“சஜிதா அத்தை எனக்காக ஆசையா வெயிட் பண்ணிருப்பாங்க. போக விடாம பண்ணிட்டீங்கள்ல?” என்று கறுவினேன். பதில் ஏதும் பேசாமல் அம்மா தன் வேலையில் கவனமாயிருந்தார். கையில் கிடைத்த சர்க்கரை டப்பாவை பலம் கொண்ட மட்டும் வீசிக் கீழே எறிந்ததில் அது உடைந்து பிளந்து சமையலறை முழுவதும் சர்க்கரை சிதறியது.
Author: ஹரீஷ்
காண்பவை எல்லாம் கருத்துகளே – 2
நம் சிந்தனைகள் எல்லாவற்றுக்கும் பின் ஒரு சுயம் இருக்கிறது. நம் எண்ணங்கள் அனைத்தும் ஏதோ ஒன்றினைக் குறித்து நிகழ்கின்றன. ஏதோ ஒரு விஷயத்தைக் குறித்து நம் மனது எண்ணுகிறது. நாம் எந்த விஷயத்தைப் பற்றி எண்ணுகிறோமோ அது நம் அகத்தில் ஒரு அறிபடுபொருளாக(Object) ஆக்கப்படுகிறது. நமது சுயத்தைப் பற்றி சிந்தித்தாலும் சுயம் ஒரு அறிபடுபொருளாக ஆக்கப்பட்ட பின்னரே சிந்திக்கப்படுகிறது. இருப்பினும் சுயம் முழுமையாக அறிபடுபொருளாக ஆக்கப்படுவதில்லை. சுயத்தை எவ்வளவு தான் நாம் அறிபடுபொருளாக ஆக்க முயற்சித்தாலும் அந்த மாற்றத்தை அடையாத சுயம் எஞ்சி நிற்கிறது. இதை மீறுநிலை சுயம் (transcendental ego) என்கிறார் ஃபிஷ்ட.
காண்பவை எல்லாம் கருத்துகளே
பெர்க்லியின் தத்துவமே முதலாவதும் முழுமையானதுமான கருத்து முதல்வாதப் பார்வை கொண்டது என்று கருதப்படுகிறது. இவர் புறத்தில் காண்பது எல்லாமே நம்மில் எழும் கருத்துக்களையே என்கிறார். இப்படிச் சொல்வதினால் ஐயவாதிகளால் நாம் காணும் காட்சியை ஐயத்திற்குள்ளாக்க முடியாது என்கிறார். காணும் காட்சி நம்மைத் தாண்டிய பொருளாக இருக்கும்போதே அதன் மீது ஐயம் எழுப்பமுடியும். காணும் காட்சி நம்முடைய கருத்துக்களாக இருக்கும்பட்சத்தில் அவற்றின் உண்மை நிலையைப் பற்றியும் அவற்றின் இருப்பைப் பற்றியும் ஐயப்படவே முடியாது என்கிறார். இருப்பதால் தான் காண்கிறோம். இருப்பு உடையது காண்பதற்குரியது – Esse est percipi என்பது பெர்க்லியின் பிரபல கூற்று.
ஒரு எழுத்தாளரின் ஆதர்சங்கள், விவரணைகள் மீது கூர்ந்தநோக்குடன்
ஜெர்மானிய எழுத்தாளர் ஸீபால்ட் வகைப்படுத்த இயலாப் புத்தகங்களைப் படைத்துள்ளார். புனைவு, பயணம், மெல்லிய மறைதலுடன் சொல்லப்பட்ட சுயசரிதை மற்றும் புதிரான குறிப்பற்ற புகைப்படங்கள் என்று பலவற்றைக் கலந்து மறைந்து கொண்டே இருக்கும் மனித அனுபவத்தின் சுவடுகளை மீட்டெடுக்கும் தனது படைப்புகளில் பயன்படுத்தினார்.
வரலாறு குறித்து ஹேகல்
ஹேகல் இவ்வளர்ச்சியை மேலும் பல விவரங்களுடன் நான்கு வகையாக வகுத்துக்காட்டுகிறார். கிழக்கத்திய உலகில் அரசனே விடுதலையுடையவன் என்று அறிந்திருந்தனர். விடுதலையின் ஆன்மா ஒரே ஒரு மனிதனில் தோற்றம் பெற்றிருப்பதால், அம்மனிதனின் விடுதலையானது பிறப்பெனும் ஒர் எதர்ச்சை நிகழ்வால் நிர்ணயிக்கபட்டதால், அவ்வகை விடுதலையானது முற்றிலும் தற்செயலானது. மேலும், மக்கள் தங்களுக்குள் இருக்கும் அகவய விடுதலையை அறியாதிருந்தனர். அதனால் ஹேகல் இதை ஆன்மாவின் வளர்ச்சியின் பிள்ளைபருவம் எனக் கருதினார்.
