ஆப்கானிஸ்தானின் தொடரும் துயரங்கள்

இரண்டாம் உலகப் போரைத் தவிர்த்து அமெரிக்கா நடத்திய அத்தனை போர்களும் தோல்வியிலேயே முடிவடைந்திருக்கின்றன. அது வடகொரியாவாக இருந்தாலும் சரி அல்லது வியட்நாம், இராக், ஆப்கானிஸ்தான் என அத்தனை போர்களிலும் அமெரிக்கா தோல்வியுடனேயே திரும்பியிருக்கிறது. வடகொரியாவில் போரை நடத்திக் கொண்டிருந்த அமெரிக்க ஜெனரல் வடகொரியர்களால் பிடிக்கப்பட்டு சிறைக்கைதியாக இரண்டு வருடம் இருந்த அவமானமும் அதில் அடக்கம்….மற்றபடி அமெரிக்கா சென்றவிடமெல்லாம் துரதிருஷ்டவசமாகத் தோல்வியைத் தழுவியிருக்கிறது.

ஓய்வுக் காலச் சேமிப்பும் அதை அபகரிக்க அரசாங்கம் நடத்தும் போரும்

ஒரு சேமிப்புத் திட்டத்தை ஆரம்பித்து அமெரிக்க மக்களை வலுக்கட்டாயமாக வேலைக் காலத்தில் சேமிக்க வைத்துப்பின் அவர்களது ஒய்வுக் காலத்தில் வட்டியுடன் அச்சேமிப்பைத் திருப்பாமல், பிற்பாடு பங்கேற்பவர்கள் பணத்தை ஒய்வு பெற்றவர்களுக்கு அளிக்கும் ஒரு பான்சி (ponzi) திட்டத்தை அரசாங்கம் நிறுவியது. இத்திட்டம் மற்ற பான்சி திட்டங்களைபோலவே, பங்கேற்பவர்களிடமிருந்து வரும் தொகை ஒய்வு பெற்றவர்களுக்குக் கொடுக்கப்படும் தொகையைவிட அதிகமாக இருக்கும் வரைதான் நடைபெறும்.

மிளகு -அத்தியாயம் நான்கு

அரைக் குல்லாவை எடுத்து வா என்று மலைப் பிரதேசத்திலிருந்து வந்திருக்கும் புதுப் பணியாளனுக்கு உத்தரவு தருகிறார் பிரதானி. அவன் உள்ளே ஓடிப்போய் பளபள என்று நீலப்பட்டில் நெய்த மார்க்கச்சை ஒன்றை எடுத்து வந்து பவ்வியமாக நீட்டுகிறான்.
”இது எதுக்கு எனக்கு? கச்சை தலைக்கு மேலே போச்சுன்னா எல்லா அதிகாரமும் செல்வமும் செல்வாக்கும் அதுக்குத்தான்”.
பிரதானி சொல்ல, புரியாமல் மறுபடி உள்ளே போய் சிவப்புக் கச்சையை எடுத்து வந்து தருகிறான்.

வாழ்ந்த இரங்கல்கள்

உனக்கெல்லாம் நல்ல சாவே வராது என்கிற சாபம் மிக பிரபலம். இறப்பை விடக் கொடியது அது நிகழும் விதம். உறவினர் பேருந்து விபத்தில் இறந்த பொழுது அவருடன் இறந்தவர்கள் எட்டு பேர். உரு தெரியாத அளவிற்கு கோரமான விபத்து அது. தகவல் தெரிவிக்கப்பட்ட போது அனைவரும் அரசு மருத்துவமனைக்கு வந்தோம். வாழ்வில் அரசு மருத்துவமனைக்கு செல்லாத அந்த உறவினர் சவக்கிடங்கில் எந்த நிலையில் இருக்கிறாரோ என்று நினைக்கும் போதே மனம் நொந்தது. உடலை அடையாளம் காட்ட ஒருவரை அழைத்தார்கள். சாக அழைத்தது போல் அனைவரும் பின்வாங்கினர்.

