- ஸ்ரீ அரவிந்தரின் நெருப்புப் பறவை – ஒரு பார்வை
- ஊர்வசி – அரவிந்தரின் பார்வையில்
- ‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’
- ஊர்வசி காதலில் கண்விழித்தாள்!
- ‘ஊர்வசியின் களிப்பு- புரூரவஸின் சலிப்பு’
- இழப்பினில் அடைந்த காதல் சுவர்க்கம்
- அதிர்ஷ்டம் வாய்ந்த சுவர்க்கத்தின் துரதிர்ஷ்டம்!
- தனிமையின் பிடியில் புரூரவஸ்
- புரூரவஸ் செய்த பாவம் – அழகு, காதல்
- மாறாத பேரானந்தம்
- 5. இரவுநேர யாத்திரிகன்
- 4. தெய்வீகப் பணியாளன்
- 3. சரணடைதல்
- நீ இவ்வாறு இருப்பதனால் / ஏனெனில் நீவிர்
- பிறப்பு எனும் அதிசயம்
- 8. கிருஷ்ணா
ஸ்ரீ அரவிந்தரின் கவிதைகள்- ‘Spiritual Sonnets’
தமிழாக்கம் : மீனாக்ஷி பாலகணேஷ்
ஸ்ரீ அரவிந்தரின் ‘Spiritual Sonnets எனும் எட்டுக்கவிதைகளில் இது இரண்டாவதாகும்.

Because Thou art
Because Thou art All-beauty and All-bliss,
My soul blind and enamoured yearns for Thee;
It bears Thy mystic touch in all that is
And thrills with the burden of that ecstasy.
Behind all eyes I meet Thy secret gaze
And in each voice I hear Thy magic tune:
Thy sweetness hunts my heart through Nature’s ways;
Nowhere it beats now from Thy snare immune.
It loves Thy body in all living things;
Thy joy is there in every leaf and stone:
The moments bring Thee on their fiery wings;
Sight’s endless artistry is Thou alone.
Time voyages with Thee upon its prow,
And all the future’s passionate hope is Thou.
ஏனெனில் நீவிர்
ஏனெனில் நீவிர்தான் அழகனைத்தும் பேரின்பமும்,
எனது பார்வையற்ற மயங்குகின்ற ஆத்மா தங்களுக்காக ஏங்குகிறது;
எல்லாவற்றிலும் அது தங்களுடைய தெய்வத்திறனுடைய தொடுதலை
அடைகிறது
அந்த ஆனந்தப் பரவசத்தின் பாரத்தில் அது கிளர்ச்சியடைகிறது.
அந்த விழிகளின் ஆழத்தில் நான் தங்களுடைய ரகசியப் பார்வையைச்
சந்திக்கிறேன்
ஒவ்வொரு குரலிலும் தங்களுடைய மாயக் குழலோசையையும் (கேட்கிறேன்)
தங்களுடைய இனிமை எனது இதயத்தை இயற்கையின் வழிகளில்
வேட்டையாடுகிறது;
அது இப்போது தங்களது காப்புறுதி அளிக்கும் சோதனையில் இருந்து
துடிப்பதல்ல.
எல்லா உயிரினங்களிலும் அது தங்கள் உடலின் இருப்பை விரும்புகிறது;
தங்களது மகிழ்ச்சி எல்லா இலைகளிலும் கற்களிலும் உள்ளது:
பொழுதுகள் தங்களைத் தமது நெருப்பான சிறகுகளில் கொண்டு வருகின்றன;
பார்வையின் முடிவற்ற வேலைப்பாடு தாங்கள் மட்டுமே.
பொழுது தங்களுடன் படகின் முன்பகுதியில் பயணம் செய்கிறது
எதிர்காலத்தின் உணர்ச்சிமிக்க நம்பிக்கைகள் தாங்களே.
