நீர்த்துறை படியும் பெருங்களிறு

This entry is part 17 of 19 in the series கவிதாயினி

இந்தப்பாடல்களில் வரும் பெருங்களிறு என்ற படிமத்தையும், தீர்த்தங்காரர்களின் கருணை மற் றும் அகிம்சையை என்மனம் இணைத்துக் கொண்டது . தன் குழுவிற்கான பாதுகாப்பு, வீரம் என்றிருந்து பின் வன்முறையாகி, எடுத்த வாளை வைக்கவிடாது மதம் கொண்ட களிறாக மாறிய இனக்குழுக்கள் தங்களை தாங்களே  அழித்துக்கொண்டிருந்த காலத்தில் தீர்த்தங்காரர்கள் தங்கள் கருணையால் அந்த களிரை மெல்ல மெல்ல படிய வைத்திருக்கிறார்கள்.