சிக்கிம் – பயணக் கவிதைகள்

மேலிருந்து கயிறு
இறக்கியதுபோன்ற பாதை.
மேகங்களிலிருந்து மிதந்து
இறங்கிய வண்டியிலிருந்து,
அடுத்த முடுக்கு வரைதான் தெரிந்தது.

“இரு புறமும் சுழலும் கடிகாரம்” பற்றி

This entry is part 20 of 48 in the series நூறு நூல்கள்

“அந்த ஒரே இரவில் நாங்கள் அனைவரும் பெரியவர்களானோம். சிதையில் எரிந்தது எங்கள் பாட்டி மட்டுமில்லை, எங்கள் பால்யமும்தான்.” என்று நேரடியாக தலைப்பும் முடிவும் ஒன்றாகும் இக்கதை வாசகனிடம் விட்டுசெல்வது, இந்த எளிய வார்த்தைகளை மீறிய வலிமிகுந்த இழப்புணர்வை. குழந்தைகளின் நினைவுகளில், களிமண்ணில் அச்சுபோல எத்தனை எளிதாக, கவனிப்பதும் கவனிக்காததும் பதிந்துவிடுகின்றன.

“அலர்தலும் உதிர்தலும்” – ஹைக்கூ கவிதைகள்

This entry is part 2 of 5 in the series ஹைக்கூ வரிசை

வண்டு மறைக்கும்
சிறுபூக்களின் பின் – உதிர
சிலிர்க்கும் காடு.

மூவர் கவிதைகள்

அண்ணன் புத்தாடையும்
முகப்பூச்சுமாய்
உள்ளேயும்வெளியேயும்நடக்க,
திருந்தா நடையோடும்
இடை உள்ளாடையோடும்,
ஊருக்கு செல்லும் பிடியில்
வாசலில் இருந்த வாளியில்

தீராத கதைசொல்லி

இப்போது, நான் இந்தியாவில் இருந்துகொண்டு நியூ யார்க்கில், ரஷ்யாவிலிருந்து அங்கு வந்தேறிய பெண்ணுடன் வேலை செய்கிறேன். நானும் அவளும் சேர்ந்து சீனாக்காரரான எங்கள் ‘லீட்’ ஐப் பற்றிப் பேசிக்கொள்கிறோம். இந்தச் சூழலில், அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்துக்கள் எனக்கு அதே விதமான விகசிப்பையும், புரிதலையும் அளிப்பது மட்டுமல்லாமல், உலகக் கலாசாரங்களை என் தாய் மொழியில் அணுக முடிகின்ற பரவசத்தையும் அளிக்கிறது. எங்கு சென்றாலும், அங்கு நமக்கு நன்கு தெரிந்த நம்ம ஊர் நண்பர், சுற்றி அழைத்து காண்பிப்பதுபோன்ற உணர்வு. அதிலும் ஒரு தேர்ந்த கதை சொல்லி…

பாட்டிக்கு, அன்புடன் – அனுக்ரஹா கவிதைகள்

செவிட்டு உலகில் பேசிக்கொண்டிருக்கிறோம்
சிரிப்பு அழுகை கிண்டல் கோபம்
ஆற்றாமை,
ஒன்றும் மற்றொருவரை
தீண்டுவதில்லை..
யாரும் யாருக்கும் பதில் சொல்வதில்லை..

மொட்டு விரியும் சத்தம்- நூல் அறிமுகம்

This entry is part 42 of 48 in the series நூறு நூல்கள்

கன்னடத்தில் நவீன இலக்கிய முன்னெடுப்புகளின் முக்கிய பங்களிப்பாளரான லங்கேஷ் அவர்களின் எழுத்துக்களை தமிழில் கொண்டுவந்திருப்பது முக்கியமான முயற்ச்சியாகும். இதை மிக அழகான தரத்திலும் வடிவத்திலும் பதிப்பித்திருப்பது இன்னும் மகிழ்ச்சியளப்பது. இப்புத்தகத்தில், இரண்டு விதமான கவிதை சரடுகள் ஓடுகின்றன. ஒன்று லங்கேஷ் அவர்களின் எழுத்துக்கள் மூலமாகவும், இன்னொன்று திரு. நல்லதம்பி அவர்களின் புகைப்படங்கள் மூலமாகவும். கன்னட மொழியில் நல்ல பரிச்சயம் உடையவரும், கர்நாடகத்திலேயே பிறந்து வளர்ந்தவருமான திரு.நல்லதம்பி அவர்கள், தமிழுக்கு இது போல மேலும் பல முக்கியமான படைப்பாளிகளை அறிமுகப்படுத்த வேண்டும்.

