தூக்கணாங்குருவி கூடு

மனிதன் தோன்றிய காலம் முதல், பறவைகள் மனித வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஓர் அங்கமாக இருந்து வருகின்றன. ஒரு பிறந்த குழந்தை முதன்முதலில் வெளியுலகைப் பார்க்கும் போது, சுதந்திரமாகப் பறக்கும் பறவைகளைக் கண்டு பரவசமாகுவதை இன்றும் சாதாரணமாக காணலாம். அப்போதே அதன் மனதில் அந்த அதிசய உணர்வு  விதைக்கப்படுகிறது.

பழமையான நாகரிகத்தின் தொடக்கத்திலிருந்து பறவைகளும், மாறும் சூழலுக்கு தகுந்தவாறு வாழும் திறமையை வெளிப்படுத்தி வருகின்றன. அவை தங்களுக்கே உரிய முறையில் கட்டமைப்புகளை உருவாக்கியும், மனிதர்கள் உருவாக்கிய இடங்களைப் பயன்படுத்தியும் தங்கள் இனப்பெருக்கத்தை  தொடர்ந்து நடத்தி வருகின்றன. மேலும் மனிதர்களின் வளர்ச்சிக்கு அருகிலேயே, பறவைகள் தங்கள் வாழ்க்கைச் சுழற்சிகளை, அதாவது இணைதல், முட்டை இடுதல், குஞ்சுகளை பராமரித்தல் போன்றவற்றை நம் கண்முன்னே நிகழ்த்திக் கொண்டு, தன்னம்பிக்கையும் தகுதியும் கற்றுத்தருகின்றன. பறவைகளின் வாழ்க்கை முறையைக் கவனிக்கும் போது, அவை எவ்வளவு புத்திசாலித்தனமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுகின்றன என்பதை உணர முடிகிறது.

எனக்கு ஆறு (அ) ஏழு வயதாக இருக்கும் போதுதான் முதன் முதலில் பறவைகள் கூடுகளை பார்த்ததாக ஞாபகம். அறுபதுகளின் ஆரம்பத்தில் எனது மாமாவோடு காவேரிக்கு நீராட செல்லும்போது, மரங்களின் உச்சியில் ஊஞ்சலாடும் கூடுகள் கவரத் தொடங்கியது. அக்கால கட்டத்தில், ஆறு வயது நிரம்பிய பிறகுதான் பள்ளியில் சேர்த்து கொள்வார்கள். அங்குள்ள ஆரம்ப பள்ளியில் மாமாவும் ஆசிரியராக இருந்ததால், விஜயதசமி அன்று ஆறு வயது பூர்த்தியாகிவிட்டது என்று பெரிய சார் (ஹெட்மாஸ்டர்) தன்னிச்சையான ஒரு பிறந்த தேதியை எடுத்துக்கொண்டு, பள்ளியில் சேர்த்துக்  கொண்டார்! வீட்டில் பிறந்ததனால், பிறந்த தேதி பஞ்சாயத் போர்டில் பதிவாகி இருக்கும். ஆனால், கிராமத்தில் வளர்ந்த பெரும்பாலோருக்கு பள்ளி மார்க் ஷீட்தான் பிறப்புச் சான்றிதழ்!

திருபுவனம் சாந்தியில் வானம்பாடி திரைப்படம் வந்த நேரம்.  இரண்டு பக்கமும் அத்திரைப்படம் பற்றிய போஸ்டர் ஒட்டிய மாட்டு வண்டியில் முதலில் கேட்ட பாட்டு, “தூக்கணாங்குருவி கூடு”. ஒன்றிரண்டு சினிமா பாடல்களை பஸ் ஸ்டாண்ட்டுக்கு அருகிலோ அல்லது திருவிழாக்கள் நடைபெறும் போதோதான் கேட்க முடியும். அப்போதுதான் தமிழில் எழுதவும் மற்றும் எழுத்து கூட்டி படிக்கவும் தொடங்கி இருந்ததால், அப்படத்தை பற்றிய நோட்டீஸை வாங்கி அதை ஆர்வத்துடன் படிப்போம். ஆங்கிலம் படிக்க இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் இருந்தது! தினத்தந்தி மற்றும் மாலை முரசு போன்ற தினசரி செய்தித்தாள்களில் வரும் தொடர் படக்கதைகளான கன்னித் தீவு, சிந்துபாத் படிக்க ஆரம்பித்த நேரம்.  

