அதிகாரமெனும் நுண் தளை – வெள்ளை யானை

ஆனால் எல்லாவற்றையும் கடந்து, எங்கோ எப்பொழுதோ ஒரு புள்ளியில் மனிதர்கள் வெறும் புள்ளிவிவரங்களாகவும், மரணங்கள் வெற்று எண்ணிக்கைகளாகவும் கணக்குகளாகவும் மற்றுமொரு சம்பவமாகவும் மாறி விடுகின்றன. ஆனால் மனிதனுக்கு வேறு மார்க்கமும் இல்லை. அவனும் சித்த தெளிவுடன் பிழைத்திருக்க வேண்டிய நிர்பந்தம் அவனுக்கு இருக்கிறதே!

லூயீஸ் எர்ட்ரிக் – கதை அறிமுகம்

பெண்குழந்தை, ஊனமானது, வாழப்போவதில்லை என்பது ஒதுக்கி வைக்கப்படுகிறது. இதற்கு நேர்மாறான ஆண், ஊனமற்றது, வாழக் கூடியது தேர்வு செய்யப் படுகிறது.
கழித்துக் கட்டப்பட வேண்டிய உயிரிடம் தருவதற்கு இருக்கிறது. வாழ்வுக்கு உகந்ததென்று தேர்ந்து வளர்க்கப்பட்டதிடம் அதை வாங்குவதற்குக் கூட திராணி இல்லை.

எண்பதுகளில் தமிழ் இலக்கியம் – 2

கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களில் தான் (அதைக் கதை என்பதா, இல்லை சிறுகதை என்பதா, அல்லது குறிப்புகள் என்பதா, எந்த வகைப்படுத்தலுக்கும் இயைவதாக, ஆனால் அதே சமயம் முழுவதும் அந்த வகைப்படுத்தலுக்கு அடங்காததாக இருப்பவை), ஒவ்வாத உணர்வுகள் என்ற தொகுப்பில் அவற்றைப் பார்க்கலாம், அவருடைய நடையும், எழுத்து பெறும் வடிவமும், கிண்டலும், சுய எள்ளலும் தனி ரகமானவை.

எண்பதுகளில் தமிழ் இலக்கியம்

நான் எண்பதுகளோடு வரம்பிட்டுக்கொள்கிறேன். இது எனக்கு சௌகரியமாகவும் இருப்பது சந்தர்ப்பவசம் தான். அதிர்ஷ்டவசமாக, இந்த எண்பதுக்களில் தான் தமிழில் சிருஷ்டி எழுத்துக்கள் புதிய பாதைகளில் பயணிக்க ஆரம்பித்தன. அந்த புதிய பாதைகள் இதுகாறும் கால் பதித்திராத பாதைகள். கால் பதித்திராத பாதைகள் என்றேன். காரணம் எதுவாகவும் இருக்கலாம்.

ஓநாய் குலச்சின்னம்– அனுபவமும் வாசிப்பும்

ஆனால் நாம் நம் சந்ததிகளுக்கு என்ன மாதிரியான சூழலை வழங்கப் போகிறோம்? இன்று நான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற குறுகிய கருத்தாக்கத்தினால் முடிந்த அளவு, இந்த உலகத்தைச் சுரண்டி வாழ்கிறோம். இயற்கையை வெல்ல முடியாது என்று புரிந்து கொள்ள ஜென் சென்னிற்கு ஒரு ஓநாய் வளர்ப்பு போதுமானதாய் இருக்கிறது.

ராக் தர்பாரி

வைத்யஜி தன் குடும்பத்தினரை மட்டும் நன்றாக கவனித்துக் கொள்கிறவர் என்று நாம் அவரைத் தவறாக எடை போட்டுவிடக் கூடாது, அவர் தன் விசுவாசிகளின் நலனிலும் அக்கறை கொண்டவர். அரசியலில் தலைவருக்கு விசுவாசமாக இருப்பதைப் போன்ற பணம் கொழிக்கும் தகுதி வேறு எதுவும் இல்லை, விசுவாசத்தை மட்டும் வெளிப்படுத்தத் தெரிந்தால் போதும், வேறெந்த திறமையும் தேவையில்லை. விசுவாசம் என்று சொன்னால், கட்சி, கொள்கை என்று குழப்பிக் கொள்ளக்கூடாது – தலைமைக்கு விசுவாசமாக இருந்தால் மட்டும் போதும். வைத்யஜியின் வீட்டில் இப்படிப்பட்ட ஒரு விசுவாசமான வேலைக்காரன் இருக்கிறான்.

