தேர்தல் நேர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சிதம்பரம் (சாவடி), தன் கல்லூரி நண்பன் ராஜனை பல ஆண்டுகளுக்கு பின் சந்திக்கிறார். கல்லூரியில் படிக்கும் போது சிதம்பரத்திற்கு ரேவதி மேல் காதல், ஆனால் சொன்னதில்லை. ராஜனும் சங்கீதாவும் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். இறுதியாண்டின் போது தனக்கு உதவுமாறு ராஜனிடம் சிதம்பரம் கேட்கிறார். ரேவதிக்கு தன் மீதே ஈர்ப்பு உண்டு என்று ராஜன் சொல்ல, அவனுடனான உறவு முறிகிறது. அதன் பின் அவனுடன் சிதம்பரம் பேசவேயில்லை, இப்போது தான் சந்திக்கிறார்கள். தான் சங்கீதாவை திருமணம் செய்யவில்லை போன்ற விஷயங்களை பேசி விட்டு ராஜன் கிளம்புகிறான்
Category: புத்தக அறிமுகம்
புத்தக அறிவிப்பு – மாயக் குரல்
என்னுடைய சிறு கதைகள் தொகுப்பு ” மாயக்குரல்” என்ற பெயரில் வெளிவந்திருப்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் தொகுதியில் பெரும்பாலான கதைகள் சொல்வனத்தில் வெளியிடப் பட்டவை
கல்லை மலராக்கும் கவிதைகள்
இதற்கு இணையாக வேறு வகையான சித்தரிப்புகளைக் கொண்ட கவிதைகளும் இன்னொரு பக்கத்தில் ஏராளமாக எழுதப்படுகின்றன. தன்னை ஏமாற்றப்பட்டவன் என்றும் வஞ்சிக்கப்பட்டவன் என்றும் ஒருவித மிகையுணர்ச்சியோடு முன்வைத்துக்கொள்கின்றன அக்கவிதைகள். கசப்பும் அவநம்பிக்கையும் மிதக்கும் நீர்நிலையென வாழ்க்கையைக் கருதவைக்கும் வரிகளைக் கொண்டவையாக அக்கவிதைகள் இருக்கின்றன. உறவுகளாலும் உலக அமைப்பாலும் குரூரமாகச் சிதைக்கப்பட்டவர்களின் குறிப்புகளைப்போல அவை தோற்றமளிக்கின்றன
கே.ஜே அசோக்குமாரின் ‘ரமணி குளம்’
பெரும்பாலும் இன்றைய நவீன வாழ்க்கையின் பல எதிர்மறை அம்சங்களின் தொகுப்பாகவே நாவல் அமைந்த போதும், இறுதியில் ஒரு நம்பிக்கை ஒளியுடனேயே முடிகிறது என்பதும் ஒரு சிறப்பு.இன்னொரு விஷயத்தையும் சொல்லி விடுகிறேன்.இன்றைய தமிழகச் சூழலில் ஒரு வகையான அரசியல் சரிநிலையை இந்த நாவல் மீறுகிறது. அது எது என்பதை நான் சொல்லப்போவதில்லை. வாசகர்கள் தாங்களாகவே உணர்ந்து கொள்ளலாம்.
பால் லின்ச்சின் டப்ளின் டிஸ்டோபியா
2003ஆம் ஆண்டு, ‘Damas de Blanco’ (வெள்ளுடுப்பு மங்கையர்) என்ற அமைப்பை கூப அரசால் சிறை வைக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போக்கடிக்கப்பட்டவர்களது பெண் உறவினர்கள் துவக்கினார்கள். மார்ச் 2011 ஆம் ஆண்டு, அரசுக்கு எதிராக சுவற்றில் எழுதிய பள்ளிக் குழந்தைகள் சிரியாவிலுள்ள டாரா என்ற நகரில் கைது செய்யப்பட்டபோது “பால் லின்ச்சின் டப்ளின் டிஸ்டோபியா”
மோகனாங்கி
இவ்வளவு சொல்கிறோமே… மோகனாங்கிக்கு தமிழின் முதல் வரலாற்றுப் புதினம் என்ற இடம் எளிதில் கிடைத்துவிடவில்லை. பொதுவாகவே ஈழத்தவரின் தமிழ் இலக்கியப் பணிகளுக்குக் கிடைக்க வேண்டிய முறையான இடம் கிடைப்பதில்லை என்பது இன்றும் உண்மை. சி.வை.தா ஒருவர் போதுமே! அவர் இல்லையென்றால் தொல்காப்பியம் ஏது! கலித்தொகை ஏது! பல நூல்களைக் கண்டெடுத்த அந்த மாமேதையைப் பற்றி தமிழுலகம் பேசுகிறதா!
