ஐம்பது வயது முதியவர் சிறு கதையின் நாயகன். மணமாகாதவர்.மனம் விட்டுப்பேசவும் ஒரு ஆறுதல் கூறவும் அவருக்கு ஒரு துணை வேண்டும். அப்படி ஒரு பெண்ணும் அமைந்து விடுகிறாள். ஊரார் ஆயிரம் பேசுவர்தான். ஈவிரக்கமற்றது காலம். அவள் இறந்தும் விடுகிறாள். அம்முதியவர் அவளுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு ஊர் திரும்புகிறார். அவரின் மன வலி யாருக்குத்தான் புரியும். அக்களூர் இரவி தத்ரூபமாக அந்த பாத்திரத்தை நம்மோடு அமர்ந்து பேச வைக்கிறார்.