ஒருவரை தத்துவவாதியாக ஆக்குவது எது?
இக்கட்டுரை ‘what makes a philosopher’ என்ற ஆங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு. இக்கட்டுரையில் வரும் சில கருத்துக்களுக்கும், கலைச்சொற்களுக்கும் கூடுதல் வரையறையும் அறிமுகமும் வேண்டுமென்று கருதியதால் அவை கட்டுரைக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தத்துவவாதியாக ஆக்குவது எது? இது மிக அடிப்படையான கேள்வியாக இருப்பினும் இதன் பதில் நாம் நினைப்பதை “ஒருவரை தத்துவவாதியாக ஆக்குவது எது?”
பொய்யுலகை அளிக்கும் தீயசக்தி
அறிவின் தேடலில் ஈடுபடுபவர்கள் தங்களின் தேடலில் தெளிவு பெற அவர்கள் ஆராயும் விஷயத்தை ஒரு புனைவு தருணத்திற்குள் வைத்துப்பார்ப்பது வழக்கம். Thought experiment என்ற இந்த முறை நாம் வழக்கமாக அடைந்திருக்கும் பழக்கப்பட்ட பார்வைகளை உதறிவிட்டு புதிய பார்வைகளைப் பெற உதவுகிறது. பல சிந்தனைச் சோதனைகள் அதைப் படைத்தவருக்கு புதுப்பார்வைகளைப் பெற உதவுவதுடன் காலத்திலும் புதிராக நிலைத்துவிடுகின்றன. இவ்வகைச் சிந்தனைச் சோதனைகள் புனைவை படைப்பவர்களுக்குப் புனைவிற்கான விதையாக அமைகின்றன்.
கிவி
மௌனமாய்த் தலையசைத்து விட்டுக் கவரை வாங்கிக் கொண்டு கிளம்பியவரை நிறுத்தியது “ அண்ணே” என்று மீண்டும் செல்வேந்திரன் அழைத்த அதிகாரக் குரல். அண்ணே என்கிற அவன் விளிப்புக்கும் அவன் குரலில் உள்ள தொனிக்கும் சற்றும் பொருந்திப் போவதில்லை. இதற்குப் பேசாமல் அவன் நரசிம்மா என்றே அழைக்கலாம் என்று எண்ணிக் கொண்டு திரும்பிப் பார்த்தார். “ வழக்கம் போல எதுனா சினிமா போஸ்டரயோ கட்டவுட்டையோ பராக்கு பாத்துக்கினு வேலைய கோட்டை விட்டுறாதீங்க. சீக்கிரம் முடிச்சிட்டு வந்து சேருங்க. கடைல நெறைய வேலை கிடக்கு. நான் வேற வெளிய போவணும்” என்றான்.
மேலை தத்துவம் பகுத்தறிந்த கடவுள்
கடவுள் இருப்புக்கான வெவ்வேறு வகையில் வெளிப்பட்டாலும் அடிப்படையில் இவ்வாதங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. இருப்பியல்வாதம்(ontological argument), பிரபஞ்சவியல்வாதம்(cosmological argument), இலக்கியல்வாதம்(teleological argument. இருப்பியல்வாதம் கடவுளின் வரையறையைக் கொண்டு கடவுள் இருப்புக்கு வாதங்களை முன் வைக்கும் முறை. இரண்டாவது இயற்கையின் பொது அம்சங்களைக் கொண்டு கடவுளை அதன் அவசிய காரணமாக முன் வைக்கும் முறை. இதன் பெயர் பிரபஞ்சவியல்வாதம். மூன்றாவது இயற்கையின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தைக் கொண்டு கடவுளின் இருப்புக்கான வாதத்தை முன் வைப்பது இலக்கியல்வாதம்.