உயர்நிலை பள்ளியில் படிப்பதற்காக மேட்டூர் சென்று பெற்றோர்களுடனும் வசிக்க ஆரம்பித்த போதுதான், பறவைகள், மரக்கிளைகள் மட்டுமில்லாமல் வீடுகள், பாலங்கள், மின் கம்பிகள் மற்றும் கட்டிடங்களில் கூடுகள் கட்டி தொங்குவதை காண நேர்ந்தது. மேல்படிப்புக்காக சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் புலம் பெயர்ந்த போதுதான், பறவைகள் எப்படி நம்மைப் போல், தங்களுக்கும் சாதகமான வழிகளைக் கண்டுபிடித்து தங்குவதற்கான இடமாக மாற்றிக் கொள்கின்றன என்பதை கவனிக்க தொடங்கினேன். நான் படித்த மூன்று கல்லூரி வளாகங்களும் (சென்னை கிறித்துவக் கல்லூரி,  ஐஐடி மற்றும் ஐஐஎஸ்ஸி) பல நூறு ஏக்கர்களில் இயற்கை செழிப்புடன் இருந்ததால், அப்போதிலிருந்தே பறவைகளிடம் ஒரு நாட்டம் ஏற்படத்  தொடங்கியது.

இன்றைய நவீன உலகில், பறவைகளும் தங்கள் சூழலுக்கு ஏற்ப புதிய வழிகளைத் தேடிக்கொண்டு வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியால் உருவான சிக்கல்களையும் அவை சமாளிக்கின்றன. இதனால் பறவைகளின் வாழ்க்கை முறையும் மனிதர்களின் வாழ்க்கையுடன் இணைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

பறவைகளின் இந்த தன்மை, அவற்றின் அறிவாற்றல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்கும் திறனை வெளிப்படுத்துகிறது. இது மனிதர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கிறது; எதற்கும் தகுந்து வாழும் திறனை நாம் பறவைகளிடம் இருந்தும் கற்றுக்கொள்ளலாம்.

இந்த நுண்ணிய உறவில், மனிதனும் பறவைகளும் ஒரு தனித்துவமான இணை வாழ்வைப் பகிர்ந்து கொள்கின்றனர். மனிதனால் வடிவமைக்கப்பட்ட உலகத்தைப் புரிந்து கொள்ளவும் அதில் தங்களைத் தழுவிக்கொள்ளவும் பறவைகள் கற்றுக்கொண்டுள்ளன. நூற்றாண்டுகளாக, நகரச் சூழலுக்கு தங்களைச் சீரமைத்து, மனிதர்களுடன் இணைந்து வாழ்வதற்கான வழிகளைப் பறவைகள் கண்டுபிடித்துள்ளன. மின்கம்பிகள் மற்றும் பிளாஸ்டிக் போன்ற நவீன பொருட்களை கூட தங்கள் கூடு கட்டுவதற்காக பயன்படுத்தி, உயரமான கட்டிடங்களின் நடுவிலும் தழைத்து வளர்ந்து வருகின்றன. சமீபத்திய ஆராய்ச்சிகள், சில பறவை இனங்கள் நவீன நகர சூழலுக்குத் தகுந்தவாறு எப்படி தங்களை சீரமைத்து கொள்ளுகின்றன என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்களை கூடு கட்டுவதற்குப் பயன்படுத்துவதில் அவர்கள் காட்டும் புதுமையும் நகரங்களில் அவர்கள் வாழ்வதற்கான திறமையும் இந்த ஆராய்ச்சியின் மையமாக உள்ளன. மாற்றமடைந்துவரும் உலகில் இந்த உறுதியான உயிரினங்கள் எப்படி தங்களைத் தக்க வைத்துக் கொண்டு வளர்ந்து வருகின்றன என்பதை பின்னூட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள சில கட்டுரைகள் விளக்குகின்றன. இது இயற்கையின் நிலைத்தன்மைக்கும் மனிதன் மற்றும் பறவைகளுக்கிடையிலான சொல்லாத உறவிற்குமான சாட்சியமாகும்.

வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கரையான்

தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் – யாம்பெரிதும்

வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாம்காண்

எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது”

என்ற ஔவையாரின் பாடல் நினைவுக்கு வருகிறது.

இன்றைய நவீன விஞ்ஞான உலகத்திலும், தூக்கணாங்குருவியின் கூட்டையும், கரையான் எழுப்பும் புற்றையும், தேனீயின் கூட்டையும், சிலந்தியின் வலையையும் மனிதனால் செய்ய முடியுமா என்பது இன்றும் ஒரு கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது.

