என் உடன் பிறந்தவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவனை பழி வாங்கும் வரை, என் தந்தை மறைந்தபின் வரிசையாக வந்த பல துன்பங்களால் வருந்தும் என் பிரஜைகளுக்கு என் கடமையை செய்யும் வரை, என் மனம் ஆறுதல் அடையாது. அதன் பின் நானும் வருகிறேன். உங்களிடம் தர்ம உபதேசங்களை கேட்கவும், உங்கள் அடி பணிந்து தவ வாழ்க்கையை மேற் கொள்ளவும் வருகிறேன். இந்த உபதேசங்களால் என் ரஜோ குணங்கள் அடங்கட்டும்
Category: தொடர்கள்
வினை முடித்தன்ன இனிமை
’நாம் செய்ய வேண்டிய வேலை என்ன’ என்பது நமக்குத் தெரியும். பல சமயம் நாம் அதைக் கவனிப்பதில்லை. கவனமின்மையும், அசிரத்தையும், பயம், இன்பம் துய்த்தல் போன்ற உந்துதல்களும் நம் கண்களை மறைத்து விடுகின்றன. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தால் அது தன்னைக் காட்டிக் கொள்ளும். அலை பாயும் மனம், அதைக் காணவொட்டது தடுக்கும். எனவேதான் அமைதி முக்கியம். செய்ய வேண்டிய வேலை சரியான வேலையாகவும் இருக்க வேண்டும்.
றெக்கை – அத்தியாயம் 4
ஜாக்கிரதைன்னா இங்கே இருக்கற இளம் வயசு, மத்திய வயசு ஆண்களும் பெண்களும் உங்க சிநேகம் கிடைக்காதான்னு ஏங்கப் போறாங்க. நீங்க கையைப் பிடிச்சு பார்த்து உடம்புக்கு என்னன்னு விசாரிப்பீங்க ஒரு டாக்டராக. நீதான் வேணும்னு கையை விடாமல் அடம் பிடிக்கலாம். ஜாக்கிரதை. அதிலே முதல் ஆசாமி என் வீட்டுக்காரன் தான். என் தங்கச்சியை கணக்கு பண்ணிட்டு இருக்கான் இப்போ. அவகிட்டேயும் ஜாக்க்கிரதைன்னு தான் சொல்லியிருக்கேன் நிம்மி
கண்டான் சகோதரியை!
மைதியாக இருந்த இடம் – திடீரென இந்த அழுகுரல் கேட்கவும் விரைந்து ஓடி அருகில் சென்றேன். பல பெண்கள் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தனர். அந்த பெண்ணோ, பிடிவாதமாக நெருப்பில் இறங்க முயன்றாள். யாரோ துரத்தி வந்தார்களோ, என்ன காரணம் தெரியவில்லை பாதங்கள் வீங்கி இருந்தன. நகங்கள் உடைந்து கிடந்தன – அடிபட்டிருந்தது போலும். போஜ பத்திரங்களால் முழங்காலில் கட்டு போட்டிருந்தாள். வழியில் பேரீச்ச மரங்கள் உண்டு. முள் கிழித்ததோ என்னவோ. தண்ணீர் விட்டான் கிழங்குகள் என்போம், அதிலும் முள் உண்டு. அது தான் குத்தியதோ, கீறல்கள் தெரிந்தன. தாறு மாறாக வளர்ந்த கொடிகள் அவள் ஆடையில் சுற்றிக் கொண்டு விட்டன போலும்
இயற்கை ஏன் வடிவங்களை உருவாக்குகிறது
சுழல் வடிவங்கள் (spirals), இயற்கையின் மிகவும் கவர்ச்சிகரமான வடிவங்களாகும். அம்மோனைட் புதைபடிவங்கள், சூறாவளிகள், மற்றும் சூரியகாந்தி விதைகளின் அமைப்பு ஆகியவை இதற்கு உதாரணங்கள். இந்த logarithmic சுழல்கள், ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வளரும்போது தங்கள் வடிவத்தைத் தக்கவைத்துக்கொள்கின்றன. உதாரணமாக, கடல் சிப்பியில் புரதப் பட்டைகள் சுழல் வடிவங்களை உருவாக்குகின்றன. இவை ஃபிபோனாச்சி வரிசையைப் பின்பற்றி, சூரியகாந்தி விதைகள் அல்லது பைன் கோன்களில் உள்ள செதில்களை அமைக்கின்றன
தென்கொரியப் பயணம் – சியோல் அனுபவங்கள்
ஓடோடி வரும் குதிரைகள், ஆயுதங்களைச் சுமந்த வீரர்கள், வண்ணமயமான உடைகள், கட்டுக்கோப்பான நடைமுறைகள், பாரம்பரிய ஆயுதங்கள், இசை என்று ஒரு விழாவைப் போல காட்சிப்படுத்தியிருந்தார்கள். கடமையாக அனைத்தையும் வீடியோ எடுத்துக் கொண்டோம். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நின்றதில் அப்பொழுதே கால் வலிக்க ஆரம்பித்து விட்டது. நிகழ்ச்சி முடிந்ததும் உள்ளே சென்று பார்க்க வேண்டிய இடங்களைப் பார்க்கப் பார்க்க இன்பம்.