சிலையும், கல்லும் – நூல் விமர்சனம்
தங்கத்தின் மாற்றினை அறிவதற்கு. ஆசாரி. உரைகல் என்று ஒன்று வைத்திருப்பார். கிரிதரனின் வசம் அந்தக் கல் வந்திருக்கும் போலிருக்கிறது. முதல் கட்டுரை நாம் கொண்டாடும் ஜெயகாந்தன் எழுதிய ஒரு மனிதன் ஒரு வீடு, ஒரு உலகம். வாசனையைக் கொண்டு, பூவை அறிவது போல, நம்மை நேரடியாக பாதிப்பது, ஒரு எழுத்தின் மூலம் எழுத்தாளனை நாம் அறிந்துகொள்வதே. ஹென்றி என்ற. கதாபாத்திரம், புனைவின் பிடிகளுக்குள் கட்டுப்படாதவன். அவனது சமநிலை. ஆச்சரியப்படுத்தும் ஒன்று. ஜெயகாந்தன் சொல்லும் மிகச்சிறப்பான ஒரு அவதானிப்பை கிரி சொல்கிறார். மனிதன் என்பவன், சமூகத்தின் விளைச்சல் இல்லை. அவன் சுயமான எண்ணங்களைக் கொண்டவன்
இகிகை
‘இகிகை’ என்பது நான்கு கூற்றுகளின் கலவையாகும்: நீங்கள் எதை விரும்புகிறீர்கள், நீங்கள் எதில் சிறந்தவர், உலகிற்கு என்ன தேவை, உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்தேவையை எவ்வாறு நிவர்த்தி செய்வது? என்பதே அந்த நான்கு அடிப்படை மூலக்கூறுகள். “உங்கள் இகிகையைக் கண்டுபிடிப்பது என்பது ஒரு வேலை அல்லது பொழுதுபோக்கைக் கண்டுபிடிப்பது மட்டுமல்ல, மாறாக உங்கள் தனித்துவமான நோக்கத்தையும் வாழ்க்கையின் பொருளையும் கண்டறிவதாகும்” என்பதை ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
மயிலன் சின்னப்பன்
மருத்துவத்தில் குறிப்பிட்ட துறையின் வல்லுநரான சார்வாகன் பல கதைகளை எழுதி இருந்தாலும், துறைசார் கதைகளை அவர் எழுதவில்லை. பொதுவாகவே தமிழில் மருத்துவர்கள் இலக்கியம் எழுதுவது குறைவு, தொழில் குறித்து எழுதுவது அரிது. மாறாக முதல் நாவல் மட்டுமன்றி, மூன்று தொகுப்பும் சேர்த்து ஐந்து சிறுகதைகளும் முழுவதும் மருத்துவப் பின்னணியில் எழுதியிருக்கிறார் மயிலன் ஜி சின்னப்பன்.
உயரும் : சுரேஷ் பிரதீப்
திருமணமாக வேண்டிய வயதில், படித்துக்கொண்டோ அல்லது வேலையிலோ இருக்கும் மணமாகாத இளம்பெண்கள் தோழிகளின் திருமணத்திற்கும் அவர்களின் குழந்தைகளைக் காணவும் சென்றிருக்கையில்.போக வேண்டுமென்னும் ஆர்வமும், போகலாமா, வேண்டாமாவென்னும் போராட்டமும், அங்கிருக்கும் பெரியவர்கள் என்ன கேள்வி கேட்பார்களோ என்னும் பதட்டமுமாக இருப்பது இயல்பு
பேரன்பை அருளும் துக்கம்
குழந்தை பெறுவதற்காக ‘பேக்கேஜ் மெடிசின்ஸ்’ என்று தனக்கு இல்லாத நோய்க்கெல்லாம் மருந்து சாப்பிடும் நந்தினியிடம் ‘உன் உடம்பு தானே ஊரான் வீட்டுப்பண்டமா’ என்று தோழி கேட்பாள். ஒரு மனித உடல் இயந்திரமாக பார்க்கப்படும் அவலம் இந்த சிகிச்சைகளில் அப்பட்டமாக நடந்தேறுகிறது.
மொக்குகள் கட்டவிழும் அற்புத தருணங்கள்
ஷெர்லாக் ஹோம்ஸின் தீவிர வாசிப்பின் பின்னணியில் சில குற்றப் புனைவுகளையும் சமைக்கத் தவறுவதில்லை காலத்துகள். ஆனால் அதற்கான களம், பின்புலம் என்றெல்லாம் மெனக்கெடாமல், ஒருவித அங்கத நடையில் எழுதி திருப்தியடைந்து கொள்கிறார். இடையே, இலக்கிய அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று ஏங்கும் எழுத்தாளனும் இடம்பெறத் தவறுவதில்லை. ஃபோர்ஹேவின் (Jorge Louis Borges) பாதிப்பில், தன் குறுநாவலில் எழுதும் கனவின் பாதிப்பில், அதிலிருந்து வெளிப்பட்டு ஒரு சிறுகதையை எழுதிவிட்டுப் போகிறார்
சீர்மையின் நுதல் விழி – சித்ரனின் சிறுகதைகள் முன்வைத்து
சித்ரனின் கதைகள் அறிமுக எழுத்தாளர்களுக்கான எந்த தடையையோ தடுமாற்றத்தையோ பெரிய அளவில் எதிர்கொள்ளவில்லை. அவரது தொடக்கக்கால கதைகளில் சில நெருடலான/ பொருத்தமற்ற உவமானங்கள் வெளிப்படுகிறது. உதாரணமாக “செதில்களால் நெய்யப்பட்ட சட்டையை உரிக்கும் அரவமாய் எனது வெறுமையை என்னிலிருந்து அகற்ற அண்ணா நகர் பூங்காவிற்கு கிளம்பினேன்.” “கூட்டத்தால் கைவிடப்பட்ட கழுதைப்புலி ஒரு வலிமையான இரையை தாக்க வழியில்லாது வெறித்திருப்பதைப் போல் அவளை கவனித்தவாறிருந்தேன்” (தூண்டில்). இரண்டு மூன்று கதைகளுக்கு பிறகு இவ்வகையான பயன்பாடும் மறைந்து நேர்த்தி
மோட்சமெனும் தப்பிச்செல்லல்
தொகுப்பின் தலைப்பில் உள்ள ‘மோட்சம்’ என்ற சொல்லைச் சுற்றியே தொகுப்பின் பெரும்பாலான கதைகள் நிகழ்கின்றன. மோட்சம் என்ற சொல் சட்டென ‘நவீனத்துக்கு எதிரான’ மனநிலையை வெளிப்படுவதாகத் தோன்றுகிறது அல்லவா! ஆனால் விஜய்குமாரின் இக்கதைகள் அனைத்தும் நவீனமானவை. எளிமையான ஆற்றொழுக்கான நேரடி நடையைக் கொண்டிருக்கும் இக்கதைகளின் வாயிலாக தான் பேச எடுத்துக் கொண்ட விஷயத்தை மிகத் தெளிவாக விஜய்குமார் முன்வைக்கிறார்.
