பலரும் இதை ஒரு பழைய மத புத்தகம் என்றே நினைக்கிறார்கள். ஏதோ ஒரு தீவிரமான, சிக்கலான பெரியவர்கள் கூட புரிந்துகொள்ளச் சிரமப்படும் விஷயம் என்று நினைக்கிறார்கள். ஆனால் கீதை மிகவும் எளிமையான ஒன்றிலிருந்து தொடங்குகிறது: அர்ஜுனன், மிகத்திறமையான எதிரிகள் அஞ்சி ஓடும் ஒரு போர்வீரன். ஒரு போர்க்களத்தில் மிகுந்த குழப்பங்களுடன் நிற்கிறான். அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பயம், குழப்பம், சுய சந்தேகம், தர்மம் என்று பலவித மனச்சிக்கல்களுக்கு ஆளானவனாக தனது உறவுகளே பகையாக நிற்கும் களத்தில் கலங்கி நிற்கும் மாவீரன்.
Category: புத்தக அனுபவம்
கிருதுமால் நன்செய் – மதுரை மக்களின் வாழ்வியல் சித்திரம்
துணைஇல் தொடங்கி சில்லறைக் காசுகள் வரையான 16 கதைகளும் நாம் அன்றாடம் சந்திக்கும் எளிய மனிதர்களின் வாழ்வியலைச் சொல்கின்றன. தூக்குச் சட்டியில் (துணைஇல்) தொடங்கும் கதை சாப்பாட்டுப் பொட்டலத்துடன்(சில்லறைக் காசுகள்) முடிகிறது. இரண்டும் உணவுதான். தானொரு விவசாயி என்பதால் கூட அவரையறியாமலே இப்படி அமைந்திருக்கலாம்.
இயற்பியல் எனும் அழகும் மந்தணமும்
ஏழாவது பகுதி மனிதர்களாக நம்மையும் அறிவியல் பாய்ச்சல்களையும் ஒன்று சேர்த்துவிடுகிறது. நம்மைச் சுற்றி இருக்கும் உலகை முழுமையாக விளக்கிவிட முடியுமா? பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் நாம் இந்த உலகின் மையம் அல்ல எனும் அறிதலுக்கு வந்திருக்கிறோம். ஒரு ஆக்டோபஸ் மூளையை விட மனிதர்களின் சிந்தனைத் திறன் ஒற்றைப்படைத்தன்மையக் கொண்டிருக்கிறது என நாம் உணர்ந்திருக்கிறோம். விண்ணிலிருந்து மழை போல துகள்களும், கதிர்களும், தூரக்கோள்களின் கார்பன் துகள்களும் நம் மண்ணோடும் நீரோடும் கலக்காவிட்டால் இன்று உயிர் எனும் அமைப்பு உருவாகி இருக்காது.
ஏழு ஸ்வரங்களுக்குள்..
திரு. அரவிந்த் நீலகண்டன், அவர் சிறு வயதில் படித்த மிர் பதிப்பக கதைகளைப் பற்றி மிக அழகாக எழுதுவார். அதைப் போலவே கிரியும் சொல்கிறார். அறிவியல், அவருக்கு கதைகளின் வழியே சுவையான அனுபவமாக ஆகியிருக்கிறது. அறிவியலும், அறிதல் முறைகளும், அவர், தன் முன்னுரையில் சொல்வதைப் போலவே, இந்தக் கதைகளில் காணக் கிடைக்கின்றன. குறிப்பாக விஞ்ஞான ஆய்வுகளுக்காக, தொழில்நுட்பத்துறையும், கச்சிதத்திற்காக விஞ்ஞானமும் ஒன்றை ஒன்று உந்தியபடி வளர்வது சுவாரஸ்யமான போட்டி.
சலூன் நாற்காலியில் சுழன்றபடி கோணங்கி
கோணங்கியின் உரைநடை தனித்துவமானது. கனவு, கானல் நீர், ரசாயன மயக்கம், கட்புலனுக்கிடையே எச்சரிக்கையின்றி சுமூகமாகத் தாவும் வரிகள். புனைவு எழுதுபவர்கள் பொதுவாக காட்சிச் சிந்தனையாளர்களாக இருப்பது அரிது. ஆனால் அந்த அரிய பகுப்பைச் சேர்ந்தவர் கோணங்கி. வண்ணதாசன் படைக்கும் பாத்திரங்களைக் காட்டிலும் கோணங்கியின் பாத்திரங்கள் நிலையற்று காணப்படுகின்றன.
கண்ணனேந்தல் பறவைகளின் ஒளிப்பாய்ச்சி
தான் ஒரு இயற்கைக் காதலன் என்பதனை மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றன சிவக்குமார் கணேசனின் கவிதைகள். அதிலும் குறிப்பாக “மாங்குயில்களின் கருங்கொண்டை” என்ற வார்த்தையை கவிதைகளில் நிறைய இடங்களில் புழங்குகிறார். கொன்றை மலர் அரும்பிய மரத்தைப் போன்றிருக்கும் மயிலின் கொண்டைகளை யார் தான் ரசிக்காமல் இருக்க முடியும். ஆசிரியரையும் அகவியலைக்கின்றன மாங்குயிலின் கருங்கொண்டைகள் என்பதனை உணர்த்துகிறது.
