சித்தப்பா ஒருநாள் காணாமல் போனார். எங்கெங்கெல்லாமோ தேடினார்கள். ஒரு பயனும் இல்லை. சித்தி துளி கூட கலங்கவில்லை. உறுதியாக இருந்தாள்.
‘’அவருக்கு எங்கயோ போகணும்னு தோணியிருக்கு. அதான் போயிருக்கார். நிச்சயம் திரும்ப வருவார்’’
ஆசிரியர்: பிரபு மயிலாடுதுறை
விடுதலை
குருநிலையை சுற்றி இருக்கும் ஐந்து கிராமங்களுக்கு குரு இரண்டு சீடர்களை கல்விப்பணிக்காகவும் மருத்துவப் பணிக்காகவும் அனுப்பி வைப்பார். யாரேனும் கற்றுக் கொடுக்க சொன்னால் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பார்கள். யாரேனும் உடல்நிலை சரியில்லை என்று சொன்னால் அவர்களுக்கு என்ன மருத்துவம் என்று சொல்வார்கள். மருத்துவம் என்றால் சிகிச்சை அல்ல. நோயாளியை எதிரில் அமர வைத்து சில நிமிடங்கள் எதிராளியின் கண்களை மட்டும் நோக்குவார்கள். ஐந்து நிமிடம் . அதிகபட்சமாக பத்து நிமிடம். உடல்நிலையில் என்ன கோளாறு என்பதை மட்டும் சொல்லி விட்டு அதற்கு வைத்தியம் பார்க்கச் சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விடுவார்கள்.
நீரில் எழுத்தாகும்
நடராஜனுக்கு வந்த கடிதத்துடன் மேலும் சிலருக்கு வந்த கடிதங்களையும் கொடுத்து விட்டு அனுமந்த ராவ் புறப்பட்டார். ராவ் குருஜியின் மானசீக சீடர். சென்னகிரி குன்றின் குகைகளில் வசிப்பவர்களுக்கு தனது சொந்த ஆர்வத்தால் கடிதங்களைக் கொண்டு வந்து தருகிறார். குருஜியின் பாதை யோகமும் மௌனமும். குருஜி ஹடயோகி. சென்னகிரிக்கு எப்போது வந்தார் எப்படி வந்தார் என்பது யாருக்கும் தெரியாது. பல நாட்கள் சர்வ சாதாரணமாக உணவு இல்லாமல் அவரால் இருக்க முடியும். எளிய ஆசனங்களை நீண்ட நேரம் செய்வது அவரது வழிமுறை. மேய்ச்சலுக்கு வரும் இடையர்கள் அவர் நாளின் பெரும் பொழுது பயிற்சி செய்து கொண்டிருப்பதையும் மௌனத்தில் ஆழ்ந்திருப்பதையும் கண்டு ஊரில் சொன்னார்கள்
அனாயாசம்
அம்மா மௌனமாக யோசித்தாள். ஒரு பெருமூச்சுக்குப் பின் பேச ஆரம்பித்தாள். ‘’மனுஷாள் எல்லாருமே சாவைக் கண்டு பயப்படறா. ஏன்னா சொந்த பந்தங்களோட இருக்கறதயும் லௌகிக சந்தோஷங்கள்ல மூழ்கியிருக்கறதலயும் மட்டுமே வாழ்க்கைன்னு நம்பறா. அப்படிப் பட்டவாளுக்கு சாவுன்னு சொன்னா பயம் வந்துடுது. சாவுக்கு அப்பறம் நாம என்ன ஆவோம்னு தெரியலயேங்கற பயம். அடுத்த ஜென்மம் பத்தி பயம்.
காகம்
திவாகர் கூட்டையும் பொறியலையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அம்மா அவர் இலையில் மேலும் ஒரு கரண்டி வைக்க முயன்றாள்.
