வீட்டில் வம்சியின் மனைவியோ, பிள்ளைகளே இருக்கும் சந்தடியே இல்லை. என் பார்வையை கவனித்த பணிப்பெண், வம்சி, மனைவியை பிறந்தவீட்டுக்கு அனுப்பி விட்டான் என்றும், வீட்டுக்கு எப்போதாவதுதான் வருவான் என்றும், கடைக்குக் கூடப் போகாததால் வேலையிலிருந்து நீக்கி விட்டார்கள் என்றும் தெரிவித்தாள். அவனுடைய மாமாவும் ஊரில் இல்லையாம். அவர்தான் உடன்பிறந்தவளை கவனித்துக் கொள்வதற்காக இந்தப் பெண்மணியை ஏற்பாடு செய்தாராம்.