பாரதியின் காளி
காசியில் இருந்த சமயம் பாரதிக்கு சுதேசி இயக்கம் அறிமுகமாகிறது. பொருளாதாரத்தின் சிக்கலான சமன்பாடுகளைக் கொண்டு தேசம் என்பதையும், அதனால் அது எதிர்கொள்ளும் அபாயம் என்பதையும் தாதாபாய் நௌரோஜி மிகச் சாதுர்யமாக விளக்குகிறார். அதை பாரதி கவனிக்கிறார். அதுவரை பண்பாட்டுப் பரப்பாக மன்னர்களும் மக்களும் கருதிக் கொண்டிருந்த காலத்தில், ஜாதிமைய அடையாளம், அதிகாரம் போன்றவற்றையே அறிந்திருந்தவர்கள் மத்தியில் பொருளாதாரப் பார்வையை நௌரோஜி முன்வைத்து அபாயத்தை எச்சரிக்கிறார்.
உரூப்-ன் ‘உம்மாச்சு’
மனம் நொய்மையடைந்து வாழ்வில் சலிப்புற்றிருந்த மாயன் மலைக் காட்டுப் பகுதியில் ஒரு மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொள்கிறான். ஊரிலிருந்து வரும் மரக்காரும், ஹைத்ரோஸும் ஹஸ்ஸனுடன் மாயனின் உடலை லாரியில் ஊருக்கு எடுத்துப் போகிறார்கள். அப்பாவின் சாவிற்கு அப்துதான் காரணம் என்றெண்ணும் மரக்காரும், ஹைத்ரோஸும் அப்துவின் மேல் வன்மம் கொள்கிறார்கள். உம்மாச்சு நடைப் பிணமாகிறாள்.
யுகமலர் தொடும் மானுட விரல்
“அப்போ அடுத்த கேள்வி, அவரு இத எப்படி சாதிச்சிருப்பாரு? இதுக்கான பதில் நமக்கு நாராயண குரு கிட்ட இருந்து கிடைக்கலாம். நாராயண குருவ ஒரு சீர்திருத்தவாதி, ஆன்மீகவாதினு மட்டும் பாக்காம, அவருக்கு ஒரு தொழில் முனையும் மைன்ட்செட் இருந்திருக்கு, அதை அற வழியில மக்களோட பிரச்சனைகளை தீர்க்க உபயோகப் படுத்தியிருக்கறத நம்மாள தெரிஞ்சிக்க முடியுது”
தீசியஸ் (Theseus)
இந்திய ஆயுர்வேத முறை, உடலை ஒரு இயக்கம் இல்லாத இயந்திரமாகவோ, அதற்கான மாற்றுப் பொருட்களை தயாரிப்பதையோ முன்னிறுத்திச் சொல்லவில்லை என்றாலும், உடல் உறுப்பை சரி செய்வதும், மாற்றுவதும் அறுவை சிகிச்சையினால் செய்ய முடியும் என்று சொல்கிறது. 1938ல் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யத் தொடங்கினார்கள். இப்போது இந்த துறையானது கிரிஸ்பர் (CRISPER) முதலான மரபணு திருத்தங்கள் மூலம் பல அற்புதங்கள் செய்து வருகிறது. எனினும், பயணிக்க வேண்டியது தூரம் அதிகமே.
விட்டல் ராவ் ஓர் கலைச்சுரங்கம்
பொண்ணா இருந்தாலும் சரி, ஆணா இருந்தாலும் சரி, ஒவ்வொரு ஆர்டிஸ்ட் மனசுக்குள்ளயும் ஒரு பொண்ணுக்கான முகம்,ஒரு ஆணுக்கான முகம்னு தனித்தனியா இருக்கும். அந்த உருவம்தான் ஓவியத்துக்குள்ள வரும். அப்புறம் எதுக்கு மாடல்னு உங்களுக்குத் தோணலாம். அது அந்த குறிப்பிட்ட ஒரு கோணத்துக்காக ஒரு சாயலுக்காக. உடல் வளைவுக்காக. அந்த துல்லியத்தைப் புரிஞ்சிக்கறதுக்காகத்தான் மாடலை நிக்க வைக்கிறது
”குற்றத்தின் நறுமணம்” கவிதைகள் – விமர்சனம்
தனது கடந்தகால வாழ்வியலின் காட்சியை நிகழ்கால அசலாகக் கச்சிதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். நிரை மரக்காலில் நிறைந்திருக்கும் நெல்மணிகளாய் சொற்கள் நிறைந்தவையாகக் கவிதைகள் காணப்படுகின்றன. தலைப்பே கொஞ்சம் வித்தியாசமாகத் தானிருக்கின்றன “குற்றத்தின் நறுமணம்”என்று. குற்றத்தினை பல்வேறு வகையான கோணங்களில் வகைப்படுத்தலாம்.