வியாழன்
‘’கிளட்ச், கியர், பிரேக் எல்லாத்தையும் எக்ஸ்பிளைன் பண்ணேன். பத்து தடவைக்கு மேலே கிளட்ச ரொம்ப ரொம்ப மெதுவா விட்டு வண்டி ஆஃப் ஆயிடுச்சு. கிளட்சை மெதுவா விடு. ஆக்சிலேட்டரை மெல்ல ரெய்ஸ் பண்ணுன்னு சொன்னேன். அவ சட்டுன்னு அதிகமா ஆக்சிலேட்டர் கொடுத்து வெடுக்குன்னு கிளட்சை விட்டுட்டா.’’
இருட்டு
அந்த அறைக்குள் நுழைந்ததும் முகத்தில் அறைந்த வாடை குமட்டலை ஏற்படுத்தியது. குமட்டினால் சந்தோஷுக்கு வலிக்கும். வருத்தப்படுவான். ரொம்ப கஷ்டப்படுகிறான். எல்லாம் எனக்காகத்தானா சந்தோஷ். ரசம் போன கண்ணாடி பெரிதாயிருந்த டிரஸ்ஸிங் டேபிள். அதன் ஸ்டூல் அத்தனை பழுப்பேறியிருந்தது. தொட்டால் ஒட்டிக் கொள்ளும் என பார்வையிலேயே நினைக்க வைக்கும் பிசுபிசுப்பான “இருட்டு”
இருட்டு
உடம்பு சரியாக இல்லை.
அவ்வப்போது தீப்பற்றி எரிவது போலவும் உடலில் ஏதோ ஊர்வது போலவும் இருந்தது. வீடு பூட்டியிருக்கும் போதும் சில உருவங்கள் சுவரைத் தாண்டி உள்நுழைவது போல இருந்தது.
ஆகாஷின் கால்களை அவ்வப்போது பிடித்துக் கொண்டேன். அவன் பாதத்தின் கீழே தலையை வைத்துக் கொண்டேன்.
மாற்று
பால பருவத்தில் ஆர்வமும் நம்பிக்கையும் இருக்கிறது. ஆசிர்வதிக்கப்பட்டவர்களுக்கு அது வாழ்க்கை முழுவதும் தொடர்கிறது. எங்கள் பாட்டனார் ஒருவர் நாங்கள் அடி விளையாட்டு ஆடிக் கொண்டிருந்தபோது என்னடா மெனக்கெட்டு செய்றீங்க என்றார். சொந்தக்காரர்கள் வீட்டு தூரத்தை அளக்கிறோம் என்றோம். பூமியும் வானமும் நமக்கு சொந்தம்; அதை உங்களால முழுசா அளக்க முடியுமா என்று வேடிக்கையாகக் கேட்டார்.
பிரிவு
வெயில் நம்மள சுட்டெரிக்குது. நாம மெல்ல நடக்கிறோம். நம்ம வாழ்க்கையோட சாரம் இந்த ஷணத்துல நாம உணர்ர வெக்கையும் தாகமும் தானாங்கற கேள்வி நம்மள துக்கப்படுத்துது. அப்ப ஒரு பெரிய அரச மரத்தோட நிழலைப் பாக்கறோம். அதுக்கடியில ஒரு தண்ணீர்ப் பந்தல் இருக்கு. ஒரு பானை நிறைய தண்ணீரும் அதோட மூடிமேல ஒரு பிளாஸ்டிக் டம்ளரும் இருக்கு. நாம அந்த நிழல்ல நிக்கறோம். ரெண்டு டம்ளர் மூணு டம்ளர் தண்ணீர் குடிக்கறோம். அப்ப தீர்ரது நம்ம தாகம் மட்டும் இல்ல. நம்மோட துக்கமும்தான். அந்த மரத்தை நட்டவருக்கு இந்த நாள்ல இந்த நிமிஷத்துல நாம வரப் போறோம்னு தெரியாது.