பள்ளி-சமூகம்-பெற்றோர் கூட்டுறவு: நிலையான கல்வி மேம்பாட்டிற்கான அடிப்படை
முதலாவதாக, குடும்பங்களுக்கும் பள்ளி பணியாளர்களுக்கும் இடையே ஒரு கூட்டுறவு உண்டு, அதன் நோக்கம், மாணவர் வெற்றிக்கான ஒரு வரையறையை உருவாக்கி முன்னேறுவது. இரண்டாவதாக, குடும்பங்களும் பள்ளி பணியாளர்களும் சேர்ந்து மாணவர்கள் நலனுக்காக, கலாசாரம் மற்றும் பிற நம்பிக்கைகள் அடிப்படையில் பரஸ்பர நம்பிக்கை, புரிதல் மற்றும் பாராட்டுக்களை வளர்க்கும் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்குகின்றனர்.
கவிஞர் பகவான், ஆசு பாபு ராஜேந்திர பிரசாத் & என்ட்லூரி சுதாகர்
இது ஒரு விதத்தில் விட்டுப் பிரிய முடியாத, உயிருக்கும் உயிருக்கும் இடையில் இருக்கும் நுட்பமான உறவுக்கு உயர்ந்த இடத்தைக் கொடுக்கும் கவிதை. ஒரு பெண் தன் வாழ்க்கைப் பயணத்தில் இவ்வாறு தன் வீட்டை விட்டு இன்னொருவர் வீட்டுக்குச் சென்று, அவர்களில் ஒருவராக மாறுவது என்பது உயிர் வாழ்வதற்காக மட்டுமே. அந்த வீட்டு மனிதர்களின் இயலாமை அவளுக்கு பற்றுக்கோடானது.
வாழ்க்கை: இடரின் நீர்நிலை, முயற்சியின் படகு
அதே போல குடுபங்களுக்கென ஒரு கொள்கைப் பிடிப்பு அறம் உண்டு. அது எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். சில குடுபங்களில் கடின உழைப்பு, நேர்மை, சில குடுபங்களில் எதிலும் விட்டுக்கொடுக்காத தன்மானம், வேறு சில குடுபங்களில் காலத்தோடு காரியமாற்றும் பண்பு என எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். அந்த கொள்கைப் பிடிப்புகளை விட்டுவிடாமல் செயலாற்ற பழக வேண்டும். இல்லை எனில் குடும்பச் சூழல் இனிக்காது.
நவீன தெலுங்கு இலக்கியத்தில் பெண்ணியம் எழுதிய ஆண் எழுத்தாளர்கள் – பகுதி- 1
சில ஆண் எழுத்தாளர்கள், பெண்கள் எழுதிவரும் பெண்ணியக் கருத்தியலோடு ஒன்றுபட்டு, பெண்களின் உணர்வுகளை மதித்து, பல படைப்புகளைச் செய்தனர். பெண்கள் மட்டுமே அன்றி அவர்களுக்குத் துணையாக ஆண் எழுத்தாளர்களும் தம் பங்கு உதவியை அனைவரும் ஏற்கும் விதமாக அளித்து வருகிறார்கள். அவற்றில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற அனைத்தும் உள்ளன.
11. அறிவின் ஒளி
பசுவுடன் தொடர்புடைய பால்காரர்களுக்கு பெரியம்மை தொற்று ஏற்படுவதில்லை என்று கவனித்த ஜென்னர் தன் வேலைக்காரர் மகனான ஜேம்ஸ் பிப்ஸ் என்ற 10 வயது சிறுவனுக்கு மாட்டின் அம்மை (cowpox) கொப்புளத்திலிருந்து எடுத்த சீழை உட்செலுத்தினார். பின்னர் அவனுக்கு பெரியம்மை (smallpox) பொருக்குகளை உட்செலுத்தியும் பெரியம்மை நோய் அறிகுறிகள் ஏற்படவில்லை. பின்னர் தன் மகன் உட்பட பலரிடம் சோதனை செய்து நோய்த்தடுப்பூசி முறையை முன்வைத்தார்.
பாறைகள் பகிரும் பழங்கால கதைகள்
தக்காண பீடபூமியில் பாறைகளின் உருவாக்கம் சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் எரிமலை வெடிப்புகளினால் உருவான பசால்ட் (basalt) பாறை அடுக்குகளில் உள்ளது. இந்த நிகழ்வு ‘டக்கன் டிராப்ஸ்’ (deccan traps) என்று அழைக்கப்படுகிறது. அடுக்கடுக்காக படிந்துள்ள பசால்ட் பாறைகள் பல லட்சம் சதுர கிலோமீட்டருக்கு மேல் பரப்பில் காணப்படுகின்றன. தக்காண பீடபூமி ஆழமான உணர்வும் ஆயுட்காலமும் கொண்டது. இதில் கிடைக்கும் கறுப்பு (Black) மண் வகை பயிரிட மிகவும் உகந்தது.
