யௌகந்தராயன் என்ற அந்த மந்திரி அந்தணர் வேஷத்தில் இருந்தவர் அருகில் வந்தார். வாஸவதத்தாவும் திகைப்புடனே அவரை பார்த்தாள். ராஜ குமாரியின் அருகில் சென்றவர், தேவி! தாங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். கஞ்சுகி அருகில் வந்தவள், ஓ நீங்கள் புதியவரா, சற்று முன் வந்தீர்களே என்றாள். பத்மாவதியும் மரியாதையுடன் ஐயா, சொல்லுங்கள். நானே எதுவானாலும் தருவதாக வாக்களித்து விட்டு மறுப்பேனா, தயங்காமல் சொல்லுங்கள், என்றாள்.
Category: இலக்கியம்
ஹர்ஷ சரிதம் -இரண்டாம் பாகம்
ஒரு பக்கம் மல்லிகை போன்ற மணம் வீசும் மலர்கள் குவித்து வைக்கப் பட்ட கடை வீதிகள். மறுபக்கம் அதைப் போல அட்டகாசமாக சிரிக்கும் சத்தம். மல்லிகை மலரின் வெண்மையும் அட்டகாசமான சிரிப்பும் வெண்மையாக வர்ணிக்கப் படுகிறது. கடைகள்-அட்டா எனப்படும். சிரிப்பும், மலரின் இதழ் விரிதலும் ஹாஸம் என்ற சொல்லால் வர்ணிக்கிறார். தவிர மகாகாலன் என்ற தேவன் சிவ பெருமான் உள்ள இடம். கல்பம் முடிந்து பிரளயம் வரும் காலத்தில் மகா கால அட்ட ஹாஸமாக சிரித்து உலகை சம்ஹரதே – சம்ஹாரம் செய்கிறார்
“அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள் – 4
சக்கரவர்த்தி அதிரியனுக்கு எப்போதுமே அனைத்தையும் தெரிந்துகொள்வதில் பொதுவாகவே ஆர்வமுண்டு. அத்தகைய மன்னரைப்பற்றிய துல்லியமான செய்திகளையும்; போர் மற்றும் அமைதி விவகாரங்களில் அவர் காட்டிய ஆர்வத்தையும்; செதுக்கப்படும் சிலைகள், அவற்றின் மூலத்துடன் ஒத்திருக்கவேண்டுமென்கிற அவருடைய இரசனை குறித்தும்; அக்காலத்திய கவிதைகள் மற்றும் கட்டுக்கதைகளில் மன்னர் காட்டிய ஈடுபாடுபற்றியும் அறிவதற்கு, வேறு ஆவணங்கள் இல்லாத நிலையில், கருங்கடல் பயணம் சார்ந்து பேரரசர் அதிரியனுக்கு, அர்ரியன் எழுதிய கடிதங்கள் நமக்கு உதவுகின்றன
ஸ்வப்ன வாசவ தத்தா – 4
எங்கள் வத்ஸ ராஜன் பிரசித்தமான ராஜ குலத்தில் வந்தவன். ராஜ தர்மம் அறிந்தவன். யுவதியான ஏதோ ஒரு பெண்ணை மாணவியாக ஏற்று, பின் அவளை பாணிக்ரஹணம் செய்து கொண்டால் அபவாதம் வரும் என்று அறியாதவரா? பாரத வம்சத்தினன். தான் மணமகளாக கை பிடித்த பெண்ணிடம் விசுவாசமாக இருக்கும் தீர புருஷன்.
ஹர்ஷ சரித்திரம்- 2
ஆபரணங்களின் ஒளி கண்களைக் கூசச் செய்ய, நடுவில் ஒரு இள வயது வீரன், மாலதி மலர்களால் ஆன மாலை இடை வரை தொங்க, உலகையே வெற்றி கொள்ளும் முக பாவனையோடு அமர்ந்த்திருந்தான். அணிந்திருந்த பொற் சங்கிலியில் பதிக்கப் பட்டிருந்த சிவந்த மாணிக்கம் தூசியினால் மறைக்கப் பட்ட அவன் முகத்தை தெளிவாக காட்டியது. வன தேவதையில் கையில் பல வண்ண மலர்கள் இருப்பது போல அவன் உடலில் பத்ம ராக, வெண்ணிற மணிகள் அலங்காரமாக பதிக்கப் பட்ட ஆடை.
ஸ்வப்ன வாசவ தத்தா – 3
சகே, ருமன்வான், வாசவதத்தா இல்லாமல் அரசர் கௌசாம்பி வர மாட்டார். இந்த வேஷம் இருக்கட்டும். நாம் சாதாரண பிரஜைகள். அரசரிடம் கொண்ட அபிமானத்தால் யோசிக்கிறோம். புல் படுக்கையில் படுப்பவன் அரச போகங்களை உயர் தர சயனாசனங்களை நினைத்து பார்க்க கூட முடியுமா? அரசனுக்குரிய பட்டு ஆடைகளை, விரிப்புகளை எண்ணித் தான் பார்ப்பானா? நம் வரையில் திட்டமிட்டோம். ஸ்வாமி ஜாதி- செல்வந்தர்கள் வழி. சிறைக்குள் இருப்பவனுக்கு மோகம் வரச் செய்வதில் கந்தர்ப்பனுக்கு என்ன ஆனந்தம் ?
