மேகங்கள் மிதந்து செல்லும் ஆகாயத்தில் அவற்றிற்கு வடிவங்கள் (யானை, சர்க்கஸ் கோமாளி, கரடி) அமைத்துக் கொடுத்து அவற்றைப் பெயர்சொல்லி ஊகிக்கக் கூறி விளையாடும் குழந்தைகள் விளையாட்டு! பிற்காலத்தில் திறந்தவெளிக் கச்சேரிகளில் ஆகாயத்தை நோக்கியவாறே கேட்ட ‘சௌந்தரராஜம் ஆச்ரயே’வில் பாடகர் ‘நந்த நந்தன ராஜம்’ எனப்பாடும்போது குட்டிக் கிருஷ்ணனின் லீலைகளை அந்த மேகங்களில் கண்டு களிக்கத் தோன்றியது.
Author: மீனாக்ஷி பாலகணேஷ்
நீலமலையில் வாழ்பவனே……..!- சாலபேகா – ஒடியா கவிஞர்
அவ்வாறே ரத யாத்திரையின்போது, ஜகந்நாதர், பலபத்ரா, சுபத்ரா ஆகியோரின் தேர்கள் சாலபேகாவின் குடிசையின் முன்பு நின்றுவிட்டன. அங்கிருந்து நகரவேயில்லை. சாலபேகா வந்து தேர்க்கயிறுகளைத் தானே இழுத்தபின்னரே அவை அங்கிருந்து நகர்ந்தன. அவனுடைய தாய் லலிதா இறந்தபின்னர் கோவில் பூசாரிகள் அவளை இந்துமுறையில் தகனம் செய்யவும் அனுமதி மறுத்தனர்.
தாமரை இலைத் தண்ணீர் வாழ்க்கை!
அகந்தையை அழிக்க வேண்டும் என்பதில் கருத்து ஒற்றுமையை அனைத்துப் பெரிய மகான்களிடமும் காண்கிறோம். குமரகுருபரர் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் சொல்கிறார்: அகந்தை என்பது கிழங்குபோல மானிடர்கள் உள்ளத்தில் வேரோடிக் கிடக்கிறதாம். இந்தனை அகழ்ந்து எடுத்துப் பிடுங்கிக் களைபவர்கள் உள்ளத்தில் மீனாட்சியம்மை விளக்காக ஒளி வீசுகிறாள் என்பார்.
ஆடும் சுருண்ட கேசக்குழல்கள்!
முனிவர் இராமனின் நிலையைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்து புளகாங்கிதம் அடைந்தது அந்தப் பரப்பிரம்மத்திற்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் இராமனுக்கும் கூடத் தெரியுமோ என்னவோ! ஆக, அப்படியொரு நிலையைத் தனது மனக்கண்ணில் காண்கிறார் தியாகராஜர். ஏனென்றால் அவர் தனது ஒவ்வொரு சுவாசத்திலும் இராமனையே சுவாசிப்பவர். காண்பதெல்லாம் இராமன். அவனுடைய சரித்திரத்தின் ஒவ்வொரு நொடியும் நிகழ்வும் இவருடைய அதீதமான கற்பனையின் உச்சம்தான்.
8. கிருஷ்ணா
அவள் அவரிடம் “நீர் இலக்கியம், இலக்கணம் அனைத்திலும் மிகத் தேர்ச்சி பெற்றவர். ஆனால் என்னிடம் வைத்துள்ள பிரேமையில் ஆயிரத்திலொரு பங்கு அந்தக் கிருஷ்ணனிடம் வைத்தால் கூடப் போதுமே! உம் வாழ்க்கையின் பொருளை உணர்ந்து பலனை அடைய,’ என்கிறாள்
7. விருந்தாளி
தாங்கள் இறந்துபோகும் மனிதர்களாகிய எங்களுக்கு அளித்துள்ள பரிசுகள் எங்கள் எண்ணற்ற தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. இருப்பினும் நாங்கள் குறைவின்றி உங்களிடம் திரும்பத் திரும்ப யாசித்து வருகிறோம்.
6. மறைக்கப்பட்ட திட்டம்
இந்த அணுவின் அமைப்பு நடராஜப் பெருமானின் நடனத்தோடு ஒப்பிடப்படுகிறது. அவனுடைய ஒழுங்கான நடன அமைப்பின் காரணமாகவே இந்த அண்டம் இயங்குகிறது எனலாம். ஆடும் அவன் கையில் தீ, காலில் மண், தலையில் நீர், கையில் உள்ள உடுக்கையில் காற்று, ஆடுமிடம் ஆகாயம் எனப் பஞ்ச பூதங்களும் அவனாகவே நின்று, அனைத்தையும் படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் தான் அனைத்துள்ளும் நின்று ஆடுகிறான். இதுவே அணுத்தாண்டவம்.
5. இரவுநேர யாத்திரிகன்
இறப்பைத் தன் காதலியாகக் கண்டு, அவளுடனான சந்திப்பிற்குத் தயாராவதனை வியக்கத்தக்க நுட்பங்களுடன் எழுத்தில் வடித்துள்ளார். இரவு என அவர் கூறுவது வாழ்க்கையின் இறுதியில் நாம் செல்லும் இடம். அதனை எவ்வாறு தைரியமாக எதிர்கொள்வது என அழகாக உண்மையான விளக்கங்களை அளிப்பது இக்கவிதை.