என் கனவு

“பணத்தை அந்தப் பெண்ணிடம் கொடுக்காதே மைக்கேல், நீயே நேரில் போ. அவள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதைக் கொஞ்சம் பார்.. அவளைப் பார்க்க வேண்டாம் என்று நினைத்தால் பார்க்க வேண்டாம். அவன் அங்கே இல்லை, யாருமே அங்கே இல்லை”
மைக்கேல் இவானோவிச் உடல் நடுங்க ஆவேசமாகக் கத்தினார்.
“என்னை ஏன் இப்படி வதைக்கிறாய்.. இது விருந்தினர்களுக்கு இழைக்கும் பாவமில்லையா”
அலெக்ஸாண்ட்ரா டிமிட்ரேய்வ்னா இடத்தை விட்டு எழுந்திருந்தாள். அவ்வாறு அவரிடம் முறையிட்டதில் நெகிழ்ந்து போயிருந்ததால் அவள் கண்களில் கண்ணீர் வரப் பார்த்தது.

தடக் குறிப்புகள் – 4

This entry is part 4 of 4 in the series தடக் குறிப்புகள்

“எங்களுடைய பாரம்பரிய முறைகள்தான் எங்களைக் காப்பாற்றப் போகின்றன- ஸ்வீட்க்ராஸ், புகைபிடிக்கும் குழாய், நீராவிக் குளியலறை, அவைதான் எங்களைக் காப்பாற்ற முடியும். போதைப் பழக்கமும், போதை மருந்துகளும், வறுமையும் எங்கள் வாழ்க்கை முறையாகிவிட்டன, பண்பாடாகவே ஆகி விட்டன என்கிறார்கள் எங்கள் முதியோர்கள், ஆனால் நாங்கள் அதை மாற்ற வேண்டும் என நான் நினைக்கிறேன்.” அவர் உற்சாகமாகப் பேசினார். “நாங்கள் எங்கள் பாரம்பரிய முறைகளைக் கொண்டு இதையெல்லாம் மாற்ற வேண்டும். அதற்குத்தான் நான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.”

”ஆசிய அமெரிக்கர்கள்” – அமெரிக்காவில் மிகையாகும் வெறுப்பரசியல்

இன்று அமெரிக்க மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் மட்டுமே உள்ள இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி பதவி வரை எட்டியிருப்பது மற்ற அனைவரின் கண்களை உறுத்திக் கொண்டேதான் இருக்கிறது. தற்போது அமைந்திருக்கும் பைடன் அரசில் பல்வேறு உயர் பதவிகள் இந்தியர்களுக்குத் தாரை வார்க்கப்பட்டிருப்பதாக பலரும் வெளிப்படையாகவே புலம்பி வருவதையும் மறந்துவிடக் கூடாது.
சீனர்களிடம் காட்டப்படும் வெளிப்படையான வெறுப்புணர்வு, இந்தியர்களிடம் இலைமறையாக காட்டப்படுகிறது என்பதுதான் தற்போதைய நிதர்சனம்.

மலைமேல் பறக்கும் வீடு, பிறந்தநாள் பலூன் & நீரால் நிறைந்தவை

பார்த்திருக்க
நீராய் நிறைந்தெழுந்து
வானம் முழுதும்
நிரம்பிய குளத்திற்க்குள்
அவன்
ஏற்கனவே குதித்திருந்தான்