பழிவாங்கும் தீ – அம்பை
அந்த மாலையுடன் வலிமை மிகுந்த பல அரசர்களிடம் சென்று பீஷ்மரை தோற்கடிக்க உதவிக் கோரினாள். ஆனால் பீஷ்மரை பகைத்துக் கொள்ள எவரும் விரும்பாததால் அனைவரும் மறுத்துவிட, அம்பை துருபதனிடம் சென்றாள். துருபதனும் மறுத்துவிட, அவனின் அரண்மனை வாசலில் தாமரை மாலையை தொங்கவிட்டு காட்டுக்கு சென்றாள் அம்பை. அங்கே இருந்த சில முனிவர்கள் அவளை பரசுராமரை அணுகுமாறு கூற, பரசுராமரிடம் சென்றாள்
வாசகர் கடிதம்
கதை காட்சிகளாகவே நகர்வது வாசகனை வெள்ளையம்மாளின் உலகத்துக்குள் பிரவேசிக்கச் செய்ய எளிதாகவும், ஏதுவாகவும் இருக்கிறது. நிறைய நுண் தகவல். அந்த வட்டாரத்துக்கே உரித்தான தகவல்கள் கதைக்கு வலு சேர்க்கின்றன (குச்சிக் கிழங்கு விளைச்சல், மம்பட்டியும் காரைச்சட்டியும் கொண்டு செய்யும் சித்தாள் வேலை, புலியூர் கடவீதிக் காட்சிகள்). அவள் ஐஸ்கிரீமை சாப்பிடுவாளா? எப்படிச் சாப்பிடுவாள்? என்ற எளிமையான சுவாரசியத்தைத் தூண்டவும் கதை தவறவில்லை
வக்கீலின் கடிதம்
அக்கம்பக்கத்தில் கரும்புத் தோட்டம் இருப்பதால் சிராஜ்ஜித்தௌலா சண்டையிட்ட யுத்தகளம் இப்பொழுது காடுமேடாகிக் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. அந்த மாம்பழத் தோட்டமும் இல்லை. இருந்தாலும் பலாஷி என்ற பெயர் மிகவும் சரித்திரப் புகழ் பெற்று விட்டது. ஸ்டேஷனுக்கு அருகே இந்த மீராபஜாரும் அந்தப் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது. கல்கத்தாவிற்கு நான்கு மணி நேர வழி லாங்கோலா பாசஞ்சரில். கேஷ்டநகர் போகாமல் நல்ல பொருள் கிடைப்பது மிகவும் கஷ்டம்.
எம்.டி.வாசுதேவன் நாயர் – அஞ்சலி
வீழ்ச்சியடைந்த தரவாடுகளின் கதைசொல்லி என்று சொல்லப்படும் எம்.டி.யின் முதல் நாவலான “நாலுகெட்டு” 1958ல் கேரள சாகித்ய அகாடமி விருது பெற்றது. மருமக்கத்தாயத்தின் சிதைவை விவரிக்கும் கதை அது. கேரளத்தின் வள்ளுவநாட்டுப்பகுதியில் ஒரு பழமையான நாயர் தறவாட்டு குடும்பத்தில் தந்தையின்றி வளரும் அப்புண்ணியையும், வயதான நம்பூதிரிக்கு வாழ்க்கைப்பட்டு அந்த நாலுகட்டு வீட்டில் வாழ வரும் யசோதராவையும் பற்றிய நாவல்
ஒர் எழுத்தாளனின் தர்மமும், கர்மமும், இருப்பும்
கேரள வள்ளுவ நாட்டிலும், நிளா நதிக்கரையிலும் உலவிய மனிதர்களே அவரது அனைத்துப் படைப்புகளிலும் கதைமாந்தர். ஒரு கதையையோ அல்லது அதன் மாந்தரையோ வேறெங்கும் தேடவேண்டிய அவசியம் அவருக்கு இருந்ததில்லை. ஒருகூட்டுக்குடும்பத்தில் அன்னையரின் வளர்ப்பில் வளர்ந்த எம்டி, நலிந்த நடுத்தரக்குடும்பங்களின் ஆண்கள் வழியறியாது தவித்து நின்றபோது தைரியமாக நின்று சவால்களை எதிர்கொண்ட பெண்களைக் கண்டும் அவர்களின் கதைகளை அறிந்துமிருந்தார்.