4. தெய்வீகப் பணியாளன்
பல திக்குகளிலிருந்தும் எதிர்பாராமல் வரும் சவால்களை சந்தித்து வாழ்வதற்கு மனிதப் பிரயத்தனத்தால் இயலாது. எந்த மானுட சக்தியுமே இதனை எதிர்கொள்ளும் வலுவற்றது. ஆத்மாவின் நிரந்தரமான மகிழ்ச்சி தெய்வத்தின் புன்னகை ஒன்றினாலேயே கிடைப்பது. அது அனைவரையும் இன்பம் கொள்ளச்செய்தும் உண்மையின் வடிவாகவும் திகழ்கிறது.
3. சரணடைதல்
எது மனிதனை அசக்தனாக்கி, எதுவோ ஒன்றில் சரணடைய வைக்கிறது? இயலாமையா? நம்பிக்கையா? இல்லை வேறு ஏதோவா? ஒன்று மட்டும் நன்கு விளங்குகிறது. நன்மையிலும் தீமையிலும் நாம் நக்குத் துணையாக வேறு ஒன்றில் இணைந்திருக்க விரும்புகிறோம்; அது நம்மை மீறிய ஒரு சக்தியாக இருக்க வேண்டும்; நம்மை அரவணைக்க வேண்டும்; நமக்குத் துணையாக, பலமாக இருக்க வேண்டும்.
நீ இவ்வாறு இருப்பதனால் / ஏனெனில் நீவிர்
நம்மில் உயிர்க்கும் இறைமையை நாமே நமது உடலைவிட்டுத் தள்ளிநின்று பார்ப்பது போன்ற உணர்வு. உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து ஊற்றெடுக்கும் பொருள் செறிந்த சொல்நயம்!
பிறப்பு எனும் அதிசயம்
மொத்தத்தில் பிறப்பு என்பது ஒரு அதிசயம்தான்; வாழ்க்கையும், இறப்பும் கூட அதிசயங்களே. பிறப்பு என்பது ஒருவர் வேண்டும்போது, வேண்டும் நிலையில், வேண்டும் பிறவியை அடையுமாறு நிகழ்வதல்ல. ஒவ்வொன்றும் முன்னரே நிச்சயிக்கப்பட்டபடி (pre-determined / ordained) நிகழ்வதாகும். ஆனால் இதனை நாமறிய இயலாது. ஆகவேதான் பிறப்பும் இறப்பும் நம் வசத்திலில்லை.
ஒளி! பேரொளி!!
மாணவப் பருவத்தில் அருமையான ஒரு கருத்தை, அது டார்வினின் கோட்பாடாகவோ, ஒரு செய்யுளை பதம் பிரித்துப் பொருள் காண முடிந்ததாகவோ இருந்தாலும், அந்தக் கருத்து அறிவிற்குப் பிடிபட்டதும் ஒரு வெப்பமான அலை உடலில் எழுந்து தலையில் பாயும், தலையில் ஒரு ஒளிவட்டம் சில நொடிகளுக்கு இருக்கும்; பின் நாளெல்லாம் உள்ளம் களிப்பில் துள்ளும். இதுதான் உடலில் ஒளி செய்யும் விந்தை; மாயம். எல்லா அறிதலும், எல்லாப் புரிதலும் இதற்குட்பட்டதுதான். ஒளிமயமானதுதான்.
தன்னை அறியும் தாலாட்டு!
மனிதனின் தனிப்பட்ட குணம் என்னவென்றால் அவன் மனத்தால் இயக்கப்படுகிறவன்.” ஆகவே தன்னைப் பற்றிய ஆராய்ச்சியை அவனால் மனத்தில் செய்துகொள்ள முடிகிறது. நீண்ட பயிற்சிக்குப் பின்னரே ஒருவனால் தன்னைப் பற்றிய பல பிம்பங்களையும் தன்னுடன் தொடர்பு கொண்டிருப்பவை பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. இவற்றிற்குண்டான பெயர்களையும் வைத்து அவற்றின் பல இயல்புகளையும் பகுத்தறிய இயல்கிறது.
மயிலையாரின் மாசிக்கடலாட்டு
இந்தியா முழுமையே ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும் அறுவடைப் பண்டிகை பொங்கல், சங்கராந்தி, லோதி, பிஹு இன்னும் பல பெயர்களில் இம்மாதங்களில் கொண்டாடப்படும். இதன் தொடர்பாகவே முற்றிய செந்நெற்கதிர்கள் பற்றிய செய்தியைக் காளிதாசனின் ரிது சம்ஹாரத்தில் கண்டோம்.
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்…..
கார்த்திகை விளக்கீடு எனும் கார்த்திகை தீப விழா கார்த்திகை மாதத்தில் தமிழர்களால் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். இதன் ஐதீகம் என்னவெனில் படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மாவும் காத்தல் தொழிலைச் செய்யும் திருமாலும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார்
உதிரும் வண்ண இலைகள் !