மூத்த அகதி – நாவல் – வாசு முருகவேல்
சென்னையில் அடுக்குமாடிக் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து, மெல்ல அதை விருந்தினர் விடுதியாக மாற்றிய விளக்கத்திலிருந்து கதை துவங்குகிறது. அந்த விடுதியில் தங்கிச் செல்வோர் அனைவரும் வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்கள். இந்த விளக்கத்தினிடையே வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்களால் நிறைந்து காணப்படும் அந்த விடுதியில், அவர்களில் இலங்கைத் தமிழர்களும் இருப்பார்கள் என வார்த்தைகளில் சிறிய வேறுபாட்டைக் காட்டிக் கடக்கிறார்.
அஜிதனின் ‘அல் கிஸா ’
பெரும்பாலையில் துவங்கி இன்று வரை ஆயிரத்து முன்னூறு வருடங்களாக உபாசிக்கப்படும் நிகழ்வு ஒன்று இசையால், வரலாற்றின் துயரத்தால், காதலால் அதீத உருவகம் கொண்டு எழுச்சியடையும் கதை. படிக்கத் துவங்கிய உடனே உள்ளிழுத்து வாசகரை அஜ்மீர் நகரத்தின் மேலே ஒரு மேகம் போல நிலை கொள்ள வைத்து விடுகிறது. அங்கிருந்து நாம் காண்பது மக்கள் செறிவு பல ஆறுகள் போல் ஒழுகும் காட்சி.
மானஸா- லஷ்மி பாலகிருஷ்ணன்
பிறக்கும் போதே அல்லது கருவுற்றிருக்கும் காலத்திலேயே ரஷ்யாவிற்கு எதிரான மனப்போக்கில் வளரும் குழந்தைகள், பழி வாங்க வேண்டும் என்றே பிறப்பிக்கப்படும் குழந்தைகள் என்று எப்போதுதான் இந்த வன்முறையும் போரும் ஓயும்? இதற்காக இன்னும் பல உயிர்களைக் காவு கொடுக்க வேண்டுமா?
பேச்சினும் எழுத்து ஆகச்சிறந்தது
அதீதத்தின் ருசி கிராமத்து வாழ்வியலை அவர்களின் மன உணர்வுகளோடு கலந்து புலம்பலை புறந்தள்ளி வாழ்வை வார்த்தைகளின்றி அவதானிக்கச் செய்து மன அமைதியோடு அமர்ந்து மண்ணை தன் மனதிற்கு ஏற்றவாறு மாற்றி அதற்கும் ஒரு ருசியை கொடுத்த மகத்துவத்தை உணர்த்தும் ஆழமானதொரு சிறுகதை. பெண்களின் அக உணர்வுக்குள் சலிப்பு, இயலாமை, அவமானம் எல்லாவற்றையும் அண்டவிடாமல் நுட்பமானதொரு மன வடிவை கட்டமைத்து பிரபஞ்சத்தை தன் உள்ளங்கைக்குள் அடக்கிவிட்டதொரு உணர்வைத் தரும் அதீத்தின் ருசி பெண்களின் பேராளுமையை பறைசாற்றுகிறது.
மனதில் புதைந்த காயம்பட்ட மிருகம் !
தனிப்பட்ட மனிதர்களின் பொறுப்போ, அல்லது திருமணம் என்கிற அமைப்பில் இருக்கக் கூடிய மௌடீகமோ, அந்தத் தம்பதிகளுக்குள் ஒரு விலகல் நேர்ந்து அவர்கள் தேமேயென்று வாழ்கிறார்கள். அவன் வெளியூருக்கு சென்ற சுதந்திரமான ஒரு நாளில் அவள் இணையத்தில் நுழைய, ஒரு மற்றொரு ஆளுடன் சுவாரஸ்யம் பூக்கிறது. அதில் அவள் திளைக்கிறாள். ஒரு ஓரத்தில் குற்ற உணர்ச்சிகளுக்கான ரெடிமேட் பதில்களும் உண்டு.
உலகில் ஒருவன் – தொப்புள்கொடி அறாத குழந்தை
சிறுவனின் பார்வையில் இருந்து பெரியவர்களைப் பற்றி, பெரியவர்களின் வாழ்வைப்பற்றி பெரிதும் பேசும் இக்கதையை வாசிக்கும் நாம் பெரியவர்களின் பார்வையில் சிறுவனாகவும், சிறுவனின் பார்வையில் பெரியவர்களாகவும் தோற்றம்கொள்ளும் மாற்றமும் மாயமும் நாவல் முழுவதும் நிகழ்துகொண்டே இருப்பது , வாசிப்புக்கு மட்டுமல்ல வாழ்வுக்கும் புதிய பரிமாணத்தைக் கொடுக்கிறது.
