தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!

இப்படித்தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய வரலாற்றுக் குறிப்புகள் இலக்கியங்கள் மூலமாகவும் இன்று சான்றுரைக்கின்றன. காழ்ப்பற்ற, வஞ்சமும் சூதுமற்ற, வெளிப்படையான, தமிழ்ப்புலவன் வழி நெடு வரலாற்றை, மரபை, புராணங்களை விதைத்துச் செல்கிறான். அவனது அனுபவமும், ஞானமும், தெளிவும், படைப்பு ஆற்றலும் புரிதலும் வியப்பேற்படுத்துகின்றன.
சித்திரையில் பிறக்கும் புத்தாண்டின் வரிசையில் அறுபதனுள், நந்தன என்பது இருபத்தி ஆறாவது. நந்தனன் என்றால் குமரன் என்று பொருள் தருகிறது சூடாமணி நிகண்டு.

மான மாத்ரு மேயே மாயே

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான திரு. முத்துஸ்வாமி தீக்ஷிதர் பல அபூர்வ இராகங்களைக் கையாண்டு முத்தான கீர்த்தனைகள் படைத்தவர். மும்மூர்த்திகளில் பாரதத்தில் பெரும்பாலான இடங்களுக்குப் பயணித்தவரும் அவர்தான். அந்தந்தப் பிரதேசத்தின் சிறப்பு இராகங்களைக் கையாண்டு கர்னாடக இசைக்கு ஏற்றவாறு கீர்த்தனைகளை இயற்றினார். அவரது பாடல்களில் ‘குருகுஹ’ என்ற முத்திரையும், பாடப்படும் தெய்வத்தின் மூர்த்தியும், கீர்த்தியும், அந்தத் தலத்தின் வரலாறும், அதன் பூகோள அமைப்பும், அதன் முக்கிய பீஜாக்ஷரமந்திரமும் இடம் பெறும். மேலும், அந்தக் கீர்த்தனை எந்த இராகத்தில் பாடப்பட்டுள்ளது என்பதும் தெளிவாக வந்துவிடும். 

தமிழ் மொழியின் தொன்மை: ஒரு கண்ணோட்டம்

ரிக்வேதத்தில் காணப் படும் “சப்த சிந்து” நிலவியல் ஐயத்திற்கிடமின்றி துல்லியமாக சிந்துவெளி அகழாய்வு இடங்களையும் முத்திரைகள் கண்டெடுக்கப் பட்டுள்ள நிலப் பகுதிகளையும் விவரிக்கிறது. Satellite Imaging மூலம் ரிக்வேதம் கூறிய சரஸ்வதி நதி ஓடிய வறண்ட படுகையும் கண்டறியப் பட்டுள்ளது. இந்த நிலவியல் குறித்த பிரக்ஞை தொடர்ந்து மகாபாரதம், புராணங்கள் வரையும் அதற்கப்பாலும் நீடிக்கிறது. ஆனால், தமிழில் உள்ள எந்தத் தொல் நூலிலும் சிந்து நதி, சரஸ்வதி நதிப் பகுதிகளின் நிலவியலுடன் மிக remote ஆகத் தொடர்புறுத்தக் கூடிய மிகச்சிறு குறிப்பு கூட இல்லை.

அந்தக்காலத்து தீபாவளி

Any sufficiently advanced technology is indistinguishable from magic. – Arthur C. Clarke தீபாவளி சமயத்தில் ஒவ்வொரு வருடமும் அந்தக்காலத்தில் இந்தப் பண்டிகையை எப்படிக் கொண்டாடுவோம் என்று விவரித்து ஒரு சிறுகதையோ கட்டுரையோ வந்து சேரும். அந்தக்காலம் என்று கருதப்படுவது ஒரு நாற்பது ஐம்பது வருடங்களுக்கு “அந்தக்காலத்து தீபாவளி”

உயிர் பெற்றெழும் மறைந்த மொழிகள்

இந்தக் குழுவின் இறுதி இலக்கு என்பது, பல்லாண்டுகளாக மொழியியலாளர்களுக்கு வசப்படாத தொலைந்த மொழிகளைச் சில ஆயிரம் சொற்களைக்கொண்டு கட்டமைக்க முயல்வதுதான்.

