“மனமிருந்தால் யாவரும் கேளிர் என்பதுதான் எவ்வளவு சத்தியமானது!” இது அசோகமித்திரன் நாவல் அறிமுகத்தில் வியக்கும் வரிகள். தமிழில் எழுதுபவர்கள் அனைவரும் பெருமிதமாக சொல்லும் ஒரு சொற்றொடர் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்”. தேய்வழக்காகி, அர்த்தமில்லாததாக ஆன ஒரு சொல்லை நவீனத் தமிழிலக்கியத்தில் அழியாத் தடம் பதித்தவர் உபயோகிக்கும்போது பொருள் “ஒற்றன் – அசோகமித்திரன்”
Author: ராஜேஷ் சந்திரா
அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன்
தண்டபாணியின் உள் எண்ணங்கள் மிகச் சாதாரண மொழியில் எழுதப்பட்டாலும் அவரின் மன ஆழங்கள் அலசப்படவில்லை. இத்தனைக்கும் அந்தப் பாத்திரம் ஓர் அறிஞராகக் காட்டப்படுகிறது. இதைக் கதாசிரியரின் சுதந்திரம் என்று எடுத்துக்கொண்டாலும் நாவல் முழுமை அடையவில்லை என்று தோன்றுகிறது.
ஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை
ஷோபாசக்தியின் கதைகள் மேல் பார்வையில் அங்கதங்களோடு வந்தாலும், கவனத்தைக் கோருகின்றன. அசோகமித்திரன் வீட்டு வாழ்க்கையின் வன்முறைகளை சாதாரண மொழியில் எழுதி படிப்பவரை ஏமாற்றுவது போன்றது இது.
உதாரணமாக, ரொக்கிராஜ் இந்திராகாந்தி கொல்லப்படட செய்தியை
ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டு வரும்போது அவன் தந்தை கொரில்லா “பத்தாயிரம் சனத்துக்கு கொட்டையை வெட்டி நலம் அடிச்சவள் செத்துப் போனாள்….அதுக்கு இந்தப் பொடி என்ர சோத்தைத் திண்டு போட்டெல்லோ லஸ்பீக்கர்ல வசனம் பேசுது” என்று கருத்து விடுகிறான்.
பருவம் – சகாப்தத்தின் குரல்கள்
மகாபாரதம் என்ற இதிகாசத்தின் பாதிப்பு இல்லாத இந்திய எழுத்தாளர் இல்லை. இன்றும் கதை கூறும் முறையில் மாகாபாரதமும், இராமாயணமும் முக்கியப் பங்கை வகிக்கின்றன என்றாலும் மகாபாரதம் இலக்கியங்களில் அதிகமாக இடம் பெறும் ஒன்று. தமிழில் பாரதியார் துவங்கி ஜெயமோகன் வரையில் அதை எழுதிப் பார்த்திருக்கிறார்கள். பருவம் என்பதை பல “பருவம் – சகாப்தத்தின் குரல்கள்”
மானுடத்தை ஆராயும் கலைஞன்
அ. முத்துலிங்கத்தின் சிறுகதைகள் வடிவை ஒரு தோட்டம் என்று சொல்லலாம். விதை முளைவிட்டு, நிதானமாக வளர்ந்து, அதன் பலனை கண்ணால் பார்க்கும்போது வரும் குதூகலம், அதை அறுவடை செய்தபின் மறுநாள் தோட்டத்தைப் பார்க்கும்போது வரும் ஒரு துளி சோகம் போன்றவை அவரது கதைகள். தீவிர இலக்கியம் படிக்க ஆரம்பிக்கும்போது நமக்குத் தெரியவேண்டிய ஒன்று, இலக்கியவாதிகளின் கதைகளில் அவர்கள் சொல்லவந்தது வரிகளில் மறைந்திருக்கும். சில கதைகளை மீண்டும் படிக்க வேண்டியிருக்கும், அல்லது அசை போடவேண்டியிருக்கும். அவசர உலகில் நல்ல இலக்கியங்களுக்கு நேரம் ஒதுக்கத்தான் வேண்டும். அ. முத்துலிங்கத்தின் கதைகள் அந்தத் தகுதியைப் பெற்றவை.
அசிங்க அரசியலின் வெற்றி
ஆரம்பித்ததிலிருந்து ட்ரம்ப் ஒரு கோமாளியாகத்தான் பார்க்கப்பட்டார். அவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகளும், எதிராளியைத் தாக்கும் முறைகளும், அரசியல் பண்பாடு அறவே அற்ற, முன்யோசனை இல்லாத கருத்துக்களும் இந்தியாவுக்குப் புதிது அல்ல. நம் அரசியல்வாதிகள் நம்மை அதற்குப் பழக்கியிருக்கிறார்கள். ஆனால் மேற்குலகில் அரசியல் சாக்கடை இருந்தாலும் பொதுவில் நாகரீகம் இருக்கும். ஆனால் ட்ரம்ப் அதைப் பறக்கவிட்டு தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் பாணியில் பிரச்சாரம் செய்தார். அவர் கடசியினரே அவரை ஓரம் கட்டினர். ஆனால் மர்மமான முறையில் எல்லா முக்கியமான கட்சி உள்தேர்தல்களில் ட்ரம்ப் முதலிடம் வந்தார். வேறு வழியே இல்லாமல் குடியரசுக் கட்சி அவரை அதிபர் வேட்பாளராக்கியது. எப்படி இந்த வெற்றி சாத்தியமானது?
