எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கும் மகள். கனடா நாட்டுப் பையன்களுடன் ஊர் சுற்றுவாள், மால்களில் உடலை இறுகப் பிடிக்கும் ஸ்வெட்டர்களை வாங்குவாள். இளைய மகள், பேமின் கூற்றுப்படி, நல்ல மகள், எத்தியோப்பியாவுக்காக நிவாரண நிதி திரட்டிய போது தன் இனிய குரலில் பஜன் பாடல்களை இளைய மகள் பாடியதில், என் சிக்கனக்கார கணவர் கூட நூறு டாலருக்கு காசோலையை கையெழுத்திட்டு கொடுத்தார். அவளும் அந்த விமானத்தில் தான் இருந்தாள். பேம் போகாததால், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களை அவள் தன் தாத்தா பாட்டியுடன் கழிக்க இருந்தாள். பேமுக்கு போக விருப்பமில்லை. மெக்டோனால்டில் தன் வேலையை தொடரவே விரும்பினாள். பம்பாயா அல்லது ஒண்டர்லேண்டா என்றால் நான் ஒண்டர்லாண்டையே தேர்ந்தெடுப்பேன்” என்றாள்.