இரு மதிப்புரைகள்
வெறும் இருபத்தியைந்து அத்தியாயத்தில் எல்லாவற்றையும் சுருக்கி ஒரு தேர்ந்த மிலிடரி ஆபிசரின் ஆணைப் போல் எழுதியிருக்கிறார். வாழ்வின் துயரங்களை அனுபவிப்பவன் அதற்கான காரணங்களை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது? அதனால் குற்ற உணர்ச்சியே இல்லாமல் பரபரவென்று விரிகின்றக் கதை அதே வேகத்தில் முடிந்து விடுகிறது.
அனைத்துக்கும் சாட்சியாக நாம்
ஒவ்வொரு காலகட்டமும் ஏதோரு விதத்தில் அதன் சாராம்சத்தை தன்னுள் ஒளித்து வைத்துள்ளது. பாரதியாரின் படைப்புகளை வாசிக்கும் ஒருவர் அரசர் காலத்தில் இருந்து ஜனநாயகக் காலம் அடைந்த தாவலின் சித்திரத்தை கண்டு கொள்ள முடியும். உலகலாவிய புது சிந்தனைகளை முன்வைத்துப் பேசிய முதல் தமிழரின் படைப்புகள் என்பதையும் உணர முடியும். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் எழுதிய வ.வே.சு ஐயர் அவர்கள் காலனிய ஆட்சியால் தொலைந்து போன பண்பாட்டுச் செல்வங்களை மீட்டுப் பேசத் தேவையான சிந்தனைகளை முன்வைக்கும் படைப்புகளை உருவாக்கினார். இருவரும் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் ஒரு வேளை தமிழில் நவீனத்துவமும் பின்நவீன நவ காலனிய யுகமும் ஒரே சமயத்தில் முதிர்ச்சி அடைந்திருக்கும்
தமிழ்ப் பெண்கவிதைவெளி
இத்தொகுதியில் ஒரு சில கவிதைகளைத் தவிர ஏனைய கவிதைகளின் மைய விசயமாக பெண் இருக்கிறாள். ஆனால் இந்தப் பெண்ணை அவளின் அன்றாட வாழ்வோடு பொருத்தி அவளது பல்வேறு பரிமாணங்களை, அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார். இந்தப் பகிர்வு பாசாங்குகளற்றது. சராசரியான ஒரு பெண் அனுபவிக்கக்கூடிய உடல், உள காயங்களிலிருந்து எழுவது
புதுவெளிச்சம்
இக்கதைகள் பரப்பும் நிறங்கள் வெவ்வேறாக இருந்தாலும், அவை நிச்சயமாய் ஒளிர்தலைக் கொண்டிருக்கின்றன. இந்தத் தொகுப்பின் அயல்நிலம் சார் கதைகள் பெரும்பாலும் தமிழ்ச் சிறுகதை உலகத்துக்குப் புதியவை. அவை தங்களை, கதையை மொழிந்து வெளிப்படுத்திக் கொள்ளும் விதம் அபூர்வமானவை. கதையிடைவரும் அந்நிய நிலப்பரப்பின் மொழியும், நிலக்காட்சிகளும் வசிப்பவரின் மனதை வசீகரப்படுத்துபவை.
கோட்டைகளை ஆய்ந்த விட்டல் ராவ்
’பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தில் வாழ்ந்த டானியல் சகோதரர்கள் தென்னிந்தியாவில் பயணம் செய்தார்கள். அப்போது தாம் கண்டு களித்த பட்டணக்காட்சிகளையும் கோட்டைக்காட்சிகளையும் ஓவியங்களாக வரைந்து எடுத்துக்கொண்டு இங்கிலாந்துக்குச்சென்றார்கள். அங்கே எல்லாபடங்களையும் செப்புத்தகடுகளுக்கு மாற்றி ஆக்வாடிண்ட்( நீர்வண்ண) பதிப்புகளாக நூல் வடிவில் வெளியிட்டார்கள். 144 ஓவியங்கள் ஆறு தொகுதிகளாக அவை வெளிவந்தன. கீழைநாட்டு இயற்கைக்காட்சிகள் ( ஓரியண்டல் சீனரி) என்னும் தலப்பில் அமைந்த அத்தொகுதிகளை தற்செயலாகப்பார்த்து மனம் பறிகொடுத்த விட்டல் ராவ் தனக்குள் உருவான மன எழுச்சியின் காரணமாக அத்தொகுதிகளில் உள்ள கோட்டைகளை நேரில் சென்று பார்த்து எழுதும் திட்டத்தை தனக்குள் வகுத்துக்கொண்டார்.’
பாபிலோனின் மாபெரும் பணக்காரர்
அகழ்வாராய்ச்சியில் கிடைத்த களிமண் பலகைகளில் (Clay Tablets) உள்ள குறிப்புகளை கண்டடைந்து, அன்று புழக்கத்திலிருந்த நிதி கோட்பாடுகளை ஆராய்ந்து, அது எக்காலத்திற்கும் பொருந்தும் என்று உய்த்துணர்ந்து, எல்லோரும் பயன் பெற வேண்டி, சாலை வரைபட(Road Map) தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்த திரு.ஜார்ஜ் சாமுவேல் கிளாசான், 1920களில் தன் செலவில் துண்டு பிரசுரங்களாக அச்சடித்து விநியோகித்தார். அமெரிக்க வங்கிகளும், காப்பிடு நிறுவனக்கும் இதன் முக்கியத்துவம் அறிந்து இதை ஊக்குவிக்கும் பொருட்டு பெருமளவில் அவர்களும் அச்சடித்து விநியோகித்தனர். உலகில் தலைசிறந்த நிதி ஆலோசகர்களின் பரிந்துரை பட்டியலில் இடம் பெறும் ஒரு பிரதான புத்தகம்.
’தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைகள் நேர்காணல்கள்’ – புத்தக அறிமுகம்
’ என் நண்பர்களில் தனித்தன்மை கொண்ட நண்பர் தஞ்சை ப்ரகாஷ்’ என்கிறார் வல்லிக்கண்ணன். கரமுண்டார் வூடு நாவலில் ப்ரகாஷ் பாலியல் பிரச்சனைகள்பற்றி மிகையாக விவரித்து இருப்பதாக வல்லிக்கண்ணன் அபிப்ராயப்படுகிறார். அதற்கு விடைஅளிக்கும் முகத்தான் எழுதும் ப்ரகாஷ்’ ’ஒரே ஒரு கீழ் வெண்மணியைத்தெரியும் உங்களுக்கு. ஒவ்வொரு எலக்ஷன் நேரத்திலும் முப்பது கீழ் வெண்மணிகள் எரிவது தெரியாது உங்களுக்கு. காமவிவகாரம் அற்ற பரிசுத்தம் நிறைந்த முதலாளித்துவம் உங்கள் நாடக உலகில்தான் இருக்கும். வாழ்வில் அல்ல’ இதுதான் எழுத்தாளர் ப்ரகாஷ் என்கிறார் வல்லிக்கண்ணன்.
இயற்கையின் கலகம்
Nature’s Mutiny (இயற்கையின் கலகம் ) என்னும் இந் நூலின் போக்கில் பழக்கப்படாத கடுங்குளிர் காலநிலை என்ற பாடத்தைக கடந்தும் கணிசமான தூரம் பயணிக்கிறோம். . புவி முன்பை விட குளிரடைந்தது என்று நிச்சயமாக அறிந்துள்ளோம்: முந்திய கால வெப்பநிலைகளை மதிப்பிடுவதற்குரிய பல்வகை நுணுக்கங்கள்- எடுத்துக் காட்டாக ஐஸ் உள்ளகங்கள்(ice cores) மற்றும் மர வளையமுறை, (tree rings method)-மூலம் அதற்கான ஆதாரம் காண முடியும். மேலும் கடிதங்கள், நாட்குறிப்புகள், விளக்கப் பேருரைகள் (sermons) ,மது உற்பத்தியாளர்களின் பதிவுகள் போன்ற பற்பல வடிவங்களில் குளிர் தாக்கம் குறித்த விரிவான கையெழுத்து வர்ணனைகள் உள்ளன.
தேவியின் வாளும், தேவ தண்டமும்
தமிழ் இலக்கணங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என ஐந்திணைகளாக நிலத்தை பிரிக்கிறது.ஐந்திணைகளுக்கும் தெய்வம்,மக்கள் என தனித்தனியாக உள்ளார்கள்..இதை விளக்கும் இலக்கியமாக சிலப்பதிகாரம் அமைந்திருந்தது.அதில்,பாலை நிலமென்பது குறிஞ்சியும் – முல்லையும் திரிந்து கெடுவதால் உருவாகிறது..தவறான ஆட்சியால் நாடு பாழ்படுவதை போலவே,மாறிய பருவமுறையால் செழிப்பான வனங்கள் பாலைவனமாக மாறுகிறது என்று குறிப்பிடப்படுகிறது..
”காலாழ் களரில்” – புத்தக மதிப்புரை
சிறுகதைகள் அளவிற் சிறியவை, முக்கிய கதை மாந்தர்களாக ஒன்றிரண்டுபேர் இடம்பெற்றிருப்பார்கள். களமும் பொழுதும் குறுகிய பரப்பிற்குள் அடங்கியவை, உண்மையில் அவை மனித உயிர்வாழ்க்கையின் காட்சித் துணுக்குகள், அடிக்கோடிட்டு சொல்லப்படுபவை. ஒருதேர்ந்த சிறுகதையாளர், தன்வாழ்க்கையில் தான்சார்ந்த சமூக நிகழ்வை, தனது படைப்பென்கிற புகைப்படக் கருவியில் ‘கிளிக்’ செய்கிறார். கலைஞரின் கலைத்துவ ஞானம், புகைப்படக் கருவியின் செயல்திறனுடன் இணைந்து எது சிறந்ததோ, எது முக்கியத்துவம் வாய்ந்ததோ, எது பின்னாட்களில் நினைவூகூரப்பட்டு மனதிற்கு ஆறுதல், மகிழ்ச்சி, சுகம், தரவல்லதோ அதை தன் கருவியில் பதிவு செய்து வாழ்க்கையின் ஈரத்தை, வறட்சியை, தென்றலை, புயலை, வெறுமையை, அபரிதத்தை,சகமனிதரோடு பகிர்ந்துகொள்கிறார். ஒரு தேர்ந்த சிறுகதை எழுத்தாளரிடமும் இத்திறனைச் சந்திக்கிறோம்.
எக்காலத்திற்குமான மீள் நிகழும் இன்பங்கள்: சேட்டன்டாங்கோ புத்தகமும் படமும்
அதன் ஏழு மணி நேரத்தின் ஒவ்வொரு நிமிடமும் கவர்ந்திழுக்கக்கூடியது. என் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு வருடமும் இதைப் பார்த்தாலுங்கூட அது எனக்கு நிறைவையே அளிக்கும்” – என்று சூசன் சாண்டாக் எப்போதோ கூறியது காரணமேயின்றி தோன்றி, அந்த நேர்த்தியான படத்தை இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது.