பாட்டினைப் போல் ஒரு விந்தை பாரின் மிசை இல்லை
நமது சங்கீதமே ஒரு ராகத்தின் நுணுக்கங்களை எல்லாம் ஒரு பாடகன் அல்லது ஒரு வாத்தியக்காரன் நுணுகி நுணுகி வெளியிடுவதில் தான் இருக்கிறது மேற்கத்திய இசையில் பல ஸ்கேல்களில் குறுக்கும் நெடுக்கும் தறியில் நெய்யப் படுவது போல் அனந்தமான இழைகளால் அது ஊடும் பாவுமாய் உருவாக்கப்படுகிறது
திறப்பதற்குப் புதிய வாசல்கள்
‘புலிநகக் கொன்றை’ என்ற ஒரு சொற்றொடர் அல்லது சொல் ஓர் அற்புதம் எனில் ‘ஞாழல்’ – அதன் மூதாதையான செஞ்சொல் – இனிமையில், செழுமையில் அதை விஞ்சுகிறது. ‘ஞாழல் பிறந்த கதை’ கட்டுரை விடுதலைப் போராட்டம், சாதாரண மனிதர்களான சுதந்திரப் போராட்ட வீரர்கள், தென்கலை வைணவர்கள், பொதுவுடைமை இயக்கம், நாவலில் வரும் பாத்திரங்களின் வாழ்க்கை ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து இந்நாவல் எப்படிப் பிறந்தது என்று விவரிக்கிறது.
அக்ஷய அக்ஷரம்
மனித குலத்திற்கான அக மொழி , ஒன்றாகவே இருக்கிறது என எடுத்துக் கொண்டாலும் அட்சய அட்சரம் என்று ஏன் தலைப்பு கொடுத்தேன்? என் நண்பர் ஒருவர் ஒருமுறை சொன்னார்: ‘பல சொற்கள் தமிழ் புழங்கும் சூழலில் இருந்து வெளியேறி வருகின்றன; அவற்றை ஒரு அகராதியாக தொகுத்துக் கொண்டிருக்கிறேன் என்றார் அவர். தமிழில் எழுதும் வகையில் இந்த சொல் இருப்பதால் இந்தப் பெயரை வைத்தேன் என்று பணிவோடு சொல்லிக் கொள்கிறேன்.
டாங்கோ : ஓர் அறிமுகம்
நினைவு தெரியும் முன்பே தாயையும், தந்தையையும் இழந்த, மாமாவால் வெறுமென வளர்க்கப்பட்டு, ஆசிரம இல்லத்தில் தங்கி தன்னை தகவமைத்துக் கொண்ட ஆனந்த் என்கிற ஒரு தனியனின் கதை மட்டுமல்ல. அவனின் மனசஞ்சலங்கள், ஆர்வங்கள், ஆர்வமின்மைகள், லாகிரி, காதல், காமம் என அனைத்தையும் மிக அழகாக நேர்த்தியாக blend செய்து கவனமாக நெய்யப்பட்ட ஓர் அழகிய தூய்மையான கம்பளம் என்று சொல்லலாம்.
ஆராதனை- புத்தக அறிமுகம்
சரஸ்வதி பாயின் ஹரிகதா அனுபவங்கள், சமுதாயத்தில் நிலவிய/நிலவுகின்ற ஆண் பெண் இருவரின் திறமையைப் பற்றி அந்தந்த துறையைச் சேர்ந்தவர்களே, பெண்ணை தவறாக எடை போட்டு ஒதுக்கி இருக்கிறார்கள்/இன்றும் ஒதுக்கிக் கொண்டு இருக்கிறார்கள் எனபதைக் காட்டுகிறது. எல்லாவற்றையும் மீறி அவர் சாதித்துக் காட்டியதும், அவரது திறமையை அடையாளம் கண்டு கொண்ட பிரம்மஸ்ரீ திருவாதி கிருஷ்ணாசார் அவர்களும் நம் போற்றுதலுக்கு உரியவர்கள்.
இருக்கும் இடத்தில் விடுபடு
ஓரிடத்தில் இருந்து கொண்டோ அல்லது ஒரு செயலை செய்துகொண்டோ மற்றொன்றை நினைத்துக் கொண்டால் கவனம் பிசகும் என்பதைப் பெரியவர்கள் வலியுறுத்தி இருந்தாலும் இன்றைய சூழலில் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் நிர்ப்பந்தமும் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. முடிவில், எதையும் நேர்த்தியாகச் செய்யாமல் தவிக்கும் நிலைக்கு ஆளாகி நிம்மதியின்றி மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள்.
பொற்பாதை
ரோமானியர்களுடன் நம் வர்த்தகம் செழிப்பாக இருந்த காலம். அவர்கள், நம் மிளகை, மசாலாப் பொருட்களை, தந்தங்களை, பருத்தியை, நவரத்தினங்களை, தேக்கை, சந்தனக் கட்டைகளை பெருமளவில் தங்கம் கொடுத்து வாங்கினார்கள். நமது வணிகம் பொருள் மிகுதி நிலையை நமக்குத் தந்தது. ரோமில், ப்ளினி,மூத்தவர் கோபத்துடன் புலம்பினார் “ இந்தியாவுடனான நம் வர்த்தகத்தில், ஒவ்வொரு ஆண்டும் நம் அரசு 55 மில்லியன் செஸ்டர்கள் இழந்து வருகிறது.”
அல்காரிதம்-ஒரு மனித வாழ்க்கை
நம்முடைய தினசரி வாழ்க்கையில் algorithm-களின் பயன்பாடு, மற்றும் நாளாக நாளாக உருமாறிக்கொண்டேயிருக்கின்றது. இந்த automated system-த்தின் எல்லைகளற்ற அதன் தன்மையானது மனித குலத்திற்கு எவ்வகையில் உதவுகின்றன என கூறும் புத்தகமே Code Dependent. இதில் கூறப்படும் உண்மை சம்பவங்கள் யாவும் Silicon Valley-யிலிருந்து கூறப்படுபவை அல்ல.