தமிழ் இலக்கியம் – ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும் – பகுதி 3

தங்கர் பச்சான் என்னை மிகவும் பரவசப் படுத்தும் ஒரு எழுத்தாளர். தமிழ் சினிமா உலகில் வெற்றியும் புகழும் மிகப் பெற்ற, எல்லோரின் பாராட்டையும் பெற்ற சினிமா புகைப்பட வல்லுனர் அவர். ஆனால் அவரது படைப்பெழுத்துக்களைப் பார்த்தால், தன் பிறந்த கிராமத்து மண்ணிலும் வாழ்க்கையிலும் ஆழக் கால்பதித்துள்ள ஒரு சாதாரண விவசாயியாகத்தான் அவரைக் காண்கிறோம். இந்த நவ நாகரீக காலத்தில் வாழும் ஒரு மனிதர் என்பதையோ, ஏன், அவர் வெற்றியும் புகழும் பெற்று வாழும் சினிமா உலகப் பகட்டின் மினுமினுப்பின் அடையாளம் எதையுமோ சிறிதளவு கூட அவர் எழுத்தில் காண முடிவதில்லை.

தமிழ் இலக்கியம் – ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும் – பகுதி 2

பேச்சு மொழி அவரவர் பிறந்து வளர்ந்து பழகிய வகுப்பு, மதம், வட்டாரம் சார்ந்து மாறுபடும் காரணத்தால், பரிச்சயமில்லாதாருக்கு அது உடன் புரிவதில்லை. ஆனால் பேசுவோருக்கு உயிர் கொடுப்பதும் இயல்பானதும் அது தான். புத்தகங்களில் எழுதப்படும் ஒழுங்குபடுத்தப்பட்ட இலக்கணம் சுத்திகரித்த மொழி செயற்கையானது, தமிழ் நாட்டில் எங்கும் எந்தத் தமிழனும் பேசாத மொழி அது. தீவிர தமிழ்ப் பண்டிதர்கள் மாத்திரமே நிர்ப்பந்தித்து பொதுவில் பேசும் மொழி. உயிரற்றது. மௌனத்தில் புன்னகை வருவிக்கும் மொழி. தமிழ் நாட்டின் வட்டார பேச்சு உருவங்களோடு, எழுபது எண்பதுக்களுக்குப் பிறகு இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களும் அவரவர் இடங்களில் வழங்கும் பேச்சுமொழியையும் நிகழ் காலத் தமிழ் எழுத்துக்குக் கொண்டுசேர்த்தனர். இதன் விளைவாக இன்றைய தமிழ் எழுத்தில் தான் எத்தனை ஃபணீஸ்வர்நாத் ரேணுக்கள்! எத்தனை மைலா ஆஞ்சல்கள்!!

தமிழ் இலக்கியம் – ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும்

இந்திய மொழிகள் அனைத்திலிருந்துமான (டோக்ரி, கஷ்மீரி, ஸிந்தி, உருது மொழிகள் உட்பட) இலக்கிய வளர்ச்சி பற்றிய மதிப்பீட்டுக் கட்டுரைகளுடன், அந்தந்த மொழிகளின் சில கதைகள், கவிதைகளும் மொழி பெயர்க்கப்பட்டு சேர்க்கப்பட்டன. இவற்றில் தமிழ் மொழிக்காகச் சேர்க்கப்பட்டவை, ஜெயமோகனின் மாடன் மோட்சம் என்ற கதையும் சல்மாவின் சில கவிதைகளும். எனது தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றிய கட்டுரைக்கு Enigma of Abundance என்று தலைப்பு கொடுத்திருந் தார்கள். Enigma of Abundance………..!!! தலைப்பு என்னமோ வசீகரமாகத்தான் இருக்கிறது. ஆனால் கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயங்கள் இதை நியாயப்படுத்துமா என்பது தெரியவில்லை. ஆகவே இப்போது எனக்குள்ள சுதந்திரத்தில் மிகச் சாதாரண மொழியில்…

மாதொருபாகன் – மனிதன் இழந்து கொண்டிருக்கும் இன்னொரு பாகம்

‘மாதொருபாகன்’, ‘பெண்ணிற்கு தன் இடபாகத்தைக் கொடுத்து ஆண் பாதி பெண் பாதி எனக் காட்சி தரும் அர்த்த நாரீஸ்வரர் வடிவத்தைக் குறிக்கும் பெயர்’ என்று ஆசிரியர் இந் நாவலின் தலைப்பை அறிமுகப்படுத்துகிறார். இக்கதையும் காளியும் பொன்னாவும் தம்பதி என இணைந்த ஒரு அலகாக, சமூகத்தை எதிர்கொள்வதைப் பற்றியதுதான். ஆணானாலும் பெண்ணானாலும், அவர்களுக்கான சமூக பாத்திரங்களை ஏற்க கடமைப்பட்டிருக்கிறார்கள். அந்த விதத்தில், இருவரும் ஒரு உருவத்தில் பிணைக்கப்பட்டவர்களே.