திருப்பம்
“சபரி! உங்க ஒய்ஃப் உங்களுக்காக மெழுகா உருகறாங்க. பொதுவா மனோதத்துவ விஷயங்கள்ல ஒய்ஃப் சப்போர்ட் பண்றது அபூர்வம். உங்க கனவை உங்க பயங்கள உங்க ஒய்ஃப் கிட்ட சொல்லுங்க. அப்ப இந்த விஷயத்தை ரெண்டு மனசு ஹேண்டில் செய்யும். அவங்க மனசு இயங்கற விதத்தோட ஒரு பகுதி உங்களுக்குள்ள வந்தாலே நீங்க வெளியில வந்திடலாம். ஒரு பெரிய கதவை சாவி போட்டு திறக்கறாப் போல.’’
ஃபிப்ரவரிக்கு 29 நாட்கள்
அவன் ஆரம்பங்கள் அனைத்துமே இப்படித்தான். நாள் நேரம் தேதி பொழுது அனைத்தும் துல்லியமாக இருக்கும். மனதில் அவை இன்னும் முழுமையான உயிர்ப்புடன் இருக்கின்றன. மறதி இன்னும் தீண்டவேயில்லை. அந்தக் கணங்கள் அந்த பொழுதுகள் அடர்த்தி குறைய வேண்டும். அவற்றின் இடத்தில் வேறேதாவது வந்து அமர வேண்டும். படைத்த தெய்வங்கள் கருணை வைத்தால்தான் உண்டு. கடவுள் சில விஷயங்களை ஒரு துளி மட்டுமே கொடுக்கச் செய்கிறான்.
நாகரிகம்
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். –திருக்குறள்.
நம்பிக்கை
ராத்திரி ரயிலுக்கு நேரம் இருக்குன்னா பக்கத்தில் இருக்கற குன்று மேல ஒரு சின்ன பீடம் இருக்கு. நூறு வருஷத்துக்கும் மேல அதில ஒரு விளக்கு எரிஞ்சுகிட்டிருக்கு. ஆடு மாடு மேய்க்கறவா தினமும் மேலே போய் எண்ணெய் விட்டுட்டு வறா. நான் மாசம் ஒரு தடவ போவன்.”
நூறு வருடமாக எரியும் தீபம். இங்கே வியப்புகளுக்கு குறைவே இருப்பதில்லை
காத்திருப்பு
ரயில் நிலையத்துக்கு ஃபோன் செய்து ஸ்டேஷன் மாஸ்டரிடம் விவசாயக் கல்லூரி மாணவிக்கு வீட்டுச்சாவி கிடைத்து விடும். ஆதலால் அவளது நண்பர்கள் திட்டமிட்டவாறு ரயிலில் பயணிக்கலாம். பயணத்தின் அடுத்தடுத்த நிலையங்களில் எங்காவது சாவியைத் தவற விட்டவர் சேர்ந்து கொள்வார் என்ற தகவலை அறிவிக்கச் சொன்னான். ஸ்டேஷன் மாஸ்டர் பயணியின் பெயர் சொல்ல வேண்டுமா என்றார். லக்ஷ்மி பெயர் சொல்ல வேண்டாம் என்றான்.
புள்ளரையன் கோவில்
விக்கி தன் நண்பர்களைச் சந்திப்பதற்கு என ஒரு இடத்தில் கூரை வேய்ந்து வைத்துள்ளான். ஒரு சிறு சமையலறை. கேஸ் அடுப்பு. ஜே.சி.பி வைத்து ஒரு கிணறு தோண்டியுள்ளான். அதில் கோடையிலும் வற்றாமல் தண்ணீர் இருக்கிறது. வீட்டுக்கு முன்புறம் ஒரு கயிற்றுக் கட்டில். சுற்றிலும் நெல் வயல்கள். இதைத் தாண்டி விக்கி வர வேண்டும் என்றால் அவனுக்கு இதை விடப் பெரிய இன்பம் சென்னையில் இருக்க வேண்டும் அல்லது இங்கே அவனால் இருக்க முடியாத அளவுக்கு பெரும் நெருக்கடி வர வேண்டும். இரண்டுக்குமே வாய்ப்பில்லை.
