இழப்பினில் அடைந்த காதல் சுவர்க்கம்

காளிதாசனின் ‘விக்ரமோர்வசீயம்’ நாடகமானதால் நாடகத்தின் அவசியம் கருதி பல பாத்திரங்கள் இதில் படைக்கப்பட்டுள்ளனர். பலபேர் உள்ள மேடை ஒன்றுதான்  சுவாரசியமானதாக இருக்கும் அல்லவா? மன்னன் புரூரவஸுடன் ஒரு விதூஷகன் –  ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் உள்ளதுபோல ஒரு Jester.  அரசிக்கு ஒரு தோழி. யாரிடமாவது இவர்கள் (பாத்திரங்கள்) உரையாடினால்தானே இவர்கள் “இழப்பினில் அடைந்த காதல் சுவர்க்கம்”

‘ஊர்வசியின் களிப்பு- புரூரவஸின் சலிப்பு’

இரு காதலர்களின் பிரிவு அவர்கள் உள்ளங்களிலும் வாழ்விலும் ஏற்படுத்தும் வெறுமை, தனிமை, வாழ்க்கையின் மீதான வெறுப்பு, சலிப்பு, பற்றின்மை என அனைத்தும் இத்தனை நுட்பமாக, பொறுமையாக வேறெந்தக் கவிஞனாலும் விவரிக்கப்பட்டுள்ளதா என நான் அறியேன். முன்பே கூறியபடி, கம்பன் அழகாக சீதை, இராமன் இவர்களின் தாபத்தையும், சேக்கிழார் பெருமான்