பித்தனோ பேதையோ!

பைத்தியக்காரனின் பெண்பால் பைத்தியக்காரி என்பர். அவ்விதம் பித்தனின் பெண்பால் பித்தி என்று இல்லை. புலவனின் பெண்பால் புலவி இல்லை. செய்யுள், பாடல், பாட்டு என்பதைக் குறித்த வடசொல் கவி. ‘சான்றோர் கவி எனக்கிடந்த கோதாவரி’ என்பான் கம்பன். கவி கவிதை ஆகி, கவி எழுதுபவன் கவிஞர் ஆனார். இமாலயக் கவி, நயாகரா கவி என்மனார் வேறு இனம். கவிதாயினி எனும் சொல் புனையப்பட்டு இருபது ஆண்டுகள் இருக்கலாம்.

முருகன் ஏஜன்சிஸ்

முருகன் லேப்டாப்பை இறுக்கமாகப் பிடித்தான். அந்தப் பெயரை மறுபடியும் மறுபடியும் படித்தான். அவன் யார், எங்கே இருக்கிறான், எப்படி இருக்கிறான், தனக்குத் தெரிந்தவனா என்று அவன் மனம் அலைபாயத் தொடங்கியது. கல்யாணி குளியலறையில் முணுமுணுத்துக்கொண்டிருந்த பாடல் அவனைக் கோபப்படுத்தியது. முகம் இல்லாத ஒரு பெயருக்கு எதிராக என்ன செய்ய முடியும், செய்தும் என்ன ஆகப்போகிறது என்று தன் கையாலாகாத்தனத்திற்கு அவன் மனம் சப்பைக்கட்டு கட்டியது. குளியலறைக் கதவு திறந்த சத்தம் கேட்டதும் அவன் லேப்டாப்பை மூடினான்.

கால்சியம் நிறைந்த நீரிலிருந்து கால்சியம் கார்பனேட்டின் அதிசயங்கள் வரை

சங்க இலக்கியங்களும் இதை உயிரோட்டத்துடன் பதிவு செய்துள்ளன. மதுரைக்காஞ்சி பாண்டிய நாட்டின் செல்வத்தைப் புகழ்ந்து, கொற்கைக் கடலில் கிடைக்கும் முத்துகளைச் சுட்டிக்காட்டுகிறது. அகநானூறு, நற்றிணை, புறநானூறு ஆகியவற்றிலும் கடல், சிப்பி, முத்து, பரதவர் வாழ்க்கை பற்றிய பல குறிப்புகள் உள்ளன. முத்து என்பது தமிழரின் பொருளாதார வளத்தையும், இயற்கையுடன் இணைந்த வாழ்வியலையும் பிரதிபலிக்கிறது. கடல் கொடுக்கும் செல்வமான முத்து உருவாக பல ஆண்டுகள் தேவை. ஆயிரக்கணக்கான சிப்பிகளில் மிகச் சிலவற்றில்தான் இயற்கையாக முத்து உருவாகிறது. அதனால் அது அரிய பொருளாகக் கருதப்பட்டது. முத்தை எடுப்பதற்காக சிப்பியைத் தேடி கடலுக்கு அடியில் செல்ல வேண்டும். சங்க காலத்துத் தமிழர் இதற்காக உயிரையே பணயம் வைத்தனர்.

தேரோட்டம்

செம்புடங்களை எரவானத்தில் ஏற்றிக்கொண்டு இருந்தாள். ஒரு கையில் மோர் செம்பை இறுக்கப் பிடித்தபடி ஒரு எம்பு எம்பி முற்றத்தில் போடப்பட்டிருந்த கம்பிகளை ஒவ்வொன்றாகப் பிடித்து தாவிப்போக ஆரம்பித்தேன். நடுவில் துணி காய்ந்து கொண்டிருந்த கயிற்றிடம் ஒரு கணம் நின்று தயங்கியபின் காற்றில் பறந்து இரண்டு கம்பிகளை தாண்டிச் சென்று பிடித்தேன். கடைசிக்கம்பியிலிருந்து சுற்றுச்சுவர் மீது குதிக்கும்போது, மோர் சிந்தாமலிருக்க ஊஞ்சல் போல இரண்டு முறை ஆடிய பின் கையை விட்டுவிட்டு சுவரின் மீது குதித்தேன்.