யு.எஸ் அரசியல் நிலையும், ட்ரம்ப் எனும் விபரீதமும்
யு.எஸ்-ல் காலம் காலமாக நடக்கும் பழமைவாதிகள் vs மிதவாதிகளின் கொள்கைப்போராட்டங்களின் அசிங்கங்கள்தான் ட்ரம்ப் போன்றவர்களை அதிபர் தேர்தலில் போட்டியிடும் நிலையை உருவாக்கியிருக்கிறது. அதிபர் தேர்தல் என்றால் மிக நாகரீகமாகச் சொல்லப்படும் ஒபாமா vs ஜான் மெக்கெய்ன், க்ளிண்டன் vs பாப் டோல் போன்ற போட்டியாளர்கள் இருந்த தளங்களில் ட்ரம்ப் போன்ற அடிப்படை அரசியல் அறிவில்லாதவர்கள் போட்டியிட ஊக்குவித்தது எது? எது இன்று ட்ரம்ப்-ஐ குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராகும் சாத்தியத்தை அளித்திருக்கிறது? ஏன் பல குடியரசு கட்சி ஆதரவாளர்கள் ட்ரம்ப் அதிபர் வேட்பாளராக வேண்டும் என்று விரும்புகிறார்கள்?
'கோக்' அல்லது C17H21NO4
உடைந்த சோவியத் யூனியலிருந்து பணத்திற்கு பதில் ஆயுதங்ளை போதை மருந்துக் குழுக்கள் பெற்றுக் கொள்கின்றன…..இதில் கிடைக்கும் பணம் எப்படி போதைத் தயாரிப்பாளர்களை சேர்கிறது? வங்கிகள் வழியேதான் அதிகம் பணம் பரிமாறப்படுகிறது. முக்கியமாக கரீபியன் வங்கிகள். அங்கு போலி தனியார் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு அவைகள் வழியே பணம் வைப்புத் தொகையாக வைக்கப்படுகிறது. பின் அங்கிருந்து சட்டப்பூர்வமான வழியில் பினாமிகளுக்கு வெள்ளைப் பணமாக மாற்றப்பட்டு போதைத் தயாரிப்பாளர்கள் கைகளில் சேர்கிறது…..இன்னும் ஒருபடி மேலே சென்றால், 2008-ல் நிகழ்ந்தப் பொருளாதார வீழ்ச்சியில் வங்கிகள் திவாலாகாமல் காத்தவை போதை மருந்து கடத்துபவர்களின் மில்லியன்கள் வங்கிகளில் இருந்ததனால் என அதிர்ச்சி தரும் தகவலை ஐநா போதை மற்றும் குற்றப் பிரிவு அலுவலகம் தெரிவிக்கிறது.
குறைவழுத்த மண்டலம்: ஊதி பெரிதாக்கும் அமெரிக்கன் ஃபுட்பால்
சியாட்டில் quarterback ரஸ்ஸல் வில்சன் பந்தைத் தன் இன்னொரு வீரரை நோக்கித் தூக்கி எறிந்தார். சரியாகத்தான் எறிந்தார். ஆனால் பந்தைப் பிடிக்க முயன்ற சியாட்டில் வீரரின் பின்னால் இருந்து பேட்ரியட்ஸ் வீரர் மால்கம் பட்லர், மின்னல் வேகத்தில் பாய்ந்து எதிராளியின் பந்தைப் பிடித்துவிட்டார். மியாண்டாட் இறுதிப் பந்தில் சிக்ஸர் அடித்ததற்கு ஈடு இது. சியாட்டில் ரசிகர்கள் மொத்தமும் உறைய, பேட்ரியட்ஸ் ரசிகர்கள் நடுவே மால்கம் பட்லர் தெய்வமானார். தொலைக்காட்சியில் வர்ணனையாளர்களால் நம்பவே முடியவில்லை. கைக்கு அருகில் வெற்றி இருந்தபோது எந்த முட்டாள் ரஸ்ஸல் வில்சனுக்குத் தூக்கி எறிய ஆணைக் கொடுத்தது என்பதுதான் அடுத்த இரண்டு நாட்களுக்குப் பேச்சு.
ரயில் சிநேகம்
கண்முன்னால் தொலைவில் ஏதோ பச்சைத்தீற்றலாகப் பறந்தது. அதுவரை காவி நிறத்தில் இருந்த வண்டி, பச்சையும், மஞ்சளுமாக மாறின. வைகை எக்ஸ்பிரசை முதன் முதலில் பார்த்த Ecstasy-ஐ இன்று வரை ஈடு செய்வது Pink Floyd-ன் Comfortably Numb-ல் வரும் கடைசி இரண்டு நிமிட கிதார் இசைதான்.