உள்ளம் தாங்கா வெள்ளம்
உவமைகள் அந்த தீவிரத்தை உணர்த்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. மலர்களும் பருவகாலங்களும் மனதை உணர்த்த கையாளப்படுகின்றன.இந்தப்பாடல்களில் ஒருசில பாடல்களைத் தவிர பெரும்பான்மை பாடல்கள் தலைவி தோழி கூற்றாக வருபவை. இல்லத்திற்குள் இருந்து பாடும் பாடல்கள். சங்கப்பாடல்கள் நிகழ்த்து கலைக்காக எழுதப்பட்ட பாடல்கள் என்ற கருத்தும் உண்டு. எப்படியெனினும் வாழ்வின் சாரத்தை கைக்கொண்ட பாடல்கள்.
நினைவோடையின் படிமம் – ஜெயந்த மஹாபாத்ரா
வறுமையில் தவிக்கும் தகப்பன் தன் சொந்த பெண்ணையே விற்பதற்கு தள்ளப்பட்ட நிலைமையை விளக்க “வெறும் நுரையைத்தான் சுரண்டியது அவன் பழைய வலை” என்பதிலும் பனங்கீற்று குடுசையில் காற்று நுழைவதுபோல அந்த குடுசைக்குள் பல பேர் நுழைந்திருக்கிறார்கள் என்பதிலும் ஜெயந்தாவின் மெல்லிய உணர்ச்சி பார்வை வெளிவருகிறது
பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்- 1
பாணருடைய படைப்புகள் நீள நீளமான சம்ஸ்க்ருத கூட்டு எழுத்துக்களால் ஆன வசன நடை. காதம்பரியில் எளிய சொற்களை பயன்படுத்திய பாண கவி, இந்த ஹர்ஷ சரித்திரத்தில் பத பிரயோகங்களும், வசனங்களுமாக கடினமான வாசிப்பு அனுபவத்தை தருகிறார். பதங்களைப் பிரித்தபின் திரும்ப படித்தால் தான் பொருளே புரியும், மற்ற மூன்று நாடகங்கள் பிரசித்தமானவை. ரத்னாவளி, நாகாநந்தா மற்றும் பிரிய தர்சிகா. அவர் காலத்தில் ஹிந்து மதமும், பௌத்தமும் தழைத்திருந்தன என்று அறிகிறோம்.
5. இரவுநேர யாத்திரிகன்
இறப்பைத் தன் காதலியாகக் கண்டு, அவளுடனான சந்திப்பிற்குத் தயாராவதனை வியக்கத்தக்க நுட்பங்களுடன் எழுத்தில் வடித்துள்ளார். இரவு என அவர் கூறுவது வாழ்க்கையின் இறுதியில் நாம் செல்லும் இடம். அதனை எவ்வாறு தைரியமாக எதிர்கொள்வது என அழகாக உண்மையான விளக்கங்களை அளிப்பது இக்கவிதை.
கவி பாஸன் எழுதிய ஸ்வப்ன வாசவ தத்தா – 2
என் மகளை பெண் கேட்டு வரும் இந்த அரசர்கள் காலில் விழுந்து வணங்க கூட தயாராக இருக்கிறார்கள். ஏனோ அதில் என் மனம் மகிழ்வதில்லை. வத்ஸராஜன் வருவதைத் தான் எதிர் நோக்கி இருக்கிறேன். குணவான், யானைகளின் பரி பாஷை அறிந்தவன், அறிவுள்ளவன். அவன் தான் எனக்கு மருமகனாக ஆக தகுதியுடையவன்.
சிற்றின்பம் மற்றும் உணர்திறன்
விரைவிலேயே முதுமை அடைந்த யயாதி, தொடர்ந்து ஆட்சி செய்தான், இருந்தாலும் அவனது உணர்வுகளை அவனால் கட்டுப்படுத்த இயலவில்லை. எனவே அவனது ஐந்து மகன்களை அழைத்து ஒவ்வொருவரிடமும் தனது முதுமையை பெற்றுக் கொள்ள கூறினான். மேலும் அதற்கு ஈடாக அவன் முதுமையை ஏற்போரை அரசனாக்குவதாகக் கூறினான். அனைவரும் அதற்கு மறுத்துவிட, அவனின் இளைய மகன் புரு , தந்தையின் முதுமையை ஏற்றுக் கொள்வதாகக் கூறினான்
மனசாட்சி ஒரு காட்டு விலங்கு
ஒரு சிறுகதைக்குள் மூன்று பாத்திரங்கள் முழுமையாகவும், அவற்றின் அகக் கொந்தளிப்புகளோடும் சித்தரிக்கப்பட்டிருப்பது உங்கள் எழுத்தின் தேர்ச்சியைக் காட்டுகிறது. உங்கள் கதை சொல்லும் விதம் கதையை அழகாகக் காட்சிப்படுத்தியிருந்தது. வாசித்தேன் என்று சொல்வதை விட கதையைக் கண்டேன் என்றே சொல்லலாம். அந்த அளவு கதை சொல்லல் உங்களுக்கு சரளமாகக் கைவந்திருக்கிறது.