கூடுதுறை

கணிதக் கோட்பாடான ‘பை’ இயற்கையில் உள்ளது. அது மனிதன் உற்பத்தி செய்ததல்ல. ஆனால், அதன் கணித விளக்கங்கள் அவன் மூலம் வருகின்றன. அதன் வகுத்தலும், அந்தக் கணக்கீடுகளும் நாம் அறிந்து கொண்டவை, ஏற்படுத்தியவை அல்ல. கணக்கீடுகள் அதை விளக்குகின்றன. அவைகளை அவற்றின் இயல்பான கணிதக் கட்டமைப்பிலே புரிந்து கொள்ளலாம், இந்தச் சிந்தனையில் ப்ளாடோவின் மெய்யியல் ஆர்வத்தைக் காட்டிலும், அவரது உள்ளுணர்வின் வீச்சு தெரிகிறது. இவர்களைப் போன்றவர்களுக்கு கணிதத்தின் தொடர் உறுதி நிலையே உண்மையக் காட்ட வல்லது.

தொலைந்த கிராமம்

கடா அந்த பெண்ணைக் கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வந்தப்ப கருகும்முன்னு இருட்டிப் போச்சு. பதட்டம் கோபமும் அவனைக் களைச்சுப் போக வெச்சிருந்தது. அவ மடியிலே தலைவச்சபடி அஜின் எங்கே போயிருக்கும்னு பாம்பைப் பத்தி அவன் நெனச்சுப் பார்த்தான். தூக்கத்தை வரவழைக்கக்கூடிய சில பழங்களை அரிசியாலே செஞ்ச மதுவோட சேர்த்து அவனுக்கு அவ கொடுத்தா,இனிமையாப் பாடவும் செஞ்சா. ராத்திரி ஆனதும் அந்தப் பெண்ணோட தலைமுடி ரொம்ப ரொம்ப நீளமா வளர்ந்துக்கிட்டே  போய்த் தூங்கிக்கிட்டு இருந்த கடாவோட உடம்பை அப்படியே சுத்தி வளைச்சுக்கிடிச்சு. 

இத்தி மரத்தடி எஞ்சுவது: மண்ணின்றி நிலைகொள்ளா வாழ்வுகள் 

படைப்பு உள்நாட்டுப் போரின் சிங்களத் தரப்பை பற்றிப் பேசுவதில்லை. அதன் மறு தரப்பான இயக்கத்தைப் பற்றியும் விரிவாகப் பேசுவதில்லை. இந்தப் போரில் அகப்பட்ட மலையக மற்றும் ஈழத்தமிழர்களின் போர்க்கால வாழ்வை, அவர்களின் தரவுகளை, கண்ணீரை, வாழத்துடிக்கும் விழைவை, இழந்தவற்றை,  போர் அன்றாடம் ஆவதன் நிதர்சனத்தை, குரூரத்தை, சாகவும் தயார் என்ற அர்ப்பணிப்பைச் சொல்கிறது.  ஈழத்தமிழர்களின் அனுபவம் வேறுபட்டது.

சம்ஹாரம்

அப்பாவின் கைகள் முன்பைப்போல ஓங்குவதில்லை இப்போது. அதற்கு மாறாக மிகவும் கீழ்தரணமான வசைச்சொற்களை சரமாரியாக பிரயோகித்தவண்ணம் இருக்கிறார். அம்மா ஏதேனும் சாதாரணாமாக பேசினால்கூட உச்சுக்கொட்டுவதும், பதில் என்று அவர் வழங்கும் ஒவ்வொரு வாக்கியத்தின் இறுதியிலும் ஏதேனும் ஒரு கொடிய சொல்லை இணைத்து அளிப்பதும் வழமையாக மாறிவிட்டிருக்கிறது. அவரின் ஒவ்வொரு தேவைக்கும் உடனிருக்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதாலோ, அல்லது அவளுக்கே அலுத்துவிட்டதாலோ என்னமோ, அம்மா இப்போதெல்லாம் எந்த நிகழ்வுகளிலும் பங்கெடுப்பதில்லை.

