ராமச்சந்திரம்

நகரத்தில் வளர்ந்த பெண்ணான 18 வயது மாயாவிற்கு, கேட்டவரம்பாளையத்தின் இயற்கை அழகு மிகப் பிடித்து விடுகிறது. ஆனால் கிராமத்தின் பழக்க வழக்கங்கள் சில அவளுக்கு வியப்பையும், மெல்லிய அசூயையும் அளிக்கின்றன. கிராமத்து மனிதர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள். வாசுவிற்கு ஊரில் நல்ல மரியாதை. பட்டணத்துப் பெண்ணான மாயாவின் நடை, உடை, பாவனைகள்/நடத்தைகள் கிராம மக்களுக்கு புதிதாக இருக்கின்றன. கேட்டவரம்பாளையம் ஊருக்கு வந்த புதிதில், கிராமத்து மனிதர்கள், பெண்களின் சில கட்டுப்பெட்டித்தனங்கள் மேல் மனதுக்குள் சிறிய கேலியும், எள்ளலும் கொண்டிருக்கிறாள் மாயா.