மரேய் என்னும் குடியானவன்

உலக இலக்கியத்தின் தலை சிறந்தபுனைகதைப் படைப்பாளியாகிய ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் 200 ஆவது பிறந்த நாள் உலகெங்கும் உள்ள இலக்கிய ஆர்வலர்களால் கோலாகலமாகக்கொண்டாடப்படும் இவ்வேளையில் அவரது அரிய சிறுகதைகளில் ஒன்றான ”‘மரேய்’என்னும்குடியானவன்“ என்ற தலைப்பைத் தாங்கியபடி இந்தச் சிறுகதைத் தொகுப்பு …

ஒற்றன் – அசோகமித்திரன்

This entry is part 4 of 72 in the series நூறு நூல்கள்

“மனமிருந்தால் யாவரும் கேளிர் என்பதுதான் எவ்வளவு சத்தியமானது!” இது அசோகமித்திரன் நாவல் அறிமுகத்தில் வியக்கும் வரிகள். தமிழில் எழுதுபவர்கள் அனைவரும் பெருமிதமாக சொல்லும் ஒரு சொற்றொடர் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்”. தேய்வழக்காகி, அர்த்தமில்லாததாக ஆன ஒரு சொல்லை நவீனத் தமிழிலக்கியத்தில் அழியாத் தடம் பதித்தவர் உபயோகிக்கும்போது பொருள் “ஒற்றன் – அசோகமித்திரன்”

பருவம் – சகாப்தத்தின் குரல்கள்

This entry is part 1 of 72 in the series நூறு நூல்கள்

மகாபாரதம் என்ற இதிகாசத்தின் பாதிப்பு இல்லாத இந்திய எழுத்தாளர் இல்லை. இன்றும் கதை கூறும் முறையில் மாகாபாரதமும், இராமாயணமும் முக்கியப் பங்கை வகிக்கின்றன என்றாலும் மகாபாரதம் இலக்கியங்களில் அதிகமாக இடம் பெறும் ஒன்று. தமிழில் பாரதியார் துவங்கி ஜெயமோகன் வரையில் அதை எழுதிப் பார்த்திருக்கிறார்கள். பருவம் என்பதை பல “பருவம் – சகாப்தத்தின் குரல்கள்”

மண்ணாசை

வளரும் பருவத்தின் பல வருடங்கள் கோயமுத்தூரில் என் அம்மாவழிப் பாட்டி-தாத்தா வீட்டில் கழிந்திருந்தது. அம்மாவின் குழந்தைப் பருவம் கோவில்பட்டியில். அதனால் கோவில்பட்டி அவர் நினைவுகளில் ஒரு பெரும் பகுதியை ஆக்கிரமித்திருந்தது. இந்த இரு மண்ணும் ஏதோ ஒருவகையில் எனக்குரியவை என்றொரு உணர்வுப் பிணைப்பு என்னுள் இருந்தது. இருக்கிறது. அதனால்தான் கொங்கு நாட்டைச் சேர்ந்த மண்ணின் நாயகி நாகம்மாள் என்னைப் பாதிக்கிறாளா என்று யோசித்தேன். ஆழ்ந்து யோசித்தபோது அது மட்டுமல்ல காரணம் ….

ராபர்ட் கனிகலின் The Man Who Knew Infinity: புத்தக விமர்சனம்

ராபர்ட் கனிகல் எழுதிய The Man Who Knew Infinity என்ற புத்தகத்தின் ஆங்கிலம் மற்றும் தமிழ் பிரதிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இரு வேறு நண்பர்களிடமிருந்து எனக்கு பரிசாய்க் கிடைத்தன. அதுவும் ஒரே டிசம்பர் வாரத்தில் இரு வேறு நாட்களில் இந்தப் புத்தகங்கள் என்னை வந்தடைந்தன (இதோ இதை தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் பிப்ரவரி 14ஆம் தேதியும்கூட புத்தக காதலர்களுக்கு விசேஷமான நாள்: இன்று சர்வதேச புத்தகப் பரிசு தினம் கொண்டாடப்படுகிறது). ஆங்கில புத்தகத்தைக் கொடுத்த நண்பரும் நானும் ஒவ்வொரு முறை நாங்கள் சந்திக்கும்போதும் புத்தக பரிவர்த்தனை செய்து கொள்வதை வழக்கமாக வைத்திருப்பவர்கள். அந்த வழக்கப்படி ஆங்கில பிரதி கிடைத்ததில் ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை. 2015ல் கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்வையொட்டிய இந்தப் புத்தகம் திரைப்படமாக வடிவெடுத்து வெளிவந்ததை நீங்கள் அறிந்திருக்கலாம். நான் படம் பார்த்திருந்ததால் கதையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பது நினைவில் நன்றாகவே பதிந்திருந்தது. எனவே, “அப்புறம் படிக்கலாம்,” என்று ஆங்கிலப் பிரதியை எடுத்து வைத்திருந்தேன்.