இந்திய வரலாற்றைப் புரட்டிப்போட்ட மாமனிதர் ஜே .பி.
ஜூன் 5 1978 ல் ஜேபி ஜனதா அரசாங்கமும் முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தைத்தான் பின்பற்றுகிறது. மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். மக்கள் எதிர்பார்த்ததை ஜனதா அரசு கொண்டு தரவில்லை’ என்று அறிவிப்பு செய்கிறார். யார் தன்னை பிரதமர் ஆக்கினாரோ அவரையே மொரார்ஜி தேசாய் ‘ Out sider’ என இழிவாக அழைத்தார். ஜேபி நொறுங்கித்தான் போனார்.
இசைவைத் தேடும் வாழ்க்கை
மற்ற புலிகள் அனைத்தும் கற்பனையில் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள், ஆனால் வேங்கை வனம் நாவலின் மச்சிலி உண்மையில் வாழ்ந்த புலி. அதுவும் நாம் வாழ்ந்த காலகட்டத்திலேயே வாழ்ந்த புலி என்பது குறிப்பிடத்தக்கது. வேங்கைவனம் நாவல் வெறும் புலியைப் பற்றிய கதை தானா என்ற கேள்வியை முன்வைத்தால், ஆம்/இல்லை என்று இருபதில்களும் சொல்லலாம். புலிகள் மூலமாக வரலாறு, வரலாற்று புனைவு, போர், அதிகாரம், படிநிலை, காலனித்துவம், சூழியல், காதல், அறம், துரோகம், மனித-விலங்கு உறவு, இயற்கையின் வலிமை, இயற்கை மீதான ஆதிக்கம் போன்ற பல பரிமாணங்களை இந்நாவல் ஆராய்கிறது.
வேங்கை வனம் நாவல்: ஒரு சூழலியல் ஆவணம்
துவக்கத்திலிருந்தே கோட்டையில் இருப்பவர்கள் அனைவருக்கும் ஒரு பெருமைக்குரிய விஷயமாக இருக்கிறது புலிவேட்டை. புலிவேட்டைகள் மிகக் கொடூரமாக நடந்திருக்கின்றன. நேரடியாகப் புலியின் வாயிலேயே ஈட்டியை சொருகுவது, ஒரே சமயத்தில் வாளால் வெட்டியும் ஈட்டியால் குத்தியும் புலிகளைக் கொல்வது தொடர்ச்சியாகச் சொல்லப்படுகிறது. பல புலிகள் இதில் இருக்கின்றன. பாஹினி, மோஹினி, கிருஷ்ணவேணி என்னும் கிருஷ்ணா, சுல்தான் புரி , சுல்தான் புரியின் குட்டியான மற்றோரு சுல்தான் புரி, பிறகு மச்சிலி
தமிழ் நாவல்கள் 2025
ஆசிரியர் வஹிதாவை வர்ணித்த எந்தப் பதத்தால் நான் அப்படியொரு முகத்தைக் கற்பனை செய்தேன் என்று தெரியவில்லை. திரானே அலிதோஸ்தியின் புன்னகை முகத்தை ஒட்டிய சாயல் கொண்டவளாக வஹிதாவின் பிம்பம் என்னுள் எழும்பியது. கண்ணீரைக் கட்டுப்படுத்தும் சிவந்த கண்கள், புன்னகையைத் தேக்கி வைத்தபடியே இருக்கும் முகத்தில் அழகின் விளைவும் புரிதலின்மையும் ஒருங்கே கிளர்த்திய துயரத்தின் தடைச்சாவடி.
கலைகளை சார்ந்து இருத்தல்
மொழி வழி கலைகளில் சிறுகதை என்பது ஒரு சில பக்கங்களில், வாழ்க்கையின் மிக சிறிய பகுதியை முன்வைத்து, அதனுள் மறைந்திருக்கும் மீதி வாழ்வை படிப்பவர்கள் தேடி தேடி அடைய செய்வது. ஒரு மனிதனின் வாழ்வு, ஒப்புநோக்க அளவில் சிறு துளி மட்டுமே. இந்த துளியில் இருந்து காட்சிக்குள் அடங்கா பெரு மழையை, பெரு விரிவை அவன் எண்ணி எண்ணி அறிவதை போலவே சிறுகதை வாசிப்பு என நாம் எடுத்துக்கொள்ளலாம்.
கய்த பூவு
ரோசாளை முதலில் பெண் பார்க்க வநதவன் தன்னைப் பார்த்துத்தான் கையசைப்பதாக நினைத்து அவளும் கையசைத்தது குற்றமாகிப் போய் தடைப்பட்ட திருமணம் ஒவ்வொரு முறையும் ஏதேதோ காரணங்காட்டி தடைபட்ட மயமாகிப் போகிறது. ஒரு பெண்ணுக்குத் திருமணம்தான் வாழ்க்கையில் மிக முக்கியமான தகுதியாகப் பார்க்கப்படும் பாழாய்ப்போன சமூகத்தை சபிப்பதைத் தவிர வேறென்ன செய்வது?