நூற்கடலின் கரையில்…

மிகத் துரிதமாக நடக்கும் கதை. ஆனால் செல்லப்பாவுக்கு இக்கதையின் மேல் உள்ள முழுப் பிடியின் காரணமாக வெளிப்பார்வைக்குச் சாதாரணம் எனத் தோன்றும் மொழியில், கதையின் அவசரம் ஆசிரியனைத் தொற்றாமல், சிறு சிறு வேக வார்த்தைகளாலான செயற்கை உத்வேகங்கள் இன்றி, தவ்வாத மொழியில், தவ்வலைச் சொல்லும் சர்வ நிச்சயம் உள்ள எழுத்து. போதை தரும் கதைக் கரு, களம். அதில் கம்பீரமாக செல்லப்பா நடை போடுகிறார். பதற்றம் கொள்ளாத, அவசரம் இல்லாத மொழியில் எழுதப் பட்ட சாகசக் கதை

நெடுங்காலமாகத் தொடரும் அரண் – ராபர்ட்டோ பொலானோ

ராபர்ட்டோ பொலானோவைப் பொறுத்தவரை கவிஞர்களது உலகம் என்பது ஒரு உயிருள்ள மிருகம் போன்றது. ஆயிரம் கைகளும், பல்லாயிரம் சிந்தனைகளும் ஒன்றாக இயங்கி ஒரே இலக்கை நோக்கி பயணம் செய்யும் இயந்திரம். கவிதையின் உள்ளடக்கமும் உருவமும் அதில் மட்டும் முடிவதில்லை. கவிஞனின் உலகத்துள்ளும் ரசனையின் மிச்சங்கள் அடங்கியுள்ளன.

புதுமைப்பித்தன் கவிதைகள் – ஒரு சமகாலப் பார்வை

புதுமைப்பித்தனின் கவிதை பாணியின் இன்றும் புதிதாய் வாசிக்கப்படும் சாத்தியங்களுக்குண்டான சமிக்ஞைகளை ரகுநாதன் தொகுத்து 1954ஆம் ஆண்டு ஸ்டார் பிரசுரத்தால் பதிப்பிக்கப்பட்ட இந்தச் சிறு நூல் முதல் பார்வைக்கும்கூடத் தந்துவிடுகிறது – ஒரு சிறு தாவலில் இவற்றின் கருப்பொருளையும் வடிவ அமைப்பையும் சொற்தேர்வையும் சமகாலத் தமிழுக்குக் கொண்டு வந்துவிட முடியுமே என்று ஆசையாக இருக்கிறது.

சி.சு.செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாதார நிகழ்வு – பகுதி 6

செல்லப்பா எழுத்துக்கு வகுத்துள்ள எல்லைக்கோட்டுக்குள் நான் எழுத ஆரம்பித்த எந்த கட்டுரையும், எல்லாக் கலைகளையும், இலக்கியத்தை பாதிக்கும் அறிவுத்துறைகளையும் உள்ளடக்கிய ஒரு பார்வை, எதையும் தனித்துப் பார்க்க இயலாது என்ற பார்வை, ஒன்றின் வறட்சியோ, வளமோ தனித்து எந்தத் துறையிலும் வரம்பு கட்டிக்கொண்டு இருப்பது சாத்தியமில்லை என்பது போன்ற அணுகுமுறை எல்லாமே எழுத்து பத்திரிகைக்கு அப்பாற்பட்டது. ஆனால் அதை செல்லப்பா வரவேற்றார்.

உப்பு நாய்கள் – லக்ஷ்மி சரவணகுமார்

சென்னை வாழ் நடுத்தர மக்களின் இருப்பு சார்ந்த பிரச்சனைகளையும், உளவியல் சிக்கல்களையும் ஆழமாக அலசி முன்வைக்கப்பட்ட ஏராளமான படைப்புகள் நம்மிடம் இருக்கின்றன. என்றாலும், அடித்தட்டு மக்களின் அகச்சிக்கல் மற்றும் அறியாமை சார்ந்து பொலிவிழந்த முகங்களை முன்வைத்த பதிவுகள் மிகக் குறைவுதான். அந்த வகையில் “உப்பு நாய்கள்” நாவலானது மனதாலும், உடலாலும், இருப்பாலும் வாழ்வின் சுழலில் வதைபடும் எளிய மனிதர்களைப் பற்றி நிறையவே பேசுகிறது.