பாஸ்டனில் ஜெயமோகன்
ஜெயமோகன் தன்னுடைய கட்டுரை ஒன்றிற்கு ’காட்டை உற்று நோக்கும் காடு’ என்பதைத் தலைப்பாக வைத்திருப்பார். இதை ஒரு வாசகன் எழுத்தாளரின் படைப்புகளைப் பார்ப்பதற்கு ஒப்பிடலாம். எழுத்தாளர்கள் படைப்புகள் எழுதப்படும்போது அவர்கள் வசிக்கும் உலகம் வேறு, இதைத்தான் வாசகர் எழுத்தாளராகக் காண்கிறார். படைப்பு முடிந்ததும் எழுத்தாளர் சாதாரண உலகத்துக்குத் திரும்புகிறார். இதனால் எழுத்தாளர் நேர்காணல் என்பது எப்போதும் சுவாரசியமாக இருக்கும். எந்த உலகத்தின் எழுத்தாளர் நமக்குத் தெரிவார்? படைப்புலகம்? இவ்வுலகம்?
அசோகமித்திரனின் செகந்திராபாத் உலகம்: முடிவிலாப் பயணம்
புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் போன்றோர் பலதரப்பட்ட தடங்களில் எழுதிச்சென்றபோது, அசோகமித்திரன் ஒரு பனித்துளியையே பிரம்மாண்டமாக மாற்றினார். சென்ற இதழில் சொல்வனத்தில் கல்யாணராமன் குறிப்பிட்டது போல “Eternity is contained in the moment”என்பார்கள். பயிற்சி பெற்றவர்களுக்கு, அவருடைய கதைத் தருணங்களில் பொதிந்திருக்கும் வரலாறும், சமூக அமைப்பும் அரசியலும் தெரியவரும்.”
கேர்ரியும் அடாப்பிடியர்களின் நெருக்குதலும்
வீட்டிலும், வெளியிலும் கைவிடப்பட்ட பதின்ம வயதினருக்கு இருக்கும் அழுத்தத்தின் வெளிப்பாடு வன்முறை என்பதை முதல் நாவலில் கச்சிதமாகக் காட்டிய கிங் தன் அடுத்த பல நாவல்களிலும் bullying பற்றி எழுதியிருக்கிறார். அவருடையது பல்ப்-க்கும் ஆழமான இலக்கியங்களுக்கும் இடைப்பட்ட பாலமாக அமைகிறது. அவர் எடுத்துக்கொள்ளும் களங்கள் அவர் வசிக்கும் Maine மாகாணத்தில் நடப்பது. ஸ்டீஃபன் கிங் படைப்புகளின் பாத்திரங்கள் American Joe வகையைச் சேர்ந்தவர்கள். தினசரி கவலைகள், சந்தோஷங்கள், வெறுப்புகள், ஆசாபாசங்கள் என்ற சாதாரணர்கள். இவர்களின் அடியாழத்தில் இருக்கும் வன்முறையோடு அமானுட சக்தி கலந்தால் சமன்பாடு குலைந்து அந்த சக்தி இழுக்கும் இழுப்புக்கு ஆடும்.
தாலிபான் பின்புலத்தில் இரண்டு ஆஃப்கன் நாவல்கள்
செப்டம்பர் 11-க்கு முன் மத்தியக் கிழக்கு நாடுகளின் இலக்கியங்கள் மிகக் குறைவாகவே ஆங்கிலத்தில் மாற்றப்பட்டன. ஆனால் அபுனைவுகள் அதிகமாக எழுதப்பட்டன. முக்கியமானவையாக அகமத் ரஷீதின் ‘தாலிபான்’. பெர்னார்ட் லூயிஸ், எட்வர்ட் சயீத் போன்றோரின் புத்தகங்களும் உண்டு. ஆனால் பொது மக்களிடம் இத்தகைய புத்தகங்களைத் தேடிச்சென்று படிக்கும் பழக்கம் செப்-11-க்குப் பிறகு அதிகரித்தது. ஒரு கட்டுரையின்படி 1997-ல் 793 மத்தியக்கிழக்கு சம்பந்தமான புத்தகங்கள் ஆங்கிலத்தில் வந்தன என்றால் 2004-ல் 1304 புத்தகங்களாக உயர்ந்தன. லியொன் வைஸெல்டியெர் (Leon Wieseltier) கூறியபடி, ’செப். 10 2001 வரை மேற்குலகமக்களுக்கு இஸ்லாம் என்றால் அவ்வளவாகத் தெரியாது. செப்.12 2001 அன்று அதே மக்களுக்கு இஸ்லாம் பற்றி எல்லாம் தெரிந்துவிட்டது’.
6174 – நாவல் விமர்சனம்
சுஜாதா முன்னேற்றமும், குழப்பமும் நிறைந்த அறிவியல் சூழலில் மனிதனின் இடத்தை பிரபஞ்சத்தில் தேடும் கதைகள் என்று வகைப்படுத்துகிறார் (விஞ்ஞானச் சிறுகதைகள், ஜீனோ). ஜெயமோகன் மானுட ஆழ்மனமும் அறிவியலும் சந்திக்கும் புள்ளி அறிவியல் புனைகதை என்கிறார்.