பிளாஸ்டிக் ‘புதைபடிவங்களில்’ பறவைக் கூடுகளின் வரலாறு

நவீன கால பறவைகள் தங்கள் கூண்டுகளை கட்டுவதில் ஆச்சரியகரமான மற்றும் சுவாரஸ்யமான பொருட்களை பயன்படுத்துகிறது. சாதாரணமாக, நூல், நார், துணி துணுக்குகள், மற்றும் பிளாஸ்டிக் பொம்மைகள் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில பறவைகள், குறிப்பாக காகங்கள் மற்றும் கில்லிகள் போன்றவை, கட்டமைப்பிற்காக உலோக கம்பிகளை கூட சேர்க்கின்றன. இந்த தன்மை பறவைகளின் நுண்ணறிவையும், கிடைக்கும் பொருட்களை திறமையாக பயன்படுத்தும் திறனையும் வெளிப்படுத்துகிறது.  

ஆம்ஸ்டர்டாமில், Coot பறவைகள் குறைந்தது 30 ஆண்டுகளாக பிளாஸ்டிக் உணவு உறைகள், முகமூடிகள் மற்றும் பிற கழிவுகளிலிருந்து கூடுகளை கட்டி வருகின்றன என்கிறது பிப்ரவரி 2025ல் சூழலியல் என்ற அறிவியல் இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை. “இந்த வெளிப்பாடு, மனிதனால், சில நிமிடங்கள் மட்டுமே, ஒற்றைப் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் சக்தி சுற்றுச்சூழலை எவ்வாறு பாதிக்கிறது என்பது மட்டுமல்லாமல், பல தசாப்தங்களாக இப்பறவைகள் இந்த கூடுகளை பயன்படுத்துகின்றன என்பது மிகவும் கவலைப் படவேண்டிய செய்தி என்கிறார்”, லைடனில் உள்ள நேச்சுரலிஸ்ட் பல்லுயிர் மையத்தின் உயிரியலாளர் Auke-Florian Hiemstra.

நகரப் பறவைகள் பயன்படுத்தும் கூடு கட்டும் பொருட்களை ஹைம்ஸ்ட்ரா பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார். கோவிட்-19 தொற்றுநோயின் உச்சக்கட்டத்தில் கூட் மற்றும் சில பறவைகள் தங்கள் கூடுகளில் முகக்கவசங்களை சேர்ப்பதையும், மாக்பீஸ் மற்றும் காகங்கள் போன்றவை பறவை எதிர்ப்பு கூர்முனைகளிலிருந்தும  தங்கள் கூடுகளைக் கட்டுவதையும் அவர் ஆவணப்படுத்தியுள்ளார். தற்போது  பல பறவைகள் மனித குப்பைகளிலிருந்து வெவேறு

பாரம்பரியமாக, பறவைகள் தங்கள் கூடுகளை துரிதமாக அழியும் தாவரப் பொருள்களால் உருவாக்குகின்றன. ஆனால் நகரங்களில் வசிக்கும் பெரும்பாலான பறவைகள், அருகில் எளிதாக   கிடைக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி வருகின்றன. இந்தக் கழிவுகள் அழியாமல் நீடிப்பதால், பழைய கூட்டுப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு, பல பருவங்களில் அடுக்குகளாக சேர்க்கப்படுகின்றன. இதை ‘technostratigraphy’ என அழைக்கின்றனர்.

கூடுகளில் உள்ள பழைய பிளாஸ்டிக் பொருட்களின் காலத்தை expiry date மூலம் கணிக்கலாம். 1990களின் ஆரம்பத்தில் தயாரிக்கப்பட்ட Mars Bar wrappers முதல் COVID-19 காலத்தில் பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள் வரை பல்வேறு காலகட்டங்களை இவை பிரதிபலிக்கின்றன.

பொருட்களை கூடு கட்டுவதற்காக பயன்படுத்துகின்றன என்பது பல நாடுகளிலிருந்து வரும் தரவுகளில் அறியப்படுகிறது.

பிளாஸ்டிக் பயன்படுத்துவது சில நேரங்களில் பறவைகளுக்கு உதவியாக இருந்தாலும், இது ஆபத்தானது. முகக்கவசங்கள் போன்றவை பறவைகளுக்கு சிக்கலாக இருக்கலாம்; மேலும், பழைய குஞ்சுகளில் பேரசைட்கள் (parasites) மற்றும் நோய்க்கிருமிகள் இருக்க வாய்ப்புள்ளது.