கரானா – மறையும் சுவடுகள் – ஹிந்துஸ்தானி இசை உலகம்
சிறுவனான சந்திரகாந்தின் பயிற்சியிலிருந்து கதை முஸ்தபாவின் நாட்குறிப்புக்குள் சென்று சேரும் இடம் கரானாவின் வரலாற்றை சொல்லத் தொடங்கும் இடம். ஜாபர் கான் என்பவர் யார்? அவரது இசையின் தொடக்கம் என்ன எனும் கேள்விகளிலிருந்து கரானாவின் ஆரம்ப காலங்களுக்குள் கதை செல்கிறது. சுதந்திரத்துக்கு முன்னான காலத்தில் அமைந்திருப்பதால் வரலாற்றின் சிறு பின்னல்களும் கதையினூடாகச் சொல்லப்படுகிறது. நம் கவனத்தைச் சிதறடிக்கக்கூடிய வகையில் வரலாற்றுப் பாடம் இல்லை. அது இந்த நாவலின் வேகத்துக்கு உதவியிருக்கிறது என்றாலும் நாவலின் பலகீனமும் இதுதான். பல தலைமுறைகளின் கதையைச் சொல்ல முற்படும்போது நாம் கால மாற்றத்தையும், மனிதர்களின் எழுச்சி வீழ்ச்சிகளை மட்டும் எதிர்பார்ப்பதில்லை.
சிவக்குமாரின் துதிக்கைத் துழாவல் கவிதை நூல் குறித்து
குறைந்தபட்சம் ஒரு முத்தத்தையாவது எதிர்பார்த்து ஏமாந்த கவிதை, உங்கள் அவசரத்தைக் கண்டு, தன்னை அடியாழத்தில் புதைத்துக் கொண்டதை அறிவீர்களா என்று நேரடியாகவே குற்றம் காட்டுகிறார். இந்தப் பொருண்மைக்கு அவர் கொடுத்திருக்கும் முக்கியத்துவம் பின்னட்டையில் போட்டிருப்பதிலேயே தெரிகிறது.
சஞ்சாரம் நாவல் வாசிப்பனுபவம்
பக்கிரியை பொருத்தவரை நாதஸ்வரம் என்ற கருவி விசித்திரமானது. ஒரு சாவியை போல் அவன் மனதை திறந்து புதைந்துள்ள ரகசியங்களை, சந்தோஷத்தை, கண்ணீரை, வலிகளை காட்டுகிறது. ஈர வேட்டி உளர்வதைபோல் மனம் எடையற்று போய்விடுகிறது. சிலசமயம் குளத்தில் மூழ்கிச் சென்று மண் எடுப்பது போல் மூச்சு திணறுகிறது, உடல் முழுதும் கண் முளைத்தது போலும் தோன்றும். வாசிப்பில் ஆழ்ந்தால் உடலே இல்லமால் போய்விடுவதை உணர்கிறான். அந்த உணர்வில் பெறும் ஆனந்தத்தை அடைகிறான்.
’கலையும் காலமும்’ வழங்கிய விட்டல் ராவ்
கேரளத்தின் மரச்சிற்ப அறிவுக்குச் சான்றாக நிற்பது இந்த பைரவ சிற்பமாகும். பைரவரின் சித்தரிப்பு அச்சம் தரக்கூடியதாகஇருக்கிறது. பைரவரின் விழி பிதுங்கிப் பற்கள் தெரிகிறது.கடைவாய் இரண்டிலும் கோரப்பற்கள் வளைந்து காணப்படுகிறது. காது குண்டலங்கள் யானைத்தலைகளாய்த் துதிக்கைகள் மேலோங்கிய சித்தரிப்பு, கழுத்தை அலங்கரிக்கும் ஆபரணங்களுக்குக் கீழாக இரு நாகங்கள் பின்னிப்பிணைந்து பக்கத்திற்கு ஒன்றாக படமெடுத்து ஆடுகின்றன
ஜாதிக்காயின் சாபம்
நறுமணம் மற்றும் மருத்துவகுணங்கள் அடங்கிய சாதிக்காயும் அதன் மேற்புறமான தோல் (அல்லது ஓடு) பல்லாண்டுகளாக பயன்பாட்டில் இருப்பினும், பதினாறாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இதன் மதிப்பு பன்மடங்கு உயரத்தொடங்கிற்று;ஒரு கையளவு உள்ள சாதிக்காயை கொண்டு வெனிஸ் நகரில் ஒரு கப்பலோ அல்லது பெரிய மாளிகையையோ வாங்கலாம். மேலும் ஐரோப்பிய செல்வந்தர்கள் மற்றும் அரசர்களிடையே ஆடம்பர பொருட்களில் ஒன்றாக கருதப்பட்டன. பதினாறாம் நூற்றாண்டிற்கு முன் ஐரோப்பாவின் பல இடங்களில் மிக முக்கிய சந்தைப்பொருளாக பல வணிகர்களால் எகிப்து வழியே வெனிஸ் வந்து சேர்ந்தது
கணக்கு பிணக்கு ஆம் எனக்கு
விலைமதிப்பற்ற இத்தொகுதிகளை ஏக்கத்துடன் தற்செயலாகப் புரட்டியது இறுதியில் சியோபான் ராபர்ட்ஸின் கான்வே வாழ்க்கை வரலாற்று நூலான ‘ஜீனியஸ் அட் ப்ளே’யை வாசிக்க வழிவகுத்தது (Siobhan Roberts, Genius at Play). இது லபடூட்டுக்கு சரியான மாற்று மருந்தாக இருந்தது – கணித உச்சங்கள் விளையாட்டாக அணுகப்பட்டன, எண்கள் கோட்பாடு, சமச்சீர் குழுக்கள் போன்ற கடினமான கணித நுணுக்கங்கள் கயிறுகள், பகடைகள், காசுகள், கோட்டு ஆணிகளைப் பயன்படுத்தும் வேடிக்கைகள் முலம் கற்பிக்கப்பட்டன – சுருக்கமாக உயர்கல்வி விளையாட்டாக மாற்றப்பட்டிருந்தது.