பாரம்பரியப் படிக்கிணறுகளின் ஆய்வில் அறிவியல் சிந்தனை
மேற்கு இந்தியாவின் ராஜஸ்தான், குஜராத் போன்ற வறண்ட பகுதிகளில் காணப்படும் பல படிக்கிணறுகள், இப்பகுதியைச் சேர்ந்த ராணிகள் மற்றும் இதர பெண் புரவலர்கள் அங்கிருந்தவர்களின் குடிநீர் தேவைகளை மனதில் கொண்டு, உருவாக்கிய காதல் சின்னங்கள்.
பூமியில் அரசர்களின் அனுராகம்
தன் சுய கௌரவம் இன்றி தண்ணீருக்காக உடலை வளைத்து கை நீட்டுவான். இதற்கு உதாகரணம் துலா யந்திரம் – எடை பார்க்கும் கருவி. கௌரவம்-கனம், சுய மதிப்பு இரு பொருள். துலா யந்திரம் கனத்தை கீழே தள்ளூம். யாசிப்பவன் என் கௌரவத்தை இழப்பான். கஞ்சன்- தர மாட்டான் என்று தெரிந்தும் அவன் காலைப் பிடித்து வேண்டுபவன் போல, அவன் திட்டினாலும் பொருட் படுத்தாமல் தன் தேவைக்காக நெருங்குபவன் மனதில் எந்த அளவு வேதனை இருக்கும்.
சமூக உணர்ச்சி கற்றலை வகுப்பறையில் ஒருங்கிணைக்கும் வழிகள்
ஒவ்வொரு மாணவனின் திறமையையும், உழைப்பையும், கலாச்சாரத்தையும் பாராட்ட வேண்டும். நம் வகுப்பில் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்த மாணவர்கள் இருக்கலாம். ஒருவர் கிராமத்து பின்னணி, இன்னொருவர் நகர பின்னணி என்று இருக்கலாம். ஒருவர் வீட்டில் தமிழ் பேசுவார், இன்னொருவர் தெலுங்கு அல்லது இந்தி பேசுவார். இந்த வேறுபாடுகளை பலவீனம் என்று நினைக்காமல், அது ஒவ்வொருவருடைய தனித்துவம் என்று பாவித்து, அவற்றைப் பாராட்ட வேண்டும்.
9. ஒருங்கிணைப்பின் வழியே
அஹ்ரிமான் சிலையின் நான்கு சிறகுகள், நான்கு பருவங்களின் சின்னங்களைத் தாங்கியுள்ளன. இடியின் சின்னம் அவரது மார்பில் பொறிக்கப்பட்டுள்ளது. சிலையின் அடிப்பகுதியில் தீயின் தெய்வமான வல்கனின் (Vulgan) சுத்தியல் மற்றும் இடுக்கியும் – மெர்க்குரி தெய்வத்தின் சேவல் மற்றும் கோல் (கடுசியஸ்) உள்ளன. மெர்க்குரி வணிகம், சொல்லாற்றல், தகவல் தொடர்பு, பயணிகள், எல்லைகள், அதிர்ஷ்டம், தந்திரம் ஆகியவற்றுக்கும், ஆன்மாக்களை பாதாள உலகத்திற்கு வழிகாட்டி அழைத்தும் செல்லும் தெய்வம்
பகைவனுக்கும் அருள்வாய்!
பல யானைகளின் பலம் கொண்டவன் என புகழப்பட்ட பீமனுக்கு அது மிகப் பெரிய அவமானமாக இருந்தது. இருந்த பொழுதும், இம்முறை தனது இரு கரங்களையும் கொண்டு அதன் வாலை தூக்கி நகர்த்த முயன்றான். அவன் பலமுறை பலவிதமாய் முயற்சித்தும் இம்மி கூட அசையவில்லை. அப்பொழுதுதான் தன்னுடன் பேசிக்கொண்டிருப்பது சாதாரண குரங்கில்லை என்பது அவனது சிற்றறிவுக்கு புரிந்தது.
புரட்சியின் தொடக்கம்
நியூட்டனுடையதும் மாக்ஸ்வெலுடையதுமான கொள்கைகள் ஓன்றுடன் ஒன்று மிக மிக நுட்பமாக முரண்படுவது போல தோன்றும். மாக்ஸ்வெலின் சமன்பாடு திசைவேகம் (velocity ) – குறிப்பாக ஒளியின் திசைவேகத்தினை கணிக்கிறது. நியூட்டனுடைய இயக்கவியலோ அடிப்படை திசைவேகம் என்னும் கோட்பாட்டிற்கே இயைந்து போகாதது. அதன் சமன்பாட்டில் திசைவேகமல்ல, வேக முடுக்கமே (Acceleration) முக்கியமானது. நியூட்டனின் இயற்பியலில், திசைவேகம் என்பது இன்னொன்றைப் பொறுத்த ஒன்றின் திசைவேகம் மட்டுமே
துவங்கிய பயணமும் வந்த பரிசும்
அரசன் இந்த குடையின் வரவினால் தன் பிரயாணத்தின் ஆரம்பமே சோபனம்- நிறைவான பயன் தருவதாக அமைந்து விட்டது என்று மனம் மகிழ்ந்தான். ஹம்சவேகனிடம் பிரியமாக பேசினான். ‘ பத்ர! பரமேஸ்வரனுக்கு அர்ப்பணிக்க வேண்டிய எல்லா ரத்தினங்களையும், இந்த பெருமை மிக்க குடையையும், குமாரன் அனுப்பியதில் வியப்பில்லை. அவனே பாற்கடலில் நிலவு தோன்றியது போல உயர்ந்த ராஜ குலத்தில் பிறந்தவன். அந்த குலத்தில் வந்தவர்களின் அன்பளிப்பு அவர்களுக்கு கை வந்த கலை.