வங்கச் சிறப்பிதழ் அறிவிப்பு

சொல்வனம் தன் 12 ஆண்டுக் கால இயக்கத்தில் பல மொழிபெயர்ப்புகளைக் கொடுத்திருக்கிறது. ஒரு பருந்துப் பார்வையில் கவனித்தால், அவற்றில் பெருமளவும் இங்கிலிஷிலிருந்து பெறப்பட்டவையாகவே இருப்பது தெரியும். இந்தியாவைப் போன்ற முன்னாள் காலனிய நாடுகளின் ஒரு பேரவதி என்ன என்றால், அவற்றின் நெடுங்கால காலனியாதிக்கத்தின் சுவடுகள் வரலாற்றில் துவங்கி சமூகத்தின் “வங்கச் சிறப்பிதழ் அறிவிப்பு”

பொன்னின் பெருந்தக்க யாவுள !

பிட்டுக்கு மண் சுமந்த மதுரைச் சொக்கேசன் மீது, அரிமர்த்தன பாண்டியன் வீசிய பொற்பிரம்பும் அறிந்திருக்கலாம். பொற்பிரம்பின் வீச்சையும் வலியையும் அனுபவிக்க எமதாசான் புதுமைப்பித்தனின் ‘ அன்று இரவு’ வாசிக்க வேண்டும். வாசிக்க நேர்ந்தவர் நற்பேற்றாளர். புதுமைப்பித்தனிலும் சாதி தேடிய மார்க்சீய, அம்பேத்காரிய, பெரியாரிய ‘அறிஞர்’ கூட்டம் உண்டு. ‘அரிசிப் புழு தின்னாதவனும் இல்லை, அவுசாரி கையில் உண்ணாதவனும் இல்லை’ என்பது சொல்வடை.

கூகி வா தியோங்கோ -வும், மொழியின் கொடுங்கோலும்

மொழியை, தம் ஆட்சியின் கீழிருந்த நிலப்பகுதி மக்களைப் பிரித்து ஆள்வதற்கு வழி வகுக்கும் சூழ்ச்சிக்கு ஆயுதமாக வளைப்பது யூரோப்பிய அதிகாரச் சக்திகளின் நோக்கமாக இருந்தது; மற்ற யூரோப்பிய சூழ்ச்சிகளில், குழு அடையாளங்களை அரசியலாக்குவது- யூரோப்பிய ‘இன’ நோக்கு அறிவியல் மூலம் இனங்களின் அதிகார அடுக்குகளை உருவாக்குவது- போன்றன  காலனிய ஆட்சி முடிந்து பல பத்தாண்டுகள் தாண்டியும் இன்னமும் கடும் வன்முறை நிறைந்த போராட்டங்களில் ஆஃப்ரிக்கர்களையும் இதர மக்களையும் நிறுத்தி இருக்கின்றன.

மொழியின் இயல்பு

மனிதர் இடையீடு இல்லாமல்  கணினிகள் தாமாக தமக்கிடையே தொடர்பு ஏற்படுத்திக்  கொள்ள முடிகிற அளவுக்கு செயற்கை நுண்ணறிவு வளர்ந்து வரும் இன்றைய நிலையில் , மொழியின் வரையறுப்பும் விஸ்தரிக்கப்பட வேண்டிய நிலை வரக்கூடும். அப்போதும் மனிதனை ஆக்குவது மொழிதான்.  ஆனால் அவ்வாறு விஸ்தரிக்கப்பட்ட வரையறுப்பு,  எந்திரங்கள் தம் சொந்த மொழியில் தமக்குள்ளே தொடர்பு வைக்க, தேவைகளையும் விருப்பங்களையும் தெரிவிக்க, ஆணையிட, உருவாக்க, உற்பத்தி செய்ய வழி வகுக்கும். ஆதியில் மனிதன் தனக்காக உருவாக்கிக் கொண்ட மொழி, தன் மனித இணைப்புகளைத் துறந்த, ஒரு புது  தொடர்பு அமைப்பாக வெளிப்படும்.