நகைப்பாடம் – பார்கின்சனின் விதி
பணம் படைத்தவர்கள் எல்லோராலும் ‘பணக்காரன்’ என்ற பட்டத்தை அடைந்துவிட முடியாது. ‘பணக்காரன்’ என்பது ஒரு தனித்துவ வட்டத்தின் உறுப்பினர்களுடைய பெயர், அதில் இடம் பிடிப்பது கடினம் என்கிறார் பார்கின்சன். ஒரு சீன கோடீஸ்வரரை சந்தித்த போது அந்த சீனர், “கூலிக்காரன் பணம் சம்பாதிக்க முடியும் ஆனால் ஒரு பணக்காரனால்தான் பணக்காரனைப்போல வாழ முடியும்” என விளக்கங்கள் கொடுக்காமல் சொல்கிறார்
ரசனையைக் களித்தலும் நுட்பத்தை வியத்தலும்
அவர் தனக்கு தெரியாத எதையும் எழுதுவதில்லை. இது எழுத்தாளனின் முக்கிய அம்சம். இவர் அடிப்படையில் ஒரு தொழில்நுட்பம் தெரிந்த பொறியாளர். ஆனால் கூகிள், தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றை மட்டுமே முழுதாக நம்பி இறங்காதவர். களத்தரவுகளை நம்புபவர். இதுவே படைப்பின் ஆன்மா ஆகையால், அவர் காருக்குறிச்சியைத் தேடி நேரில் சென்று அனுபவத்தை பெற்று நமக்கு கடத்தியிருக்கிறார்.
மனிதர்களின் கதை: நிழல் நிஜம்
ஒரு புதினத்துக்கு காலப் பின்னணி மிக முக்கியமானது; ஏனெனில் அதை சார்ந்தே பாத்திரங்களின் மொழி, மற்றும் வர்ணனைகள் அமையும். மட்டுமன்றி, சமகாலத்தை படைப்பாக்குதல் ஒரு சவால்! நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் முகங்களும், முகமூடிகளுமே அவர்தம் வாழ்வியலும்,பண்பாட்டு,பொருளாதாரச் சிக்கல்களுமே ’ராவணநிழல்’ எனும் படைப்பிலக்கியத்திற்கு அடிப்படையாய் அமைகின்றன என்பதை எவருமே மறுக்கவியலாது.
பண்பாட்டுத் தரிசனம்
“அரவு ஆட்டவல்லான்” என்ற கட்டுரையின் தொடக்கத்தில், அட்டபுயங்கப்பிரான் என அழைக்கப்படும் சிவனின் புராணக் கதையை விளக்குகிறது. அனந்தன், கார்கோடகன், குளிகன், சங்கபாலன், தக்கன், பதுமன், மகாபதுமன், வாசுகி ஆகிய எட்டு நாகங்களைக் கொண்டு ஆடும் சிவனின் தோற்றத்தை விவரிக்கிறது. இந்த ஆடும் சிவனின் குறிப்பு தமிழ்க் கவிதை மரபில் வளர்ந்த பக்தி இலக்கியமான காஞ்சிப் பதியில் குறிப்பிடப்படுகிறது.
புதிர்பாதையினூடே, ஒரு புனைவு பயணம்
கதைசொல்லிகளுக்கும் வாசகர்களுக்கும் ஓர் உணர்வுமயமான ஒப்பந்தம் அமைய வேண்டியிருக்கிறது. ஆயுர்வேத பத்திரிகை ஒன்றை நடத்திக் கொண்டிருக்கும் கந்தசாமி பிள்ளை, ஒரு காலணாவிற்கு (1940களின் நாணயம். ஒண்ணரை பைசாவிற்கு சற்றே கூடுதலான மதிப்பு கொண்டது) கணக்கு பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் அவருக்கு கடவுள் பிரசன்னமாகிவிடுகிறார்.