இந்த ஆராய்ச்சிகள், மனிதர்களின் செயல்பாடுகள் இயற்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை சுட்டிக்காட்டுகின்றன மற்றும் எதிர்காலத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க என்ன செய்யலாம் என்பதற்கான சிந்தனைகளைத் தூண்டுகின்றன.

phys.org › news › 2025-03-plastic-trash-bird

சில  வருடங்களுக்கு முன்பு, கொரோனா தொற்று நோய் விலகியிருந்த சமயத்தில் தில்லியிலிருந்து தெற்கே 200 கி.மீ. உள்ள ‘பரத்பூர் பறவைகள் சரணாலயம்’ செல்லும் வாய்ப்பு கிட்டியது. அடர்ந்த புல்வெளிகள் மற்றும் ஈரநிலங்கள் காரணமாக இந்த இடம் முதலில் கானா தேசிய பூங்கா (இந்தியில் என்றால் கானா ‘அடர்த்தியானது’ என்று பொருள்) என்று அழைக்கப்பட்டது. தற்போது கியோலாடியோ தேசிய பூங்கா என்று  அழைக்கப்படுகிறது. இது 250 ஆண்டுகளுக்கு முன்பு பரத்பூர் மகாராஜாவால் உருவாக்கப்பட்ட மற்றும் மனிதனால் நிர்வகிக்கப்படும் ஒரே தேசிய பூங்காவாக இருக்கலாம். இங்கு பூங்காவிற்குள் மோட்டார் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. ஆதலால், உள்ளே மூன்று நான்கு கிமீ சுற்றி வர வேண்டியிருந்ததால், சைக்கிள் ரிக்ஷாவை அமர்த்திக் கொண்டோம். அங்குள்ள அனைத்து ரிக்ஷா ஓட்டுனரும் நன்கு பயிற்சி பெற்ற பறவை ஆர்வலராகவும் இருந்தனர் என்று பிறகு தெரிந்து கொண்டோம். ஐம்பது வயதான, எங்களை வழி நடத்திச் சென்ற ஆர்வலர், ராஜஸ்தானிலுள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். பள்ளி படிப்பை தாண்டவில்லை.  ஆனால் அடுத்த மூன்று மணி நேரத்தில் சிறிது ஆங்கிலத்திலும் மற்றும் பெரும்பாலும் ஹிந்தியிலும் பறவைகளைக் பற்றிய அரிய பல தகவல்களை கதையைப் போல் கூறிய விதம், ஆசிரியராக பணிபுரியும் எங்கள் அனைவரையும் ஆச்சரியப் படவைத்தது. இவர் அருகிலுள்ள ஜெய்ப்பூருக்கே சென்றதில்லை, ஆனால் எந்த பறவைகள் எந்த கண்டத்திலிருந்து வருகின்றன என்ற புவியியல் செய்தியுடன், உயிரியல் விளக்கங்களையும் கொடுத்தது மிகவும் வியக்கத்தக்கதாக இருந்தது. நான் அவரிடம் இவையெல்லாம் எங்கு கற்றுக் கொண்டீர்கள் என்று வினவிய போது, “இங்குள்ள ரிக்ஷா ஓட்டுனர் அனைவரும் சலீம் அலி பள்ளியில் பயிற்சிப் பெற்றவர்கள்”,  என்ற தோடல்லாமல் சலீம் அலியைத் தெரியுமா என்று என்னைக் கேட்டார்.

நான் மெதுவாக, “தெரியும். சில புத்தகங்களும் படித்துள்ளேன்” என்று முனகினேன்.

என் மனதின் எங்கோ ஒரு மூலையில் ஒரு பாட்டு முனுமுனுத்தது

“படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு, பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு”.

உலகின் பிற பகுதிகளிலிருந்தும் இங்கு இடம்பெயர்ந்து வரும் பல இனங்களில், சைபீரிய கிரேன்கள் பிரபலமானவை என்றும், சைபீரியாவின் கடுமையான குளிர்காலத்தில் இருந்து தப்பிக்கவும், உணவை அணுகவும், இனச்சேர்க்கை செய்ய ஒரு வாய்ப்பைப் பெறவும் ஒரு பாதுகாப்பான வாழ்விடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய நிர்பந்தத்தில், கிட்டத்தட்ட  6000 கி.மீ.க்கு மேல் பறந்து வருகின்றன என்றும் விளக்கினார். ஒரு வைக்கோல் குவியலில் ஒரு ஊசியைக் கண்டுபிடிப்பது போலான அவற்றின் செயல்கள் ஆச்சரியப்பட வைத்தது. “ஒரே ஒரு பயணத்தில், ஒரு இளம் கிரேன் அடுத்த வருடம் தானாகவே பாதையைக் கண்டுபிடித்துவிடும்” என்று அவர் சொன்னது மேலும் வியப்பை ஏற்படுத்தியது. பல வருடங்களாக இவற்றின் எண்ணிக்கை குறைந்தாலும், அங்கும் இங்கும் சிலவற்றை பார்க்க முடிந்தது. 