எறும்புத் தோலை உரித்துப்பார்க்க யானை வந்ததடா!
சமீப காலமாக, சிறிய எறும்புகளைப் பெரும் நுண்ணோக்கிகளின் வழியாக ஆராயும் ஆர்வம் அதிகரித்துள்ளது. மனிதக் கண்களுக்கு சாதாரணமாகத் தெரியாத அச்சிறிய புள்ளிகள், இன்று இந்த எறும்புகள் அவைகளின் சமூக நடத்தை, ஒத்துழைப்பு, மற்றும் சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறன் அனைத்தும் உயிரியல்-ஈர்க்கப்பட்ட தொழில்நுட்பத்தில் (biomimicry) விஞ்ஞானிகளின் பெரும் ஆராய்ச்சி பொருளாக மாறிவிட்டன. இயற்கையின் இந்த சிறிய அதிசயங்கள், மனித பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய வழிகளைத் திறந்துள்ளன.
தவறாக விதிக்கப்பட்ட சாபம்
ஒருநாள், காட்டில் சென்று கொண்டிருக்கையில் களைப்பாய் உணர்ந்த பரசுராமரை உறங்க விரும்பினார். உடனிருந்த கர்ணன், தனது தொடையில் தலை வைத்து உறங்குமாறு கூறினான். அதை ஏற்று, அவனது தொடையில் தலை சாய்த்து உறங்கினார். அவர் உறங்கத் துவங்கி சிறிது நேரத்தில் ஒரு வண்டு அவனது தொடையைக் கடிக்க, தான் அசைந்தால் குருவின் தூக்கம் களைந்து விடுமோ என வலியை பொறுத்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அவனது தொடையை கடித்து ஊடுருவி மறுபக்கம் வழியே வெளிவந்தது வண்டு
தெலுங்கு பெண் எழுத்தாளர்கள் கொண்டாடப்படுகிறார்கள் – பகுதி- 2
எந்தக் கதையைப் படித்தாலும், யாருடைய கதையைக் கேட்டாலும் அதில் பெண் கதாபாத்திரம் என்ன என்று கவனமாகப் பார்த்து அந்தப் பாத்திரத்தை ஆராய்வது என் வழக்கம். இந்தக் கவனிப்பால் பல பெண்களின் மேன்மையை தரிசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நாம் முன்பென்றும் அறிந்திராத பெண்களும், அவர்களுடைய இயல்புகளும் கதைகளின் மூலம் அறிமுகமாகி, என்னோடு உரையாடுவதும், உயிரோடு நினைவில் நிற்பதுமாக சிறந்த அனுபவத்தைத் தருகிறார்கள்
அணிவகுத்த படைகள்
மூன்றாவது யாமம் தொடங்கியதுமே, பிரயாண படஹ என்ற வாத்யங்கள் ஒலிக்கலாயின. நிச்சப்தமாக இருந்த இரவில் அவை கம்பீரமான ஒலி அலைகளை பரப்பி, அனைவரையும் எழுப்பி விட்டது. திக்குகளில் கும் கும் என்ற நாதமே நிறைந்திருக்க பொழுது புலரும் முன் வழியனுப்ப அனைவரும் வந்து கூடினர். முன்னால் நின்று பிரயாண க்ரோசம் என்ற பெயரில், எட்டு பேர் தனித்தனியாக படஹத்தை வாசித்து அதன் நியமத்தை அனுசரித்தனர்.
மயக்கமும் பித்தமும் கொண்டார்
வீரயுகப் பாடங்களின் தொகுதியான புறநானூற்றில், அதன் அடிப்படை தொனியை மீறிய சில கவிதைகள் இடம் பெற்றிருப்பதைக் காண முடிகிறது. மாற்பித்தி என்ற பெண் கவிஞர் பாடியதாகப் புறநானூற்றில் அடுத்தடுத்து வைக்கப் பட்டிருக்கும் இரண்டு கவிதைகளும் (251,252) வழக்கமான புறப்பாடல்களிலிருந்து தொனியால் வேறுபடுபவை. வாகைத் திணையில் தாபத வாகைத் துறையில் அடக்கப்பட்டுள்ளவை.
7. மூன்றே பொருளாய் முடிந்தது
சித்த மருத்துவம் என்று குறிப்பாகவோ, இல்லை காலத்தை தெளிவாக குறிக்கக்கூடிய அகழ்வாராய்ச்சி முடிவுகளோ, இலக்கிய குறிப்புகளோ கிடைப்பதில்லை. மாறாக, சிலப்பதிகாரத்தில் இந்திரவிழவூர் விடுத்த காதையில், “ஆயுர்வேதரும் காலக்கணிதரும் பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும்” என்ற குறிப்பு காணப்படுகிறது. காவிரிபூம்பட்டினத்தில் காலத்தைக் கணிப்பவருக்கும், ஆயுர்வேத மருத்துவர்களுக்கும் தனித்தனி தெருக்கள் இருந்ததாக தெரியவருகிறது.