இசைக்கும் புத்தகம்
காருகுறிச்சியார் துரிதமான சஞ்சாரங்கள் வாசிக்கும் போது, அதனுடன் ஒலிக்கும் ‘துரித கம்பிதங்கள்’ முரணின்றி மிளிர்பவை. இதை மட்டும் சொல்லிவிட்டால் போதுமா? ரக்தியைப் பற்றி சொல்ல வேண்டாமா? ஒரு சீரான போக்கில் சலனத்தை ஏற்படுத்திப் பாருங்கள். ரக்தி வரும். ராகத்தில் பிரயோகங்கள் எல்லாம் சக்கரம் மாதிரி. சுழன்று கொண்டிருக்கும். ஒரு உராய்வை ஏற்படுத்த வேண்டும். அப்போது வெளிப்படும் தீப்பொறிதான் ராகப் பிரயோகங்களுக்கு உள்ளே பொதிந்திருக்கும் விசையை கேட்பவர்களையும் உணர்ந்து கொள்ள வைக்கும்
பத்து வைரங்கள் – புத்தக விமர்சனம்
இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளும் சமூகத்தை விட்டு விட்டு அகத்தை மட்டுமே பேசவில்லை. மனிதர்கள், அவர்கள் வாழும் சமூகங்கள், குறிப்பாக பெண்கள், அவர்களுடைய பிரச்சனைகளைப் பற்றி விரிவாக பேசுகிறது. அதிகமான விவரணைகள் இல்லாவிட்டாலும் அது ஒரு குறையாக எங்கும் தெரியவில்லை. கதைகளுக்கு வலு சேர்க்கும் விதமாகத் தான் உள்ளது
நீலதாவணி – நிறம் மாறாத அசல்களின் சித்திரம்
தென் தமிழகத்தில் தனக்கு வயது வந்த மகள் இருக்கிறாள் என்பதை உணர்த்த பெண்கள் கொண்டை போடும் வழக்கம் இருப்பதாக யாரோ கூறக் கேட்டிருக்கிறேன். இது பெண் திருமணமானவள் என்பதை காட்ட நெற்றி உச்சியில் குங்குமத்தை சூட்டி வைப்பதை போல, மெட்டி அணிவிப்பதைப் போல, கணவன் இறந்த பின்னர் கைமை நோன்பெடுக்க சொல்லி கொடுக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு சற்றும் குறைந்து போகவியலாத புற அடையாளம். அப்படியாக அடையாளப்படுத்தும் விஷயத்தை நீலதாவணி என்ற கதையில் நுட்பமாக கையாள்கிறார் ரம்யா. கதையின் இடையிடையே ஊடாடும் ஒரு சில வரிகளில் அப்படி அடையாளப்படுத்துவதன் நோக்கத்தை பகிரங்கமாக வாசகப்பார்வைக்கு வைக்கிறார்.
நூல் அறிமுகங்கள்
வாசிக்கும் நமக்கே கூட கோபம் வந்துவிடும் , ஆனால் அசாத்திய பொறுமை ஹஜாரிக்கு. தன் இலட்சியத்துக்காக எந்த வகையிலும் தன் இயல்பிலிருந்து மாறிவிடாத நல்லவன். இது போன்றவர்களைத் தன் வாழ்வில் பல முறை எதிர்கொண்டதாக விபூதிபூஷன் குறிப்பிட்டிருப்பதாக , இதன் முன்னுரையில் க்ஷிதிஷ் ராய் சுட்டிக்காட்டுகிறார். சிறப்பான முன்னுரையும் கூட
Fire on the Ganges
மணிகர்னிகா கட், டோம் இனத்தவரின் பணியிடம். தொடர்ந்து சடலங்கள் எரிக்கப்பட்டு பல விதமான சாம்பல் அடுக்குகளையும் ஆங்காங்கே குப்பை மேடுகளையும் கொண்டது. ஒருபுறம் சூரியன் முதுகில் சுட்டெரிக்க தரையானது தொடர்ச்சியான வெப்ப அலைகளை உமிழ்ந்கொண்டே இருக்கும். காற்று வலுவாக வீசும் பொழுது வழிமாறிய தீ கொழுந்தாக தோல் மீதும், முடியையும் சுட்டெரிக்கும். இந்நிலையில் உடலில் வரட்சி ஏற்பட்டு பணிபுரிவோரை பலவீனப்படுத்திகிறது. இத்தகைய சூழலில் தங்களது பணிகளைத் தொடர குட்கா மற்றும் ஆல்கஹாலை சார்ந்துள்ளதால் இவர்கள் இளவயதிலே போதைக்கு அடிமையாகின்ற நிலை ஏற்படுகிறது
பெரும் வீழ்ச்சியின் கதைகள்: ரித்னாபூரின் மழை – அசோக் ராம்ராஜ்
அசோக் ராம்ராஜின் கதைகூறல் முறை காஃப்கா, கமூய் கதைகூறல் முறையை ஒத்திருக்கிறது. எப்போதும் சோகம் ததும்பும், புனைவின் மையத்தை தொடாமல் சுற்றியே வரும் மொழி நடை. படைப்பின் உள்ளடக்கத்தைவிட வடிவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பாணி. வடிவம் குறித்து கவலை கொள்வதனாலேயே உள்ளடகத்தின் வீச்சை பிரம்மாண்டமாக ஆக்குவதற்கு வடிவத்தை மாற்றி பயன்படுத்துகிறார்.
ஆரன்யக் நாவலை நாம் 21ம் நூற்றாண்டில் ஏன் வாசிக்க வேண்டும்?
சத்யசரண் தான் இருக்கும் காலத்தில் வனத்தின் மீது மையல் கொள்கின்றான். அது தீராக்காதல் இல்லை. வேலை முடிந்து திரும்புகையில் தீரும் காதல்.அதற்குப் பிறகு அசைப்போடும் நினைவாக வாழ்வெங்கும் தங்கும் இடத்தில் அதனை வைத்துக் கொள்கின்றான். மையல் கொண்ட பெண்ணை வர்ணிக்கும் காதலன் போலக் காட்டினை வர்ணிக்கின்றான். அங்குலம் அங்குலமாக ரசிக்கின்றான். அதில் முழுக் கவனம் வைக்கின்றான்.