தொழுது உயர் கையினன், துவண்ட மேனியன் (5)
குழுவும் நுண் தொளை வேயினும், குறி நரம்பு எறிவுற்று
எழுவு தண் தமிழ் யாழினும், இனிய சொல் கிளியே!
முழுவதும் மலர் விரிந்த நாள் முருக்கு இடை மிடைந்த
பழுவம், வெம் கனல் கதுவியது ஒப்பது பாராய். (2162)
குழலிசையினும் யாழிசையினும் இனிமையானவளே! அடர்ந்த மரங்களில் பூத்திருக்கும் சிவந்த முருக்க மலர்கள் காடு தீ பற்றி எரிவதைப் போல காட்சி தருவதைப் பார்.
விழியின் சேல் உகள் வால் நிற வெள்ளத்து முழுகி
‘கொற்றவர், முனிவர், மற்றும் குவலயத்து உள்ளார், உன்னைப்
பெற்றவன் தன்னைப் போல பெரும் பரிவு இயற்றிநின்றார்;
சிற்றவை தானும் ஆங்கே கொணர்க எனச் செப்பினாள்; அப்
பொன் தட மகுடம் சூடப் போதுதி விரைவின் ‘என்றான். (1664)
”மன்னர், முனிவர், மற்றும் உலகத்தவர் யாவரும் மகிழ்ந்திருக்கின்றனர். தசரதன் அடையும் மகிழ்ச்சியை அனைவரும் அடைகின்றனர். சிற்றன்னை கைகேயி தங்களை அழைத்து வரச் சொன்னார்’’ சுமந்திரர் இராமனிடம் தெரிவித்தார்.
‘ஆழி சூழ் உலகம்
மண் உறும் முரசு இனம் மழையின் ஆர்ப்பு உற
இப்பாடலில் கம்பர் கோசல நாட்டின் அமைச்சர்களின் சிறப்பைக் கூறுகிறார். ஒரு நாடு என்பது மன்னனால் மட்டுமே ஆனது அல்ல. ஆக்கபூர்வமாக இயங்கும் ஒரு நாட்டில் அரசு, அமைச்சு, படை, வணிகம், வேளாண்மை ஆகியவை சிறப்பாக இருக்கும். அவ்வாறான நாட்டில் ஓர் அரசின் பணி வாணிகம் செழிக்கவும் குற்றங்களை கட்டுக்குள் வைக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இருக்கும். அவ்வாறான நிலையில் அமைச்சுப் பணி அதற்கென சில தன்மைகளைக் கொண்டதாக இருக்கும். கோசல நாட்டின் அமைச்சர்கள் தலைமுறைகளாக அப்பணியைச் செய்து வருபவர்கள். அமைச்சுப் பணியின் அடிப்படைகளை – மனநிலைகளை தந்தையிடமிருந்து பாட்டனிடமிருந்து பெற்றவர்கள். அப்பணியின் நுணுக்கங்களும் விபரங்களும் சிறு வயது முதல் கேட்டு அறிந்தவர்கள்.
யானை பிழைத்த வேல் – பகுதி இரண்டு
தடுத்து இமையாமல் இருந்தவர் தாளின்
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார்
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால்
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார் (783)
அந்நிகழ்வு அரிதானது என்பதால் அதன் எந்த ஒரு துளியையும் தவறவிட்டுவிடக் கூடாது என இமைக்காமல் அதனை நோக்கியிருந்தனர். அப்படியிருந்தும் இராமன் கையில் வில்லை எடுத்ததைப் பார்த்தனர். அது முறியும் சத்தத்தை கேட்டனர். இமைப்பொழுதுக்கும் குறைவான நேரத்தில் இராமன் வில்லை முறித்தான்.
யானை பிழைத்த வேல் – பகுதி ஒன்று
இராமனும் சீதையும் பார்த்துக் கொண்ட போது விழிகள் சந்தித்தன. இருவரின் உணர்வும் ஒன்றென ஆனது.
பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணைத்து……..
இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார் (600)
விழிகளில் உருவான காதல் இராமனின் இதயத்தில் சீதையையும் சீதையின் இதயத்தில் இராமனையும் இடம்பெறச் செய்தது.
இந்திரநீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்
சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்
சுந்தர மணி வரைத் தோலுமே அல
முந்தி எம்உயிரை அம்முறுவல் உண்டதே (619)
இராமனின் மென்முறுவல் தன் உயிரை உண்டது என்கிறாள் சீதை. இராமனின் மென்முறுவலிடம் சென்று சேர்கிறது சீதையின் அகமும் உயிரும்.
இந்திர நீலம் போன்ற சிகையும் பிரகாசிக்கும் சந்திரனைப் போன்ற முகமும் நீண்ட கைகளும் மலை போன்ற தோள்களும் முதலில் என் உயிரைக் கவரவில்லை; மாறாக இராமனின் புன்னகையே தன் உயிரைக் கவர்ந்தது என்கிறாள் சீதை.
யாமறிந்த புலவரிலே
உலகில் எந்த சமூகமாவது தனது மொழியின் மகத்தான ஆக்கம் மேல் பாராமுகமாக இருக்குமா? அரசியல் காரணங்களுக்காக திராவிட பரப்பிய இயக்கம் சமஸ்கிருதத்தையும் அதன் இலக்கியங்களையும் எதிர்த்தது. இந்திய நிலமெங்கும் வாழும் மக்களால் பல ஆயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்ட இராமாயணத்தை அவ்வியக்கம் தீவிரமாக எதிர்த்தது. தமிழ் இலக்கியத்தின் மகத்தான சாதனை ஆக்கம் மீது சேறு வீசப்பட்டது.
விடை
ஓர் இடைச்சிறுவன் கலனில் நீர் கொண்டு வந்தான். அவனிடம் அமெரிக்கர் ஹாய் என்றார். அவன் ஹாய் வில்லியம் என்றான். நான் பாதிக் கலனை காலி செய்தேன். வில்லியம் மூன்று மிடறு அருந்தி விட்டு அச்சிறுவனிடம் நன்றி தெரிவித்து கலனை திருப்பித் தந்தார்.
‘’எப்போது வீடு திரும்புவதாய் உத்தேசம்? கையில் உள்ள பணம் தீர்ந்த பின்பா?
அக்கேள்வியின் நேரடித் தன்மை என்னைச் சீண்டியது. இவர் தன் எல்லையைத் தாண்டுகிறார்.
‘’உங்கள் கணிப்பு என்ன? நான் வீட்டாரை பயமுறுத்தவே வெளியேறியிருக்கிறேன் என்றா? நான் வீடு திரும்ப மாட்டேன்.’’
‘’சித்தார்த்! நீ புத்திசாலி. என் கணிப்பு நிறைவேறினால் மகிழ்வேன். நிறைவேறவில்லை எனில் பெரிதும் மகிழ்வேன்’’
துவக்கம்
‘’ஆள்றவன் நினைச்சா சட்டம் அப்படியே மாறி நிக்கும் தம்பி. ஆனா மனுஷனுக்கு மனுஷன் பேசின பேச்சுக்கும் கொடுத்த வாக்குக்கும் அர்த்தம் இல்லன்னா நம்ம வாழ்க்கை மனுஷ வாழ்க்கையாவே இருக்காது. தேர்தல் வரும் போது ரெண்டு கிலோமீட்டர் போய் ஓட்டுப் போடறோம். கொள்ளிடக் கரையில நடந்து தான் பிள்ளைங்க ஸ்கூலுக்கு போவுது. ஆனா இந்த பிரதேசத்துல நம்ம வாழ்க்கைதான் நல்லா இருக்கு. பட்டா நிலத்துல பண்ணையம் பாக்கறவங்களை விட நாமதான் நல்லா இருக்கோம். நமக்குள்ள ஒற்றுமை இருக்கு. அதுதான் நம்மளோட பலம். அதை எக்காரணம் கொண்டும் இழந்திரக் கூடாது.’’