டாக்டர் சலீம் அலி பரத்பூரில் முன்னோடி ஆராய்ச்சியாளராக இருந்தார், அங்கு அவர் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இடம்பெயர்வு முறைகளைப் புரிந்துகொண்டார். எங்களது ஆர்வலரும் அவருடன் சிறிது காலம் பணிபுரிந்ததாகக் கூறினார்.

“இந்தியாவின் ராஜஸ்தானின் பரத்பூரில் உள்ள கியோலாடியோ பறவைகள் சரணாலயத்தில் பறவை சூழலியல் மற்றும் பாதுகாப்பு சவால்கள்” என்ற தலைப்பில் ஏப்ரல் 2025 இல் ஒரு சமீபத்திய அறிவியல் ஆய்வு வெளியிடப்பட்டது. இது சரணாலயத்தில் இடம்பெயர்வு பறவைகளை பாதிக்கும் முக்கிய பிரச்சினைகளை எடுத்துக்காட்டுகிறது, அவற்றில் வாழ்விட இழப்பு, துண்டு துண்டாக, நீர் பற்றாக்குறை மற்றும் மனித தலையீடு ஆகியவை அடங்கும். 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடத்தப்பட்ட கள ஆய்வுகளின் போது 34 குடும்பங்களில் 73 பறவை இனங்களை இந்த ஆய்வு பதிவு செய்தது, முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இடம்பெயர்வு பறவைகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. பறவை பல்லுயிரியலைப் பாதுகாக்க நிலையான வாழ்விட மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு தேவை என்பதை இது வலியுறுத்துகிறது.

https://jazindia.com/index.php/jaz/article/view/5111/4379

பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்

பறவை கண்காணிக்கும் வழக்கம் ஐஐஎஸ்சி.யில்தான்  தொடங்கியது. இங்குதான் டேவிட் அட்டன்பரோவின் Life on Earth பதிமூன்று அத்தியாயங்களை வீடியோ கேசட் ரெக்கார்டர் மூலம் காண நேர்ந்தது. அப்போதுதான் புகழ்பெற்ற பறவை ஆராய்ச்சியாளரான (அ) “பறவை மனிதர்” என்று செல்லமாக அழைக்கப்படும் டாக்டர் சலீம் அலியைப்  பற்றிய அறிமுகம் கிடைத்தது. அவரை பெரிதும் கவர்ந்தது மிக நுணுக்கமான பின்னல்களை உருவாக்கிஅற்புதமான கூடு கட்டும் திறமைகள் கொண்ட தூக்கணாங்குருவி (Baya Weaver Bird) கள்தான். இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், ஆண்கள் தங்கள் கூடு கட்டும் திறமையைக் காட்டி  தனக்குகந்த ஜோடிகளை ஈர்ப்பதாகும். இவற்றின் கூடுகள் நீண்ட குழாய்கள் வடிவில் உருவாக்கப்பட்டு, உள்ளே பாதுகாப்பான அறையுடன் அமைக்கப்படுகிறது. இது, காற்று மற்றும் எதிராளி தாக்கத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. Dr. அலி இயற்கையின் அதிசயங்களை ஆராய்ந்து பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவரின் ஆராய்ச்சிகள், மனிதர்களின் கட்டமைப்பு மற்றும் சமூக அமைப்புகளில் புதிய சிந்தனைகளை உருவாக்க உதவின. “இயற்கையின் கலைகளைப் பாராட்டி, மனிதர்கள் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்” என்பதே அவரது வாழ்க்கையின் நோக்கமாக இருந்தது.

சிகாகோ நகர்ப்புற மையத்தில் ஒரு இயற்கை அற்புதம்; எதிர்காலத்திற்கான நம்பிக்கையா?

