பாழ்மையினூடே மகோன்னதத்திற்கு: எலியட்டின் பாழ் நிலம்

ஆனால் ஒரு விஷயத்தில் நாம் கவிதையோடு உடன்பட வேண்டும், அதன் நாயகன் நிச்சயமாக அவன் நிலங்களை ஒழுங்குபடுத்தி செப்பனிட வேண்டும் (set his lands in order). ஆனால் அன்பை, நிதர்சனத்தைக் காட்டிலும் ஆதர்சமானதொருநிலையில் உயிர்த்தெழுப்புவதற்காக, அதை இறக்க அனுமதிக்கும் மனநிலையைப் பராமரிப்பது கடினம். இதனால்தான் லண்டன் ப்ரிட்ஜ் வீழவிருக்கும் நிமித்தங்களுடன், வறண்ட சமவெளி பின்னே விரிந்துகிடக்கும் சூழலில் அவன் இன்னமும் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறான். ஆயினும், வறண்ட எண்ணங்களைக் காட்டிலும் மேலான ஏதோவொன்று ஈட்டப்பட்டு, இடிபடுகளுக்கு எதிராக இங்கு கரைசேர்க்கப்பட்டிருக்கிறது.

வைக்கோல் மாந்தர்களும் பேசா பிராட்டிகளும்: பாழ்நிலத்துக்குப் பிந்தைய கவிதைகள்

பாகம் 1 1. ஹாலோ-மென் எலியட்டின் சர்வதேசப் புகழும் The Waste Land கவிதையும் ஒன்றி இருப்பதால் “வாழ்க்கை குறித்த ஓர் தனிப்பட்ட முக்கியமற்ற பிலாக்கணத்திற்கான வடிகால்… வெறும் சந்தநயமான முணுமுணுப்பு” என்று அவர் அப்பெருங்கவிதையைப் பற்றிய பின்னோக்கிய மதிப்பீட்டொன்றில் கூறியது பலருக்கும் ஆச்சரியமளிக்கலாம். நவம்பர் 1922-லேயே அவர் “வைக்கோல் மாந்தர்களும் பேசா பிராட்டிகளும்: பாழ்நிலத்துக்குப் பிந்தைய கவிதைகள்”

அவதரிக்கும் சொல்: எலியட்டின் ஃபோர் குவார்ட்டெட்ஸ்

டி.எஸ்.எலியட் போன்ற பெரும் ஆளுமைகளின் கலையில் முன்னேற்றம் போன்ற பரிணாமங்களை வரையறுப்பது சற்று முட்டாள்தனமாகவே இருக்கலாம்; ஏனெனில் அவரது ஆரம்ப காலப் படைப்புகளிலேயே ப்ரூஃப்ராக் போன்ற படைப்பும், அவரது மத்திய காலப் படைப்புகளில் பாழ்நிலம், ஆஷ் வெட்னஸ்டே போன்ற பெரும் படைப்புகளும் இடம்பெற்றிருப்பதால் . இக்கவிதைகள் அனைத்தையுமே நாம் இத்தொடரின் முந்தைய பகுதிகளில் பேசிவிட்டோம். அவற்றுக்குப் பின்வந்த ஃபோர் குவார்டெட்ஸ் கவிதை உண்மையில் நான்கு நீள் கவிதைகளாலான ஒரு கதம்பக் கவிதை. நான்கு கவிதைகளுமே ஐந்து அசைவுகளாகக் கட்டமைக்கப் பட்டிருக்கிறன.

மகோன்னதத்திற்கான ஆயத்தம்

சார்பற்ற புறநிலைத் தன்மைக்கானதொரு பயிற்சியே இங்கு முயற்சிக்கப்படுகிறது. ஆனால் வறண்ட இம்மூளைப் பயற்சியை உயர்பிப்பதற்குத் தேவையான உணர்வின் உத்வேகம் இல்லாததால் இக்ககவிதைகள் வாழ்க்கையை அணுகுவதற்கான ஓர் முறைமையாக மாறாது லாஃபோர்கேயை எதிர்கொள்வதற்கான அணுகுமுறையாக எஞ்சிவிடுகின்றன. ஏன் ஹியூமரெஸ்க்? என்றால் விண்டம் லூவிஸ்சின் தார் (Tarr) நாவலை எலியட் விமரிசிக்கையில் நகைச்சுவை என்பது “அழகை அகோரத்திலிருந்து பாதுக்காப்பதற்கும் தன்னையே முட்டாள்தனத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவும் மனது மேற்கொள்ளும் ஓர் நுண்ணுணர்வுமிக்க இயல்பான உள்ளார்ந்த முயற்சி” என்று கூறியதே அதற்கான சரியான பதிலாக இருக்க முடியும். உன்னதத்திற்கான விழைவை நகைமுரண் முகமூடிகளைக் கொண்டு அடியறுக்கும் போக்கை  நாம் கவிஞர் இசையின் கவிதைகளிலும் காண்கிறோம். உதாரணமாக…

மகோன்னதத்திற்கான ஆயத்தம்: டி.எஸ்.எலியட்டின் ஆரம்பகாலக் கவிதைகள் – 2

அதன் விருப்புறுதியில்லாது தடுமாறும் நாயகன், மிகெலாஞ்சலோவைப் பற்றி கதைத்தபடியே வந்துபோகும் பெண்கள் சூழ்ந்திருக்கும் வரவேற்பறையைத் தவிர்ப்பதற்காகப் புறவுலகு தரிசனங்களை (மலிவான ஹோட்டல்கள், மரத்தூள் பரப்பப்பட்டிருக்கும் உணவகங்கள், நயவஞ்சகமான தெருக்கள், மஞ்சள் மூடுபனி / புகை போக்கிக் கரி படிந்திருக்கும் பூனை போன்றவற்றை) வலுக்கட்டாயமாக நினைத்துப் பார்க்கிறான். மேலும் அப் புறவுலகு ரொமாண்டிசிஸ்ட்களின் வழக்கமான, pathetic fallacy இல்லாது, அதாவது கவிஞரின் உணர்வுகள் கவிதையின் பொருட்களின் மீது திணிக்கப்படாமல் (Art thou pale for weariness… wandering companionless? என்று ஷெல்லியின் பிரசித்தி பெற்ற கவிதையொன்று நிலவைக் கேட்கிறது) நமக்கு அளிக்கப்படுகிறது