தாமஸ் செக்கின் ‘தி கேடலிஸ்ட்’: ஆர்என்ஏ-வும் அதன் அதிதிறன்களும்
The catalyst – RNA and the Quest to Unlock Life’s Deepest Secrets – ஓரு பார்வை DNA என்பது மரபியல் தகவல்களின் களஞ்சியம் மேலும், இது ஒரு உயிரினத்திற்குத் தேவையான அனைத்து புரதங்களையும் குறியாக்கம் செய்யும் மரபணுக்களைக் கொண்டுள்ளது – நமது தசைகள் நகர்வதை “தாமஸ் செக்கின் ‘தி கேடலிஸ்ட்’: ஆர்என்ஏ-வும் அதன் அதிதிறன்களும்”
சஹிதா: அணையா நெருப்பு
சஹிதா என்ற பெண்ணின் மனதின் ஆன்மிக ஏக்கங்களை, இல்லற வாழ்வின் மீது அவளுக்குண்டான கிலேசங்களை, தன்னைச் சுற்றிலும் உள்ள தனக்கு நெருங்கிய உறவுகள், தோழமைகள் இவர்களுக்குத் தன் தவிப்பைப் புரியவைத்து, அவர்களிடமிருந்து விலகிச் செல்லுதலை சாத்தியமாக்கிக் கொள்ள அவள் நிகழ்த்தும் போராட்டங்களை, இல்லறத்திலும் நிலைக்க இயலாமல், ஆன்மிகப் பாதையில் செல்வதால் தான் துறந்து செல்லப்போகும் உறவுகளின் இழப்பையும் தாங்க முடியாமல் அவள் மனத்துக்குள் என்னேரமும் நிகழும் கொந்தளிப்புகளை என அத்தனையையும் மிகத்துல்லியமாக ஆவணப்படுத்தியிருக்கிறார் நாவலாசிரியர்.
விஷக் கிணறு
நம்மூரில் ஒரு மனநிலை உள்ளது. ஊர் வளரத் திட்டம் இல்லாது, தன் வீட்டை மட்டும் ஊரில் பெரிதாகக் கட்டிக் கொண்டு அங்கே காலா காலத்துக்கும் சொகுசாகச் செல்வாக்காக வாழமுடியும் என்னும் மனநிலை. ஊர் செழிப்பில்லை , ஊரில் பிழைப்பில்லை என்றால் வீட்டைப் பராமரிக்கக் கூட முடியாது போகும் என்ற எண்ணமே இல்லாது வாழ்பவர்கள். அது ஒரு சிதல். கதையில் இரண்டு பாத்திரங்கள். ஒன்று ஜெயசந்திரன் செயலற்றுப் போன ஊரில் செயல் உருவாக்கம் செய்ய வீட்டை வாங்கத் தயாராகின்றான்.
சங்கீத சாகித்தியமும் சாந்தானிக பிச்சையும்
ஒரு முழு வாழ்க்கையை விவரிக்கும் கணிசமான அளவு நீண்ட நாவல் எந்த இடத்திலும் தொய்வில்லாமல், சுவாரஸ்யம் குன்றாமல் எழுதப்பட்டுள்ளது. இந்துஸ்தானி இசையின் நுணுக்கங்கள் நாவல் முழுக்க விரவி இருந்தாலும், அதைப்பற்றி அதிகம் தெரியாதவர்களும் படித்து ரசிக்கும் வண்ணம் மனித உணர்வுகள் கலைஞர்களின் இயல்புகள் அவர்களது எளிதில் ஊகிக்க முடியாத,மனப்போக்குக்கள்,புரிந்துகொள்ள முடியாத விசித்திர நடவடிக்கைகள் ஆகியவை முக்கிய இடம்பெறுகின்றன
ஆதவன், ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் – உளவியல் பார்வை
கைலாசம் தனது கவலையைச் சமாளிக்க பல பாதுகாப்பு உணர்வுக்கான டிஃபென்ஸ் வழிமுறைகளைப் பயன்படுத்துகிறார். உதாரணமாக, அவர் தனது சக ஊழியரான அகர்வாலுடன் தொடர்புகொள்வதைத் தவிர்ப்பது, அடக்குமுறை அல்லது மறுப்பு ஆகிய உணர்வின் வடிவமாக பார்க்கலாம். இதன் மூலம் அவர் சங்கடமான உணர்வுகள் மற்றும் சூழ்நிலைகளைப் புறந்தள்ள முயற்சிக்கிறார்.
பொற்குகை ரகசியம்- சிறுகதைத் தொகுப்பு – வாசிப்பு அனுபவம்
கதாசிரியரின் பல வரிகள் ரசிக்கும் படி உள்ளது. “ கொமாரப்பாளையத்தில் சங்கமேஸ்வரன் என்னும் பெயர் உள்ளவர்களை தேடுவது, மாலத்தீவில் டூனா மீனை தேடுவது போலத்தான்”. “எந்த நேரமும் உடைந்து நொறுங்கி விழக் கூடிய கண்ணாடி பாத்திரத்தை போல நடமாடிக் கொண்டிருந்தாள் அம்மா”. “அந்த எழுத்துக்களை கவ்விக் கொண்டு ஒரு சிவப்புக் கழுகு இறகுகளை விரித்து மேலெழுந்துக் கொண்டிருந்தது”. “நீட்டலும், மழித்தலும் வேண்டா என்ற முதுமொழியை பின்பற்றும் வண்ணம் முள்ளாய் பரவிய தாடியும், மீசையும் வைத்திருந்தார்”
