தனது வாழ்வில் நிகழ்ந்த பலவிதமான அனுபவங்களையும் மிக நுட்பமான நகைச்சுவை உணர்வுடன் தீலீப்குமார் சித்தரிக்கும் பொழுது நம் மனதில் அந்தச் சிறுகதைகள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவரது ஒவ்வொரு சிறுகதையும் மனிதாபிமானத்தையும் சிக்கலான மனித உறவுகளையும் தொட்டுச் செல்பவை.
மேலும் படிக்க...»அம்மன்புரத்தில் சைக்கிளில் ஏறி உட்கார்ந்து மிதிக்கத் தொடங்கினோம். எனக்கு லேசாக தலை சுற்றியது. அதற்குப் பிறகு சைக்கிள்தான் எங்களைக் கூட்டிக் கொண்டு போனது. அடுத்த ஊரான திருச்செந்தூர் வர ரொம்ப நாளானது. ஒருமாதிரியாக செந்திலாண்டவன் சன்னிதியை அடைந்தோம். சட்டையைக் கிழற்றிவிட்டு சன்னிதானம் முன் நின்றோம். எனக்கு இரண்டு முருகர்கள் தெரிந்தனர். ஷண்முகர் சன்னிதியில் வள்ளி தெய்வானையுடன் இருக்கும் முருகனை தரிசிக்கப் போன போது அங்கு அவர்கள் ஒரு கூட்டமாக ஒரு பெரிய கூட்டுக்குடும்பமாகக் காட்சியளித்தனர். கோயிலை விட்டு வெளியே வந்து கடற்கரையில் விழுந்தோம்.
ஒரு இசைக்கலைஞர் இசைப் பாரம்பரியமே இல்லாத ஒரு குடும்பத்தில் பிறக்கும் முதல் தலைமுறை இசைக்கலைஞராக இருக்கலாம். அப்படிப்பட்டவர் சிறு வயதிலேயே மேதையாக விளங்கி, ஒரு புதிய இசைக்கருவியிலோ அல்லது இசை வடிவத்திலோ சிறந்து விளங்கவும் நேரிட்டால், அந்த இசைக்கலைஞரில் நாம் இசையுலகின் ஒரு மார்க்கதரிசியைக் காண்கிறோம். இப்படிப்பட்ட மூன்று மார்க்கதரிசிகளால் நம் இசைக்கு மாண்டலின், சாக்ஸஃபோன், ஸ்லைட் கிடார் என்ற மூன்று புதிய இசைக்கருவிகள் கிடைத்திருக்கின்றன.
பூமிப்பந்து சூடடைவது என்பது ஏதோ 20-30 வருட காலக்கணக்கில் முடிவு செய்யக்கூடியது அல்ல. ஏனெனில் பூமியின் வயது பல பில்லியன் வருடங்கள். பூமிப்பந்து எரிகுழம்பு வழிந்தோடும் பரப்பாக இருந்திருக்கிறது. பனியுகத்தில் பனிப்பாளங்களால் நிரப்பப்பட்டு இருந்திருக்கிறது. பிறகு மீண்டும் சூடாகியிருக்கிறது. பனிப்பாளமாய் இன்று இருக்கும் ஐஸ்லாந்தில் ஒருகாலத்தில் வைக்கிங்குகள் விவசாயம் செய்திருக்கிறார்கள்.