பின்கட்டு
இதில் இடம்பெற்றுள்ள ஐந்து கதைகளும் 1970களுக்கு முந்தின காலகட்டத்தில் நடை, கசடதபற போன்ற இதழ்களில் வெளிவந்தவை. நவீன மொழி நடையில் அமைந்துள்ளவை.
வயது மூத்தவளுடன் உறவு, தன்பால் உறவு, குடும்பத்தில் உள்ளவளோடு உறவாடும் இன்செஸ்ட் உறவு, தாயின் மீது சிறுவன் கொள்ளும் மறைமுக நாட்டம், உடலுக்கு ஏங்கி அலையும் இளைஞன் என ஐந்து பொருண்மையில் கதைகள் இடம்பெற்றுள்ளன.
இரா. முருகனின் நளபாகம்
முருகன் சொற்பமான இவ்வரலாற்றுத் தரவுகளைச் சாரக்கட்டாகப் பயன்படுத்தி நானூறு ஆண்டுகள் தொலைவில் அமைந்திருக்கும் இரு நூற்றாண்டு முடிவுகளில் (பதினாறாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் இறுதி) அரசியல், ராஜதந்திரம், வஞ்சகம், போர், பொது மக்கட்கருத்துத் திரிபு, தீவிரவாதம், மதச்சார்பு, நட்பு போன்றவற்றை பாவிழையாகவும் உணவையும் காமத்தையும் அவற்றிற்கு மேலும் கீழும் ஓடும் ஊடு நூலாகவும் பின்னிப் பிணைத்து ஒரு மாபெரும் கதையாதலை நெய்கிறார். பதினாறாம் நூற்றண்டிலிருந்து திரண்டு வரும் இக்கதையாடல்கள் பரமன் என்ற பாத்திரத்தின் வழியே இருபதாம் நூற்றாண்டிறுதியில சன்னமாக எதிரொலித்து புது அர்த்தங்கள் கொள்கின்றன.
கலியுகய நாவலும் சிங்களச் சமூகவெளியும்
கம்பெரலிய நாவலின் தொடர்ச்சியாகவே கலியுகய அமைக்கப்பட்டுள்ளது. நாவலில் மார்ட்டின் விக்கிரமசிங்க வரைந்து காட்டும் அழுத்தமான சமூகச்சித்திரம் சமூகவியல் தன்மையுடனும் சமூக மாற்றம் குறித்த நுண் அவதானங்களுடனுமான ஒரு அழுத்தமான ஆவணமாக கலியுகயவை மாற்றிக் காட்டுகிறது.கம்பெரலியவின் மையக்கதாபாத்திரங்களான கசாறுவத்தே முகாந்திரம்-மாத்தறை அம்மையார் தம்பதியினர் மற்றும் அவர்களது பிள்ளைகளான அனுலா, நந்தா, திஸ்ஸ மருமகன் பியல் போன்றோரைச் சுற்றி கதை நகர்கிறது.
தீர்த்த யாத்திரை – தீராத யாத்திரையின் சுயமி
எதுவும் குற்றமே இல்லை என்று எண்ணுபவர்களுக்குக் குற்றவுணர்ச்சி எழும் சாத்தியங்கள் இல்லை. இருப்பின் சமகாலச் சிக்கல் என்று இருண்மைகளை ஒரு கரிய இறகென சூடிக்கொண்டு விடுதல் எளிய இலக்கியத் தந்திரம். அந்த பாசாங்கைக் கீறி ஓர் ஒற்றையடிப்பாதையை தேடிக்கொண்டு உள்மனக்குரலுக்கு பதில் சொல்ல முடியுமா என்று தேடுபவன், அர்த்தமுள்ள மனிதனாக முயல்கிறான். இதை அவன் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. தன்விருப்பப்படி ஒருவர் எப்படிவேண்டுமானாலும் நடக்கிறேன் என்று பயணிப்பது அவரவர் சுதந்திரம். அவரவர் தேர்வு. ஆனால் யாரோ எப்போதோ நடந்த ஏதோ ஒரு பாதையின் வழியாகவே அவர்கள் செல்லநேர வேண்டி இருப்பதில், தெரிவுகள் குறைவு.
நிறமாலை
இலக்கிய உலகில் பெரும்பாலான கதைகள் ஆண்களின் வாழ்க்கையையே சித்தரிக்கின்றன. அதற்கு மாற்றாக பெண்களின் எண்ணங்கள் செயல்கள் மூலம் மனித வாழ்வை அணுகிப் பார்க்கும் இவரது கோணம் சிறப்பாக உள்ளது. இப்படி இருக்கிறது, நான் காட்டுகிறேன் என ஒதுங்கி நின்று காட்டும் திறனும், யதார்த்தம்தான் என நம்பவைக்கும் காட்சிப்படுத்தலும் மேலும் சுவை கூட்டுகிறது. பல்வேறு வணணங்கள் கொண்ட நிறமாலையைப்போல வெவ்வேறு குணங்கள் கொண்ட பெண்களைக் காட்டும் இந்நாவலை வாசிப்பவர்கள் வாழ்க்கையை பெண்களின் நோக்கிலிருந்தும் பார்க்கத் தொடங்குவார்கள் என நம்பலாம்.