கர்மயோகம்

ஃபேன் காற்றில் காபி ஆறிபோயிருந்தது. “ஏ கமலம்..இப்படி வா..இத கொஞ்சம் சூடு பண்ணி கொண்டுவா..”. “ராமா ராமா ராமா” என்றவாரே பாடி வந்தாள். சரியாக இந்த நேரத்தில் இப்படியொரு கோரிக்கையை எதிர்ப்பார்த்தவள் போல வந்து காபி டவராவை எடுத்து சமையல் கட்டுக்கு சென்றாள்.

கவிதைகள்

குனிந்துபார்க்கவும் நேரமில்லாததுபோல்
எனக்குள் இருக்கும் அலுவலகத்திற்குள்
உழன்றபடியே கடந்து போயிருக்கிறேன்
ஒவ்வொருமுறையும் இந்தவழியில்

கவிதைகள்

அந்த மலை முகடுகள்
வெகு நாட்களாக அங்கே படுத்திருக்கின்றன,
பள்ளிக்கு செல்வதற்கு முன்பும்,
செல்லும்போதும்,
சென்று முடித்தபோதும்.
பூமியின் எல்லையில் அவை
இன்னும் தூங்கிக்கொண்டிருக்கின்றன.

கவிதைகள்

வீடுகளுக்கிடையே
சிக்கியிருக்கும் மரங்களுக்குமேல்
பறவைகள் சிறு கூட்டமாக
செல்கின்றன.
வானம் விளக்கணைத்து
காத்திருக்கிறது
இமையாது ஒளிரும்
ஜன்னல்களுக்கு வெளியே.

டைகர்

அலுவலகத்தில், மற்றவர்களிடம் விசாரிக்க ஆரம்பித்தோம். கிட்டதட்ட எல்லோருமே எங்களைப் போன்ற விடுதிகளில்தான் இருந்தார்கள். இத்தனைக் கச்சிதமான அலங்காரங்களுடன் எல்லோரும் ஒவ்வொரு பொந்துகளிலிருந்து வந்துகொண்டிருந்தார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது.

என்றுதானே சொன்னார்கள் – கவிதைத் தொகுப்பு

இப்போதும் பசியும் வறுமை சார்ந்த அவலங்களும் இருக்கின்றன, ஆனால், மொத்த சமூகமே மிகச் சிக்கலானதொரு வலைப்பின்னலுக்குள் வந்துவிட்டிருக்கிறது. தற்காலத்தின் மிகப் பெரிய அவலமே, இப்புதிய யதார்த்தத்தை உணர்ந்துகொள்வதற்கான அவகாசத்தையோ அவசியத்தையோ அளிக்காத பிழைப்புச் சூழல்.இன்று எத்தனைக் கவிஞர்களால் புல்வெளிகளைப் பற்றியோ நதிகளைப் பற்றியோ மலைகளைப் பற்றியோ எழுத முடியும்?

தீஸியஸின் கப்பல்: திரைப்படமும் தத்துவமும்

“பழுதடைந்த ஒரு கப்பலின் பாகங்கள் ஒவ்வொன்றாக மாற்றப்பட்டு, இறுதியில் அனைத்து பாகங்களும் மாற்றப்பட்டால், அது அப்பழைய கப்பலேதானா? அப்படி பழைய கப்பலிலிருந்து அகற்றப்பட்ட பாகங்களைக் கொண்டு இன்னொரு கப்பல் உருவாக்கினால், அது புதிய கப்பலாகுமா? இல்லை, அது முதல் கப்பலேதானா?”

இந்த முரண்பாட்டு வாக்கியங்களுடன் தொடங்குகிறது படம். மூன்று கதைகளாக மூன்று மனிதர்களின் உலகில் பயணிக்கிறது.