நீர் துளியில் நிகழும் புதுமைகள்
பைட்டோபிளாங்க்டன் (அல்லது பாசி பிளாங்க்டன்) என்ற ஒற்றை செல் உயிரினங்கள்தான் மிகவும் முக்கியமானவை. நிலத் தாவரங்களைப் போலவே, இவை கார்பன் டைஆக்சைடு எடுத்துக்கொண்டு, ஒளி ஆற்றலைப் பயன்படுத்தி கார்போஹைட்ரேட்டுகளை உருவாக்குவதுடன், ஆக்ஸிஜனையும் வெளியிடுகின்றன. கடலின் முதன்மை உற்பத்தியாளர்களான இவைகள், உணவுச் சங்கிலியின் அடித்தளத்தை உருவாக்கும் உயிரினங்கள் ஆகும்
இன்க்ளூசிவ் – உள்ளடக்கிய நிலை
ஆனால், அறிமுகம் செய்து பல கலாசார வேறுபாடுகளை உணர்ந்துகொண்டால் மட்டும் போதாது. மாறுபட்ட கலாசாரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை அந்தக் குடும்பத்தில், சமூகத்தில், வகுப்பில் சேர்ந்தவர்களாக உணர்வதும் முக்கியம். இதைத்தான் ஆங்கிலத்தில் ‘பிலாங்கிங்’ என்கிறார்கள். இதன் பொருள் “நான் இங்கே சொந்தமானவன், என் தேவை இங்கே அவசியம், என் கருத்துகளுக்கு மதிப்பு இருக்கிறது” என்ற உணர்வு.
பழையவரால் என்ன பயன்?
கவிதை குறித்துப் பிளேடோவில் தொடங்கி, ஆடன் வரை ஏறத்தாழ எழுபது கவிஞர்கள், விமர்சகர்களின் கருத்துகளைச் சிறிய கட்டுரைகளாக இந்த இரண்டு புத்தகங்களிலும் அளித்திருக்கிறார் பேராசிரியர். இது ஒரு பெரிய பிரயாணம் தான்.(சமஸ்கிருதத்திலுள்ள கவிதைக் கோட்பாடுகளையும் இது போல் ஒரு நூலாகக் கொண்டுவர வேண்டுமென்ற தன் விருப்பத்தையும் முன்னுரையில் தெரிவித்திருக்கிறார். அதற்குள் அவரது மறைவு நிகழ்ந்து விட்டிருக்கிறது.)
6. ஞானங்களின் விளைநிலம்
இந்திய தொன்மத்தில் சூரியக்கடவுளின் மகன்களான அஸ்வினி தேவர்கள் மருத்துவக்கடவுளாக குறிக்கப்படுகின்றனர். ஆயுர்வேதம் விஷ்ணுவிடமிருந்து பிரம்மனுக்கு, பிரம்மனிடமிருந்து தட்ச பிரஜாபதிக்கும், அவரிடமிருந்து அஸ்வினி தேவர்களுக்கும் வழங்கபட்டதாக கூறப்படுகிறது. அஸ்வினி தேவர்களிடமிருந்து இந்திரனுக்கு கற்பிக்கப்படுகிறது.
அறிவு அளித்த விடுதலை
பிளேட்டோ தொடங்கி கிரேக்க ரோமானிய சிந்தனையில் ஆழ்ந்த பாதிப்பை செலுத்திய மற்றொரு சிந்தனையாக “அலையும் கருப்பை” அமைந்தது. கருப்பை என்பது ஒரு விலங்கு மற்றொரு விலங்கின் உள்ளே உள்ளதாக பார்க்கப்பட்டது (Animal inside Animal). ஆணின் உடல் துணை இல்லாமல் தனித்திருக்கும் பெண்ணின் கருப்பை, அதன் இயல்பான நிலையிலிருந்து வெளியேறி உடலின் வேறு இடங்களில் அமைவதால், பெண்களுக்கு மட்டுமேயான நோய்கள் தோன்றுவதாக கருதப்பட்டது. இதன் சிகிச்சை ஒரு இளமையான ஆணுடன் உறவு கொள்வது என முன் வைக்கப்பட்டது.
தந்தையின் மறைவும் தமையனை தேடுதலும்
ஒரு நாள் காட்டுத் தீ ஜுவாலையாக பரவி வருவதைக் கண்டு திடுக்கிட்டான். உண்மையா கனவா? ஒரு பெரிய சிங்கமே அந்த ஜுவாலையில் மாட்டிக் கொண்டு தவிப்பதைக் கண்டான். அதே சமயம் குட்டியை காக்க பெண் சிங்கம் வேகமாக வந்து அதனுள் குதித்து குட்டியை தூக்கி வெளியில் போட்டது. குட்டி பிழைத்து எழுந்து நின்றது. ஆனால் தாயான பெண் சிங்கம் தன்னை காத்துக் கொள்ள இயலாமல் தீயின் ஜுவாலையில் மடிந்தது. ஹர்ஷன் திகைத்தான்
ஸ்வப்ன வாசவ தத்தா – 9
‘என் மகள் வாசவதத்தா மறைந்து விட்டாள். எனக்கும், மகா சேனருக்கும் எங்கள் மகன்கள் கோபால, காபாலிகர்கள் போலவே தான் நீங்களும். நாங்களே முன்னால் தீர்மானித்து விட்டிருந்தோம். எங்கள் மருமகன் உதயணன் தான் என்று. உஜ்ஜயினிக்கு உங்களை அழைத்து வந்த காரணமும் அதுவே. அக்னி சாக்ஷியாக விவாக நடை முறைகள் இன்றி வீணை கற்றுக் கொள்ள என்று உங்களிடம் அனுமதித்த பொழுதே உங்களுக்கு என்றே கையளித்து கொடுக்கப் பட்டவள் போலத்தான்.