லீலாவதி
‘’சுபாஷ்! லோகத்துல மனுஷாள் என்ன பழகியிருக்காளோ அதத்தான் திரும்ப திரும்பத் திரும்ப செய்யறாள். சமூகமும் அப்படித்தான் பழகியிருக்கு. ஆனா லௌகிகத்துல எந்த விஷயமும் மாறாம இருக்க முடியாது. அது எப்படி மாறுதுங்கறத்த கவனிக்கறது அரசாங்கத்தோட வேலைல ஒண்ணு. நீ சின்னப் பையன். இப்பதான் வேலைக்குச் சேந்திருக்க. எல்லாத்தயும் வெறுமனே பாரு. வெறுமனே பாக்க மட்டும் செய். உன் அபிப்ராயம் சேர்த்துக்காம பாரு. பார்த்துப் பார்த்து நீ நிறைய விஷயம் தெரிஞ்சுப்ப.’’
மாலையே அவர்கள் வீடு வேறொரு கோலம் கொள்ளும். ராமநாதனின் அம்மா வீணை வாசிப்பார்கள்.
வசந்த மண்டபம்
ஒரு குட்டி முதலாளி போன்ற வாழ்க்கை. சித்தூருக்கு முன்னால் இரண்டு கிலோமீட்டரில் கிராமம். மெயின் ரோட்டை ஒட்டி ஒரு ஏக்கர் நிலம். அதில் தான் லாரி புக்கிங் ஆஃபிஸ் இருந்தது. வழக்கமான புக்கிங் ஆஃபிஸ்களைப் போலத்தான் தூசி படிந்து பழைய பொருட்களுடன் ஒழுங்கு இல்லாமல் கிரமம் இல்லாமல் கிடந்தது. வசிக்கும் இடத்திலும் பணி புரியும் இடத்திலும் தேவையில்லாததை நீக்க வேண்டும் என்பது முதல் விதி. அதுவே பாதி சிக்கலைத் தீர்க்கும். வாழ்க்கையில் தேவையில்லாததைத் தான் சேர்த்துக் கொள்கிறோம். தேவையில்லாததைச் சேர்த்துக் கொள்வதைத் தான் வாழ்க்கை என நம்பிக் கொண்டிருக்கிறோம். புற ஒழுங்கு கொண்டுவரப்படும் போது பணி ஒழுங்கு நிகழ்கிறது. நான் அப்போது வயதில் சிறியவன். கடுமையான உடல் உழைப்புப் பணிகளுக்கு அப்போதுதான் பழகியிருந்தேன். தொழிலாளர்களால் என்னை ஏற்க முடியாது. என்னுடைய எல்லைகளை அவர்களுக்கே உரிய விதத்தில் சுட்டிக் காட்டுவார்கள். பேச்சில் லேசான அவமரியாதை இருக்கும்.