கம்பலை

‘துன்பமும் சந்த ஒலியும் கம்பலை’ என்கிறது ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிங்கல நிகண்டு. இராஜகோபாலனிடம் சொன்னேன், “எப்பிடிப் பார்த்தாலும் ஆயிரம் வருசமா நம்மள்ட்ட இந்தச் சொல் புழங்குகிறது,” என்று. பிங்கல முனிவரின் தந்தை அல்லது குரு எனக் கருதப்படுகிற திவாகர முனிவரின் திவாகர நிகண்டு, தமிழின் முதல் நிகண்டு. அதுவும் கம்பலை எனும் சொல்லுக்கு மேற்சொன்ன பொருள்தான் தருகிறது.
 ‘இலக்கியச் சொல்லகராதி’ என்று நம்மிடம் ஒன்றுண்டு. சுன்னாகம் அ. குமாரசாமிப் பிள்ளை (1855- 1922) தொகுத்தது. 2009 -ம் ஆண்டில் சந்தியா நடராஜனால் மீள்பதிப்பு செய்யப்பட்டது. அந்த அகராதி கம்பலை- துன்பம், ஒலி, நடுக்கம், பயம் என்கிறது.

அலுவல் மொழி என்னும் பிதற்றல்

மொழிகள் தனித்து இயங்குபவை அல்ல. அவை கலாசாரத்தின் உறுப்புகள். உண்மையில், ஒவ்வொரு கலாசாரமும் அதன் மொழியில் தன்னை நேரடியாய் வெளிப்படுத்திக் கொள்கிறது. இந்தியாவுக்கு உரிய மொழிகள் 1500க்கும் மேற்பட்டவை என்று சொல்லும்போது அத்தனை கலாசாரங்கள் நமக்கு உரியவை என்று சொல்கிறோம். பல்வகைப்பட்ட மொழி மரபுகள் இத்தனை இந்தியாவில் உள்ள நிலையில் அரசுப்பணிகளையும் அதன் அதிகாரபூர்வ நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து தேசமெங்கும் மேற்கொள்வது கடினம். மிக எளிமையாய்ச் சொல்ல வேண்டுமென்றால், பொதுப்பண்புகளும் தொடர்புகளும் இல்லாமல் சாதாரண மனிதர்களும்கூட உரையாடிக் கொள்ள முடியாது. குழப்பமே நிலவும். அதிகாரபூர்வ அலுவல் மொழி ஒன்று வேண்டும்…

தமிழர் முகங்கள் : எனக்கோர் அறிமுகம்

“சீக்கிய வீரனைப் போல் முண்டாசு கட்டியிருந்தார்;வற்றி உலர்ந்த உடம்புதான்;வாடிப் போன கன்னங்கள்தான்; எனினும் மார்பை முன்னே தள்ளித் தலை நிமிர்த்தி ஒரு வெற்றி வீரனைப் போல் உள்ளே நடந்து வந்தார். எந்த போர் வீரனுக்குத்தான் அவ்வளவு காம்பீர்யம் இருக்கமுடியும்? நீண்டு நிமிர்ந்த மூக்கும், அடர்ந்த புருவங்களும், உருண்ட கண்களும் அவற்றின் கூர்மையான வீரப்பார்வையும், பரந்த நெற்றியும், அதன் நடுவிலே குங்குமப் பொட்டும் அந்த வீரம் செறிந்த முகத்தை வசீகரமாக்கிவிட்டன. பித்தான் இல்லாத கிழிந்த ஷர்ட்டு மேலே அல்பாகா கோட்டு ;அதற்கு ஒரே பித்தான்; கோட்டும் காலம் கண்டதுதான். ஆனால் அவ்வளவு வறுமையாலும் அவிக்க முடியாத ஒரு பெருமை-ஒரு பெருமிதம்-ஒரு மாட்சி ஒளி வீசியது அந்த முகத்திலும்,கண்களிலும்-மெல்லிய மேகத்திரைக்குள்ளே ஒளிந்து கொண்ட சந்திர பிம்பம் போலே .