ஹிக்விட்டா எனும் புதிர்

எந்த ஒரு புனைவும் ஒரு புதிர். அவரவர் சார்பு நிலைகளுக்கு ஏற்ப அதைப் புரிந்து கொள்கிறோம், அதன் படிப்பினையை எடுத்துக் கொள்கிறோம். எது சரி எது தவறு எது பொருத்தம் எது பொருந்தாது என்று யோசிக்கும்போது குழப்பம்தான் மிஞ்சுகிறது. கதையை முழுமையாய் புரிந்து கொள்ள முற்பட்டு வெவ்வேறு கோணங்களில் அதை அணுகியும், ஹிக்விட்டா ஆட்டத்தை அணுகிய முறை வாழ்வில் பின்பற்றக்கூடியதா, கீவர்கீஸ் லூஸியின் பிரச்சினையைத் தீர்க்க தெரிவு செய்த வழிமுறை சரியானதா என்பது பற்றிய ஒரு நிச்சயமற்ற நிலையைத்தான் அடையமுடிகிறது.

சி.சு.செல்லப்பா – தமிழகம் உணராத வாமனாவதாரம் – பகுதி 5

இந்த சூழல் மாற்றமெல்லாம் 12 ஆண்டுகள் விடாப்பிடியாக சில நூறு பிரதிகளுக்குள் சுருங்கி விட்ட ஒரு எளிமையிலும் எளிய முன்னுதாரணம் ஏதுமற்ற ஒரு பத்திரிகையின் விளைச்சல்கள். அது கொணர்ந்த மாற்றங்கள். இன்று மரபுக் கவிதை சென்ற இடம் தெரியவில்லை. இன்று மரபுக் கவிதையை கருணாநிதியும் மறந்தாயிற்று. வைரமுத்து, அப்துல் ரஹ்மான், கனிமொழி எல்லாருமே மறந்தாயிற்று.

பாரதியின் ஆறிலொரு பங்கு – தமிழின் முதல் சிறுகதை

இந்தக் கதையை பாரதி எழுதிய காலகட்டத்தில் அவர் தாகூரின் கதைகளை தமிழுக்கு மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார், இதன் தாக்கத்தில் எழுதப்பட்ட கதையே “ஆறில் ஒரு பங்கு” என்று குறிப்பிடும் செல்லப்பா, இந்தக் கதையின் தனித்தன்மைகளை நிறுவும் ஆய்வுக் கட்டுரையாக இதை வடிவமைத்திருக்கிறார். மிக நீண்ட கட்டுரையாதலின் சுருக்கித் தருகிறேன்.

பாலையும், வாழையும் – முகப்புரை

சாமிநாதன் ஒரு ‘புரொவகேடிவ்’ விமர்சகர். ஆரம்பத்தில் சொன்னேனே, இந்தக் கட்டுரைகளில் பாலையின் உஷ்ணம் இருக்கிறது. நம்மைச் சுடவும் செய்கிறது. கசப்பான உண்மைகளை நாம் விழுங்க வேண்டி இருக்கிறது. தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் இரண்டிலும் மற்ற கலைத்துறைகளிலும் ஆழ்ந்த அக்கறை எடுத்து அவற்றின் போக்கு, நிலை, சாதனை பற்றி சுய விமர்சனம் செய்து, உரிமையுடன் குந்தகமானவற்றை கடுமையாகச் சாடும் சாமிநாதனது பேனா வரிகள். ‘புலிக்கு தன் காடு பிறகாடு வித்யாசம் கிடையாது’ என்றபடி சகலத்தையும் பதம் பார்க்கும் கூர்மையிலே யார் யாருக்கோ, எங்கெங்கெல்லாமோ சுடக்கூடும்.

க.நா.சுப்ரமணியத்தின் படைப்பிலக்கியம்

தமிழில் க.நா.சுவின் இடம் என்ன? அவரது இரு நாவல்களும் கலைச்சாதனைகளே. ஆனாலும் தமிழ் புனைவிலக்கியத்தில் அவரது இடம் ஒப்புநோக்க முதன்மையானதல்ல. அவர் விரிவான விமரிசன மதிப்பீடுகளை உருவாக்கியவர். ஆனால் அவரது விமரிசனங்கள் எவையுமே முழுமையான இலக்கிய விமரிசனங்கள் அல்ல. அவரை ஒரு இலக்கிய மையம் என்று கூறுவதே பொருத்தமானது. எல்லா மொழிகளிலும் இம்மாதிரி இலக்கிய மையங்கள் முக்கியமான மாறுதல் கணங்களில் உருவாகி வருவதைக் காணலாம்.