புனைதலும் கலைதலும்
தமிழில் எழுதப்பட்டுள்ள சுயசரிதைகளில் மிக முக்கியமான ஒன்று ஔவை.தி.க.சண்முகம் அவர்களின் ‘’எனது நாடக வாழ்க்கை’’. அவர் அதனை நாடக வாழ்க்கை எனக் கூறினாலும் அது அவரது வாழ்க்கையே தான். ஒரு நாடகக் கலைஞராக அவர் தன் வாழ்க்கையைத் தொகுத்து எழுதும் போது கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான தமிழின் சமூகவியல் ஆவணமாகவும் அந்நூல் மாறுகிறது. மனிதர்களுக்கு உலகியல் நேரடியானதும் மறைமுகமானதுமான எல்லைகளை உருவாக்குகிறது. பலர் அந்த எல்லைக்குள்ளும் கட்டுப்பாட்டுக்குள்ளும் அமைந்து விடுகின்றனர். சிலர் அந்த எல்லைகளுடன் திருப்தி அடையாமல் அதனைத் தாண்டி பயணிக்கின்றனர். புதிய அனுபவங்களைப் பெறுகின்றனர். புதிய விஷயங்களைக் கண்டடைகின்றனர். அவர்களிடமிருந்து ஒரு புதிய துவக்கம் நிகழ்கிறது. மாற்றத்தை உருவாக்க பணியாற்றியவர்களாகவும் மாற்றத்தை உருவாக்கியவர்களாகவும் வரலாற்றில் அவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
ஹம்பி: நிலவைக் காட்டும் விரல்
மானுடம் கண்ட மகத்தான கனவு விஜயநகரம். இன்று நாம் காணும் ஹம்பி என்பது நூற்றாண்டுகளுக்கு முன்னால் அங்கு எவ்விதமான வாழ்வு நடந்திருக்கும் என கற்பனை செய்து பார்ப்பதற்கான ஒரு முகாந்திரம் மட்டுமே. விஜயநகரம் இன்று கற்பனையால் மட்டுமே கண்டடையக் கூடிய ஒரு பிரதேசம். மாமனிதர்கள் மானுடம் குறித்த மகத்தான கனவுகள் மூலமாகவும் கலைஞர்கள் தங்களின் கலையின் வழியாகவும் மதியாளர்கள் தங்கள் திட்டமிடல் மூலமாகவும் வணிகர்கள் வாய்ப்புகளின் சாத்தியங்களின் வழியாகவும் பொறியாளர்கள் பணி மேலாண்மை மூலமாகவும் வீரர்கள் போர் நுணுக்கங்கள் மூலமாகவும் சாமானியர்கள் பெருவியப்பினூடாகவும் மட்டுமே அந்நகரை கற்பனை மூலம் அடைய முடியும். அப்பிராந்தியம் கற்காலம் தொட்டு அங்கு மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களைக் கொண்டிருக்கிறது. இராமாயணம் குறிப்பிடும் கிஷ்கிந்தை விஜயநகரமாக இருந்திருக்கக் கூடும்
காவிரியிலிருந்து கங்கை வரை – மோட்டார் சைக்கிள் பயணம்
காவேரி தாலாட்டும் பிரதேசம். அழகிய சிறு வயல்களில் நெல்லும், கரும்பும், மல்லிகையும், சாமந்தியும் பாகலும் காவேரி நீரருந்தி மணியாக சோலையாக மலராக காயாக பெருகும் நிலக்காட்சியை பல நாட்கள் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கண்டிருக்கிறேன். பாபநாசத்திலிருந்து ராஜகிரி, கபிஸ்தலம், சுந்தர பெருமாள் கோவில், சுவாமிமலை மற்றும் கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு அப்பாவின் ஹீரோ ஹோண்டா சிடி 100 பைக்கில் பெட்ரோல் டேங்க் மேல் அமர்ந்து பயணிப்பேன். செல்லும் ஊர்களைப் பற்றி அவற்றின் வரலாறு பற்றி நாட்டு நடப்புகள் குறித்து அப்பா என்னிடம் ஏதேனும் கூறியபடி வருவார். நான் முக்கியம் என நினைக்கும் விஷயங்கள் குறித்து