தானியங்கி வாகனங்கள் செயல்படும் முறை

ஒளியை கொண்டு சூழலை உணரும் கருவி. மனித கண்களுக்கு புலப்படாத புறஊதா (Ultraviolet) மற்றும் அகச்சிவப்பு (Infrared) அலைகளை சுற்றிலும் தெறித்து பரப்பி, சூழலில் உள்ள பொருளின் மீது படித்து பிரதிபலித்து (Reflection) திருப்பி பெறுவதே இதன் வேலை. பிரதிபலிக்கும் அலைகளை கொண்டு வாகனத்தை சுற்றி ஒரு முப்பரிமாணம் வரைபடத்தை (3D map) செயற்கை நுண்ணறிவின் செயலாக்க கருவி (Processing Unit) உருவாக்கும்.

உதா – முப்பரிமாணத்தை கொண்டு தொலைவில் இருப்பது மனிதனா, மரமா, வாகனமா என்பதை செயற்கை நுண்ணறிவு முடிவெடுக்க உதவும். இதன் மாபெரும் குறை என்பது மழை, பனி போன்ற சூழலில், காற்றில் உள்ள நீர்த்துளிகள் ஒளியை சிதறடிப்பதால் (Scatter) முடிவுகள் துல்லியமாக கிடைக்கப்பெறாது.

ஐன்ஸ்டீனின் அற்புத ஆண்டு

இன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் வழிகாட்டி(GPS), நுண்ணலை அடுப்பு (Microwave Oven) முதல், உலகையே அழிக்க வல்லமை படைத்த அணு ஆயுதம்(Atomic Bomb) வரை உருவான அனைத்தும் அந்த மூளையில் தோன்றிய சிந்தனையே காரணம். குறிப்பாக இன்றைய மருத்துவ துறையில் புற்றுநோயின் வீச்சை தடுக்க உதவும் கதிர்வீக்க சிகிச்சை, சிந்தனையின் அதிமுக்கிய பயன்பாடுகளில் ஒன்றாகும்.

பாபிலோனின் மாபெரும் பணக்காரர்

அகழ்வாராய்ச்சியில் கிடைத்த களிமண் பலகைகளில் (Clay Tablets) உள்ள குறிப்புகளை கண்டடைந்து,  அன்று புழக்கத்திலிருந்த நிதி கோட்பாடுகளை ஆராய்ந்து, அது எக்காலத்திற்கும் பொருந்தும் என்று உய்த்துணர்ந்து, எல்லோரும் பயன் பெற வேண்டி, சாலை வரைபட(Road Map) தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்த திரு.ஜார்ஜ் சாமுவேல் கிளாசான், 1920களில் தன் செலவில் துண்டு பிரசுரங்களாக அச்சடித்து விநியோகித்தார். அமெரிக்க வங்கிகளும், காப்பிடு நிறுவனக்கும் இதன் முக்கியத்துவம் அறிந்து இதை ஊக்குவிக்கும் பொருட்டு பெருமளவில் அவர்களும் அச்சடித்து விநியோகித்தனர். உலகில் தலைசிறந்த நிதி ஆலோசகர்களின் பரிந்துரை பட்டியலில் இடம் பெறும் ஒரு பிரதான புத்தகம்.

தானூர்திகள் (எ) தானியங்கி வாகனங்களும் அதன் செயற்கை நுண்ணறிவும்

அன்றாடத்தில் தன்னிச்சை – வாகனங்கள் ஓட்டத் தெரியாதவர்கள் இனி யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம். இது சார்ந்து புது பயன்பாடுகள் உருவாகும். உதாரணம் – குழந்தைகளை பள்ளிக்கு இட்டு செல்ல, கூட்டி வர, பெற்றோர், அயலவர், பொது போக்குவரத்துக்கு அவசியப்படாது. இரவு போன்ற நேரங்களில், உரிமையாளருக்கு ஊர்தி பயன்படாத போது, வெறுமனே இருக்காமல், தானே வாடகை ஊர்தியாக செயல்பட்டு பணம் ஈட்டி தருவது போன்ற வருமானத்திற்கான சாத்தியக்கூறுகளும் ஏற்படலாம்.