வேகமாகி நின்றாய் காளி! – பாகம் 2

This entry is part 2 of 5 in the series வேகமாய் நின்றாய் காளி!

வருடம் ஒரு செல்பேசி வாங்குவதை நாம் பெருமையாக நினைக்கிறோம். புதிய மாடலின் அதிவேக செயல்பாடு மற்றும் புதிய காமிரா போன்ற அம்சங்கள், நம்மை பழைய மாடலை தூக்கி எறியச் செய்கிறது. வேகம் மீது கொண்ட மோகத்தால் நாம் சகட்டுமேனிக்கு மின் கழிவை பொருப்பில்லாமல் உருவாக்கிக் கொண்டே போகிறோம். கடந்த 20 ஆண்டுகளாக, வளரும் நாடுகளில் கூட, எந்த ஒரு மின்னணு சாதனத்தையும் நாம் பழுது பார்ப்பதை நிறுத்தி விட்டோம். முன்னர் ஒரு ரேடியோவை அல்லது ஒலிநாடா எந்திரம் வாங்கினால், அதைப் பல ஆண்டுகள் பழுது பார்த்துப் பயன்படுத்தி வந்தோம். ஆனால், இன்று, புதிய மாடல்களைக் கண்டவுடன், பழைய மின்னணு சாதனங்களை சர்வ சாதாரணமாக தூக்கி எறிந்து விடுகிறோம்.

ஆகப் பெரிதின் அறிவிப்புகள் – ரா.கிரிதரனின் புனைவிசை

“நீர் பிம்பத்துடன் ஓர் உரையாடல்” மிகப் பெரும் நோக்கு கொண்டது. ஓர் ஓவியத்தின் பார்வையில் உலகளாவிய ஏகாதிபத்திய வரலாற்றையும் வெவ்வேறு காலனிய தூரதேசங்களில் அதன் சமூக தாக்கங்களையும் சித்தரிக்கிறது. புத்தகத்தின் சிறந்த வாக்கியம் இந்தக் கதையில்தான் இருக்கிறது – “கண்கள் மட்டும் பக்கவாட்டில் துடுப்பு போட்டபடி இருந்தது”. சால் பெல்லோ எழுதியிருக்க வேண்டியது.

மினுங்கும் பொழுதுகள்

‘நிழல்கூட அளவாக விழுமாறு எழுப்பபட்ட பிரம்மாண்ட’ கட்டிடத்தின் முன்னுள்ள புங்கை மரம் எப்படி தப்பித்தது என்பது குறித்த வியப்பும் (‘என் கடவுளின் சாமரம்’), வேலை முடிந்து திரும்புகையில் தற்செயலாக தென்படும் ‘இளம்பழுப்பு’ நிலவும் (‘இரவின் ஒளி’), ‘வீடும் வெளியும்’ பகுதியின் வெளிச்சத்திலிருந்தும், வாழ்வியலிலிருந்தும் நகரம் வெகு தொலைவில் வந்துவிட்டதை சுட்டுகிறது.

செந்திலின் சங்கீதம்

அதுவரை ஒரே ராகத்தில் வாசித்து வந்து விட்டு, இந்த கீதம் மாறுதலாக, மிக அழகாகத் தோன்றியது. தொடக்கத்தில் எளிதாக இருந்தது. ஆனால் ஒரு வரியில் தாவுவது போல மேலே போகும் இடம் வரவில்லை. பல முறை முயன்ற பிறகும் கை தடுக்கியது. ஆரம்பித்ததிலிருந்து ஒரு நாள் கூட இந்த மாதிரி ஆனதில்லை. செந்திலுக்கு கோபம் வந்தது. மீனாட்சி மாமிதான், “நான் முதல்லயே சொன்னேனே, பொறுமை வேணும், வீட்டுக்குப் போய் நூறுதரம் வாசி, தானாக வரும்,”என்றார்.

நில், கவனி, செ(π)ல்

பேச்சு ஒரு தாளில் எப்படி இருக்க வேண்டும்? 20-ம் நூற்றாண்டில் பேச்சுக்கும் குறிகளுக்குமான உறவு புதுப்பிக்கப்பட்டது. நிறுத்தற்குறிகள் உரைகளில் அவற்றின் உணர்வை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை வந்தது. நவீன எழுத்தாளர்களுக்கு மனதையும், அதன் விசித்திர உள்ளுணர்வுகளையும் எழுத உதவியது.

தத்தாரிகள்

‘எல் ஸாப்போ’ (என்றழைக்கப்பட்டவர்) சுவாவா நாய் வகைகளை எப்படி வளர்ப்பது என்று உரை ஒன்றை நிகழ்த்தினார், அது கேட்கவே அசிங்கமாக இருந்தது. ஸெக்சி இருபத்து மூன்றாவது விவிலியப் பாடலைப் பாடிய வண்ணம் இருந்தாள். அவள் அதன் சொற்களை வருடி வருடிப் பாடிய விதம் சிறிது ஆபாசமாக இருந்ததால் எல்லாரும் சிரித்தார்கள், அவளுடைய உணர்வுகள் புண்பட்டன.

என்னை அடிமை மண்ணில் புதைத்துவிடாதீர்

இனிய நண்பர்களே , செல்வச் செருக்கினர் தனியொரு மனிதனின்
உயிராம் உரிமை பறிக்கா இடத்தில் உறங்குவேன்;
சக மனிதன் அடிமை என்போர் இல்லாத இடத்தில்
அமையும் கல்லறையில் என் ஒய்வு அமைதியாய்க் கழியும்.

அமெரிக்க அதிபர் தேர்தலும் அதன் ஆயத்த விநோதங்களும்

ஒருவழியாக  அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 சூடு பிடிக்கத் துவங்கியிருக்கிறது. மற்ற நாடுகளைப் போலல்லாமல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கே தேர்தல் நடத்தும் விநோதர்களின் தேசம் இது. கொஞ்சம் சிக்கல், நிறையக் குழப்பங்கள், திடீர் திருப்பங்கள் என தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை இனி சுவாரசியங்களுக்கு பஞ்சமிருக்காது. யார் “அமெரிக்க அதிபர் தேர்தலும் அதன் ஆயத்த விநோதங்களும்”

நிஜமான வேலை

This entry is part 9 of 17 in the series 20xx கதைகள்

“மூலதன வருமானத்தின் பெருக்கத்திற்கு பொருளாதார வளர்ச்சி ஈடுகொடுக்க முடியாது என்று அவர் சொல்வது சமீபத்திய வரலாற்றின்படி சரி. அதனால் ‘கூப்பான்கள் வெட்டும்’ ஏழைகள் ஏழைகளாகவே இருக்க, பணக்காரர்களிடம் இன்னும் பணம் சேர்கிறது என்பதும் ஓரளவுக்கு உண்மை. ஆனால், உலகமுழுவதுக்குமான மூலதன வரி பிரச்சினையைத் தீர்க்கும் எனத்தோன்றவில்லை.”