துள்ளுகின்ற மீன்களாகிய மேகலையை அணிந்து, நீர்நிலைகளின் கரையோரங்களில் அமர்ந்திருக்கும் அன்னப்பறவைகள் முத்துமாலைகள் போலக் காட்சியளிக்க, பரந்த மணல் பிரதேசம் எனும் நிதம்பத்தையுடைய நதிகள், தம் இளமையாலும் அழகாலும் செருக்குற்ற இளமங்கையர் போல் தளர்நடையிட்டுக் கொஞ்சிக் குழைந்து, மெதுவாக ஆடி அசைந்து செல்கின்றன.
மாமழை போற்றுதும்…மாமழை போற்றுதும்…
நீர் நிறைந்த மேகங்கள் மலைப்பாறைகள்மீது இறங்கி, அவற்றைக் காதலன் தழுவிக்கொண்டு இருப்பதுபோல் காணப்பட்டன. மலைகளெங்கும் அருவிகள் வீழ்ந்து கொண்டிருந்தன. எங்கும் தோகை மயில்கள் நின்று நடனமாடின. இவ்வாறு, மலைகள், மேகங்கள், அருவிகள், மயில்கள் இவற்றைக் கண்டோருக்கு உள்ளத்தில் ஒரு விதமான விருப்பு உண்டாயிற்று.
கோடை மறைந்தால் இன்பம் வரும்
கோடை என்பது வருத்தும் வெயில்காலம். மனிதன் எதற்கெல்லாம் ஏங்குகிறான் என்று தெரியுமா? குளிர்ச்சியான மரம், அதன் நிழல், அம்மரத்தில் கனிந்து தொங்கும் பழங்கள், நீராடி மகிழ ஒரு நீரோடை, அதிலுள்ள குளிர்ச்சியான நீர், அந்தத் தண்ணீரினிடையே மலர்ந்து சிரிக்கும் அழகான வாசமிகுந்த சில தாமரை மலர்கள், இளைப்பாற ஒரு மேடை, அங்கு வீசக்கூடிய மெல்லிய பூங்காற்று,
வசந்தகாலம் வருமோ?….
வசந்தா என்றே ஒரு அழகான ராகம் – உள்ளங்களில் நம்பிக்கையையும் நல்ல எண்ணங்களையும் வளர்ப்பது. வசந்த காலத்துக்கு உரியதா எனில், இல்லை; அவ்வாறு எந்தப் பகுப்புகளும் இல்லை. நளினகாந்தி, கர்ணரஞ்சனி போன்ற ராகங்களையும் வசந்தத்தின் ஓர் அழகான மனோநிலைக்குச் சேர்த்துக் கொள்ளலாம் என எங்கேயோ படித்த நினைவு!!
புனர்ஜென்மத்தின் நெருப்பில் எரியும் வாழ்வு
ஸ்லோகங்கள் 46, 47, 48-ல் இதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. -அமைதியை எங்கும் பெறவில்லை, உன் மடியில் நீண்ட உறக்கம் கொள்ள வேண்டும்; ஜகன்னாதனை விடுவிக்கும் தருணம்; கங்கையின் அழகான தெய்வ வடிவம் – என இவைகள் பண்டிதராஜரின் இறுதி விருப்பங்களை நமக்கு உணர்த்துகின்றன.
வீழ்ச்சியடைந்தவர்களால் ஒதுக்கப்பட வேண்டியவை! வீழ்ந்தவர்களால் உரக்கக் கூறப்படாதவை!!
இவ்வுலகில், தாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய
இயலாதவர்களையும்கூட உயர்ந்த நிலைக்குச் சேர்க்கும்
புனிதத் தலங்கள் பல, மூன்று உலகங்களிலும் உள்ளன.
ஆனால் நினைக்கவும் கூடாத நடத்தைகொண்டு
தவறிழைத்த மக்களையும் உயர்நிலைக்குக் கொண்டுசெல்ல
உனது ஒப்பற்ற புனித நீரே அனைத்துப்
புனிதத் தலங்களையும்விட உயர்வானதாகிறது.
ஜகன்னாத பண்டித ராஜா – 4
இந்த கங்கா லஹரியின் ஸ்லோகங்களைத்தான் நாம் காணப்போகிறோம். நான் அறிந்தவரை இதுவரை தமிழ் மொழிபெயர்ப்பைக் கண்டதில்லை. என்னைப்போலும் சம்ஸ்க்ருதம் அறியாதவர்கள் அறிந்து போற்றும் வகையில் (ஒரு ஆங்கில மொழியாக்கத்தின் துணைகொண்டு) இதனைச் செய்யத் துணிந்தேன். அன்னை கங்கைக்கு எனது காணிக்கை இதுவே. தீபாவளி சமயம் இதனைச் செய்யத் துவங்கியது எத்தனை பொருத்தம்!
