம். நீங்கள் நிச்சயம் சில சோதனைகளைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். நாம் தொடப்போகும் அத்தனை சோதனைகளையும் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருக்காதவரை, சில நாட்களாவது உங்கள் தூக்கத்தை கெடுத்த புண்ணியத்தை நான் தேடிக்கொள்வேன்.

ஒரிஜினல் உச்சரிப்பில்…

1994ல் ஆரம்பிக்கப்பட்ட க்ளோப் தியேட்டர், ஷேக்ஸ்பியர் காலத்தில் நடத்தப்பட்டது போலவே நாடகங்கள் நடத்துவதற்காக என்று அமைக்கப்பட்டது. மேடை அமைப்பு, உடைகள், போன்றவை அந்தக்காலத்தைய முறைப்படி செய்யப்பட்டாலும், உச்சரிப்பையும் அந்தக்காலத்திற்கு கொண்டுபோனால் யாருக்கும் பாதி நாடகம் கூட புரியாது என்று பயந்து இருந்தவர்கள், பத்து வருடங்களுக்கு முன் முதல் முறையாக ரோமியோ & ஜூலியட் நாடகத்தை ஒரிஜினல் உச்சரிப்பில் அரங்கேற்ற, அதற்கு ஏகப்பட்ட வரவேற்பு!

பழைய மூளைக்குள் சில புதிய மூலைகள் – 2

மூளையை உங்கள் மேஜை கணிணிக்கும், நமது புலன்களை கீ போர்டு, மவுஸ், காமிரா போன்ற கணிணியுடன் இணைந்து இயங்கும் கருவிகளுக்கு இணையாகவும் உருவகித்து பார்க்கலாம். கணிணிகளில் நிறைய யு‌எஸ்‌பி (USB) துறைமுகங்கள் அமைக்கப்பட்டு புலன் கருவிகளை இணைத்துக்கொள்ள வழி செய்யப்பட்டு இருப்பதைப்போல் மூளையிலும் வரும் செய்திகளைப் பெற்றுக் கொள்ள குறைந்தது ஐம்புலன்கள் என்ற ஐந்து துறைமுகங்கள் காத்திருக்கின்றன. ஒரு மவுஸ் கணிணியுடன் இணைக்கப்படும் யு‌எஸ்‌பி போர்ட்டில் (USB Port) அதற்கு பதில் ஒரு ஜாய் ஸ்டிக் (Joy Stick) அல்லது தொடுபலகை (Touch Pad) ஒன்றை இணைத்தும்கூட நிலைக்காட்டியை (Cursor) நாம் நகர்த்த இடும் கட்டளைகளை கணிணிகள் புரிந்துகொண்டு செயல்படுவதைப்போல் மூளையாலும் செயல்பட முடிகிறது.

பழைய மூளைக்குள் சில புதிய மூலைகள் – 1

கை கால்களை இழந்தவர்களுக்கு, செயற்கை கை கால்களை பொறுத்திக்கொடுத்து அவர்களை முடிந்த அளவு நேர்ப்படுத்துவதுபோல், ஐம்புலன்களில் ஏதாவதொன்றை பிறவியிலேயோ அல்லது வாழ்வின் இடையிலோ இழந்தவர்களுக்கு செயற்கை உபகரணங்களை (Prosthesis) பொறுத்தி அந்த திறனை திரும்ப பெற்று தருவது மருத்துவத்துறையின் வெகுநாளைய போராட்டம். இந்தத்தேடல் அல்லது தேவை எல்லோருக்கும் எளிதாகப்புரியும் விஷயம். ஆனால் அந்த முயற்சியின் வழியாக நாம் பெற்றிருக்கும் அனுபவத்தைக்கொண்டு, நரம்பியல், மூளை முதலியவற்றை பற்றிய சம்பிரதாயமான ஆய்வுகளைத்தாண்டி, இதுவரை மனிதர்களுக்கு முற்றிலும் அறிமுகம் இல்லாத புதிய புலன்களை அமைத்துக்கொடுத்து புதிய திறன்களை மனித மூளைக்கு கொடுக்க முடியுமா என்பது எளிதாக எல்லோருக்கும் தோன்றாத ஒரு புத்திசாலித்தனமான கேள்வி.

தொடர்பாடல் செயலிகளின் பரிணாம வளர்ச்சி – 4

அலுவலகத்துக்குள் இருக்கும் ஐம்பது கணிணிகளை இணையத்திலிருந்து மறைத்து ஒரே கணிணி போல ப்ராக்ஸி கொடுப்பது. இப்படிச்செய்வதால் இணையத்திலிருந்து தபால் பொட்டலங்கள் வந்து சேர ஒரு அலுவலகத்துக்கு ஒரு இணைய முகவரி இருந்தால் போதும். ஒரு வீட்டில் பலர் வசித்தாலும், வீட்டுக்கு என்று ஒரே முகவரியை உபயோகித்துக்கொண்டு வரும் கடிதங்களை பெயரை பார்த்து அவரவர் எடுத்துக்கொள்வது போல, அலுவலகத்துக்குள் இருக்கும் எல்லா கணிணிகளையும் இந்தபெட்டி அறிந்துகொண்டு வெளியுலகத்துடன் தான் மட்டும் பேசி, வந்து சேரும் பொட்டலங்களை சரியான கணிணிக்கு அனுப்பி விடுகிறது. இது ஒரு முக்கியமான வேலை. இப்படிச்செய்வதால்தான் IPv4 முகவரிகள் தீர்ந்து போய் முழிக்காமல் இன்னும் சமாளித்துக்கொண்டு இருக்கிறோம்.