உலக இலக்கியம்

உலக இலக்கியம் என்பது ஒரு இயக்கமாக உருவெடுக்க வேண்டும். அதற்கான வழிவகைகள் என்னவென்று சிந்திப்பது இலக்கிய வட்டத்தின் கடமையாகும். உலகத்தின் எந்த மொழியில் எந்தப் பகுதியில் மிகத் தரமானது, உயர்ந்தது, சிரேஷ்டமானது வந்திருந்தாலும் அது உடனடியாகத் தமிழில் மட்டுமல்ல, தமிழ் போன்ற எல்லா மொழிகளிலுமே வருவதற்கான வழி வகைகள் வகுத்துக் கொள்ள வேண்டும்.

விமரிசனத்தின் நோக்கம்

இலக்கிய விமரிசனத்துக்கான அடிப்படையைத் தருவது நூல்களை அனுபவித்து அனுபவித்துப் பண்பட்ட உள்ளமும் அறிவும்தான். பல்லாயிரக்கணக்கான நூல்களிலே ஒரு பத்திருபது முப்பது நல்ல நூல்களை தேர்ந்தெடுத்து அனுபவிக்க விமர்சனம் உதவவேண்டும். விமரிசகன் ஆழ்ந்தும் படித்திருக்கவேண்டும்.- பரந்தும் படித்திருக்க வேண்டும்.

சிறந்த தமிழ் நாவல் “பொய்த்தேவு” – பிரமிள்

‘பொய்த்தேவு என்ற தலைப்பு, ஒவ்வொரு கனமும் மனதில் தோன்றி மறையும் நோக்கங்களைத் தேவர்களாக கடவுளராக ஆக்கி, அவை நம்மை உந்துவதுடன் நமது வீழ்ச்சியுடன் அவை வீழ்வதையும் அர்த்தப்படுத்துகிறது. இந்தப் பயணத்தின் நாயகன்தான் சோமு. நாவலை இந்தக் கோணத்தில் பார்க்கிறபோது ஒரு பாத்திரத்தின் வாழ்வாக மட்டுமல்லாமல் ஒரு சிந்தனை அம்சத்தின் விபரமான சித்தரிப்பாகவும் அதைக் காணலாம். பார்க்கப்போனால் நாவல் சோமுவைப் பற்றியதேதான் என்றே சொல்லிவிட முடியும்.

இலக்கிய விமர்சனம்

கம்பனையும் சங்க இலக்கியங்களையும் பற்றி பற்றி இலக்கியங்கள் வளர்ந்திருக்கின்றனவே தவிர, இலக்கிய விமர்சனம் தோன்றிவிடவில்லை.பாரதியாரைக் கூட தர விமர்சனம் செய்ய இதுவரை யாரும் முன்வரவில்லை என்பது தமிழில் இலக்கிய விமர்சனத்தின் இன்றைய நிலையை நமக்கு நன்கு அறிவுறுத்துகிறது.

மூன்று சிறுகதாசிரியர்கள்

மூன்று கதாசிரியர்களில் லா.ச.ராமாமிருதம் தமிழ்ச் சிறுகதையின் முதல் அலையிலேயே மணிக்கொடிக் காலத்திலேயே தோன்றியவர் — அன்று முதல் இன்று வரை சிறுகதைத் துறையில் உழைத்துப் பாராட்டக்கூடிய அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார். சற்றேறக்குறைய இதே காலக்கட்டத்தைச் சேர்ந்தவர்தான் தி.ஜானகிராமனும். 1950க்கு பின் தோன்றிய நல்ல சிறுகதை ஆசிரியர்கள் இருவரில் ஒருவர் சுந்தர ராமசாமி.

பாரதியார் – இன்றைய எழுத்தாளர்களின் முன்னோடி

பொதுவாக க.நா.சு பாரதியைக் குறித்துப் பேசியதோ, எழுதியதோ இல்லை என்றொரு கருத்து நிலவுகிறது. க.நா.சு கட்டுரைகள் என்ற தொகுப்பில் பாரதியைக் குறித்தும், அவர் நவீனத் தமிழிலக்கியத்துக்கு எப்படி ஒரு முன்னோடியாக இருக்கிறார் என்பது குறித்தும் இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. அதில் ஒன்று இக்கட்டுரை. இது அவர் ஒரு கூட்டத்தில் பாரதியின் முக்கியத்துவம் குறித்து ஆற்றிய உரை.