ஜகன்னாத பண்டித ராஜா -3
இந்த ஸ்லோகங்கள் ஜகன்னாதர் தம் வாழ்வின் இறுதிக்காலத்தில் எழுதினவையாக இருக்கக்கூடும். ஏனெனில் இதில்
தம் வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்;
தாமியற்றிய செய்யுள்களின் இனிமையை, நயத்தை, உயர்வாகப் பெருமிதத்துடன் பேசுகிறார்;
ஜகன்னாத பண்டித ராஜா -2
இளம் மனைவியுடன் கருத்தொருமித்து வாழும் / வாழ்ந்த ஒருவனின் நினைவலைகளாகப் பெருக்கெடுத்து ஓடுகின்றன இந்தக் கவிதைகள். இவற்றை ஆழ்ந்து படிக்கும்போது நமது சங்கக் கவிதைகளான அகநானூறு, எட்டுத்தொகை நூல்களின் சாயல் மிகுதியாகத் தெரிகின்றது. ஊடலும் கூடலும் பெருக்கெடுத்து ஓடுகின்றன. பிரிவின் வாட்டம் கனலெனச் சுடுகின்றது
ஜகன்னாத பண்டித ராஜா
இந்த நூலை ஜகன்னாத பண்டிதர் இயற்றியது குறித்து சில கதைகள் உலவுகின்றன. இதில் காணப்படும் சில பாடல்கள் இளம்வயதிலேயே இறந்துவிட்ட மனைவியை எண்ணிப்பாடியதாகக் கொள்ளப்படலாம். எது எப்படியோ நமக்கு வேண்டியது இவற்றின் நயமும் சுவையும் கவிதையழகும் தான். சில பண்டிதர்கள் எழுதிய ஆங்கில விளக்கத்தின்1,2,3 துணைகொண்டு நான் இதனைத் தமிழாக்கம் செய்துள்ளேன்.
மாறாத பேரானந்தம்
புரூரவஸ் எனில் நீர் கொண்ட மேகம், அதிக முழக்கம் செய்வது. நீர் ஆவியாகி மேகங்களாகும்போது மழையின் அறிகுறியாக இடிமுழக்கம் எழும். ஊர்வசி எனும் பெயர் மின்சாரம் பாய்வது போன்ற மின்னல் எனவும் பொருள்படும். ரிக்வேதத்தில் கூறப்பட்டுள்ள பாடலின்படி ஊர்வசி என்பது இடையிடையே தோன்றிமறையும் மின்னல் எனப் பொருள் கொள்ளப்படும்.
புரூரவஸ் செய்த பாவம் – அழகு, காதல்
புரூரவஸும் அதுபோன்றே ஊர்வசியைத் திரும்ப அடைவதையே தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு காடு, மலை, நாடு, நகரம், நதி எனச் சுற்றியலைகிறான். அவளுடன் கழித்த இன்ப வாழ்வின் எண்ணங்கள் திரும்பத் திரும்ப வந்து அவனை அலைக்கழிக்கின்றன. ஒரு உயர்ந்த பதவியை அடைவதும், கல்வியிலோ, கலையிலோ சாதனைகள் செய்வதும், தான் விரும்பிய பெண்ணுடன் இன்பமாக வாழ்வதும் சமமாகவே நோக்கப்பட வேண்டும். இதைப் பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
தனிமையின் பிடியில் புரூரவஸ்
ஒருவர்மீது எல்லையற்ற காதல் கொண்டுவிட்டால் ஒருவன் எத்தகைய பலவானானாலும், அவனுடைய புகழ், பதவி எதுவுமே அவனுக்கு ஒரு பொருட்டல்ல எனக் காண்கிறது. இத்தனைக்கும் அவனை திலோத்தமை முதலிலேயே எச்சரிக்கை செய்துள்ளாள். காதல் அவன் சிந்தனையைக் குருடாக்கி விட்டதே!
அதிர்ஷ்டம் வாய்ந்த சுவர்க்கத்தின் துரதிர்ஷ்டம்!
இடையில் இங்கு ‘அதிர்ஷ்டம் வாய்ந்த சுவர்க்கத்தின் துரதிர்ஷ்டம்!’ எனும் முரண்தொடையான (oxymoronic) ஒரு பிரயோகத்தை அரவிந்தர் அறிமுகப்படுத்துகிறார். தெய்வங்களுக்குமே அழகின் உச்சமான ஒரு பொருள் – இங்கு ஊர்வசி – அவர்களது பேரதிர்ஷ்டமாகக் கொள்ளப்படுகிறது! அதனால் அவளுடைய பிரிவை, இனிமேலும் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவள் சுவர்க்கத்தில் இல்லாத நாட்கள் துரதிர்ஷ்டம் வாய்ந்தவை என் உணர்கின்றனர் சுவர்க்கவாசிகள்!