கவிஞர் பாசனின் ஸ்வப்ன வாசவதத்தா – 1
ஸ்வப்ன வாஸவ தத்தா என்ற இந்த நாடகம், அந்த சமயத்தில் பிரபலமாக இருந்த ஒரு கதையின் அடிப்படையில் எழுதப் பட்டது என்று அறிகிறோம். உதயனன், பத்மாவதி என்ற இருவரின் கதை இது. அவர்களின் சந்திப்பும், வாழ்க்கையுமே கதையின் அடிப்படை. வத்ஸ என்ற ப்ரதேசத்து ராஜா உதயனன். அவன் மனவி வாஸவதத்தா. யௌகந்தராயன் என்ற மந்திரி. இந்த நூலுக்கு முன்னோடியாக யௌகந்தராயன் என்ற பெயரில் ஒரு நாடகம் இந்த கவியே எழுதியுள்ளார்
குமார சம்பவம் மஹா காவ்யம்- 17
அசுர சக்ரவர்த்தி ஆத்திரத்தில் மதியிழந்தவனாக, ரதத்திலிருந்து இறங்கி த்ரிபுராரி மகனையே, கார்திகேயனையே குறி வைத்து அடிக்கும் எண்ணத்துடன் பயங்கரமான ஆயுதம் ஏந்தி அவர் இருந்த திக்கில் ஓடினான். தன்னை நோக்கி வேகமாக ஓடி வருபவனை ஈசன் மகன், கார்த்திகேயன் தூரத்திலிருந்தே பார்த்து, அவன் புஜ பலத்தையும், கோபத்தால் யுகாந்த அக்னி போல ஜொலித்தவனை , தன் சக்தி ஆயுதத்தை எடுத்துக் கொண்டான்
ஸ்கின்ஷிப் – பகுதி 2
ஆரவாரமாக வந்து நுழைந்தவர், நிலவறையில் மறைந்து போனார் எங்கள் அப்பா. சுமார் ஒரு வாரம் நாங்கள் அவரை அனேகமாகக் காணவில்லை. பகல் பூராவும் உறங்கினார், இரவில் அலைந்து திரிந்தார். என் அம்மா அவருக்குச் சாப்பாட்டை வெளியில் வைத்துப் போகத் துவங்கினார், அதை ப்ளாஸ்டிக் விரிப்பில் மூடி வைத்திருந்தார். எங்கள் அப்பா எப்படி இருக்கிறார் என்று பார்க்க அவள் நிலவறைக்குள் போவதை நான் பார்க்கவில்லை
4. தெய்வீகப் பணியாளன்
பல திக்குகளிலிருந்தும் எதிர்பாராமல் வரும் சவால்களை சந்தித்து வாழ்வதற்கு மனிதப் பிரயத்தனத்தால் இயலாது. எந்த மானுட சக்தியுமே இதனை எதிர்கொள்ளும் வலுவற்றது. ஆத்மாவின் நிரந்தரமான மகிழ்ச்சி தெய்வத்தின் புன்னகை ஒன்றினாலேயே கிடைப்பது. அது அனைவரையும் இன்பம் கொள்ளச்செய்தும் உண்மையின் வடிவாகவும் திகழ்கிறது.
நற்றிணை
எல்லாமும் அறிந்தது நிலவு தான்.பகல் விட இரவுக்கு ஆயிரம் கண்கள். அந்தக் கண்களின் ஒளியாக இரு்பது நிலவு மட்டுமே.நிலவு நினைத்தால் தனக்கு உதவ முடியும்.எல்லா ரகசியங்களையும் அறிந்த , மாண்பும் சான்றாண்மையும் கொண்ட நிலவு மட்டுமே தனக்கு உதவ இயலும் என்ற முடிவுக்கு வந்து விட்டாள் அவள். அவன் வரக் காலம் தாழ்ந்ததென இவ்வளவு காலம் ஆற்றியிருந்தாள்.ஆனால் ,நாட்கள் மணல் மேட்டில் சரியும் மணலாய் உதிர உதிர,அவளுக்கு இப்போது தன் காதலன் காலம் தாழ்த்தவில்லை,
ஸ்கின்ஷிப் – பகுதி 1
ஒரு தடவை எங்கள் அப்பா, அம்மாவுக்கென்று எதையோ தன் கைகளில் மறைத்து எடுத்துக் கொண்டு வந்தார். ஒரு கருப்பு வெல்வெட் நகைப் பெட்டி. சி-ஓவும் நானும் அதை அவர் தட்டித் திறந்த போது பார்ப்பதற்கு அழைக்கப்பட்டோம், அதில் தங்கத்தில் பதிக்கப்பட்ட சிறிய வைரக்கற்கள் இருந்த காதுக் கம்மல்கள் இருந்தன
பசிப்புலவர்கள் (Hungryalist Generation) – வங்காள இலக்கிய இயக்கம்
பசிப் புலவர்கள் இயக்கம் அமெரிக்க பீட் இயக்கத்தின் ப்ரபாவத்தில் உருவானது என்பது ஒரு பரவலான கருத்து. பீட் இயக்கத்தின் குரு என கருதப்படும் அலன் கின்ஸ்பேர்க் (Allen Ginsberg) கல்கத்தாவுக்கு 1962 ல் வந்து பசிப் புலவர்கள் இயக்கத்தினருடன் உரையாடல்களில் ஈடுபட்டார். சுமார் பதினான்கு மாதங்கள் இந்தியாவில் வசித்த அலன் பசிப் புலவர்களின் படைப்புக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அமேரிக்காவில் வெளியிட உதவினார்.