இரண்டு வாரங்களுக்கு முன்பு, லிங்கன் பார்க் மிருகக்காட்சிசாலையில் கருப்பு கிரீடம் அணிந்த இரவு ஹெரான்களுடன் (black-crowned night herons) ஒரு தற்செயலான சந்திப்பு நிகழ்ந்தது. குழந்தைகள் பகுதியில் உயர்ந்த மரங்களின் மேல் நூற்றுக்கும் மேற்பட்ட கூடுகளைக் கண்டு ஈர்க்கப்பட்டேன். மேலும் ஒரு டஜனுக்கும் மேல் குறிப்பிடத்தக்க பறவைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. அமெரிக்காவிலேயே மூன்றாவது பெரிய நகரத்தின் நடுவில் இவ்வளவு பெரிய காலனியைப் பார்ப்பதற்கு வியப்பாக இருந்தது. பார்வையாளர் மையம் சென்று விசாரித்தத்தில்,  இந்த வருடாந்திர வசந்த நிகழ்வு என்றும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நடைபெற்று வருவதாகவும் அங்குள்ள ஆர்வலர் விளக்கினார். இல்லினாய்ஸ் மாகாணத்தில்  ஒரு காலத்தில் அழிந்து வரும் நிலையில் இருந்த இப்பறவைகள், சிகாகோவின் மையப்பகுதியில் மாநிலத்தின் மிகப்பெரிய காலனியை நிறுவியுள்ளன, இது நகர்ப்புற சூழல்களுக்கு ஏற்ப வனவிலங்குகளின் திறனைக் காட்டுகிறது.

ஹெரான்கள் 2007 ஆம் ஆண்டு வாக்கில் மிருகக்காட்சிசாலையில் கூடு கட்டத் தொடங்கின, மேலும் 2012 முதல் அடர்ந்த காடுகள் நிறைந்த மிருகக்காட்சிசாலையின் குழந்தைகள் பகுதியை தேர்ந்தெடுத்தன. இந்த இடத்தில் கூடு கட்டுவதற்கு அனுகூலமான  honey locusts, hackberries, and maples போன்ற மரங்கள் உள்ளன. மேலும் மீன்பிடிக்க ஏதுவாக மிச்சிகன் ஏரிக்கு அருகாமையில் உள்ளது. ஆச்சரியப்படும் விதமாக, அதே பகுதியில் உள்ள இரண்டு சிவப்பு ஓநாய்கள், ஹெரான் முட்டைகள் மற்றும் குஞ்சுகளை அச்சுறுத்தக்கூடிய ரக்கூன்கள் (Raccoon) மற்றும் பாம்புகள் போன்ற சிறிய வேட்டையாடுபவர்களைத் தடுப்பதற்கு  “மெய்க்காப்பாளர்களாகவும்” செயல்படுகின்றன! 

சிகாகோவின் பிற பகுதிகளில் உள்ள மீட்டெடுக்கப்பட்ட ஈரநிலங்களுக்கு அவற்றை ஈர்க்கும் முயற்சிகள் இருந்தபோதிலும், ஹெரான்கள் லிங்கன் பார்க் மிருகக்காட்சிசாலைக்கு விசுவாசமாக உள்ளன. அவற்றின் தொடர்ச்சியான வருகை காட்டுப் பறவைகள் மற்றும் மிருகக்காட்சிசாலை விலங்குகளுக்கு இடையிலான ஒரு தனித்துவமான கூட்டுவாழ்வை எடுத்துக்காட்டுகிறது, அதே நேரத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சிக்கு மதிப்புமிக்க வாய்ப்புகளை வழங்குகிறது.

நகர்ப்புற இடத்திற்கு ஏற்றவாறு கூட்டமாக கூடு கட்டி இனப்பெருக்கம் செய்வது இரவு ஹெரான்களுக்கு மட்டும் தனித்துவமானதா அல்லது  வேறு இனங்களும் இவ்வாறு செய்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

உலகின் பல இடங்களில் ஹெரான்ஸ் மற்றும் கோர்மோராண்ட்ஸ் போன்ற நீர்பறவைகளும்  நகர்ப்புறங்களை நாடுகின்றன.

நகர்ப்புற காட்டில் நீர்க்காடு (Great Cormornats)

பெங்களூருவில் உள்ள Sankey tank பகுதிக்கு நீர்க்காடுகளின் (Great Cormorants) வருகை நகர்ப்புற சூழலியல் மற்றும் பறவை தழுவலின் ஒரு கண்கவர் சந்திப்பைக் குறிக்கிறது. நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 1882 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த செயற்கை நன்னீர் ஏரி, பரபரப்பான நகரத்தின் மத்தியில் ஒரு முக்கிய சுற்றுச்சூழல் மையமாக உருவாகியுள்ளது. மாசுபாடு மற்றும் மனித ஆக்கிரமிப்பு போன்ற சவால்கள் இருந்தபோதிலும், ஏரியின் தனித்துவமான சூழல் இந்த புலம்பெயர்ந்த பறவைகளுக்கு ஒரு சரணாலயமாக மாறியுள்ளது.