"வீடும் வெளியும்"-கவிதைகள்

சத்தம்போடாத மின்விசிறிகள்
இரக்கமற்றவை – உங்கள்
தனிமையைப் பகிர மறுப்பவை.
அறையின் சுவர்களின் வழியே
தண்டவாளங்களின் மீதேறி
வேறு உலகங்களைக் காண
அனுமதிக்காதவை.

மாதொருபாகன் – மனிதன் இழந்து கொண்டிருக்கும் இன்னொரு பாகம்

‘மாதொருபாகன்’, ‘பெண்ணிற்கு தன் இடபாகத்தைக் கொடுத்து ஆண் பாதி பெண் பாதி எனக் காட்சி தரும் அர்த்த நாரீஸ்வரர் வடிவத்தைக் குறிக்கும் பெயர்’ என்று ஆசிரியர் இந் நாவலின் தலைப்பை அறிமுகப்படுத்துகிறார். இக்கதையும் காளியும் பொன்னாவும் தம்பதி என இணைந்த ஒரு அலகாக, சமூகத்தை எதிர்கொள்வதைப் பற்றியதுதான். ஆணானாலும் பெண்ணானாலும், அவர்களுக்கான சமூக பாத்திரங்களை ஏற்க கடமைப்பட்டிருக்கிறார்கள். அந்த விதத்தில், இருவரும் ஒரு உருவத்தில் பிணைக்கப்பட்டவர்களே.

கனவு

அபி, கூடத்தின் கருங்கல் தரையின் மேல் கால் மீது கால் வைத்து ஆட்டியபடியே படுத்திருந்தாள். அவள் ‘ப்ளே ஸ்கூலி’லிருந்து கொண்டு வந்த பையும் தண்ணி பாட்டிலும் அவள் கையருகே இருந்தன. அவளுக்கு மிக அருகில் தாழ இறங்கிய இரும்பு கட்டிலில் எம்.வி.மாமா படுத்திருந்தார். இந்த தூங்கும் நேரம் இன்னும் எத்தனை மணி நீளும் என்று அபி யோசித்துக்கொண்டிருக்கையிலேயே…

வாடிவாசல் – அதிகாரம் எனும் பகடைக்காய்

மிருகமும் மனிதனும் ஒருவரையொருவர் நிரப்பிக்கொள்ளும் தருணம் தான் வாடிவாசல்.அங்கு ஒரு கணமேனும் மனிதன் மிருகமாகிறான், மிருகம் மனிதனாகிறது. பிச்சிக்கு, அக்காரியின் கொம்புகளில் தன் தந்தையின் ரத்தம் இன்னும் சிவப்பாக இருப்பது போல தோன்றும் போது, அக்காளைக்கும் அவனது கண்களில் அவன் தந்தைக்காக வந்திருக்கும் வஞ்சம் தெரிந்திருக்கலாம். அச்சமயம், தான் ஒரு மனிதனுக்கு முன் நிற்பது போலவே பிச்சி உணர்கிறான்.

மேலும் கீழும்

சௌமியா, மெதுவாக ஒரு புஸ்வானத்தை எடுத்து வைத்தாள். அது ‘புஸ்ஸ்ஸ்’ என பெரிய சத்தத்தோடு பொங்கி எழுந்தது. இருவரும், அதன் சத்தத்தையே கேட்டுக்கொண்டிருந்தனர்.கீழிருந்து டி.வி யின் சத்தம் அதிகரித்தது. ஒருவர் மாற்றி ஒருவர், புஸ்வானங்களை விடத் தொடங்கினர். அது தீர்ந்ததும் தரை சக்கரங்கள். ஸ்ருதி மெதுவாக சௌமியாவைப் பார்த்து,’அப்போ, நிஜமாவே அம்மாவும் அப்பாவும் டைவர்ஸ் பண்ணின்றுவாளா?” என கேட்டாள். அதுவரை, அது ஏதோ சௌமியா தான் படிக்கும் கதைப் புத்தகங்களிலிருந்து, தன்னை பயமுறுத்த சொல்லும் கற்பனை என்றே நினைத்திருந்தாள்.