காவிய ஆத்மாவைத் தேடி… – 2

This entry is part 2 of 3 in the series காவிய ஆத்மாவைத் தேடி

ஒரு கவிதை வரி வருகிறது. ‘சந்தனுவுக்குக் கங்கையில் வீடு’ என்று. சந்தனு பற்றி மகாபாரதம் மூலமாகத் தெரிந்துள்ளதால், கங்கையை மணந்தவன் சந்தனு என்று நாம் பெற்ற இதிகாசப் படிப்பறிவால், சந்தனுவுக்குக் கங்கைக் கரையில் வீடு என்ற இலக்கணப் பொருளை விட மூன்றாவது விதமாக ஒரு பொருள் நமக்கு ஸ்புரிக்க முடியும். அதாவது ‘கங்கையைத் தன் மனைவியாகக் கொண்டவன்’ என்று. இந்தப் பொருளை ‘கங்கையில் வீடு’ என்ற சொற்றொடர் நேரிடையாகவோ, தொடர்பு முறையாகவோ – அபிதையாகவோ, இலக்கணையாகவோ உணர்த்தாது. படிப்பவருடைய இதிகாச அறிவு, சொல்லப்பட்ட பெயர், சொல்லவந்த பொருளின் முன் பின் தொடர்ச்சி, சூழல் இவற்றையெல்லாம் பொருத்து, தேர்ந்த ரசனை உணர்வு காரணமாக, சொல்லாமல் சொன்ன பொருளாக, படிப்பவர் மனத்தில் பட்டெழுகின்ற பொருளாக அறியக் கிடக்கும். இந்த அர்த்தத்திற்கு ‘த்வனி’ என்று பெயரிட்டார் ஆனந்தவர்த்தனர்.

பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்

நீங்கள் திடுக்கிடுவீர்கள், திகைப்பீர்கள்; கணினியின் அத்தனைத் தகவல்களையும் மீள் கட்டமைப்பது என்பது சாதாரணமான ஒன்றல்ல; கேட்பதைக் கொடுத்துவிட்டால் உங்கள் தொழில் தேங்காது முன்னே செல்லும். ஆயினும் நீங்கள் மன்றாடிவிட்டு, பிட்காயினாகவோ வேறேதும் கிரிப்டோ கரன்ஸியாகவோ, அனேகமாகப் பெரும்பாலும் ரஷ்யாவைச் சேர்ந்த அந்தக் கொந்தர்களுக்குத் தருவீர்கள். இந்த விவகாரத்தை நீங்கள் காவல் துறையில் கூட பதிவு செய்ய மாட்டீர்கள்- உங்களுக்குத் தெரியும் அது வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த கதையாக பல நேரங்களில் ஆகிவிடும்…

மூத்த கதைசொல்லி – டெம்சுலா ஆவ்

ஆறு கற்கள் : Ao நாகர்கள் வட கிழக்கு இந்தியா நாகலாந்தின் மொகோக்சுங் மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட பெரும்பான்மை நாகர் இனப் பிரிவு. Ao நாகா தொன்மத்தின் படி அவர்களின் மூதாதையர் (ஆண் -3, பெண் -3) ஆறு கற்களில் இருந்து உதித்தவர்கள். அவர்கள் இயற்கையை வழிபட்டனர்.

ஆபரேஷன் அணில்

” என்ன தேடுகிறீர்கள்” என்று அவர் கேட்க, இவர் “அணில் ஒன்று மேலே வர உதவ முயல்கிறோம்” என்றார். அவர் சொன்ன அந்த வார்த்தை எனக்கு மிகவும் பிடித்தது. ஒரு சிறு உயிரை இவ்வளவு மதிக்கிறாரா மனுசன் என்று நினைத்தேன்.
“பரவாயில்லை, வாளி கொண்டு முயன்றிருக்கிறீர்கள், அணிலுக்கு வாளிக்குள் ஏற தெரியதல்லவா” என்று அந்த அமெரிக்கர் கயிற்றின் நீளம், வாளியின் உயரம், தண்ணீர் கிடந்த ஆழம் இவற்றை தனக்குள்ளே பேசியவாறே அனுமானம் செய்துகொண்டு அதி பயங்கர மீட்பு குழுவின் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கும் தீவிரத்துடன் எங்கள் இருவரையும் பார்த்தார்.

தொட்டாலே கண் எரியும் மிளகாயா!?

இந்த வரிசையில் இன்னும் சேர்ந்திருக்காத சிறப்பிடம் பெற்றவை என சொல்லப்படும் 2,480,000 SHU கொண்ட டிராகன் மூச்சு மிளகாய்களையும், (Dragon’s Breath Pepper), பெப்பர் X எனப்படும் (Pepper X) 3,180,000 SHU கொண்ட சூப்பர் ஹாட் மிளகாய்களையும் வெறும் கைகளால் தொட முடியாது. அவற்றை கையுறைகளை அணிந்து கொண்டு கண்களில் விதைகள் தெறித்து விடாமலிருக்க பாதுகாப்பு கண்ணாடிகளையும் அணிந்துதான் கையாளவேண்டும்.

ஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை

This entry is part 2 of 72 in the series நூறு நூல்கள்

ஷோபாசக்தியின் கதைகள் மேல் பார்வையில் அங்கதங்களோடு வந்தாலும், கவனத்தைக் கோருகின்றன. அசோகமித்திரன் வீட்டு வாழ்க்கையின் வன்முறைகளை சாதாரண மொழியில் எழுதி படிப்பவரை ஏமாற்றுவது போன்றது இது.
உதாரணமாக, ரொக்கிராஜ் இந்திராகாந்தி கொல்லப்படட செய்தியை
ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டு வரும்போது அவன் தந்தை கொரில்லா “பத்தாயிரம் சனத்துக்கு கொட்டையை வெட்டி நலம் அடிச்சவள் செத்துப் போனாள்….அதுக்கு இந்தப் பொடி என்ர சோத்தைத் திண்டு போட்டெல்லோ லஸ்பீக்கர்ல வசனம் பேசுது” என்று கருத்து விடுகிறான்.

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

சாலையில் நடந்த மக்கள்
ஈஷர் ஓவியம் போல்
இங்கும் அங்கும் என
நடந்துகொண்டிருந்தார்கள்
அது எது
எனக்குக் கேட்காத ஒன்று
யாரோ ஒருவர் தனித்து
கேட்டுக்கொண்டிருக்கிறார்

விஞ்ஞானத் திரித்தல் முறைகள் – பகுதி 2

This entry is part 30 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

எந்த ஒரு தேர்ந்த விஞ்ஞானியும் பறக்கும் தட்டுக்களைப் பற்றிப் பேசுவதில்லை. ஆனால், சிலர் இரவில் பார்த்ததாகக் கூறுவர். மேலும், இது வேற்றுக் கிரக ஊர்த்தி என்று கதை கட்டிவிடுவார்கள். இவர்களுக்குத் தனியாக இயக்கம், இணையதளங்கள் என்று ஒரு பெரிய இயக்கமே உள்ளது. சிலர் கொஞ்சம் ஓவராக, வேற்றுக் கிரக மனிதர்களைப் பார்த்ததாகவே கதை கட்டிவிடுவார்கள்.

காலம் உறைந்த வீடு & தவறுகளும் ரகசியங்களும்

தவறுகளை
ரகசியங்களாகவே
புதைப்பதற்காக
மறைக்கப்படுகிற உண்மைகள்
பொய்களாகப் பூத்து நிற்க
சொல்லப்படுகிற பொய்களோ

கசடதபற – மின்னூல்கள்

‘கசடதபற’ சிற்றிதழ்களுக்கு முன் ‘கவனம்’ சிற்றிதழின் முழுத்தொகுப்பையும் மின்னாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். பல தமிழ் எழுத்தாளர்களிடம் தொடர்ந்து பேசி அவர்களுடைய புத்தகங்கள் மின் வடிவம் பெறவும் உதவி செய்து வருகிறார். விமலாதித்த மாமல்லனின் இந்தப் பணி நம் போற்றுதலுக்கும் நன்றிக்கும் உரியது.

சொல்வனம் வழங்கும்… கிண்டில் புத்தக வெளியீடு

சொல்வனம் வெளியீடாக “வீடும் வெளியும்” நூல் கிடைக்கிறது. இது அமேசான் கிண்டில் மூலமாகக் கிடைக்கும் சொல்வனம்.காம்-இன் மூன்றாவது புத்தகம். முந்தைய இரண்டும் சிறப்பிதழ்கள் என்றால், இந்தப் பதிப்பு எங்கள் ஆசிரியர் குழுவில் ஒருவரான ச. அனுகிரஹாவின் படைப்புத் தொகுப்பு.