ஜோஸ் முஜிகா – எளிய வாழ்க்கையின்  ஒரு குறியீடு  

பொதுவாக, உலக நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் தங்களுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுத்தவர்களின் வாழ்க்கை  தரத்திலிருந்து பெரிதும் விலகிச் சென்று,  ஆடம்பரமான அரசு பங்களாவில், அரசு பணத்தைக் கோடிக்கணக்காகச் செலவு செய்து சுகபோகமாக வாழ்வதே இயல்பாக உள்ளது.  இந்நிலைக்கு மாறாக,  தனது வாழ்க்கை தரத்தை  பிற நாடுகளின்  அதிபர்களுடைய வாழ்க்கைத்  தரத்தோடு எவ்விதத்திலும் ஒப்பிட முடியாத அளவிற்கு, எளிய வாழ்வை இன்முகத்துடன் ஏற்றுத் தனது நாட்டின் சாதாரண மக்களைப் போன்று வாழ்ந்து வழிகாட்டியவர் ஜோஸ் முஜிகா.

தயங்கி தயங்கி நடந்த புரட்சி – மேலை உலகம் தன் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்க கற்றுக்கொண்டது எப்படி?

மிஸ்டர் கார்டர் சில நொடிகள் பதில் சொல்லவில்லை. “மதம் இல்லாத அறிவு என சொல்லத் தேவையில்லை, வெறும் மதம் மட்டுமே அறிவு இல்லை என பார்ப்பது”  தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார். அவருக்கே அது போதுமானதாக இல்லாமையால் எச்சில் விழுங்குவதை போல விழுங்கிக் கொண்டார். பிறகு யோசித்து “சில சமயம்,” என்றார் அவர் மெதுவாக, “ஜெபர்சன் மனிதர்களை ரொம்ப நம்புறாரோன்னு தோணும்.”

றெக்கை –  அத்தியாயம் 25

This entry is part 25 of 25 in the series றெக்கை

நான் சமையல் அறைக்கு போகும்போது பின்னாலேயே வந்துவிட்டான் லெவி. விவஸ்தையே இல்லாமல் பின்னால் இருந்து இறுக அணைத்து காது மடலைக் கடித்தான்.விடு லெவி என்று நாலு தடவை வற்புறுத்தியாகி விட்டது, அவன் விடமாட்டேன் என்கிறது போல் என்னை திருப்பி அவனை பார்க்க வைத்தபடி உதடுகளை கவ்விக்கொண்டான். என் மார்பு நோக்கி ஊர்ந்து கொண்டிருந்த அவன் கைகள் லட்சியம் நிறைவேற இன்னும் உழைக்க வேண்டிய சுகமான நிர்பந்தம் இருபபதை உணர்ந்து சாரைப் பாம்பு போல் சத்தமின்றி ஊர்ந்தன.

மாயமான நாட்குறிப்பு

This entry is part 6 of 6 in the series கொலம்பஸ்

கொலம்பஸின் இந்தியாவை நோக்கிய (ஆனால் அமெரிக்காவை சென்றடைந்த) கடல் பயணத் திட்டத்திற்கு ஸ்பெயின் அரச குடும்பம் முதலில் நிதியுதவி செய்ய மறுத்துவிட்டது. அந்த இக்கட்டான சூழ்நிலையில், சாண்டாஞ்செல் தனது சொந்தப் பணத்திலிருந்தும், அரசவையின் நிதி ஆதாரங்களிலிருந்தும் கணிசமான தொகையை (சுமார் 1.1 மில்லியன் மாரவெடிகள் ) வட்டியற்ற கடனாக ஸ்பெயின் அரசுக்கு வழங்கினார். இதன் மூலமே கொலம்பஸின் பயணம் சாத்தியமானது

பார்க்கப்படாத வாழ்வுகளின் சாளரம்: ஷாராஜின் வீதிகளூடே ஒரு பயணம்  

கைவிடப்பட்ட , மனப்பிறழ்வுக்கு ஆளான , சுய சுகாதாரத்தைப் பேணிக்கொள்ளத் தெரியாத நிலையில் பேருந்து அல்லது இரயில் நிலையங்களிலோ, நம் ஊர்களிலோ அல்லது நாம் வசிக்கும் வீதிகளிலோ, இப்படி ஏதோ ஒரு இடத்தில் தம் உயிரை மட்டுமே தக்கவைத்துக் கொண்டு நம்மிடையே பிழைத்துக் கிடக்கும் மனிதர்களை நாம் எல்லோரும் நம் வாழ்வில் ஒரு முறையாவது சந்தித்திருப்போம்; அப்படி இதுவரை இல்லையெனில் இனி நிச்சயம் சந்திக்க நேரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அப்படியான ஒரு பெண்ணின் கதை தான் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘ பரட்டச்சி ’ என்கிற கதை.