யுடோபியா
வாசலிலேயே மெர்சி மிஸ் காத்திருந்தார். வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி நடந்து கேட்டைத் திறக்கும் வரை அவர் முகம் பார்க்காமல் தவிர்த்தேன். நல்ல மாதிரி தான். இருந்தாலும் இதோடு எத்தனை முறைகள். வழக்கமான சங்கடப் பார்வையோடு வழக்கமாய்ச் சொல்வது போல் “சாரி மிஸ் “ என்றேன். “இட்ஸ் ஓகே. ஆப்டர் ஆல் என் பொண்ணு மாதிரி தானே” என்றார். இன்றைக்கு இதைச் சொல்கிறார். பெரும்பாலான நாட்களில் ஏதும் சொல்லாமல் புன்னகைத்து விட்டுக் கிளம்பி விடுவார். அவர் கண்களை சிரமப்பட்டு நேராய்ப் பார்த்தேன். நிச்சயம் அதில் ஒரு சோர்வும் சலிப்பும் இருந்ததாய்த் தோன்றியது. இருந்தும் வேறு வழியில்லை.
மரி
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு யாரையும் எதுவும் கேட்காமல் நானே “ எட்டு டீ” என்று சொல்லி விட்டு சற்றுத் தள்ளி நின்று சோம்பல் முறித்துக் கொண்டிருந்த பார்த்தியருகே போய் நின்றேன். எதுவும் பேசிக் கொள்ளவில்லை இருவரும். கையைக் கட்டிக் கொண்டு இருளை வெறிக்கத் துவங்கினான். மெல்ல அவன் தோளில் கை போட்டேன். அமைதியாய் இருந்தான். நெடுஞ்சாலையில் விரையும் வாகனங்களின் ராட்சச சப்தத்தையும் மீறி அங்கே தொடங்கி சாலையிலிருந்து விலகி நீண்டிருந்த புதர்க்காட்டிலிருந்து ராப்பூச்சிகளின் சப்தம் கனமாய் ஒலித்தபடியிருந்தது. காற்றில் லேசான மூத்திர வீச்சம் கலந்திருந்தது.
ரெகோ
[ரெகோ] யோசனையாக அரியணையின் மேல் கை வைத்து நின்றான். பின் மெல்லத் திரும்பி நடந்து அந்த மெல்லிய இரும்புத் திரையை விலக்கிக் கொண்டு அரண்மனைக்குள் சென்றான். அவனுக்கு யோசிக்க அவகாசமும் தனிமையும் தேவையாக இருந்தது.
வெளியே வந்தவனை மனைவி முறைத்தாள். வெகு நேரமாகக் கதவைத் தட்டியபடியே இருப்பதாகவும் அவன் கதவைத் திறக்காமல் எரிச்சல் மூட்டியதாகவும் சொல்லி முகத்தை சுருக்கினாள். அவன் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான். தலை குனிந்திருந்தது. பின் அவன் கையில் ஒரு வயர் கூடையைத் திணித்து ஒரு தேங்காய் மற்றும் பச்சை மிளகாய் கொஞ்சமும் அவள் அம்மாவுக்கு கால் விரலிடுக்குகளில் அரிப்பிருப்பதால் சைபாலும் வாங்கி வரச் சொல்லிப் பணித்தாள்.
நினைவுகளால் ஆனது
தன் பெண் வீட்டில் தங்கியிருப்பவர் எங்களைப் பார்க்க வந்திருந்தார். ஊர்க் கதைகள் பேசிக் கொண்டிருந்தவர் எங்கள் வீட்டை விலைக்கு வாங்கிய பாய் பற்றிக் குறிப்பிட்டு ஏதொ சொல்ல, வீடு, இரவில் சப்தமின்றி அறைக்குள் புகும் சர்ப்பம் போல் எங்கள் பேச்சினூடே நுழைந்து விட்டது. “எங்காத்தைப் போய் பார்த்தேளா” என்று அப்பா சிரித்துக் கொண்டே கேட்டார். அந்தச் சிரிப்பு அவரைப் பொறுத்தவரை அது ஒரு சாதாரண, சில நொடி மௌனத்தை நிரப்ப கேட்கப்பட்ட கேள்வி மட்டுமே என்று அறிவித்தது.
பவளமல்லி
எது என்னைத் தடுத்ததென்று தெரியவில்லை.சொல்லவில்லை. மீண்டும் நினைவுகளின் அலைக்கழிப்பு. இந்த முறை அம்மா அதிகமாக வந்து போனாள். ஜன்னல் வழியே பார்வையை ஓட விட்டேன். மழை வரும் போலிருந்தது. ஒரு காபி இதமளிக்கும் போல் தோன்றியது. ஓயாமல் இங்குமங்கும் ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்களின் மீது கம்பளி போர்த்தினாற் போல் அடக்க ஒரு காபியால் முடியக் கூடும்.