கவிஞர் ரொபெர்த்தோ பொலான்யோ

என்னிடமிருந்து ஒருபோதும் போய்விடாதே.
எனது காலடிகளையும் எனது மகன் லாட்டரோவின் காலடிகளையும்
நீ கவனித்துக் கொள்
மீண்டும் ஒருமுறை எனது முதுகெலும்பின்மீது
உனது விரல் நுனிகளை உணர்வதற்கு என்னை அனுமதி

அம்பையின் அண்மைக்காலக் கதைகளும் மூப்பியலும்

முதியவர்களின் மரணங்களும் குடியிருப்புப் பகுதிகளின் அழிவுகளுமாக இந்தச் சிறிய கதை முழுவதும் நிரம்பி வழிந்து நம் மூச்சை அடைக்கிறது. கதையின் கடைசியில், ஆரண்யங்களை நெருப்பிட்டு அழித்து இந்திரப் பிரஸ்தம் எழும்பிய புராண இதிகாசத் தொன்மங்களையும் அம்பை இணைக்காமல் இல்லை. ஒரே தம்மில் மூச்சைப் பிடித்துக்கொண்டு அத்தனை கதைகளையும் அடர்வனம் போல ஒரு பிழையும் இல்லாமல் எழுதியிருக்கிறார். அப்படியும் கதை 11 பக்கத்தில் முடிந்துவிடுகிறது. வெற்றிகரமான சிறுகதைகளின் எண்ணற்ற வடிவங்களில் இதுவும் ஒன்று.