குமார சம்பவம் மஹா காவ்யம்- 16
நேருக்கு நேர் நின்று போரிட்டவர்கள் எதிரில் நிற்பவரின் கம்பீரமான ஆக்ருதியையும் ஆற்றலையும் உணர்ந்து சிலர் மூர்ச்சையானர்கள். சிலர் எதிர்த்து நின்றனர், சிலர் தங்கள் வீரமோ, புத்தியோ ஸ்தம்பித்து போக செய்வதறியாது நின்றனர். ஆஹவம்- யுத்தம் – சிலர் மல் யுத்தம் போல யுத்தமும் இவர்களுக்கு விளையாட்டு போலவே மனதுக்கு பிடித்தமானதாக இருக்கவும்,
பெருமழை காலத்துக் குன்றம்
பரத்தை கூற்றாக வரும் ஒரு பாடலில் பரத்தை தலைவியை கேலி செய்கிறாள். தலைவனை தன்னிடம் இருத்திக்கொள்ள முடியாத தலைவியின் உறக்கத்தை, கவனமின்மையை நீர்நாயின் உறக்கத்திற்கு ஒப்பாக கூறுகிறாள். புதுவருவாயை உடைய வளமான மருத நிலத்தின் பொய்கை நிறைந்திருக்கிறது. அங்கு வாளை மீன்கள் தீட்டிய வாள் போல மின்னி விளையாடி நீருக்குள் மறைகிறது. அவற்றை கவனிக்காமல் அதன் கரையில் பசியோடு நீர்நாய் உறங்குகிறது
கணப்பின் ஒளி
விலைச் சீட்டைக் குறி வைத்து நேராகப் போய்ப் பார்த்து, விலையை எப்படி ஏற்றி விட்டிருக்கிறார்கள் என்று சுற்றி இருப்பவர்கள் எல்லாருக்கும் கேட்கும்படி குறை சொல்லிக் கொண்டு தம் தலையை ஆட்டிக் கண்டனம் செய்வதை வழக்கமாகக் கொண்டவர்களும் விலைகளை ஒப்பீட்டில் சோதித்து வாங்குபவருமான சிலரைப் போன்றவர் இல்லை என் அம்மா. விலையைப் பற்றி அவருக்கு அப்படி ஒன்றும் அக்கறை இல்லை. அவரிடம் பணமும் இல்லை, ஆனால் அதை விட ஆழமானது ஒன்று இருந்தது அங்கு. அவர் பொருட்களைப் பார்வையிடுவதை விரும்பிச் செய்தார், ஏனெனில் கடைகளில் தான் இயல்பாக இருப்பதாக அவர் உணர்ந்தார்
குமார சம்பவம் மஹா காவ்யம்- 15
கார்த்திகேயன், எதிரி பலத்தையும் கவனித்துக் கொண்டான். தன் பக்ஷத்து வீரர்களின் பயத்தையும் பார்த்தான். அம்ருதம் பொழியும் தன் கடைக் கண்ணால் அனைவரையும் பார்வையாலேயே வருடி ஆட்கொண்டு பயப்பட வேண்டாம் என்று அபயம் அளித்து, கவலையின்றி யுத்தம் செய்வோம் என்று ஆறுதலாக சொன்னான். அதனால் பெற்ற உத்சாகம், சக்தி தரனான குமாரன் இருக்கிறான் என்ற தைரியமும், போர் செய்ய தூண்டுதலையும் பெற்றனர்.
நீ இவ்வாறு இருப்பதனால் / ஏனெனில் நீவிர்
நம்மில் உயிர்க்கும் இறைமையை நாமே நமது உடலைவிட்டுத் தள்ளிநின்று பார்ப்பது போன்ற உணர்வு. உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து ஊற்றெடுக்கும் பொருள் செறிந்த சொல்நயம்!