ஈர்ப்பு அலைகள் – பகுதி 7
லேசர்களின் தன்மை, வெப்ப நிலைக்கு ஏற்றார் போல, சற்று மாறுபடும். அணுவிலும் குறைந்த அளவு அளவீடல் என்று வந்துவிட்டால், இந்த வெப்ப மாற்றங்கள் பூதாகாரமாகத் தோன்றும் விஷயம். லைகோவில், அணு அளவு வெப்ப மாற்றங்களைக் கையாளும் முழு அமைப்பும் உள்ளது. இதை Thermal compensation system என்று அழைக்கப்படுகிறது. இது இரு கரங்களிலும் தனியாக இயங்கும் அமைப்பு.
மைக்கேல்: புலங்களும் ஒளியும்
கண்ணாடி இழைகள் காகிதங்களை இழுப்பது, காந்தங்கள் ஒன்றையொன்று விலக்குவது என மின்சாரம் குறித்தும் காந்தம் குறித்தும் பதினெட்டாம் நூற்றாண்டில் சில செப்பிடு வித்தைகளைத் தாண்டி எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. இவை குறித்த ஆய்வுகள் மெதுவாகத் துவங்கி பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குச் சென்றது. லண்டனில் ஆய்வகம் ஒன்றில் சிறு தையல் நூல்கண்டுகள், ஊசிகள், கத்திகள், இரும்புக் கூண்டுகளை வைத்து மின் மற்றும் காந்தப் பொருட்களின் ஈர்ப்பு – விலகலை ஆராய்ந்து கொண்டிருந்தார்.
ஸ்வப்ன வாசவ தத்தா – 8
அவந்திகா, வேகமாக கட்டிலை விட்டு இறங்கி கை கூப்பி மனதால் வணங்கி விட்டு வெளியேறினாள். இவ்வளவு கஷ்டங்களைப் பொறுத்துக் கொண்டு முதன் மந்திரி செய்த திட்டங்களுக்கு ஒத்துக் கொண்டு இங்கு வந்து பணிப்பெண் போல இருந்து வருகிறேன், அனைத்தும் வீணாகும் என்ற எண்ணம் அவளை உந்தித் தள்ளியது. இருந்தும் கட்டிலில் தேடுவது போல இருந்த உதயணனின் கையை எடுத்து அருகில் படுக்கையில் வைத்து விட்டு, யாரும் பார்க்கும் முன் போய் விட வேண்டும் என்ற பரபரப்புடன் வெளியேறவும். உதயணன் விழித்துக் கொண்டு யாரது, வாசவதத்தே என்று அழைக்கவும் சரியாக இருந்தது.
ஈர்ப்பு அலைகள் – பகுதி 6
ஏறக்குறைய 80 -களின் கடைசி வரை பல வித முயற்சிகள், பலன் அளிக்காத பட்சத்தில், விஞ்ஞானிகள் ஒரு முடிவிற்கு வந்தார்கள். தங்களிடம் உள்ள லேசர் கதிர்களை உருவாக்கும் எந்திரங்கள், இவ்வித அளவீடுகளுக்குத் தகுந்த சக்தி வாய்ந்தவை அல்ல. இன்னும் சக்தி வாய்ந்த லேசர்கள் தேவை.