நவம்

செலாவணி ஆகிப் போன பண்டைத் தமிழ்ச் சொல் மவ்வல். இன்றைய தமிழ் சினிமாப் பாட்டில் செல்லுபடி ஆகிறது. அங்காடி தமிழ் சினிமாப் பெயராகிறது. பனுவல் புத்தகக் கடையின் பெயராகிறது. பழம் சொற்கள் பலவற்றையும் பரணில் போட்டு விட்டோம் என்பதனால் அவை உயிரற்றவை ஆகிவிடாது என்றும். நாவல் எனும் சொல்லுக்கு நவ்வல் என்பது மாற்றுச் சொல். நவ்வார் எனும் சொல்லுக்குப் பகைவர் என்று பொருள் உண்டு. பெண்மானைக் குறிக்க நவ்வி என்று சொன்னோம். நவ்வி என்றால் மரக்கலம் என்றும் பொருள். நாவாய் என்றாலும் மரக்கலம். நய்யா என்றால் இந்தியில் மரக்கலம். Navy எனும் சொல்லையும் நீங்கள் பரிசீலிக்கலாம். நவ்வு என்றால் முழுதாக நம்புதல் என்றும் பொருள். இந்தப் பின்புலத்தில் இந்தக் கட்டுரைக்கு நவம் என்று தலைப்பு வைத்தேன். உண்மையில் எண்கள் சார்ந்து இஃதென் ஒன்பதாவது கட்டுரை. நவம் என்ற சொல்லுக்கு முதற்பொருள் புதுமை. புதுமையை novel என்பர் ஆங்கிலத்தில். நாவல் என்பதோர் இலக்கிய வடிவம் என்பதும் அறிவோம். அதனால்தான் …

மகரந்தம்

சில ஓவியங்களைக் காட்டி ஆங்கிலம், பிரஞ்சு இரு மொழிகளிலும் அவற்றைக் கதைப்படுத்தச் சொல்லப்பட்டது. ஆங்கிலத்தில் சொல்லப்பட்ட கதைகளில் பெண்கள் சாதனையாளர்களாய் இருந்தார்கள், வன்முறை மிகுந்திருந்தது, பெற்றோர் வசை பாடப்பட்டார்கள், குற்றவுணர்வு தவிர்க்கப்பட்டது; பிரஞ்சு மொழிக் கதைகளில், மூத்தவர்கள் அதிகாரம் செலுத்தினார்கள், குற்றவுணர்வு நிறைந்திருந்தது, சமவயதினர் வையப்பட்டனர். இதே போன்ற ஒரு ஆய்வை இதே ஆய்வாளர் பின்னர் ஜப்பானிய அமெரிக்கர்களிடம் மேற்கொள்கிறார். “என் விருப்பங்கள் என் குடும்பத்தினரின் விருப்பங்களுடன் முரண்படும்போது…” என்ற வாக்கியத்தை ஜப்பானிய மொழியில் நிறைவு செய்தவர்கள், “மிகுந்த மனவருத்தம் ஏற்படுகிறது,” என்றும், ஆங்கில மொழியில் நிறைவு செய்தவர்கள், “நான் நினைத்ததைச் செய்கிறேன்,” என்றும் முடித்தார்களாம்!

சொல்லாழி

வில்லாளிக்கு அம்பு எத்தன்மைத்ததோ, அத்தன்மைத்தது புலவனுக்கு, எழுத்தாளனுக்கு சொல். சேமிப்பில் சொற்பண்டாரம் இன்றி எழுதப் புகுபவன், கையில் கருவிகளற்றுத் தொழிலுக்குப் போகிறவன். தச்சனோ, கொல்லனோ, குயவனோ, நாவிதனோ, உழவனோ எவராயினும் அது பொருந்தும். அரைகுறையாகக் கருவிகளைச் சுமந்து செல்கிறவன், துல்லியமற்ற, பொருத்தமற்ற கருவிகளைச் சுமந்து செல்கிறவன், திறம்படத் தொழில் “சொல்லாழி”