நீர்த்துறை படியும் பெருங்களிறு
இந்தப்பாடல்களில் வரும் பெருங்களிறு என்ற படிமத்தையும், தீர்த்தங்காரர்களின் கருணை மற் றும் அகிம்சையை என்மனம் இணைத்துக் கொண்டது . தன் குழுவிற்கான பாதுகாப்பு, வீரம் என்றிருந்து பின் வன்முறையாகி, எடுத்த வாளை வைக்கவிடாது மதம் கொண்ட களிறாக மாறிய இனக்குழுக்கள் தங்களை தாங்களே அழித்துக்கொண்டிருந்த காலத்தில் தீர்த்தங்காரர்கள் தங்கள் கருணையால் அந்த களிரை மெல்ல மெல்ல படிய வைத்திருக்கிறார்கள்.
தேவதைப் பருப்பொருளின் நெசவு
லியோ-எரிக் ஃபு ஹாங்காங்கிலிருந்து வந்திருக்கும் சுதந்திரப் போராட்டக்காரராக இருப்பாரோ என்ற ஐயத்துடன், பாட்ரிக் நிமிர்ந்து அவரைப் பார்க்கிறார். ஒரு கணத்துக்குப் பிறகு, இந்த ஊகச் சிந்தனையைத் தன் புத்திப் பக்கத்திலிருந்து அழித்து விடுகிறார். பெய்ஜிங்கிலிருந்து வருபவர் கூட சுதந்திரப் போராட்டக்காரராக இருக்கக் கூடும். ஒருக்கால் பாட்ரிக்தான் ஜனநாயக மனோபாவம் சிறிதும் இல்லாத மனிதராக இருக்கக் கூடும்.
“அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள் – 2
எனது கதையின் அச்சாக, அதிரியனுக்குப் பதிலாக புளோட்டினாவைக் கையாளுவது எனக்கு இயலாது. தவிர பெண்கள் வாழ்க்கையென்பது வரையறைக்குட்பட்டது; இரகசியம் காக்கவேண்டிய நெருக்கடிக்கு ஆளாகக் கூடியது. ஆணைப்பற்றி எழுதுகிறபோதே சில உண்மைகளை அவனுடைய வாயால் சொல்வதற்கு யோசிக்க வேண்டியுள்ளது.
குமார சம்பவம் மஹா காவ்யம்- 14
படையினரின் போர்க் கொடிகள் விழுந்து பூமியில் நிரம்பி, புழுதியோ, கடலோ, நீர் நிலையோ எது என்ன என்று புரியாமல் திசைகள் ஆக்ரமிக்கப் பட்டன. வழிப் போக்கர்கள் சாதாரணமாக திசையை அறிந்து கொள்ளும் ஒரு உபாயமும் பயன் படாதது போல திகைத்தனர். யானைகளின் கழுத்து மணிகள் தாறு மாறாக ஆடி, கர்ஜனையாக ஒலிக்க, பெரு வெள்ளம் வந்த நதியின் இரைச்சல் போல கேட்டன.
குமார சம்பவம் மஹா காவ்யம்- 13
தாயாரையும் அவள் பாதங்களைத் தொட்டு குமாரன் வணங்கினான். அவளும் மகனை அணைத்து தன் ஆனந்த கண்ணீரால் முழுக்காட்டியவளாக மகிழ்ச்சியுடன் விடை கொடுத்தாள். வீரனை பெற்றவள் மகிழ்வது இயல்பே. மடியில் இருத்திக் கொண்டு, உச்சி முகர்ந்து, ‘சத்ருக்களை வெற்றி கொண்டு, செயல் வீரனாக திரும்பி வா மகனே, என்னை உலகில் மா வீரனைப் பெற்றவள் என்று புகழும்படி செய்’ என்றாள்.
தளிர் பெருமரம்
இந்த நான்கு பாடல்களும் தலைவனின் பிரிவை பேசுவதாக இருந்தாலும் இவற்றின் தொனி வேறு வேறு. ஒன்று ஆபத்தை நினைத்து அச்சத்தில் தலைவனுக்காக பதறுகிறது. ஒன்று கோடை கால வெம்மையை கண்டு உளம் துடிக்கிறது. மற்றொன்று காதல் வெளிப்பட்டதை நினைத்து வருந்துகிறது. அடுத்தது வானில் தன் பட்டம் ஊரறிய பறப்பதை கண்டு களிக்கிறது
குமார சம்பவம் மஹா காவ்யம்- 9
இந்த வினாடியே என் மகனை உங்கள் சேனாபதியாக நியமித்துக் கொள்ளுங்கள். இவன் அந்த பதவியைப் பெற சக்தியுடையவனே. சத்ருவை ஜயித்து, தேவ லோகத்தை நீங்கள் அனைவரும் திரும்பப் பெறுவீர்கள். இதைச் சொல்லி விட்டு பகவான் தன் மகனைப் பார்த்தார். அவனோ மகா உத்ஸாகமாக இருந்தான். மிகப் பெரிய உக்ரமான யுத்தம் அதில் பங்கு பெறுவேன் என மகிழ்ந்தான். மகனே! அந்த தேவ விரோதியான அசுரனை வதைத்து விடு என்று சொன்னார்.