தூக்கணாங்குருவி கூடு
இந்த நுண்ணிய உறவில், மனிதனும் பறவைகளும் ஒரு தனித்துவமான இணை வாழ்வைப் பகிர்ந்து கொள்கின்றனர். மனிதனால் வடிவமைக்கப்பட்ட உலகத்தைப் புரிந்து கொள்ளவும் அதில் தங்களைத் தழுவிக்கொள்ளவும் பறவைகள் கற்றுக்கொண்டுள்ளன. நூற்றாண்டுகளாக, நகரச் சூழலுக்கு தங்களைச் சீரமைத்து, மனிதர்களுடன் இணைந்து வாழ்வதற்கான வழிகளைப் பறவைகள் கண்டுபிடித்துள்ளன. மின்கம்பிகள் மற்றும் பிளாஸ்டிக் போன்ற நவீன பொருட்களை கூட தங்கள் கூடு கட்டுவதற்காக பயன்படுத்தி, உயரமான கட்டிடங்களின் நடுவிலும் தழைத்து வளர்ந்து வருகின்றன
இறவாமை – பகுதி ஒன்று
இந்த நினைவு என்பது விசித்திரமானது. மாறிக்கொண்டே இருப்பது. யாருக்குமே தன்னுடைய முகத்தை பிசகின்றி நினைவு படுத்திக் கொள்ள முடியாது. அது தவிர ஒருவரோடு பழகியவர்கள் நினைவில் அவர் இருப்பதற்கும், அவரை சந்திக்காதவர்கள் நினைப்பில் அவர் இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
மனித நாகரீகத்தின் நுழைவாயிலில்
அசூர்பனிபால் (Ashurbanipal), பொ யு மு 600 களில் அசிரிய பொற்காலத்தில் வாழ்ந்த பேரரசன். இவருடைய நினிவே நூலகத்தில் இருந்து சுமார் 30000 களிமண் பலகைகள் கண்டெடுக்கப்பட்டன. இவை இவர் காலத்திற்கு முன்பிருந்து சேகரிக்கப்பட்டவை மற்றும் பிரதி எடுக்கப்பட்டவையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
ரங் பர்ஸே
பாரம்பரியமாக, குலால் வசந்த கால மலர்கள், பெர்ரி வகைகள், மசாலாப் பொருட்கள் மற்றும் பிற தாவரங்களிலிருந்து பெறப்பட்ட இயற்கை வண்ணங்களிலிருந்து தயாரிக்கப்பட்டது, மேலும் அதன் பொருட்கள் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதாகவும் கருதினர். பொதுவாக பயன்படுத்தப்பட்ட நிறங்களில் மஞ்சள், சிவப்பு ochre, கரிய மை, indigo நீலம் மற்றும் லாபிஸ் லசுலி போன்றவை அடங்கும். இந்த கனிமங்கள் மரக்கொழுந்து (அ) பிசின் போன்ற பிணைப்பிகளுடன் கலந்து நீடித்த தன்மையை வழங்கியது.
நியூட்டனும் சிறுநிலவும் – 2
மத்தியகாலத்தில் கோலோச்சிய அரிஸ்டாடிலினுடைய கோட்பாட்டு கட்டமைப்பின் வீழ்ச்சியே இது. உதாரணத்திற்கு தாந்தேவின் பிரபஞ்சத்தினையே காணலாம்: அரிஸ்டாடிலின்படி பிரபஞ்சத்தின் மையமாக பூமிப்பந்தும் அதை சுற்றி வரும் விண்ணக கோள்களும் இருந்தன. இனி அவ்வாறல்ல. அடர்த்தியான, எல்லையற்ற, விண்மீன்கள் பொறிக்கப்பட்ட, மையமோ எல்லைகளோ இல்லாத ஒன்றே பிரபஞ்சம்.
“Mission impossible போல இருக்கிறதே. யார் சார் அந்த டாம் க்ரூஸ்?”
நம்முடைய பால்வெளி மண்டலத்தின் நடுவில் மிகப் பெரிய கருந்துளை, அதாவது 4 மில்லியன் (Sgr A*) சூரிய திண்மை ( 4 million solar masses) இருப்பது, பிற்காலத்தில் உறுதி செய்யப்பட்டது. ஆனால், அது நம்முடைய சீரான இயக்கத்தை உருவாக்க காரணமாக இருந்ததே தவிர, ஈர்ப்பு அலைகளை உருவாக்குவதில்லை. இதை மிகத் தெளிவாகப், புரிந்து கொள்ளுதல் அவசியம். ஒரு பெரிய கருந்துளை இருப்பதனால், எந்த வித தாற்காலிக ஈர்ப்பு அலையும் உருவாக்கப்படுவதில்லை.
தகுதியின்றியும் ஒரு சிலர் ராஜ பதவிகளுக்கு வந்து விடுகிறார்கள்
அதன் பின் ஜ்யேஷ்டா ஆடி மாத க்ருத்திகா நக்ஷத்திரத்தில், பஹுல பக்ஷ ( தேய் பிறை) துவாதசி திதி முடியவும், ப்ரதோஷம் ஆரம்பித்து விட்ட நிலையில், இரவின் ஆரம்பத்தில், திடுமென அந்த:புரத்தில் கோலாஹலமான சப்தம் எழுந்தது. பரபரப்புடன் யசோவதியின் நெருங்கிய தாத்ரி, சுபாத்ரீ என்ற பெயருடையவள், அரசனிடம் வந்து வணங்கி, ‘தேவ! அதிர்ஷ்ட வசமாக, உங்கள் இளைய மகன் பிறந்து நலமாக இருக்கிறான்’ என்றாள். செய்தி சொன்ன அவளுக்கு அரசன் பலவிதமாக பரிசுப் பொருட்கள் கொடுத்தான்.
ஹர்ஷ சரித்திரம் – 4
என் பால பருவம் வெறுமையாக இருந்திருக்கவில்லை. “சதாயுஷ: புருஷ:” மனிதனின் ஆயுள் நூறு ஆண்டுகள் என்பது ஒரு கணக்கு. அதற்குள் தங்களைத் தானே மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரையுடனேயே வளர்ந்தவன் நான். மறு உலகம், மறு பிறவி உண்டு என்பதை நம்புவதால், இதையும் நம்பி அதற்கான சாதனைகளையும் செய்ய வேண்டும் என்றும் போதிக்கப் பட்டவன். என் பால பருவம் வீணாக ஆனதாக நான் நினைக்கவில்லை. எந்த குறையும் இல்லை.