யுவன் – கதைகளில் அவிழும் மத்ரோஷ்கா பொம்மைகள்

ஒரு சில ஒற்றை வரிகளில், பெரும் மனவெடிப்பை உண்டுபண்ணி விடுகிறார். அது வாசிப்பவரின் மன அலைவரிசையைப் பொறுத்தது என்றாலும், அந்த எளிமையாக ஒரு கனமான விஷயத்தை சொல்லிப்போவது அசோகமித்திரனை நினைவூட்டுகிறது.  உதாரணமாக பாட்டி பேரனிடம் கதைகள் சொல்கிறாள். சில கற்பனைகள். சில வாழ்வின் உண்மைகள். அனுபவங்கள்.  அதில் பாட்டி தான் அந்த காலத்தில் இருந்த கிராமபோனைப் பற்றியும், தான் பாடிய நாட்களிப் பற்றியும் சொல்லும்போது – “அதை விடு.. இதைப் பாடும்போதெல்லாம் எனக்கு என் பெரியண்ணா ஞாபகம் வந்துவிடும். சீர் கொடுப்பதற்காக வந்து செருப்படி வாங்கிக்கொண்டு போனானே.அந்த உத்தமன் முகம் கூட எனக்கு மறந்துட்டதேடா கிருஷ்ணா. எவ்வளவு செல்லமா வச்சிருப்பான் என்னை.பாவி. நான் அன்னிக்கே செத்திருக்க வேணாமா சொல்லு ” என்பாள். இதைப் படித்து விட்டு என்னால் மேலும் படிக்க முடியாமல் மனம் அலைக்கழித்தது. நீர்பட்ட பஞ்சு போலானது மனம்.  

எனக்கும் ஒரு கனவிருந்தது- வெர்கீஸ் குரியனின் சுயவரலாற்றுப் புத்தகம் பற்றி

நம்மாட்கள் என்றில்லை, வெளிநாட்டவர்களையும் பாரபட்சம் பார்க்காமல் வாங்குவாங்கென்று வாங்கித்தான் அனுப்புகிறார். இந்தியா பால்தூள் ஏற்றுமதியை ஆரம்பித்ததும் நியூஸிலாந்து உயராணையர் இவரது அறைக்கு வந்து ‘எங்கள் மார்க்கெட்டில் கை வைக்கும் வேலை வேண்டாம்’ என்று எச்சரிக்க, குரியன் கடுப்பாகி ஆனால் பெண் என்பதால் சற்று மென்மையாக ‘இவ்வுலக மார்க்கெட் உங்கள் தனிப்பட்டசொத்து என்பதை நானறியவில்லை. நன்றி போய்வாருங்கள்’ என்று கதவைக்காட்டியிருக்கிறார். அவரோ மீண்டும்மீண்டும் அதையே பேசி மேலும் எரிச்சலூட்ட, குரியன் ‘இந்தியர்கள் ஒன்றுசேர்ந்து காறியுமிழ்ந்தால் நியூஸிலாந்து மூழ்கிவிடும் ஜாக்கிரதை’ என்று பொரிந்துள்ளார்.

