திலு மொட்டைமாடியில் உட்கார்ந்து நீண்ட நேரம் யோசித்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு முப்பது வயதாகிவிட்டது. அவளைப் பொருத்தவரையில், கல்யாணம், கணவன் எல்லாம் நிறைவேறாத கனவு. இப்போது அவளால் நம்பமுடியவில்லை. அவளுக்கு உண்மையாலுமே கல்யாணமாகப் போகிறதா? அவள் கணவன் வீட்டுக்குப் போகப் போகிறாளா? தங்கச்சிகளோடா?
Tag: பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய்
பெருங்காய கச்சோடி
நான் இலந்தை ஊறுகாய் போட போகிறேன். உனக்கு கொஞ்சம் வேணுமா? ஊறுகாய் இன்னும் தயாராகவில்லை நான் வெல்லம் மட்டும் தான் சேர்த்திருக்கிறேன்.” இப்படியாக குசுமும் நானும் மறுபடியும் பேச ஆரம்பித்தோம். குசும் இலந்தை ஊறுகாயை என் கையில் தந்ததுமே என்னுடைய கோபத்தையும் வலியையும் நான் மறந்து போனேன். நாங்கள் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதற்குப் பிறகு நான் குசுமின் அறையை ஒட்டியிருந்த மாக்கனின் அறைக்குச் சென்றேன். அவளுடைய அறையில் நூற்றுக்கணக்கான பொம்மைகள் இருந்தன
மின்னல் சங்கேதம் – 4
அந்த விஷயத்தைச் சொன்னவன் ஒன்றும் விஷயம் தெரியாதவன் இல்லை. அவனுக்கு அரிசி வியாபரத்தில் ஏற்கனவே அனுபவம் உண்டு. அவன் உறுதியாகச் சொன்னான், “உங்களுக்கு இந்த விஷயம் புரிய மாட்டேங்குது. நான் சொல்றேன் கேளுங்க, அரிசி விலை எக்கச்சக்கமாகப் போகுது. எனக்கு இந்த விஷயமெல்லாம் அத்துபடி. இந்த வியாபாரத்துல நான் ரொம்ப நாள் இருந்திருக்கேன்.”
மின்னல் சங்கேதம் – 2
அரட்டையிலேயே மதியம் கழிந்து குளிர் இருட்டிக்கொண்டு வந்தது. கங்காசரண் எழுந்து நின்றான். “பக்கத்து கிராமத்துக்குப் போய் இன்னும் சில மாணவர்களைச் சேக்கறதைப் பத்திப் பேசனும். எவ்வளவு அதிகம் பசங்க இருக்காங்களோ, அவ்வளவு வசதி.”
மின்னல் சங்கேதம் – 1
டினு டியோர் ஏழெட்டு மீனைப் பிடிச்சான். பிராமண தானமா எனக்கும் ஒண்ணு கொடுத்தான். நல்ல பெரிசு இல்ல? ஓய் பொட்லா, நீ என்ன செஞ்சிக்கிட்டு இருக்க? காலங்காத்தால வீட்டுப்பாடம், படிப்பு எதுவும் இல்லையா?”
ஹீங்க் கொச்சூரி
குஸும் தினம் மாலையில் அழகாக உடுத்து, நெற்றியில் திலகமிட்டுக் கொண்டு, முகத்தில் மாவு போன்ற ஏதோ பொடியையும் பூசிக் கொள்வாள். சிகையலங்காரமும் அவளுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் என்னை அறையில் இருக்க அனுமதிக்கமாட்டாள். ’வீட்டுக்குப் போ.. என் பாபு வர நேரம் இது’ என்பாள்.