இழப்பினில் அடைந்த காதல் சுவர்க்கம்
காளிதாசனின் ‘விக்ரமோர்வசீயம்’ நாடகமானதால் நாடகத்தின் அவசியம் கருதி பல பாத்திரங்கள் இதில் படைக்கப்பட்டுள்ளனர். பலபேர் உள்ள மேடை ஒன்றுதான் சுவாரசியமானதாக இருக்கும் அல்லவா? மன்னன் புரூரவஸுடன் ஒரு விதூஷகன் – ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் உள்ளதுபோல ஒரு Jester. அரசிக்கு ஒரு தோழி. யாரிடமாவது இவர்கள் (பாத்திரங்கள்) உரையாடினால்தானே இவர்கள் “இழப்பினில் அடைந்த காதல் சுவர்க்கம்”
‘ஊர்வசியின் களிப்பு- புரூரவஸின் சலிப்பு’
இரு காதலர்களின் பிரிவு அவர்கள் உள்ளங்களிலும் வாழ்விலும் ஏற்படுத்தும் வெறுமை, தனிமை, வாழ்க்கையின் மீதான வெறுப்பு, சலிப்பு, பற்றின்மை என அனைத்தும் இத்தனை நுட்பமாக, பொறுமையாக வேறெந்தக் கவிஞனாலும் விவரிக்கப்பட்டுள்ளதா என நான் அறியேன். முன்பே கூறியபடி, கம்பன் அழகாக சீதை, இராமன் இவர்களின் தாபத்தையும், சேக்கிழார் பெருமான்
ஊர்வசி காதலில் கண்விழித்தாள்!
மூலத்தில் காண்பதுபோல் ஸ்ரீ அரவிந்தரின் கவிதையில் தேர்ப்பாகன் இல்லை; புரூரவஸே தேரைச் செலுத்துகிறான். வெளிப்படையாக பாகனைப் பற்றிய பேச்சில்லை! அவனைக் கண்ட கேசி, தான் வெல்லப்படுவோம் என உணர்ந்து, ஊர்வசியைப் பனியின்மீது போட்டுவிட்டு ஓடோடி மறைகிறான். உணர்விழந்து கிடக்கும் அவளை அள்ளியெடுத்துத் தேரில் இருத்திக்கொண்டு புரூரவஸ் விரைகிறான். அத்தனை பேரழகை அருகாமையில் கண்டவனின் உள்ளம்…
‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’
காளிதாசனின் விக்ரமோர்வசீயம் எனும் படைப்பு புரூரவஸ்- ஊர்வசி ஆகியோரது காதல்கதையைக் கூறுவதாக அமைந்தது. அதற்கு ஏன் காளிதாசன் விக்ரம- ஊர்வசீயம் எனப் பெயரிட்டான் என்பதற்குக் காரணங்கள் கூறப்படுகின்றன. அது இங்கே இப்போது நமக்குத் தேவையில்லை. விக்ரமன் என்பது புரூரவஸின் மற்றொரு பெயர் எனும் கூற்றை மட்டும் நினைவில் கொள்ளலாம். “‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’”
ஊர்வசி – அரவிந்தரின் பார்வையில்
தேவலோகத்தில் நடைபெற்ற ஒரு நாட்டிய நிகழ்ச்சியில் ஊர்வசி ‘லக்ஷ்மி’யின் வேடத்தை ஏற்று நடனமாடுகிறாள். அவளுடைய எண்ணமெல்லாம் புரூரவஸைப் பற்றியே இருந்தது. அதனால் ‘புருஷோத்தமா’ (விஷ்ணு) எனக் கூறுவதற்குப் பதிலாக புரூரவஸ் என அழைக்கிறாள். இதனால் அவளுடைய நாட்டிய குருவான பரதமுனிவர் சினமடைந்து அவளைச் சபிக்கிறார். “நீ யாரை நினைத்துக் கொண்டிருக்கிறாயோ, அவனுடன் வாழக் கடவாய். உனக்கு ஒரு மகன் பிறப்பான். தந்தையும் மகனும் சந்தித்துக் கொள்ளும்போது நீ அவர்களிருவரையும் விட்டு விலகி தேவலோகத்திற்குத் திரும்ப வேண்டும்.”
ஸ்ரீ அரவிந்தரின் நெருப்புப் பறவை – ஒரு பார்வை
பறவை என்பது ஆத்மாவின் அடையாளம் அன்றி வேறொன்றல்ல! பெரும்பான்மையான பொழுதுகளில் இவை மனோ-சக்தியையும் ஆத்ம சக்தியையும் குறிக்கின்றன. இங்கிவை ஸ்ரீ அரவிந்தரின் எழுச்சியடைந்த ஆன்மீக அறிவை வெள்ளிய நீலநிறம் கொண்ட தீயினால் உருவகித்து உலகிற்கு உணர்த்துகின்றன. அது ஒரு மரத்திலமர்ந்துள்ள பறவை போன்றது; சந்திரனிலிருந்து ஒழுகும் சோமரசம் குளிப்பாட்டும் சோமா எனும் செடி; அலைகளுடன் கொந்தளிக்கும் கடல்; அபரிமிதமான பலம்கொண்டவனும், தான் செய்யும் காரியங்களில் வெகு சாமர்த்தியமானவனுமான ஒருவன் தனது வாயில் நெருப்பை ஏந்திக்கொண்டு வேகமாகச் செல்வது போன்றதாம். வேறு உவமைகள் இன்னும் தேவையா? பிரமிக்கிறோம்.