உங்கள் வாழ்க்கையின் கதை – வருகை

டாரில் பால்ட்வின் மயாமி (மியாமியா) இன மக்களின் மொழியையும் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அறிவாற்றலையும் மீண்டும் கண்டுபிடிக்கவும் ஆவணப்படுத்தவும் சொல்லிக் கொடுக்கவும் செய்கிறார். இவரை போன்ற கலாச்சார பாதுகாவலர் ஒருவரைத்தான் தன் கதாநாயகியாக டெட் சியாங் (Ted Chiang) வைத்துக் கொள்கிறார். பேச்சாளரே இல்லாத மொழியை எவ்வாறு அணுகுவது? அதற்கு நிறைய உந்துதலும் ஊக்கசக்தியும் முனைப்பும் எதையும் முயற்சி செய்து பார்க்கும் மனவுறுதியும் வேண்டும். முன்னவர் நிஜம். அவரின் ஆராய்ச்சி ஏன் முக்கியம் என்பதை எளிமையாக அறிந்துகொள்ள ’Story of Your Life’ கதையும் அந்தக் கதையை திரைப்படமாக்கிய ‘அரைவல்’ (Arrival) சினிமாவும் முக்கியம்.

ஒருமை

ஒருமைப்பாடு என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்கள். சொல் ஒருமைப்பாடாகவும், செயல் தனிமைப்பாடாகவும் இருக்கிறது. ஒருமை என்றாலே போதும். union, unity எனும் பொருள் வந்துவிடும். வார்த்தைதான் வார்த்தைப் பாடு. கடமைதான் கடப்பாடு, பண்புதான் பண்பாடு, மேன்மைதான் மேம்மாடு. ஒருமைதான் ஒருமைப்பாடு. தேசீய ஒருமைப்பாட்டைக் கட்டிச் செறிவாக்க என்றே, நடுவண் அரசு சில நவீன கல்விக் கொள்கைகளை, மாநிலத்துக்கு ஒரு கொள்கை என மறு சீரமிப்புச் செய்து, தேசத்தைப் பன்மைப்பாடு செய்யும் சிதைப்பாட்டுக்கு முயன்று வருகிறது. விதி வலியது. பிடர் பிடித்து உந்த நின்றது.

இருமை

அட்டம், சப்தம், அறுமுகம், பஞ்சம், சதுரம், மும்மை எனும் எண்கள் பற்றிய கட்டுரைத் தொடரின் ஏழாவது கட்டுரை இதுவென்பதால், இருமை என்ற சொல்லை இரண்டு என்ற பொருளில் இங்கு ஆள்கிறேனேயன்றி, அருமைக்கு எதிர்ப்பதமாகவோ, இருண்மை எனும் பொருளிலோ நான் ஆளவில்லை. இருமை எனும் சொல்லுக்கு பெருமை, கருமை என்றும் பொருள் இருப்பது உண்மைதான். சீவக சிந்தாமணி, பதுமையார் இலம்பகப் பாடல் ஒன்றில் ‘இரு மலர்க் குவளை உன் கண்’ என்கிறது. இங்கு இரு எனில் கருமை. கருமை நிறமுடைய குவளை மலரின் நிறத்தை உண்ட கண் என்பது பொருள். இன்னொரு பொருள், குவளை மலரின் நிறத்தை உண்ட இரு கண்கள் என்பது.

மும்மை

கம்பனின் சொல்லாட்சியில் இருந்து ‘மும்மை’ எனும் சொல்லை இந்தக் கட்டுரையின் தலைப்பாக எடுத்துக் கொள்கிறேன். மும்மை எனில் காலை, பகல், மாலை என்றும் பொருள் கொள்ளலாம். கம்பன் திரு அவதாரப் படலத்தில் ‘முழங்கு அழல் மும்மையும் முடுகி’ என்கிறான். ‘மும்மையும் முழங்கு அழல் முடுகி’ என்று வாசிக்கலாம். ஓசையுடன் ஒலித்து எழுகின்ற, முழங்குகின்ற வேள்வித் தீ மூன்று காலங்களிலும் விரைந்து எழுந்ததாம்….
‘மும்மை சால் உலகு’ என்பதற்கு, இப்பிறவி, முற்பிறவி, எதிர்வரும் பிறவி என்று மூன்று பிறவிகளுக்கும் இடமான உலகு என்றும் பொருள் கொள்ளலாம்.