ஹான் காங் – இலக்கியத்திற்கான நோபல் பரிசு
1970ஆம் ஆண்டு தென் கொரிய நகரான Gwanjuவில் பிறந்த ஹான் காங்க்குக்கு இலக்கியத்துக்கான 2024 ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. அவரது தந்தை ஹான் சியூங் வோனும் புகழ் பெற்ற நாவலாசிரியர். காங் தனது 23ஆம் வயதில் ‘இலக்கியமும் சமூகமும்’ என்ற பத்திரிக்கையில் கவிதைகள் எழுதி தனது இலக்கிய “ஹான் காங் – இலக்கியத்திற்கான நோபல் பரிசு”
குமார சம்பவம்: பாகம் – 2
அசலராஜபுத்ரீ! மலை மகளே இனியும் ஏன் யோசிக்கிறாய். நன் மக்களை பெற்ற தாயார்களின் வரிசையில் நீ முதலாக எண்ணப் படுவாய். உலகமே இவனைக் கண்டு பரவசமாகி நிற்கிறது. பிரிய தர்சனன்- கண்களால் காண அழகன், தயங்காதே. உன் மகன், அள்ளி அணைத்துக் கொள், என்றார்.
அதிரியன் நினைவுகள் – 44
இருந்தபோதிலும், என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு பொய்யான கனவுலகில் திரும்பப் பிரவேசிப்பதை நான் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். கனவுகள்தோறும் ஒரு சில கணங்கள் சில இரகசியங்கள் எனக்குச் சொந்தமானவை. ஆம், நான் தெரிவிப்பதைப் போலச் சில கணங்கள் மட்டுமே சொந்தம் ; பின்னர் அவை என்னிடமிருந்து தப்பிவிடும்.
காவிரி சூழ் நாடன்
மிக இளமையில் தன் முதல் போரை வெண்ணிப்பறந்தலை என்னும் இடத்தில் எதிர்கொண்டான். வேப்பம்பூ சூடிய பாண்டியனையும் பனம் பூவை சூடிய சேரனையும் வென்ற வீரன் கரிகாலன். பறவைகளும் நாரைகளும் கரும்பு கொல்லைகளையும், நெல் வயல்களையும் கடந்து செல்கின்றன. பின்னர் அங்கிருந்து பூங்கொடிகளும் பகன்றை மலர்கள் பூக்கும் கடற்கரை கொடிகளின் மேலே பறந்து அங்குள்ள புன்னை மரங்களை தங்கும் நாடு காரிகாலனுடையது. தென்னையும் அதன் மறுபக்கம் வழை மரங்களையும் காந்தலும் சுரபுன்னையும் மலரும் நாடு அது.
குமார சம்பவம் மஹா காவ்யம்- 10
வழக்கமாக சப்த ரிஷிகள் நீராடி முடித்து, மலர்களையும், தூர்வா என்ற புல்லையும் வைத்து அர்ச்சனை செய்தவை மட்டுமே இருக்கக் கண்டவர்கள், நதியின் வெண் மணலையே கண்டனர். யோக சாதனைகள் செய்பவர் மூடிய கண்களுடன் தங்கள் தியானத்தில் ஆழ்ந்து இருந்ததையும் கண்டனர். பாதங்களின் கட்டை விரல் மட்டுமே பூமியை தொடுவதாக நின்றபடி ஸூரியனையே நோக்கியபடி ப்ரும்ம ரிஷிகள் தவம் செய்தபடி நின்று கொண்டு இருந்ததைக் கண்டனர்.
அரக்கனின் கனவு
அந்தக் கனவு மிகவும் சுருக்கமாக இருந்தது. அரக்கன் நிலாப்பூக்கள் நிறைந்த வயலில் ஒடினான், அந்த நிலாப்பூக்களின் காம்புகள் அவனது ரத்த நாளங்கள் போல் தோற்றமளித்தன. அந்தப் புற்களின் ஒவ்வொரு இழையும் அவனது கணுக்காலில் கத்தி போல் கிழிப்பதாகக் கலார் உணர்ந்தாள். காற்றின் பெருமூச்சு அவளுக்குக் கேட்டது. அரக்கனின் உடற்தொகுப்பு முறுக்கிக்கொள்ளும் ஓசையை அவன் பேசுகையில் உணர்ந்தாள்.