தீரா பாரிஸ் பக்கங்கள்…

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நிகழ்ந்த மாற்றத்தை – தனி மனித, சமூகங்களில் இருந்து தேசங்களின் தலைவிதிகளை வரை நிகழ்ந்த மிகப்பெரிய மாற்றத்தை பின் புலத்தில் கொண்டிருப்பதே இந்த நூல் வழக்கமான புலம் பெயர்வு ஆவணங்களிலிருந்து விலகித் தெரிவதற்கு முக்கிய காரணங்களாக எனக்குத் தோன்றுகிறது.
நூலில், ஒரு பாண்டிச்சேரி தமிழர் செல்வத்திடம் கேட்ட கேள்வியையையும் அதற்கு செல்வம் அவர்களின் பதிலையும் குறிப்பிட்டு கட்டுரையை முடிக்கலாம் என நினைக்கிறேன்.
தூதரகப்பக்கம் அறிமுகமாகிக்கொண்ட பாண்டிச்சேரி தமிழர் கேட்ட கேள்வி முதலில் வேடிக்கையாக இருந்தாலும், வேடிக்கை இல்லை.

ஆலவித்தில் ஆல் ஒடுங்குதல்: ’இந்திய அறிதல் முறைகள்’

“வலியது வாழும்” எனும் டார்வினின் கொள்கையைப் புரிந்துகொள்ள இந்த இணைய பரிணாமம் எனும் அமைப்பு உதவும். இன்னும் சொல்லப்போனால் இது டார்வினின் கொள்கையை இன்னும் விரிவான தளத்தில் பேசி முன்னகர்த்தியுள்ளது. “குதிரையின் பரிணாம வளர்ச்சியையும் அது தின்னும் புல்லின் பரிணாம வளர்ச்சியையும் எடுத்துக்கொள்ளுங்கள். பரிணாம அடைந்தது குதிரையோ அது தின்னும் புல்லோ அல்ல. அவை இரண்டுக்கும் இடையில் இருந்த உறவே பரிணாம மாற்றம் அடைந்தது”… ஒட்டுமொத்த பூமியே ஒரு கூட்டு உயிரினம் எனும்போது வலியவை, எளியவை என்பதன் எல்லைகள் நெகிழ்ந்துவிடுகின்றன. ஆலவித்தில் ஆல் ஒடுங்கி இருப்பதைப் போல காரண-காரியத்தொடர்பில் இரு பக்கங்கள் ஒன்றுக்குள் ஒன்று தொடர்புடையதாக இருக்கின்றன. காரணமில்லாமல் காரியமில்லை. ஆனால் காரணத்தில் செயலுக்கான விதை உறங்குவதாக நாம் சிந்திக்கும்போது காரியத்தின் விசாலம் நம் கற்பனையையும் தாண்டுகிறது. இப்படிப்பட்ட சிந்தனையில் நம்மால் தொடர்பில்லாத பல விளைவுகளைத் தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிறது. நமது மரபில் இப்படிப்பட்ட சிந்தனையினாலேயே நம்மால் அண்டத்தையும் பிண்டத்தையும் இணைக்க முடிகிறது.

மஹாபாரதம் கும்பகோணப் பதிப்பு – முன்பதிவுத் திட்டம்

அவர்கள் அனைவரும், (கோக்கப்பட்ட) நூல் அறுந்த ரத்னங்கள் போலவும் சிறகுகள் வெட்டப்பட்ட பக்ஷிகள் போலவும் மகிழ்ச்சியற்ற மனமுள்ளவரானார்கள். புகழத்தக்க செய்கைகளை உடைய அந்த அர்ஜுனனால் விடுபட்ட அந்த வனமானது, குபேரனால் விடுபட்ட சைத்ரரதமென்னும் உத்யான வனம் போலாயிற்று. ஜனமேஜயரே! ஆண்மையிற் சிறந்தவர்களான அந்தப் பாண்டவர்கள் அந்த அர்ஜுனனை விட்டுப் பிரிந்ததனால் ஸந்தோஷத்தை அடையாதவர்களாவே காம்யக வனத்தில் அப்பொழுது வஸித்து வந்தனர். பரதர்களுள் சிறந்தவரே! பிராம்மணர்களுக்காகப் பராக்கிரமம் செலுத்துபவர்களும் மஹாரதர்களும் புருஷ ஸ்ரேஷ்டர்களும் பகைவரை அடக்குகிறவர்களுமான (பாண்டவர்கள் கானகத்தில்) மிக அலைந்து சுத்தமான பாணங்களால் யாகத்துக்குத் தக்கவையான பலவித மிருகங்களைக் கொன்று வனத்தில் கிடைப்பதான (அந்த) ஆகாரத்தைக் கொண்டுவந்து நாள்தோறும் பிராம்மணர்களுக்குக் கொடுத்தார்கள்.