ஒரு கோப்பை தேநீரில் சுழலும் உலகம்
காபியைப் பற்றிய சுவைபொங்கும் கட்டுரைகளைப் படித்திருக்கிறோம். ஆனால் நான் காஃபிப்பிரியை அல்ல! தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும், குடும்பமே காஃபிப் பிரியர்களானாலும் எங்கள் பெற்றோர் என்னவோ குழந்தைகளை அவர்களுக்குப் பதினைந்து வயதுவரை போர்ன்விட்டா அல்லது ஓவல்டின் கொடுத்துத்தான் சமர்த்தாக வளர்த்தார்கள். பின் கல்லூரிக்கும் ஹாஸ்டல் எனப்படும் விடுதிகளிலும் தங்கிப்படித்தபோதும்கூட ஏனோ காஃபிமீது “ஒரு கோப்பை தேநீரில் சுழலும் உலகம்”
யசோதராவின் புன்னகை
என்னையறியாமலே அனிச்சையாய் எழுந்த என் முகத்தின் கேள்விக்குறியைக் கண்டுகொண்ட அந்த சுட்டிப்பெண் சொன்னாள்: “ஆன்ட்டி! எனக்கு எட்டு வயசாக இருக்கும்போது எங்கப்பா திடீர்னு வீட்டை விட்டுப்போய் சன்யாசம் வாங்கிண்டுட்டார். என் தங்கைக்கு அப்போ ஆறு வயசு. அவர் இப்போ எங்கே என்று யாருக்கும் தெரியாது.”
வங்க இலக்கியத்தின் சிலமுகங்கள்
எந்த மொழியிலும் இலக்கியத்திற்குப் பலமுகங்கள் உண்டு. வங்க இலக்கியமும் இதற்கு விலக்கல்ல. ஒரு நாகரிகத்தை, கலாச்சாரத்தை, அதன் சரித்திரத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், அந்த மொழியிலுள்ள இலக்கியங்கள் என்றென்றும் அதற்குத் துணைநிற்கும். எத்தனை மொழிகள் நமது இத்தேசத்தில், எத்தனை அரிய எழுத்துக்கள், அற்புதமான படைப்பாளிகள், நேற்றும், இன்றும், நாளையும் “வங்க இலக்கியத்தின் சிலமுகங்கள்”
சாவித்ரி- ஓர் இசை
ராகம் சாவித்ரி, ஓர் அதிசயமான அபூர்வ ராகம்…. அதன் மாயமான ராக அலைகள் இழையிழையாக வேகத்துடனும், உறுதியுடனும் பெருகிப் பிரவகிக்கும்போது, நாம் காண்பது சூரிய பகவானால் ஆசிர்வதிக்கப்பட்ட இளம்குழந்தை சாவித்ரியை; அவள் யாகத்தீயினின்று வெளிப்படும்போது, உலகின் அனைத்து நற்குணங்களும் பொருந்திய ஒரு முழுமையான சிறு பெண் வடிவத்தை உணர்ந்து மெய்சிலிர்க்கிறோம். சாவித்ரியின் சுஸ்வரங்கள் உள்ளத்தை நிறைக்கின்றன. குழந்தை குதூகலமாக வளர்கிறாள்.
ஆற்றுப்படுத்தல்!
எவ்வாறு முருகப்பெருமானை வணங்குவது என இறையருள் பெற்ற ஒருவன் மற்றொருவனுக்குச் சொன்னான்: ‘இன்னிசை முழங்க வெறியாட்டயர்ந்து, அந்த வெறியாடிய களத்தில் ஆரவாரமாகப்பாடி, வாயில்வைத்துக் கொம்புகளை ஊதி முழக்கி, முருகப்பெருமானின் பிணிமுகம் எனும் யானையை வாழ்த்தி வணங்குவர்.
கறங்குமணி நெடுந்தேர் வரும்!
கருப்பொருளும் மயங்கி அமைய இயலும் என்பர். அவ்வத்திணைகளுக்குரிய கருப்பொருள்கள் அந்தந்தத் திணைகளுக்கே உரியதாக அமையின் சிறப்பாக இருக்கும்; அவ்வாறு அமையாவிடினும், அவை அமைந்த நிலத்திற்குரியனவாகவே கருதப்பட வேண்டும் என்பது நியதி. ஒரு நிலத்திற்கே உரியதான பூக்கள் மற்ற நிலங்களிலும் பூக்க வாய்ப்புண்டு. நெய்தற்பூ மருத நிலத்திலும் பூக்கலாம்; குறிஞ்சிக்குரிய பறவை வேறுநிலத்திலும் பறக்கலாம். இவ்வாறு வரும்பொழுது அந்தந்தப் பூவையும் பறவையையும் அவை உள்ள வேறுநிலங்களுடன் பொருத்திப் பொருள்உணர்ந்து கொள்ளவேண்டும். காலமும் அவ்வாறே; குறிஞ்சி நிலப்பொழுதான யாமம் என்னும் சிறு பொழுதும் முல்லை நிலத்தின் பெரும் பொழுதான கார்காலமும் மற்ற நிலங்களிலும் வரும் வாய்ப்புகள் உள்ளன! இது தான் திணை மயக்கம் எனப்படும்.
தோள்வலி வீரமே பாடிப்பற!