கவிதைகள்

அந்த நாளை
அந்த கணத்துடன்
மடித்து வைத்திருந்தேன்,
ஒரு பாடலுக்குள். – அது
இனிய நினைவுகளைப் போல
பொலிந்துகொண்டிருந்த
ஜன்னலருகே நின்றிருந்தது.

ராஜேஷ் கன்னா

ராஜேஷ் கன்னாவை பள்ளி தொடங்கி இரண்டு மாதங்கள் கழித்துத் தான் நான் முதலில் கவனித்தேன். இத்தனைக்கும் எனக்கு உடனே முன்னால் இருந்த வரிசையில் தான் இருந்தான். மூன்று நாற்காலிகளும் மூன்று பெஞ்சுகளுமாக ஒவ்வொரு வரிசையும் இருக்கும். நான் நடைபாதையை ஒட்டிய நாற்காலி என்றால், அவன் என் முன் வரிசையில் சுவரை ஒட்டிய நாற்காலி. எங்கள் வரிசைகளே வகுப்பின் ஓரத்தில் இருந்தன. அவனுக்கும் இரு பெஞ்சுகள் முன்னாடி தான் ஜன்னல் இருந்தது என்றாலும், அங்கு பார்க்கும்போது கூட அவனை கவனித்தது இல்லை.

உதயன் வாஜ்பாயி – அறிமுகமும், கவிதைகளும்

1960-இல் பிறந்த உதயன் வாஜ்பாய், ஒரு இந்தி கவிஞர், கட்டுரையாளர், சிறுகதை மற்றும் திரைக்கதை ஆசிரியர். இதுவரை இரண்டு கவிதைத் தொகுதிகளும், ஒரு சிறுகதைத் தொகுப்பும், இன்னும் பலவகையான ஆக்கங்களும்(அதில் மீட்டெடுக்கப்பட்ட நாட்டார்கதைகளின் தொகுப்பும், இயக்குனர் மணி கவுல்-உடனான நீண்ட உரையாடல்கள் தொகுதியும் அடங்கும்) வெளியிட்டிருக்கிறார். அவருடைய படைப்புகள் வங்காளம், தமிழ், ஒரியா, கன்னடம், ஆங்கிலம், பிரெஞ்சு, போலிஷ் மற்றும் பல்கேரிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

கவிதைகள்

கட்டங்களின் நிறம் அழிந்து
வாழ்க்கைச்சதுரங்கம் கனக்க,
சிகப்பு சாயத்தில் குளித்து
கருப்புமல்லாது வெள்ளையுமல்லாது
தனித்து நிற்கிறாள்
சதுரங்க ராணி.

குழந்தை மனம் : ஆலிசன் கோப்னிக் நேர்காணல்

குழந்தை உளவியல் பற்றி பல கட்டுரைகள் மற்றும் நூல்களை எழுதியிருக்கும் ஆலிசன், குழந்தைகளின் அகவுலகைப் புரிந்துகொள்வதன் மூலம், நமது ஆழமான தத்துவக் கேள்விகளுக்கு விடை காண முடியும் என்று வாதிடுகிறார். குழந்தைகள், சீர்திருத்தப் படவேண்டிய சிறிய மனிதர்கள் எனும் மேற்கத்திய பார்வை மாறிவரும் அதே நேரத்தில், குழந்தைகளை சிறிய தெய்வங்களாகக் கொண்டாடும் இந்திய மரபார்ந்த பார்வையும் சிதைந்துவிட்டதோ என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது.

கண்ணாடி அணிந்தவனின் நிலவு

என் பார்வையின் விளிம்புகளில்
படித்த எழுத்துக்கள்
நிரம்பிப் பிராகசிக்கின்றன.
அத்தனை பாவனைகளுக்கும்
அத்தனை விளிம்புகளை
மாற்றிக் கொள்ளலாம்.

உங்கள் காலடி உலகில்..

தன் வறுமை நிலையையும்,
தன் உடலின் நிலையாமையையும்.
ஆடி மகிழ்ந்தான்,
தன் வாழ்வின் வேதனைகளில்.
இச்சுதந்திரச் சிறகுகள்,
நம்புங்கள்,
ஒரு நூலளித்தப் பரிசு!