ரா. கிரிதரனின் “ராக மாலிகை”
அவரது சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக் கதையும், முதல் கதையுமான “காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை” இரண்டாம் உலகப்போர் பின்னணியில் ஜெர்மனி வதைமுகாமில் நிகழ்கிறது. சிறையில் சிக்க நேர்ந்த பொதுஜனங்கள், வாழ்வுக்கும் சாவுக்குமிடையே போராடும் அவலங்களை விவரித்தபடி துவங்குகிறது கதை.
கலைச்செல்வி – நேர்காணல்
காந்திக்கும் அவரது மூத்த மகன் ஹரிலாலுக்குமிடையே நிலவிய முரண்பட்ட உறவுமுறை குறித்தும் சிறுகதை எழுதும் ஆர்வம் வந்தது. ஆனால் அதற்கான தகவல்கள் போதாத நிலையில் பல நுால்களை தரவிறக்கியும் மொழி பெயர்த்தும் வாசிக்கத் தொடங்கினேன். அது எழுத்தாக வெளிப்பட்டபோது சிறுகதைக்குள் அடங்கவியலாததாக இருந்தது. நாவலாக எழுதத் தொடங்கினேன். அதற்கு காலமும் நேரமும் கைக் கொடுத்தது என்பேன்.
மரேய் என்னும் குடியானவன்
உலக இலக்கியத்தின் தலை சிறந்தபுனைகதைப் படைப்பாளியாகிய ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் 200 ஆவது பிறந்த நாள் உலகெங்கும் உள்ள இலக்கிய ஆர்வலர்களால் கோலாகலமாகக்கொண்டாடப்படும் இவ்வேளையில் அவரது அரிய சிறுகதைகளில் ஒன்றான ”‘மரேய்’என்னும்குடியானவன்“ என்ற தலைப்பைத் தாங்கியபடி இந்தச் சிறுகதைத் தொகுப்பு …
சிவகாமி நேசன் என்னும் இனிமை
பனிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கன்னட பக்திக் கவிஞரான அக்கமகாதேவி சிவனை நினைத்து எழுதிய வசனங்களை எழுத்தாளர் பெருந்தேவி மொழிபெயர்த்துள்ளார். அவை ‘மூச்சே நறுமணமானால், என்ற நூலாக வெளிவந்திருக்கிறது. நூற்றி இருபது வசனங்கள் கொண்ட இந்த நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. பெருந்தேவியின் மீளுருவாக்கம் அர்த்தத்தை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் “சிவகாமி நேசன் என்னும் இனிமை”
நாற்கூற்று மருத்துவம் – இல.மகாதேவன் நேர்காணல் நூல்
குருவிடம் சென்று பயிலும் ஆர்வமோ வாய்ப்போ இல்லாமை போன்ற பல காரணங்களால் கல்லூரிப்படிப்பில் முழுமையான பயனை மாணவர்களால் பெற முடியாது என்கிறார் மகாதேவன். பொறியியல் போன்ற துறையிலும் இப்படிப்பட்ட போதாமைகளை நம்மால் பார்க்க முடிகிறது. விஞ்ஞானப் படிப்பின் அடிப்படைகள் பற்றி ஆர்வம் இல்லாததும், பயிற்சியாக எதையும் செய்யாமல் ஏட்டுப்படிப்பாக மட்டுமே இருக்கும் கல்வி அமைப்பின் சிக்கல்கள் இதோடு ஒத்துப்போகின்றன. ஆயுர்வேத மூல நூல்கள் சமஸ்கிருதத்தில் இருப்பது கூடுதல் சிக்கல். ஆனாலும் அது கடக்க முடியாத சிக்கல் அல்ல என்பதே மகாதேவனின் வாதம். ஆயுர்வேதம் போன்ற பன்முக ஞானத் தேவை இருக்கும் துறை, பிற அறிவுத் துறையிலிருந்து பலவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது அவரது அனுபவ அறிவு.
ஒற்றன் – அசோகமித்திரன்
“மனமிருந்தால் யாவரும் கேளிர் என்பதுதான் எவ்வளவு சத்தியமானது!” இது அசோகமித்திரன் நாவல் அறிமுகத்தில் வியக்கும் வரிகள். தமிழில் எழுதுபவர்கள் அனைவரும் பெருமிதமாக சொல்லும் ஒரு சொற்றொடர் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்”. தேய்வழக்காகி, அர்த்தமில்லாததாக ஆன ஒரு சொல்லை நவீனத் தமிழிலக்கியத்தில் அழியாத் தடம் பதித்தவர் உபயோகிக்கும்போது பொருள் “ஒற்றன் – அசோகமித்திரன்”
அதுல பாருங்க தம்பி…I
‘நம்ம கம்பெனி நாடகத்தில் பாகவதர் நடிக்கப் போகிறார்’ என்று ஒரே பரபரப்பாக இருந்தது யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளையின் நாடகக் கம்பெனியில். எதற்காக பாகவதர் நடிக்கவேண்டும்? என்னென்ன வேஷங்கள் செய்வார்?’ என்றென்று அடுக்கடுக்காகக் கேள்விகேட்டுத் துளைத்த அந்தச் சிறுவனுக்கு விளக்கினார் சகநடிகர். ‘ அடே பையா, ‘ஆனையைக் கட்டித் தீனி போடுவது’ என்று கேள்விப்பட்டிருக்கிறாயா? அதுதான் “அதுல பாருங்க தம்பி…I”
சந்ததிகளை உருவாக்கும் உழைப்பு
இனவிருத்திக்களம் பரம்பரைப் பழக்கமாக பொதுமங்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது. அடிப்படையாகவே அது உயிரைப் பேணிப் பாதுகாக்கும் பணி. எனவே சந்ததிகள் உருவாக்க உழைப்பிற்குத் (reproductive labour) தலையாயவர் என்கிற வகையில் பெண்ணுக்கு பொதுமங்களுடன் திடமான இணைப்பு நிலவுகிறது; வரலாற்றில் பெண்கள் பெரும்பாலும் பொதுமங்களின் ஆதரவில் வாழ்ந்து வந்தனர். பின்னர் அந்த இணைப்பு பறிபோனதால் மிகுந்த வேதனைக்குள்ளானார்கள்.