சதுரம்

சில ஆண்டுகளுக்கு முன்பு, எண்களை அடிப்படையாகக் கொண்ட சொற்களைப் பற்றி, அட்டம், சப்தம், அறுமுகம், பஞ்சம் என நான்கு கட்டுரைகள் எழுதினேன். ‘தமிழினி’ மாத இதழ் அவற்றை வெளியிட்டது. விஜயா பதிப்பக வெளியீடான ‘சிதம்பரம்’ எனும் கட்டுரைத் தொகுப்பில் அவற்றைக் காணலாம். அந்தக் கட்டுரைகளின் தொடர்ச்சிதான் ‘சதுரம்’ எனும் இந்தக் கட்டுரையும்.
இந்தக் கட்டுரைகள் சொல் தேடல், தகவல் தேடல் அன்றி வேறல்ல. கோட்பாட்டுச் சிக்கல்கள், சம்பவ முரண்கள் என்று எதுவுமே இங்கு காணக் கிடைக்காது. இவற்றுள் எதுவும் ஆய்வுகளோ, கண்டு பிடிப்புகளோ அல்ல. பெரும்பாலும் பேரகராதி, நிகண்டுகள் என்பனவற்றுக்குக் கடமைப்பட்டுள்ளேன்.

இங்கிலீஷ்

ஒரு வெயில் ததும்பிய மதியவேளை. மாணவர்கள் மூன்று, மூன்று பேராக கைகளைக் கோர்த்துக்கொண்டு பள்ளியிலிருந்து நடக்க ஆரம்பித்தோம். எனது இடது கையைப் பிடித்துக்கொண்டு வந்த பையன் யார் என்று நினைவில் இல்லை. ஆனால் வியர்வை ஈரத்துடன் என் வலது கையைப் பிடித்துக்கொண்டு வந்த மாலதி மட்டும் இன்னும் நினைவில் இருக்கிறாள். இது ஏன் என்று என் கள்ளங்கபடமற்ற(?) மனதிற்கு இன்றும் புரியவில்லை. நடந்து சென்ற நாங்கள் மருதையாற்றுப் பாலத்தை அடைந்தோம். பாலத்துக்குக் கீழிருந்த மணலில் எங்களை குழு குழுவாக உட்கார வைத்து புளிப்புமிட்டாய் கொடுத்தார்கள்.

எழுத்துரு வாதம், பிரதிவாதம் – ஒரு விவாதம்

உருவகமாக கிரியாஉக்கி மூலம் ரசாயணத்தின் அகங்களை கொப்பளிக்க வைக்கும் அறிவியல் முறையை சொல்லலாம். இங்கே அந்த கிரியாஉக்கி ஒருநோக்கு படைத்த மெய்மையை வந்தடையும் இலக்கை கொண்ட சிந்தனையாளர்களின் தர்க்கமே. இந்த பகுத்தறிதலால் இதர நலிந்தக் கருத்துக்கள் நிராகரிக்கப்படுகின்றன. இது தான் இந்த முறையின் இயல்பு. அப்படி மெலிந்த தன் கருத்துக்களை நிராகரிக்கப்பட்டு தர்க்கம் ஒருவரை கடந்து செல்ல முற்படும் பொழுது அவர் இதை தனிப்பட்ட தோல்வியாகவோ, அவமானமாகவோ, தாக்குதலாக எடுத்துக் கொள்வது, அதனால் பிறர் மீது தனிப்பட்ட முறை தாக்குதல் நடத்தி அவரையும் நிலைகுலையச் செய்து தர்க்கத்திற்கே பங்கம் விளைவிப்பது, போன்றவை இந்த அறிதல் முறையின் மிகப் பெரிய கவனச் சிதறல். சில மாதங்களுக்கு முன் எழுந்த எழுத்துரு விவாதம் தமிழகத்தின் சிந்தனைத் தளங்களில் தன் அருவருப்பான முகத்தை வெளிக்காட்டியது.