தகவமைப்புத் திறனுக்கு பெயர் பெற்ற கிரேட் கார்மோரண்ட்ஸ், சாங்கி டேங்கின் ஏராளமான நீர்வாழ் வாழ்விடம் மற்றும் கூடு கட்டுவதற்கு உயரமான யூகலிப்டஸ் மரங்கள் இருப்பதால் காலனித்துவப்படுத்தத் தொடங்கியது. இந்த பறவைகள் பொதுவாக ஜூலை மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் இனப்பெருக்கம் செய்கின்றன மற்றும் நீர் அல்லது ஏரிக்குள் உள்ள சிறிய தீவுகளுக்குள்  உள்ள மரங்களில் கூடுகள் கட்டுகின்றன. இங்கு அவை மனித தொந்தரவுகளைத் தவிர்க்க வெவ்வேறு உயரங்களில் கூடுகளை கட்டுகின்றன.

மனித செயல்பாடு அவற்றின் நடத்தையை கணிசமாக பாதிக்கிறது என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. ஏரியின் நடைபாதைகளில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள காலங்களில் கார்மோரண்ட்ஸ் அதிக விழிப்புணர்வை வெளிப்படுத்துகின்றன. அவை பெரும்பாலும் தங்கள் கூடு கட்டும் உயரங்களையும், உணவு தேடும் நேரங்களையும் சரிசெய்து, மனித இருப்பு குறையும் போது மட்டுமே உணவளிக்க இறங்குகின்றன. இந்த நடத்தை நெகிழ்வுத்தன்மை பெங்களூரு போன்ற நகர்ப்புற சூழலில் அவை செழித்து வளர அனுமதித்துள்ளது.

சாங்கி டேங்கில் கிரேட் கார்மோரண்டுகளின் இருப்பு நகர்ப்புற நீர்நிலைகளைப் பாதுகாப்பதன் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஏரி கழிவுநீர் மாசுபாடு மற்றும் பல்லுயிர் குறைப்பு போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொண்டாலும், கார்மோரண்டுகள் போன்ற உயிரினங்களுக்கு அடைக்கலமாக அதன் பங்கு தொடர்ச்சியான பாதுகாப்பு முயற்சிகளின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்தப் பறவைகள் உள்ளூர் பல்லுயிரியலை வளப்படுத்துவது மட்டுமல்லாமல், நகர்ப்புற நீர் அமைப்புகளின் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தின் குறிகாட்டிகளாகவும் செயல்படுகின்றன.

ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு

பெரிய நீல நாரைகள் (great blue heron) ஒரு திறமையான வேட்டைக்காரர்கள். இவை பெரும்பாலும் உணவு தேடுவதற்கு ஏற்ற இடங்களான இயற்கை வெள்ளப்பெருக்குகளுக்கு அருகில் அடிக்கடி காணப்படுகிறது. அசையாமல் அல்லது மெதுவாக நகரும் நாரை சந்தேகத்திற்கு இடமில்லாத இரைக்காக பொறுமையாகக் காத்திருக்கும். இரை நெருங்கும்போது, ​​அது விரைவாக அதன் அலகைத் தள்ளி, அதன் வலுவான கீழ் தாடைகளால் (கீழ் தாடை) சிறிய இரையைப் பிடிக்கும் அல்லது அதன் கத்தி போன்ற கொக்கினால் பெரிய மீன்களை வளைத்துவிடும். பெரிய நீல நாரை பெரும்பாலும் அதன் பிடியை அசைத்து, கூர்மையான இணைப்புகளை உடைத்து அல்லது தளர்த்தி, அவற்றை முழுவதுமாக விழுங்கும்.

இரவு ஹெரான் மற்றும் கிரேட் கொமோரான்ட்ஸ் போலில்லாமல், பெரிய நீல நாரைகள் நீர்ப்பறவைகள், பருந்துகள், ஆந்தைகள் மற்றும் கழுகுகளுடன் கூடு கட்டும் இடங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. இது அவற்றின் சுற்றுச்சூழல் அமைப்புடன் இணக்கமான சகவாழ்வை நிரூபிக்கிறது. அவை பொதுவாக மரங்களில் கூடு கட்டுகின்றன, ஆனால் தரையில், புதர்களில் அல்லது செயற்கை கூடு தளங்களிலும் கூடு கட்டும். பெரிய நீல நாரைகள் கூட்டக் கூடு கட்டும் பறவைகள், அவை பல நூறு கூடு கட்டும் ஜோடிகளைக் கொண்டிருக்கலாம், ஒவ்வொன்றும் தனித்தனி மரங்கள் பல தனிப்பட்ட கூடுகளை வைத்திருக்கலாம். அவை ஒரு இனப்பெருக்க காலத்திற்குள் ஒருதார மணம் கொண்டவை. ஆனால் ஆண்டுகளுக்கு இடையில் அவற்றின் துணையைத் தேர்ந்தெடுப்பதில் நெகிழ்வானவை. பெரிய நீல நாரைகள் அவற்றின் இரண்டாவது பருவத்தில் இனப்பெருக்கம் செய்யும்.

