கோவர்த்தனமென்னும் கொற்றக்குடை

‘தேனினும் இனிய சொற்களால் நீ உன் தந்தையிடம் கூறினாய்: “இந்திரன்தான் இதற்குக் காரணம் என்பது உண்மையல்ல; அனைத்தும் விதிவசமே! மழைபெய்வதும் மனிதர்களின் அதிர்ஷ்டத்தினால்தான். காட்டுமரங்கள் தங்கள் வளர்ச்சிக்காக இந்திரனைப் பூசை செய்கின்றனவா என்ன?” என்று கேட்டாய். “மாடுகள் ஆயர்களான நமது செல்வம். அவற்றை நன்கு பராமரிக்க வேண்டும். ஆனால் இந்த கோவர்த்தனமலையல்லவா அவைகளுக்கு நல்ல புல்லையும் நீரையும் அளிக்கிறது? பூமியில் வாழும் நல்ல புனிதமான மனிதர்களே பூசைக்கு உகந்தவர்கள்; இந்திரன் போன்ற தேவர்களல்ல,” என்றாய் நீ கிருஷ்ணா!