ஔவியம் பேசேல்

எடுத்துக்காட்டுக்கு பங்கஜம் பங்கயம் ஆவதும், ஸர்ப்பம் சர்ப்பமாவதும். இலக்கணத்துக்கு அடங்கி, தமிழுக்குள் வேற்றுமொழிச் சொற்கள் பிரிவேசிப்பதன் தன்மை இதுதான். நான் சொல்ல வருவது, பல அரபுச் சொற்களும் வட சொற்களும் தமிழ்ச் சொல்லாக உருமாற்றம் பெறுவதற்கு ஔ எனும் இவ்வெழுத்து உதவி இருக்கிறது. அது மொழிக்குப் பெரிய தொண்டு என்று கருதலாம். ஆனால், ‘அப்ப அந்த மூதி மொழிக்குள்ளே என்னத்துக்கு? தூக்கிக் குப்பையிலே கடாசு’ என்றும் தனித்தமிழ்வாதி எவரும் உரைக்கக் கூடும்.

ஃபார்மால்டஹைடில் பாடமானதா வரலாறு? – சிலந்தியின் விஷக்கடி

அனுமனின் சித்திரத்தை, ஒரு பண்பாட்டின் நோக்கத்தை மதித்து நோக்குகையில். சுயம் ஒதுங்கி, சமூக ஒழுங்கும், அறமும், நற்பண்பும் மையப்படுவது உயர்வாகக் கருதப்படுவதை அது சித்திரிக்கிறது என்பது உடனே புரியும். லீகோ சித்திரமோ சுயம் என்பதே தொடர்ந்து கட்டப்படுவதையும், அதுவும் சுயத்தாலேயே கட்டப்படுவதையும் ஒரு புரியாத, தீர்வில்லாத புதிராகக் காட்டுவது தெரியும். முன்னது பண்டை நாகரீகத்தின் தாக்கம் என்றால், பின்னது தொழிற்சாலை நாகரீகத்தின், அனேகமாகப் பயனற்ற பொருட்களின் பெருக்கத்துக்காக சமூகங்களைப் பலி கொடுக்கத் தயாராக இருக்கும் நாகரீகத்தின் தாக்கம் என்று பார்க்க முடியும். முன்னதில் நம்பிக்கையைத் தொடர்ந்து மேன்மைக்கு வழி கிட்டுவது குறித்த தெளிவு சித்தரிக்கப்படுகிறது. பின்னதில் வாழ்வின் அர்த்தமின்மை குறித்த விசித்திர உணர்வே தலை.

யந்திர மொழிபின் மாந்திரிக பயன்பாடுகள்

மனிதனை எழுத்து தனிமைப்படுத்துகிறது என்று சொல்கிறார் டேவிட் அப்ராம் – வாய்மொழி சமூகங்கள் தம்மைச் சுற்றியுள்ள உலகின் அங்கங்களாகத் தம்மை உணர்கின்றன, அங்கு ஒவ்வொரு இலையும் இலைகளை ஊடுருவி விழுந்தசையும் ஒவ்வொரு ஒளிக் கீற்றும் பொருள் பொதிந்தவையாக விவரிக்கப்படுகின்றன. இந்த உலகம் ரகசியங்களற்ற உலகம் – இது கணத்துக்குக் கணம் தன்னைப் புதிதாய் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இயற்கையை மனிதன் இவ்வகையில் நேரடியாக அறிவும் தருணங்கள் இலக்கியப் படைப்புகள் பலவற்றில் எழுச்சிமிகு மொழியில் விவரிக்கப்படுகின்றன. எழுத்துச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்கூட இத்தகைய அனுபவங்கள் நமக்கும் அன்னியமானவையல்ல.

யாமறியும் மொழிகள்

அரேபிய மொழியில் சோதனையை செய்யும்போது ஏறத்தாழ எல்லா அரேபியர்களும் நல்லவர்கள், பெரும்பான்மையான இஸ்ரேலியர்கள் கெட்டவர்கள் என்ற கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதே சோதனை ஹீப்ரு மொழியில் நடத்தப்படும்போது அரேபியர்கள்தான் நல்லவர்கள், இஸ்ரேலியர்கள் கெட்டவர்கள் என்ற நிலையை அவ்வளவு தீவிரமாக எடுக்கவில்லையாம். நாம் என்ன மொழி பேசுகிறோம் என்பது நம் விருப்பு வெறுப்புகளையும் மாற்றுவதாக இருக்கிறது!