பேசுவேன். காவேரியில் புதிதாக தண்ணீர் வரும். வெம்மணல் பரப்பின் மீது நீர் பாயும் போது மணல் துகள்களுக்கு இடையே உள்ள காற்று குமிழிகளாக கொப்பளிக்கும். குபுக் குபுக் என்ற சத்தம் பேரோசையாக எழும். ஆற்றில் பள்ளமாக உள்ள பகுதிகளில் நுரைக்கும் புது வெள்ளம் பாய்ந்து சென்று நிரம்பும். சிறு கிராமங்களின் கடைத்தெருக்களில் மக்கள் கூடி நின்றிருப்பர். கொள்ளிடக் கரையில் வெல்லம் காய்ச்சுவார்கள். வெல்லத்தின் மணம் அப்பிராந்தியம் முழுவதும் இருக்கும். அங்கு பணி புரியும் மனிதர்கள் எங்களை இன்முகத்துடன்…
இரு பள்ளிகள்
கணபதி பிள்ளை சொல்வார்: “ஒரு ஸ்தாபனம் எப்படி நடக்கணும்ணு தீர்மானிக்கிறது அது அமைஞ்சிருக்கிற மண். அந்த மண்ணுக்கு தன் மேலே நடக்கிற விஷயம் மேல நம்பிக்கை இருக்கணும். மண்ணோட நம்பிக்கைக்கு பாத்திரமா மனுஷன் நடந்துக்கணும். திருவள்ளுவர் நிலமென்னும் நல்லாள்னு சொல்றார். மண்ணோட ராசிக்கு அப்புறம் தான் மனுஷனோட ராசி. நாம வானத்தை அண்ணாந்து பார்த்தே பழகிட்டோம். கடவுள் அங்க தான் இருக்கார்ன்னு முடிவு பண்ணிட்ட மாதிரி. விதையை விருட்சமாக்குற கடவுள் ஏன் மண்ணுக்குள்ள இருக்கக்கூடாது.” … மக்கள்ட்டயிருந்து வந்த வருமானத்தை மக்களுக்கே கோயிலா குளமா சத்திரமா திருப்பிக் கொடுத்தான். அப்பப்ப மறந்துடறோம்னாலும் இன்னைக்கும் அவனை நினைச்சுப் பாக்கறோம்”
இறுதி அஞ்சலி: திரு. ஆ.ப.ஜெ அப்துல் கலாம்
அவரது இல்லத்திலிருந்து பேக்கரும்பு வரை சென்ற ஊர்வலத்தில் ஹிந்துக்கள்,கிருஸ்தவர்கள்,முஸ்லீம்கள் மற்றும் சீக்கியர்கள் கலந்து கொண்டனர்.அவரது இறுதி ஊர்வலத்தில் பாரத் மாதா கி ஜெய் மற்றும் வந்தே மாதரம் ஆகிய முழக்கங்கள் ஒலித்தன.இந்திய வரலாற்றில் கலாம் அவர்களுக்கு செலுத்தப்பட்ட இறுதி மரியாதை முக்கியமான மிகச் சிறப்பு வாய்ந்த அத்தியாயமாகும்.அவ்விதத்தில் அவர் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஆற்றியுள்ள பங்களிப்பு அவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைக்கு அளித்த பங்களிப்புகளை விஞ்சியுள்ளது.
பாரத் தர்ஷன்
வரலாற்றில் அண்ணாஜியைப் போன்றவர்கள் அபூர்வம். அவரை தூரத்திலிருந்து பார்க்க நேர்ந்தால் கூட பெரும் பேறு என எண்ணிக் கொண்டோம். கல்லூரி மாணவர்கள் சிலர் அவரைச் சந்திக்க வந்திருந்தனர். சுவாமி விவேகானந்தரைப் பற்றி அண்ணா பேசிக் கொண்டிருந்தார். அடுத்து எங்களை அனுமதித்தனர். நெடுஞ்சாண்கிடையாக என் முழுதுடலால் அண்ணா ஹசாரேஜி அவர்களை வணங்கினேன். அண்ணாவை வணங்கியவன் என்பதே எனது தகுதி. கண்களில் நீர் நிரம்பியது. மகாத்மாவை நாங்கள் நேரில் பார்த்ததில்லை உங்களுடைய ரூபத்தில் காண்கிறோம் என்றேன். எத்தனை பேர் இதனைச் சொல்லி அவர் கேட்டு சலித்திருப்பார். எவ்வளவு சலித்தாலும் எத்தனை பேர் திரும்ப திரும்ப சொன்னாலும் அது உண்மையல்லவா! எங்கிருந்து வருகிறீர்கள் என…