தும்பியின் பிம்பம்

This entry is part 19 of 17 in the series ஹைக்கூ

பறக்கும் தும்பி நீரில் தன் பிம்பத்தைக் காண்கிறது, அது பறந்து கொண்டிருப்பதால் பிம்பமும் நகர்கிறது, பிம்பம் நகர்வதால் அதைத் தும்பி துரத்துகின்றது. துரத்துவதால், பிம்பம் நகர்கிறது. துரத்துவதும் நகர்வதுமாக அந்தக் குளிக்கும் நீர்த்தொட்டியின் மேல் தும்பியின் பயணம் தொடர்கிறது. தொட்டியின் எல்லையில் தும்பியின் பயணம் முடியலாம், அல்லது அது திரும்பி மீண்டும் நீரில் தன் பிம்பத்தைக் கண்டுத் தொடரலாம்.

நேர்க்காட்சி நிரூபணங்கள்

நான் இங்கு கூறிய மூன்று பரிசோதனை முடிவுகளும் இயற்கையின் குரலிலேயே பேசுகின்றன : “ புதிய புலங்கள், விசித்திரமான துகள்கள், துணை பரிமாணங்கள், பிற சீர்மைகள், இணை பிரபஞ்சம், இழைகள் மற்ற பிற – கனவு காணாதீர். நம்முன் உள்ள புதிரின் பகுதிகள் எளியவை: பொது சார்புக் கொள்கை, துளிம இயக்கவியல் மற்றும் பொது மாதிரி கொள்கை. நம்முடைய அடுத்த அடிவைப்பு என்பது இம்மூன்றையும் எப்படி சரியாக இணைப்பது மட்டுமே”

கீதா முகூர்த்தம்

பகவத் கீதை ஒரு மனிதனின் குடும்ப மற்றும் சமூகக் கடமைகள் போன்றவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்பதையும், தன் உணர்ச்சிப் போராட்டங்களையும், அற விஷயங்களில் ஏற்படும் குழப்பங்களையும் ஒரு சாதகன் நேர்கொள்ள வேண்டும் என்று போதிக்கிறது. உபநிஷத்துக்கள் நேரடியான, அருவமான, குணங்களற்ற பிரம்மத்தைப் பற்றிப் பேசுகின்றன. துவக்க நிலையில் உள்ள சாதகன் ஒருவனுக்கு எல்லையற்ற அந்தப் பிரம்மத்தை அறிந்து கொள்வதில், புரிந்து கொள்வதில், மனதில் கிரகித்துக் கொள்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு.

சுகாதார பராமரிப்பு அமைப்பு (HMO) Health Maintenance Organization

This entry is part 26 of 15 in the series பொது நலம்

இந்த அமைப்பின் நோக்கம் இரண்டு: ஒன்று, தேவையற்ற, விலையுயர்ந்த நிபுணர் சிகிச்சைகளைத் தவிர்த்து செலவைக் கட்டுப்படுத்துவது; இரண்டு, ஒரே ஒரு மருத்துவர் உங்கள் முழு சுகாதார வரலாற்றையும் ஒருங்கிணைத்துப் பார்ப்பதன் மூலம் தடுப்பு சிகிச்சையை (preventive care) மேம்படுத்துவது. சில குறிப்பிட்ட சேவைகளுக்கு — உதாரணமாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான வருடாந்திர மேமோகிராம் — பரிந்துரை தேவைப்படாத விதிவிலக்குகளும் உண்டு.

இல்லாதவனின் வீடு

மூன்று வருடங்களுக்கு முன் என்னைப் பிரிந்து, என் காதலை ஏற்காமல் போன கமலாவை என்னால் மறக்க முடியவில்லை. — 12B-க்கு புதிதாக வந்தவள் என்று நினைத்தேனா? இல்லை, அது தவறு. அவள் எப்போதுமே அங்குதான் இருந்தாள். அவள் சிரிப்பின் உரப்பு, யாரேனும் சொல்வார்களோ என்று கவலைப்படாத அவளின் வாளிப்பு, மறைக்க வேண்டிய ஒன்றாக அவள் ஒருபோதும் நினைக்காத அவளின் உடல், ஜன்னல் திறந்தபடி ஆடை மாற்றும் தன்னம்பிக்கை, மாலைக் காற்றை நெடுநேரம் முகரும் அவளின் கொண்டாட்டவுள்ளம்… நாங்கள் நெருக்கமாக இருந்த காலம் மிகக் குறுகியது. ஆனால் அவளுக்கு அது ஒரு பருவம் மட்டும், எனக்கோ அது வாழ்க்கை.