அடடா! வாழ்வை, உயிர்ப்பை, அதில் இறையருளின் இருப்பைப் பளீரெனக் காட்டும் கவிதை. இறைவனைத் தம்மில் உணரும் எவரும் இவ்வாறு தான் அவ்வுணர்வை வெளிப்படுத்துவார்கள் போலும்!
நம்மில் உயிர்க்கும் இறைமையை நாமே நமது உடலைவிட்டுத் தள்ளிநின்று பார்ப்பது போன்ற உணர்வு. உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து ஊற்றெடுக்கும் பொருள் செறிந்த சொல்நயம்!
ரவீந்திரநாத் தாகூரும் (1861- 1941) ஸ்ரீ அரவிந்தரும் (1872- 1950) கிட்டத்தட்ட சமகாலத்தவர்கள். வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள். அடிப்படையில் தேசபக்தி மிகுந்தவர்கள். இறைமையைத் தம்முள் ஆழமாக விதைத்துக் கொண்டு அதன் பின்புலத்தில் செயல்பட்டவர்கள். இருவருடைய எழுத்துக்களும் எவ்வாறு ஒருவரை ஒருவர் பாதித்தன, என நாம் அறிவதற்கில்லை. ஒருவர் எழுத்தை மற்றவர் படித்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதன் ஒற்றுமை கண்டு நம் உள்ளம் சிலிர்த்து உவகையில் ஆழ்கிறது.
இதன் அதிசயமான ஒற்றுமையைக் காண தாகூரின் கவிதைகளைக் காணலாம்.
From Gitanjali
Life of my life, I shall ever try to keep my body pure, knowing that
thy living touch is upon all my limbs.
I shall ever try to keep all untruths out from my thoughts, knowing that
thou art that truth which has kindled the light of reason in my mind.
I shall ever try to drive all evils away from my heart and keep my love
in flower,
knowing that thou hast thy seat in the inmost shrine of my heart.
And it shall be my endeavour to reveal thee in my actions,
knowing it is thy power gives me strength to act.
எனது உயிரின் உயிரே!
தங்களது உயிர்ப்பின் உணர்வு எனது எல்லா உறுப்புகளிலும்
இருக்கிறதென்பதனை உணர்ந்தமையால் என் உடலை எப்போதும் புனிதமாக
வைத்திருக்க முயல்வேன்.
தாங்கள் மட்டுமே காரண காரியமான ஒளிவிளக்கினை எனது
உள்ளத்தில் ஏற்றிவைத்த உண்மை என நான் அறிந்ததனால் எப்போதும்
பொய்ம்மையை எனது எண்ணங்களினின்றும் விலக்கி வைப்பேன்.
தாங்கள் எனது உள்ளத்தின் ஆழமான கோவிலில் குடியிருப்பதனை
அறிந்திருப்பதனால் எனது இதயத்திலிருந்து கெட்டவைகளைத் துரத்திவிட்டு
எனது அன்பினை மலராக வைத்திருப்பேன்.
தங்களது வலிமையே எனது செய்கைகளுக்கு வலு அளிப்பதனால்,
தங்களை எனது செய்கைகள் அனைத்திலும் வெளிப்படுத்துவதே எனது
குறிக்கோளாக இருக்கும்
எனது உயிரின் உயிரே!
இத்தகைய உடலை, இறைமை நிறைந்த உடலை, உயிரை, எவ்வாறு போற்றுவது, வழிபாட்டுக்குரியதாக மாற்றுவது எனவெல்லாம் சிந்தித்திருக்கிறார்கள் பெரியோர்கள். தாகூர் மேற்கூறிய வழிவகைகள் ஒருவிதம்.
திருமூலர் கூறுவது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எண்ணங்கள். இவற்றை தாகூரோ ஸ்ரீ அரவிந்தரோ படித்திருக்க வாய்ப்பில்லை என எண்ணுகிறேன். ஆனால் காலம் எதுவானாலும் ஆன்றோரின் ஒருமித்த எண்ணங்கள் ஆச்சரியம் விளைவிப்பவை.
உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப்புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே. (திருமந்திரம்)
உள்ளம் கோவிலாக, உடலே ஆலயமாக, நமது சீவன் எனப்படும் உயிரே சிவனாகக் கொண்டால் புலன்கள் ஐந்தும் மணிவிளக்குகளாக விளங்கும். ‘கள்ளப் புலன்கள்’ என்றது அவை நம்மைப் பல திசைகளிலும் இழுப்பதனால்தான்!
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோவில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே. (திருமந்திரம் 725)
உடம்பினை வெறும் சதைப்பிண்டம், ஊத்தைச் சடலம், இழுக்கானது எனவெல்லாம் பலர் எண்ணியிருக்கிறார்கள். பாடியும் வைத்திருக்கிறார்கள். இந்த நம் உடம்பினுள் உள்ளக்கோவிலில் இறைவன் இருக்கிறான் எனத் தெளிவு கொண்டால், உடம்பு என்பதனைப் பேணிக் காக்கத் தோன்றும்.
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. (திருமந்திரம் 724)
உடல் அழிந்துவிடின் உயிரும் அழிந்துபடும். பிறகு, மெய்ஞ்ஞானத்தினை (இறைவனை உணர) அடையவும் முடியாது. ஆகவே உடம்பினைக் காப்பாற்றும் வழிமுறைகளை அறிந்து, உடம்பினைக் காப்பாற்றி, அதன்மூலம் உயிரையும் காப்பாற்றி வளர்த்தேன் என்கிறார் திருமூலர்.
மனதுள் எழுந்தருளும் இறைவன் எல்லைகளற்றவன். அவனுக்கு நித்திய ஆராதனைகளை இந்த இயற்கையே என்றென்றும் செய்துவருகிறது. அதைத்தான் பொய்கையாழ்வார்
`வையந் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினன் சொன்மாலை
இடராழி நீங்குவவே என்று’
எனப் பாடினார்.
இந்த உலகமே பெரிய அகல் விளக்கு. உலகில் மூன்றில் ஒரு பங்கான கடலே நெய். அதில் ஏற்றப்பட்ட சுடரே கதிரவன் எனப்படும் சூரியன். இவ்வளவு பெரிய விளக்கில் ஆரத்தியை தினமும் இயற்கை பிரபஞ்ச வடிவான இறைவனுக்குக் காட்டிவருகிறது. இதில் ஒரு நாளும் குறை தோன்றப் போவதேயில்லை. ஆகவே காணும் பொருளில் எல்லாம் கடவுளைக் காணக் கற்றுக்கொண்டுவிட்டால் பிறகு மனிதனுக்கு என்ன குறை?
தெய்வத்தை எங்கும் எதிலும் கண்டு மதிக்கக் கற்றுக் கொண்டால், பின்பு கோவிலும் குளமும் வேண்டாமே! கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல் இதனைத்தான் கூறுகிறது
கோவில் முழுதும் கண்டேன் உயர்
கோபுரம் ஏரி கண்டேன் – தேவாதி தேவனை நான் எங்கும்
தேடியும் கண்டிலனே
உள்ளத்தில் உள்ளானடி – அதை நீ
உணர வேண்டுமடி
உள்ளத்தில் காண்பாயெனில் – கோயில்
உள்ளேயும் காண்பாயடி.
நாளும் பொழுதும், எங்கும் எப்போதும், இப்பிறவி, முன்பிறவி, அடுத்த பிறவி என எதிலும் இறைமை நம்முடனும் நாம் உறவாடும் எல்லாப் பொருள்களுடனும் கலந்து நிற்கிறது. இதனைத்தான் ஸ்ரீ அரவிந்தரின் கவிதை நமக்கு அறிவிக்கிறது என நான் கருதுகிறேன்.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