பெரியாழ்வார் தமது நான்காம் பத்தில், குழந்தைகளுக்குப் பெயர்வைப்பது சம்பந்தமான ஒரு கருத்தினை வெளியிடுகிறார். .. .. .. ‘காசுக்கும் துணிக்கும் ஆசைப்பட்டு கண்டகண்ட பொருளற்ற பெயர்களைப் பிள்ளைகளுக்கு வைக்காதீர்கள். கேசவன் எனும் அந்த இறைவனின் பெயரை இடுங்கள். .. .. .. ‘அழிகின்ற மனிதனுக்கு, சிவந்த கண்களையுடைய திருமாலின் என்றுமே அழியாத பெயரான ஸ்ரீதரன் எனும் பெயரை இட்டு மகிழுங்கள். .. .. .. ‘மண்ணாகப் போகும் மனிதனுக்கு கருமுகில் வண்ணனின் நாமத்தை வைத்து அழைத்தால் நல்லது,’ எனவெல்லாம் கூறுகிறார்.
கானமழை பொழிகின்றான்…
வாசிப்பில் ஆழ்ந்தவனின் சிவந்தகண்கள் தன் இசையில் இணைந்து இயைந்து மயங்கிக் கிறங்கிக் கோணி எங்கோ நோக்குகின்றன; சிவந்தவாய் குழலை ஊதுவதற்காகக் காற்றை உறிஞ்சுகிறது; புருவங்கள் வளைந்து காண்கின்றன. அவற்றில் வாசிப்பின் மும்முரத்தால் சிறுவியர்வை படர்ந்திருக்கிறது. இப்படி ஒரு குழலூதுபவனைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இத்துணை மும்முரமாக ஒருவன் குழல் இசைத்தால் என்னவாகும்? பிரபஞ்சமே தன் சுழற்சியை மறந்துநிற்கும். பறவைகள் குஞ்சுகளுக்கு உணவளிப்பதனையும் மறந்து, தமது கூடுகளைத்துறந்து வந்து காட்டில் பரவிக்கிடக்கின்றன. மேய்ச்சலுக்கு வந்த மாடுகள் தமது கால்களைப்பரப்பிக் கொண்டும், தலையைத் தாழ்த்திக்கொண்டும் காதுகளைக்கூட அசைக்காமல் அந்த இசையைக் கேட்டபடிக்கு நின்றனவாம்.
கோவர்த்தனமென்னும் கொற்றக்குடை
‘தேனினும் இனிய சொற்களால் நீ உன் தந்தையிடம் கூறினாய்: “இந்திரன்தான் இதற்குக் காரணம் என்பது உண்மையல்ல; அனைத்தும் விதிவசமே! மழைபெய்வதும் மனிதர்களின் அதிர்ஷ்டத்தினால்தான். காட்டுமரங்கள் தங்கள் வளர்ச்சிக்காக இந்திரனைப் பூசை செய்கின்றனவா என்ன?” என்று கேட்டாய். “மாடுகள் ஆயர்களான நமது செல்வம். அவற்றை நன்கு பராமரிக்க வேண்டும். ஆனால் இந்த கோவர்த்தனமலையல்லவா அவைகளுக்கு நல்ல புல்லையும் நீரையும் அளிக்கிறது? பூமியில் வாழும் நல்ல புனிதமான மனிதர்களே பூசைக்கு உகந்தவர்கள்; இந்திரன் போன்ற தேவர்களல்ல,” என்றாய் நீ கிருஷ்ணா!
பவளவாய் முறுவல் காண்போம்
நாரயணீயத்தை இயற்றிய நாராயண பட்டத்ரி, உபநிடதங்களே கோபகன்னிகைகளின் வடிவில் கிருஷ்ணனைச் சூழ்ந்து நிற்கின்றன எனக்கூறுகிறார். ‘அக்ரே பச்யாமி,’ எனத்துவங்கும் நாரயணீயத்தின் கடைசி தசகம். … குழந்தைகள் பாலப்பருவத்திலிருந்து யௌவனப்பருவத்தில் அடியெடுத்து வைக்கும்போது அலாதிஅழகு படைத்தவர்களாகக் காணப்படுவர். குழந்தை கிருஷ்ணனும் அதற்கு விதிவிலக்கில்லை! இந்தப்புதிய எழில் தோற்றத்தை ‘ஆர்த்ர யௌவனவனம்’- புதியதான இளமை எழில் எனப்போற்றுகிறார். ‘அது மன்மதனை வெல்லக்கூடிய அழகுடையது; மேகக்கூட்டங்களின் தொகுப்பு போன்றது; பிருந்தாவனப் பெண்களிடத்தில் அன்புபூண்டு விளங்குவது; ஆபரணங்களை அணிந்து புன்முறுவல்கொண்ட தாமரைபோன்ற முகத்தையுடையது; கோவைப்பழம்போன்ற உதட்டை உடையது; அதனை நான் வணங்குகிறேன்,’ என்கிறார்.
கன்றின்பின் போக்கினேன் எல்லே பாவமே!