‘பேராண்மை’ – விதியும் விளக்கமும்

அறத்தின் குரலாய் ஒலிக்கும் திருக்குறள் வகுத்த விதிகள் பலவற்றுக்குக் கம்பராமாயணம் விளக்கம் தர முற்பட்டிருப்பதை இரு நூல்களையும் இணைத்துச் சிந்தித்தால் விளங்கிக் கொள்ள முடியும்.இன்னொரு வகையில் சொன்னால் திருக்குறள் இலக்கணம் எனில் கம்பராமாயணம் இலக்கியம் எனலாம்.

அமெரிக்காவின் புதிய தங்க வேட்டை- AI உருவாக்கும் புதிய கோடீஸ்வரர்கள்

ஒவ்வொரு மாபெரும் தொழில்நுட்பப் புரட்சியும் வெற்றியாளர்களையும், சவால்களையும், கடினமான தேர்வுகளையும் உருவாக்குகிறது என்பதை வரலாறு காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவுப் புரட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் ஒரு விஷயம் மேலும் மேலும் தெளிவாகிறது. செயற்கை நுண்ணறிவு யுகத்தில், “தரவு”, உலகின் புதிய இயற்கை வளமாக மாறியுள்ளது. அதைத் தாங்கும் நிலம் அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க பொக்கிஷங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல உலகம் முழுவதற்குமான புரட்சி.

ராமலக்ஷ்மி கவிதைகள்

காற்புள்ளிகளைத் திருத்துவதிலும்
முற்றுப்புள்ளிகளை மாற்றுவதிலும்
ஆச்சரியக்குறிகளைத் துரத்துவதிலும்
கேள்விக்குறிகளுக்கு அஞ்சுவதிலும்
கழிகின்றன வருடங்கள்

மார்க் & ஜெஃப்: தரவின் தோழர்கள்

This entry is part 3 of 3 in the series தரவு ஏக்கம்

அதே போல, என்னைப் பற்றிக் கவலைப்படும் இன்னொரு நபர் ஜெஃப். முதலில் இணையத்தில் புத்தகக்கடையைத் திறந்த ஜெஃப், மெதுவாக, அதை ஒரு பல்சரக்குக் கடையாக மாற்றினார். அவர், எந்த நாட்டில் வியாபாரத்தை விரிவுபடுத்த நினைத்தாலும், ஒரே எதிர்ப்புதான். நான் அமேஸான் பற்றிதான் சொல்கிறேன். எனக்கு ஜெஃபை தெரியாது. ஆனால், அவருக்கு என்னை நன்றாகத் தெரியும்! சற்று தலைகீழாக இருப்பது போலத் தெரியும் – இளையராஜாவுக்கு என்னைத் தெரியும், ஆனால் எனக்கு அவரைத் தெரியாது என்பதைப் போல!

காபிரைட் சட்டத்தைச் செதுக்கிய வழக்குகள்

This entry is part 7 of 7 in the series காப்பிரைட் கதைகள்

டொனால்ட்ஸன் வெளியிட்ட புத்தகங்கள், ஆன் சட்டப்படி பதினான்கு வருட காப்பிரைட் காலம் முடிவடைந்தவை. மேலும் அன்றைய காலத்தில், ஸ்காட்லாந்த் , இங்கிலாந்துடன் இணைந்திருந்தாலும்கூட, தனித்தனி சட்ட அமைப்புகள், அரசியல் குழப்பங்கள் ஆகியன நிறைந்ததாக இருந்தது. எனவே ஆன் சட்டம் ஸ்காட்லாந்தில் எப்படிச் செல்லுபடியாகும் என்பதும் விவாதம் செய்யக்கூடிய ஒன்றாக இருந்தது. இந்தக் குழப்பங்கள் போதாதென்று, டொனால்ட்ஸன் லண்டனிலேயே கடைதிறந்து தனது புத்தகங்களை மலிவு விலையில் விற்பனை செய்யத் தொடங்கினார். லண்டன் புத்தக விற்பனையாளர்கள் பெரும் வணிகச் சவாலைச் சந்தித்தனர்