பெட்டையோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையில்லாதோர் கூடு கட்டிக் கொண்டு
முட்டை தருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த உணவு கொடுத்தன்பு செய்திங்கு..” _ பாரதியார்

ஆண்களும் பெண்களும் வெவ்வேறு கூடு கட்டும் பாத்திரங்களைக் கொண்டுள்ளனர். ஆண்களும் கூடு கட்டும் பொருட்களைச் சேகரித்து பெண்ணிடம் வழங்கும், பின்னர் அது ஒரு மேடையையும் ஒரு தட்டு வடிவ கோப்பை கூட்டையும் நெய்கிறது. இரு பாலினங்களும் அடைகாத்தல் மற்றும் ஊட்டச்சத்தின் பெற்றோரின் கடமைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. குஞ்சுகளுக்கு மீண்டும் மீண்டும் உணவு அளிக்கப்படுகிறது, இறுதியில் அவற்றின் கூடுகளில் போடப்பட்ட முழு மீன்களையும் சாப்பிடுகின்றன. தங்கள் கூடுகளிலிருந்து பறக்கும் முன், குஞ்சுகள் தங்கள் சுற்றுப்புறங்களை வழிநடத்தக் கற்றுக்கொள்வதற்கு சுமார் 60 நாட்கள் செலவிடுகின்றன. குஞ்சுகள் பறந்த பிறகும், குஞ்சுகள் கூடுதலாக மூன்று வாரங்களுக்கு உணவை வழங்குவதால், அவை தாங்களாகவே வெளியேறும் வரை, சராசரியாக 15 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட, கூடு குஞ்சுகளுக்கு ஒரு சரணாலயமாகவே உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, பெரிய நீல நாரை அதன் வாழ்க்கையின் முதல் வருடத்திற்குள் 70 சதவீதம் வரை கணிசமான இறப்பு விகிதத்தை எதிர்கொள்கிறது, இது முதன்மையாக வேட்டையாடுவதை விட பட்டினியால் ஏற்படுகிறது.

கூடு கட்ட நிலையான தளங்களை வழங்கும் பரந்த ஆனால் மெல்லிய கிளைகள் கொண்ட உயர்ந்த மரங்கள் கொண்ட பகுதிகள், நீர்நிலைகளுக்கு அருகாமை, நிழல் மற்றும் சூழலியல் சூடுபான்மை நிறைந்த பகுதிகளை அதிகம் விரும்புகின்றன.

நகர்ப்புறங்களில் கூடு கட்டும் பழக்கங்கள் இயற்கை வாழிடங்களில் கூடு கட்டும் பழக்கங்களுடன் ஒப்பிடும்போது பல்வேறு விதங்களில் மாறுபடுகின்றன: மற்ற நகர பறவைகள் போலல்லாமல் , இவை கூடு கட்டுவதற்கு இயற்கை பொருள்களையே உபயோகிக்கின்றன. ஆனால், மனிதர்களின் நடமாட்டம் அதிகம் உள்ளதால் அவர்களின் அருகாமையை சகித்துக்கொள்ள வேண்டும். உணவு தேடலிலும் சமரசம் செய்ய வேண்டியுள்ளது, இங்கு கிடைக்கும் மீன்கள் குறைவாக இருப்பதால், அருகிலுள்ள சந்தைகளிலோ  (எ) கழிவுகளிலோ கிடைப்பதையும் பயன்படுத்தி புதிய உணவுத் தேடல் முறைகளை ஏற்கின்றன. நகர்ப்புற சூழல் சத்தம் மற்றும் மனித செயல்பாடுகளால் பறவைகளின் மன அழுத்தத்தை அதிகரிக்கலாம், இது நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து இனப்பெருக்க வெற்றியை பாதிக்கலாம். எனினும், இயற்கை வாழிடங்களுடன் ஒப்பிடும்போது, நகர்ப்புறங்களில் காட்டு மிருகங்களின் தாக்கம் குறைவாக இருக்கும்.

இந்த மாற்றங்கள் பறவைகள் நகர்ப்புற சூழலுக்கு ஏற்ப தகுந்த மாற்றங்களைச் செய்யும் திறனை வெளிப்படுத்துகின்றன.

ஆராயும் தேடலில் அறிவியல் சிந்தனை

ரங் பர்ஸே பறவைகள் ஈர்க்கும் தொழில்நுட்பம் மற்றும் கட்டிடங்கள்

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.