ஸ்வப்ன வாசவ தத்தா – 5
யௌகந்தராயன் என்ற அந்த மந்திரி அந்தணர் வேஷத்தில் இருந்தவர் அருகில் வந்தார். வாஸவதத்தாவும் திகைப்புடனே அவரை பார்த்தாள். ராஜ குமாரியின் அருகில் சென்றவர், தேவி! தாங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். கஞ்சுகி அருகில் வந்தவள், ஓ நீங்கள் புதியவரா, சற்று முன் வந்தீர்களே என்றாள். பத்மாவதியும் மரியாதையுடன் ஐயா, சொல்லுங்கள். நானே எதுவானாலும் தருவதாக வாக்களித்து விட்டு மறுப்பேனா, தயங்காமல் சொல்லுங்கள், என்றாள்.
ஈர்ப்பு அலைகள் – பகுதி 3
பூமியிலிருந்து அளக்கும் பட்சத்தில், ஒரு அணுவிற்குள்ளிருக்கும் ப்ரோட்டானை விடச் சிறியது (10^-18 meters). இதை, மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளுதல் அவசியம். உதாரணத்திற்கு, ரேடியோ அலைகளின் நீளம் (mm to km) அலைவீச்சு, தூரத்துடன் குறைந்தாலும், வெகு தொலைவுவரை (பல்லாயிரம் கிலோ மீட்டர் வரை) இவற்றை நம்மால் அளக்க முடியும். அடுத்தபடியாக, மைக்ரோவேவ் (microwave) அலைகளின் நீளம் (1 mm to 10 cm), சில கிலோமீட்டர் தூரம் வரை நம்மால் அளக்க முடியும். அடுத்து வருவது அகச்சிகப்பு (Infrared) அலைகளின் நீளம் (700 nm to 1 mm) சில மீட்டர்கள் வரை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்
நவீன உலகை உருவாக்கும் கணிதம்
எண் முறை முறையை உருவாக்குவதில் பிற நாடுகளின் பங்கு மிக முக்கியமானது. குறிப்பாக, இந்தியாவின் ஹிந்து-அரபிக் எண் முறை உலகளாவிய கணித வளர்ச்சிக்கு அடிப்படை அமைப்பாக இருந்தது. இந்த முறை அரபு நாடுகள் மூலம் ஐரோப்பாவுக்கு பரவியது, இதன் மூலம் 0 (பூஜ்யம்) உள்ளிட்ட எளிய மற்றும் சக்திவாய்ந்த எண்ணியல் அமைப்பு உலகளாவிய கணித கணக்கீடுகளில் பயன்படுத்தப்பட்டது.
மிளகு – அத்தியாயம் 88
இன்னொண்ணு தெரியுமா, ஒரு கனவு கண்டேன். கனவில் அப்பா அப்பா என்று அழைத்தபடி சுழலும் ஒரு கட்டிடத்தின் முன் நின்ற பையன் அப்பா வந்தாச்சு என்று சந்தோஷமாகக் கூவியபடி ஒரு முதியவரை அணைத்துக் கொள்கிறான். அவர் அச்சு அசலாக தெரிசாவின் ஓட்டல் பார்ட்னர் திலீப் ராவ்ஜி அப்பா பரமேஸ்வர அய்யர் போலவே இருந்தார்.
ஈர்ப்பு அலைகள் – பகுதி 2
1915 –ல் ஐன்ஸ்டீன் தன்னுடைய பொது ஒப்புமைக் கொள்கையுடன், ஈர்ப்பு சக்தி பற்றிய சமன்பாடுகளையும் முன் வைத்தார். அவருடைய நண்பர், Karl Schwarzchild அந்த சமன்பாடுகளை தீர்க்க முயற்சித்தார். இவருடைய தீர்வில், ஒரு ஆரத்திற்குள் ஈர்ப்பு சக்தி முடிவிலியாக மாறியது – இதை Schwarzchild radius என்று அழைக்கப்படுகிறது. ஒரு வானியல் பொருள் இந்த ஆரத்திற்குள் சுறுக்கப்பட்டால், அதிலிருந்து ஒளி கூட வெளிவராது. இதை முதலில் ஒரு கணக்கியல் தவறு என்று முடிவு கட்டினார்கள்.
ஈர்ப்பு அலைகள் – பகுதி 1
நாம் பார்க்கும் நட்சத்திரங்கள் மற்றும் மண்டலங்களின் தூரம் மனிதர்கள் சாதாரணமாய் கடக்கும் தூரத்தை விட, மிக மிகப் பெரியது. இந்தப் பிரபஞ்சத்தில் மிகவும் வேகமாக பயணிக்கும் விஷயம் ஒளி மற்றும் அதைப் போன்ற மின்காந்த கதிரியக்கம். அந்த வேகம் நொடிக்கு 300,000 கிலோ மீட்டர்கள். விண்வெளி பெளதிகத்தில் மிகவும் முக்கியமான தூர அளவீடு ஒளி வேகம்.