‘மைபோல நிறம்கொண்டவன் என் பிள்ளை. இந்த ஆயர்குலத்துக்கே அவன் கொழுந்தாக விளங்குபவன். அவனை அழகாக நீராட்டி, அவன் விருப்பப்படி வீடுவீடாகச் சென்று குறும்புகள்செய்து விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருக்க எனக்கு ஆகவில்லையோ? கம்சனை அழித்த வீரக்கழல் அணிந்த அந்தத் திருவடிகள் நடந்து நடந்து வலிக்குமே! மாடுகளை ஓட்டி ஓட்டிக் களைத்திடுமே! இவ்வாறு சிறிதும் சிந்தியாமல் அவனை கன்றுகாலிகள் பின் அவன் கெஞ்சினான் என்று அனுப்பிவிட்டேனே! ஏன்தான் இப்படிச் செய்தேனோ? சிறுகுழந்தையை இவ்வாறு அனுப்பியது நான் செய்த பாவமே,’ என மனம்பதைக்கிறாள் அவள். கம்சனை அழித்த செயல் ஆய்ப்பாடியினின்று கண்ணன் சென்றபிறகே நிகழ்ந்தது. யசோதைக்கு இப்போது இதனைப்பற்றித் தெரிந்திருக்க வழியில்லை. பெரியாழ்வாரின் ஆர்வத்தில் எழுந்த பாடல்கள் இவை; அவ்வாறே படித்துப் பொருள்கொள்ள வேண்டும்
அப்பா! உன்னை அறிந்துகொண்டேன்
தன் சின்னக்குழந்தையை வாசனைத்தைலத்தைப் பூசி, நறுமணப்பொடியால் தேய்த்து நீராட்டினாள் யசோதை; அவனுடைய பசியால் குழைந்த வயிறுநிரம்பப் பாலையும் ஊட்டிவிட்டுத் தொட்டிலில் கண்வளர்த்தினாள்; குடத்தை எடுத்துக்கொண்டாள்; பக்கத்து மனைப்பெண்டிருடன் யமுனைநதியில் போய் நீராடிவரலாம் என்று சென்றுவிட்டாள். வெகுநேரம் ஒன்றும் ஆகவில்லை; அவள் திரும்பிவந்து பார்த்தபோது, பாரம் மிகுந்த வண்டி ஒன்றினை முறியுமாறு- சகடாசுரனை- கால்களால் உதைத்துக் கொன்றிருக்கிறான் இக்குழந்தை. இதென்ன, சின்னக்குழந்தை செய்யக்கூடிய செயலா? விக்கித்து நிற்கிறாள் யசோதை. அக்கம்பக்கத்தவர்களின் வியப்பொலிகளும், மகிழ்ச்சியும் ஆச்சரியமும் தோய்ந்த கூக்குரல்களும் அவள் உள்ளத்தில் எழுச்சியையும், இனமறியாத பயத்தையும் எழுப்பிவிட, ‘அட! இவன் தெய்வாம்சம் பொருந்தியவன்,’ என்று புளகாங்கிதம் கொண்ட நினைப்பினூடேயும், ‘நல்லவேளை! குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லையே!’ எனும் தாய்ப்பாசம்தான் தலைதூக்குகின்றது. ‘என் கண்ணா! தெய்வமே!’ என உடனடியாகக் குழந்தையை -தன் நெஞ்சில் வைத்துக் காப்பாற்றுவதுபோல- வாரியணைத்துக்கொண்டு விசும்பச் செய்கிறது!
கோபியர் கொஞ்சும் சல்லாபன்
தாழ்மையும் பணிவுமே அனைவருக்கும் முக்கியமான பெருங்குணம் என உணர்த்த கிருஷ்ணன் செய்த விளையாட்டு இது என்பர் பெரியோர். கிருஷ்ணன் காளியன்தலைமீது நடனமாடி அவனை அடக்கியதும், கழுதை உருவில் வந்த அசுரனைக்கொன்றதும் இந்தப்பெண்கள் எல்லாம் கண்டும் கேட்டும் நடந்த நிகழ்வுகள்தாம். அவன் அசகாயசூரன் என்பதில் அவர்களுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் நிலைக்கு இறங்கிவந்து அவன் ஆடியும்பாடியும் விளையாடிக்களித்ததால், அவனிடம் அளவுக்குமீறி உரிமை எடுத்துக்கொண்டு என்னவேண்டுமாயினும் செய்யலாம் என எண்ணிவிட்டார்கள். அதனால்தான் அவர்களுக்குக் கிருஷ்ணன் ஒருபாடம் கற்பிக்க முயன்றான்
அசோதை நங்காய்! உன் மகனைக் கூவாய்!
யசோதையின் கூற்றாகத் திருவெள்ளறையில் உறையும் பிரானைப்பாடுகிறார் பெரியாழ்வார். ‘சந்திரன் மாளிகைசேரும் சதுரர்கள் வெள்ளறை,’ என்றும், ‘மதிள்திரு வெள்ளறை’ என்றும், ‘முப்போதும் வானவர் ஏத்தும் முனிவர்கள் வெள்ளறை,’ என்றும் அவ்வூரைப் புகழ்கிறார். …“காடுகளிலிருந்து நாவல்பழங்களைக் கொண்டுவந்து விற்ற ஒருபெண்ணிடம் அவ்வளைகளைக் கொடுத்து அவற்றிற்குப் பதிலாக நாவல்பழங்களை வாங்கித்தின்கிறான். நான் அந்தப்பெண் கையில் என் மகளின் வளைகளைப் பார்த்து, ஏனடா கிருஷ்ணா என் மகளின் வளையைக்கொடுத்தாய் எனக்கேட்டால்…