குமார சம்பவம் மஹா காவ்யம்- 9
சர்வபக்ஷன்- கிடைத்ததை உடனடியாக முழுவதுமாக உண்பவன் என்று அக்னிக்கு பெயர். பகவான் சொன்னார், சர்வபக்ஷ! மிகப் பெரும் செயலை உன்னிடம் ஒப்படைக்கிறேன். என்றார். தேவி மலைமகளோ சபித்தாள். எனக்குரியது என் மகனைப் பெறுவது என்ற செயல், அதைப் பறித்த உன்னை குஷ்டம் வந்து ஸூழட்டும் (புகை அக்னியுடன் இணைந்தே இருப்பது)
வேந்தர்களைப் பாடுதல்
பகை நாட்டரசனின் அரண் வலிமையை கூறும்போது அவன் கோட்டையைச் சுற்றியுள்ள அகழி பற்றி கூறுகிறார். கோட்டை பாதுகாப்பு வீரர்களின் கையில் உள்ள தீப்பந்தத்தின் நிழல் அகழியில் விழுந்தால் கூட அதை கவ்விப்பிடிக்கப் பாயும் முதலைகள் உள்ள அகழி என்கிறார். இந்த ஒன்றைச் சொல்வதன் மூலம் அரண் வலிமையை அரசனுக்குச் சொல்லிவிடுகிறார்.
குமார சம்பவம் மஹா காவ்யம்- 8
ஹே! பார்வதி, திடுமென அந்தகாரம் மறைந்து வானம் சந்திரனின் ஒளி நிரம்பி நிர்மலமாகத் தெரிவதைப் பார். யானைகள் குளித்து குளத்தை சேறாக்கி விட்டு சென்ற பின் சற்று நேரத்தில் குளத்து ஜலம் சுத்தமாக ஆவது போல இருள் சேறு போல வானத்தை மறைத்திருந்தது. சந்திரனின் வரவால் தூய்மையாகி விட்டது. தூய்மையான எண்ணங்கள் கொண்ட நல்லவர்கள் கால வசத்தால் கஷ்டங்கள் அனுபவிப்பதும், பின் நன்மை அடைவதும் போல இருக்கிறது.
குமார சம்பவம் மஹா காவ்யம்- 7
அதன் வழியே, ஊரில் இருந்த அழகிய பெண்கள் அவரைக் காணும் பொருட்டு மற்ற வேலைகளை விட்டு அங்கு கூடியிருந்தனர். மாளிகைகளின் மேல் பகுதிகள் நிறைந்து இருந்தன. மணமகனைக் காணும் ஆசையால் கிடைத்த இடங்களில் ஊரார் நின்று பூக்களை மழையாக பொழிந்தனர். தங்களும் தங்களை நன்றாக அலங்கரித்துக் கொண்டு போக விரும்பியவர்கள் பாதியில் விட்டு ஓடி வந்தார்கள். கேசத்தை முடிந்து கொண்டிருந்தவர்கள், காலில் பாதி செம்குழம்பு பூசிக் கோண்டிருந்தவர்கள், எதிரில் வராமல் ஜன்னல்கள் அருகிலேயே நின்றபடி ஊர்வலத்தைக் கண்டனர்
அதிரியன் நினைவுகள் – 40
லூசியஸ் ஒருபோதும் கேள்விகளை எழுப்புவதில்லை; பதிலாக என் சிந்தனைக்குள் பிரவேசித்திருந்தான். எனது அசைவுகள் ஒவ்வொன்றையும் அவனுடைய கண்கள் பின்தொடர்ந்தன. இரண்டாவது முறையாக அவனைக் கான்சல் ஆக நியமித்தேன். ஆனால் இம்முறை அப்பணிகளைத் தம்மால் நிறைவேற்ற முடியுமாவென்கிற அச்சம்,. என்னை விரக்தியடையச் செய்கிறோம் என்கிற வேதனை அவனுடைய உடல் நிலையை மோசமாக்கியது
ஈஸ்வர அனுக்ரஹம்
சிறிது காலம் முன்பு ஒரு சினிமா நடிகரை அழைத்து வந்தோம். வர போக செலவு, ஹோட்டலில் தங்குமிடம், அதைத் தவிர பணக் கவர் கொடுத்தோம் அவர் வந்து பெண்கள், பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று கூடப் பார்க்காமல் சீரழிந்த ஜோக்குகளைப் பேசினார். ஒவ்வொரு ஆண்டும் யார் யாரையோ அழைக்கிறோம். சன்மானம் செய்கிறோம்
குமார சம்பவம் மஹா காவ்யம் – 6
மனதால் எண்ணிக் கூட பார்க்க முடியாத எதிர் பாராத அனுபவம். மேகமே இன்றி திடுமென மழை பெய்தால் வரும் சந்தோஷம் இவைகளை இந்த இடத்திற்கு வந்த ரிஷிகள் அனுபவித்தனர். அதே போல இமவானும் உங்கள் வரவும், தரிசனமும் எங்களுக்கு பூத்த உடனேயே மரங்களில் பழங்கள் வந்தது போன்ற அதிசயமான சற்றும் எதிர்பாராத அனுபவம் என்றார்.
