அஜிதனின் ‘அல் கிஸா ’

பெரும்பாலையில் துவங்கி இன்று வரை ஆயிரத்து முன்னூறு வருடங்களாக உபாசிக்கப்படும் நிகழ்வு ஒன்று இசையால், வரலாற்றின் துயரத்தால், காதலால் அதீத உருவகம் கொண்டு எழுச்சியடையும் கதை. படிக்கத்  துவங்கிய உடனே உள்ளிழுத்து வாசகரை அஜ்மீர் நகரத்தின் மேலே ஒரு மேகம் போல நிலை கொள்ள வைத்து விடுகிறது. அங்கிருந்து நாம் காண்பது மக்கள் செறிவு பல ஆறுகள் போல் ஒழுகும் காட்சி.