சந்ததிகளை உருவாக்கும் உழைப்பு

இனவிருத்திக்களம் பரம்பரைப் பழக்கமாக பொதுமங்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது. அடிப்படையாகவே அது உயிரைப் பேணிப் பாதுகாக்கும் பணி. எனவே சந்ததிகள் உருவாக்க உழைப்பிற்குத் (reproductive labour) தலையாயவர் என்கிற வகையில் பெண்ணுக்கு பொதுமங்களுடன் திடமான இணைப்பு நிலவுகிறது; வரலாற்றில் பெண்கள் பெரும்பாலும் பொதுமங்களின் ஆதரவில் வாழ்ந்து வந்தனர். பின்னர் அந்த இணைப்பு பறிபோனதால் மிகுந்த வேதனைக்குள்ளானார்கள்.

முதலியத்தை எதிர்க்கும் பொதுமம்

நீரும் காற்றும் தாராளமாகக் கிடைக்கின்ற வற்றாத வளங்களாக இருப்பதால் அவை பொது நுகர் பொருளாக நீடிக்கின்றன என்று காலங்காலமாக நினைத்திருந்தோம். ஆனால் பிரத்யேகமான கொள்கலனில் இருக்கும்போதுதான் தண்ணீர் தனியார் சொத்தாக முடியும் என்கிறார் ஹியூகோ டே க்ரோட். அதாவது பாட்டிலில் அடைக்கப் பட்ட கனிம நீர் வருகைக்கு நுகர்வோரே காரணம் என்கிறார்.