முதலியத்தை எதிர்க்கும் பொதுமம் – பகுதி 2
பாட்டாளி வர்க்கம் மையமாக்கலைத் தோற்கடித்து பொதுமங்களை மீட்கும் என்று மார்க்ஸ் நம்புகிறார். இதைத் திட்டவட்டமாக மறுக்கும் நூலாசிரியர்கள், பொதுச்சொத்து நிர்வாகம் சமூகத் தீர்வு காணலுக்கு உட்பட்டு இயங்க வேண்டும் என்கிறார்கள் ஒவ்வொரு மையப்படுத்தப் பட்ட அரசும், கம்யூனிச அமைப்பும் பொதுமக் கொள்கைக்கு எதிரானது என்பது அவர்கள் கருத்து.
சொல்வனம் வழங்கும்… கிண்டில் புத்தக வெளியீடு
சொல்வனம் வெளியீடாக “வீடும் வெளியும்” நூல் கிடைக்கிறது. இது அமேசான் கிண்டில் மூலமாகக் கிடைக்கும் சொல்வனம்.காம்-இன் மூன்றாவது புத்தகம். முந்தைய இரண்டும் சிறப்பிதழ்கள் என்றால், இந்தப் பதிப்பு எங்கள் ஆசிரியர் குழுவில் ஒருவரான ச. அனுகிரஹாவின் படைப்புத் தொகுப்பு.
பருவம் – சகாப்தத்தின் குரல்கள்
மகாபாரதம் என்ற இதிகாசத்தின் பாதிப்பு இல்லாத இந்திய எழுத்தாளர் இல்லை. இன்றும் கதை கூறும் முறையில் மாகாபாரதமும், இராமாயணமும் முக்கியப் பங்கை வகிக்கின்றன என்றாலும் மகாபாரதம் இலக்கியங்களில் அதிகமாக இடம் பெறும் ஒன்று. தமிழில் பாரதியார் துவங்கி ஜெயமோகன் வரையில் அதை எழுதிப் பார்த்திருக்கிறார்கள். பருவம் என்பதை பல “பருவம் – சகாப்தத்தின் குரல்கள்”
“பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்கிற கூற்றெல்லாம் எப்போதுமே அபத்தமாகப்படும் எனக்கு”
சிறு முடிச்சு, அல்லது சின்ன நிகழ்வு, அல்லது ஒரு கதாபாத்திரத்துக்கு நேர்ந்த அனுபவம் இதுபோன்றவைதான் எனக்குள்ளே கதைகளாகின்றன. வரலாறைத் தாங்கி நிற்கும் அந்தப் பாலமோ வளைவோ பாத்திரமோ இன்னபிற விஷயங்களோ மட்டுமே கதைகளாவதில்லை; ஆக முடியாது; ஆகவும் கூடாது. கதையினூடே நான் சொல்ல முனைவதற்கு வலுச்சேர்ப்பதற்கு வேண்டுமானால் அவை கதைக்குள் வந்தமர்ந்து உதவலாம். அதை நான் படைப்பாளியாக ரசித்து ஏற்பதுண்டு, சிலவேளைகளில் ஒதுக்கித் தள்ளுவதுமுண்டு.
வேராழத்தை காட்டுதல்
தே ஒரு இலையின் வரலாறு நூல் குறித்து சில ஆண்டுகளுக்கு முன் வரை வரலாறு என்றாலே மனதில் பெரும் அலுப்பு தோன்றும். அந்தக் காலம் இப்போது மாறிவிட்டது. வரலாற்றை மிகச் சுவாரசியமாக வாசிக்கும் வண்ணம் எழுதப்படும் நூல்கள் சில ஆண்டுகளாக வெளிவருகின்றன. ராமச்சந்திர குகா இதில் முதன்மையானவர். “வேராழத்தை காட்டுதல்”
ஜே.பி.எஸ். ஹால்டேன்: கிட்டத்தட்ட எல்லாமறிந்த மனிதர்
பீரங்கித் தாக்குதலில் காயமுற்று ஹால்டேன் ஸ்காட்லாந்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டார். அங்கு கருப்புக் காவலர்களின் எரிகுண்டுப் பயிற்சிக்காக ஒரு பள்ளியைத் துவக்கினார். பிறகு மெசபொடோமியாவிற்கு அனுப்பப்பட்டார். அங்கு ஆங்கிலேயர்களின் குண்டடியில் காயமுற்றதால் மேற்கொண்டு சேவைசெய்ய இயலவில்லை. காயங்களிருந்து குணமடைவதற்காக யுத்தத்தின் கடைசி இரண்டு வருடங்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார். தாய்நாடு திரும்பியபோது இந்தியா, இந்தியர்கள், இந்தியக் கலாசாரம் ஆகியனவற்றின்மேல் ஏற்பட்ட நிரந்தரமான பற்றையும் கையோடு எடுத்துச்சென்றார்.
