எண்ணெய்த் தொழில் வழக்கப்படி Premex நிறுவனம், பாதி எண்ணெய் வெளிவந்தவுடன் எரித்துவிட்டோம், கொஞ்சம் ஆவியாகிவிட்டது, மற்றதைக் கவனத்துடன் அப்புறப்படுத்தி விட்டோம் என்று மார் தட்டிக்கொண்டது. இந்த எதையும் தனிப்பட்ட பாரபட்சமில்லாத எந்த ஓர் அமைப்பும் உறுதி செய்யவில்லை.
Month: நவம்பர் 2020
P.O.T.S – ஒரு மீள் பார்வை
சில ஆண்டுகளாக POTS (Plain Old Telephone System – வெற்று வயோதிகத் தொலைபேசி அமைப்பு) என்ற பெயரால் பரிகசிக்கப்பட்டுவரும் தரைவழித் தொலைபேசி அமைப்பு, அடிப்படையில் முறுக்கு இணை (twisted pair) தாமிரக் கம்பிகள்மூலம் இடையறாது குரல் குறிகைகளை அனுப்புதலாகும். இது 1876-ல் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமாக நிலைத்திருக்கும் தொழில் நுட்பம் .
இயந்திரச் சிக்கல்கள் – விளாதிமிர் அலெக்ஸீவ்
விளாதிமிர் அலெக்ஸீவ் என்ற தரவிதழாளருக்கும் OpenAI என்ற செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட GPT-3 எனப்படும் மொழி உருவாக்கிக்கும் இடையே நடந்த ஓர் உரையாடலிலிருந்து சில பகுதிகள். இணையத்தில் உள்ள தரவுகளை அலசுவதன் வழியாக GPT-3 தனது செயற்கை நுண்ணறிவை வளர்த்துக் கேள்விகளுக்குப் பதில் சொல்லப் பழகியுள்ளது.
எண்மக் காலத்தில் பெண்ணிய ஆவணப்படுத்தலும் நெறிமுறைகளும்
புகைப்படங்கள், வாய்வழி வரலாறு, நேர்காணல்கள், கதைகள், மேடைப் பேச்சுகள், டயரிக் குறிப்புகள், கடிதங்கள் இப்படிப்பட்டவைகளால் சித்திரிக்கப்பட்ட சமூகச் சரித்திரம். இவற்றைச் சேகரிக்கும்போது நான் பெண்களிடம் செய்த நேர்காணல்களை ஒலிப்பேழையில் பதிவு செய்தேன். என் நெருங்கிய தோழி ஒருத்தி, டாக்டர் ஜெரால்டின் ஃபோர்ப்ஸ் என்றிருக்கிறார். அவரும் அமெரிக்காவிலிருந்து இந்தியப் பெண்களைக் குறித்து இத்தகைய ஆராய்ச்சி செய்து வருகிறார். அவரை நான் 1972 வாக்கில் சந்தித்தேன். இந்தத் தரவுகளை எப்படி ஒழுங்குபடுத்துவது, எங்கே வைப்பது என்பது பற்றிப் பேச ஆரம்பித்தோம்.
“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”
மிகச் சிறிய இடத்தில் எழுத்தாளர் திலீப் குமாரும் ராமகிருஷ்ணனும் சிகரெட் புகைசூழ வேலை செய்துகொண்டிருப்பார்கள், நானும் என் மாமாவும் அடுத்த அறையில் புத்தகங்களை மேய்ந்து கொண்டிருப்போம். க்ரியா ஒரு கண் திறப்பு அனுபவமாய் இருந்தது. அங்குதான் நான் சுந்தர ராமசாமியின் புத்தகங்களையும் ஸ்ரீராமின் மொழியாக்கங்களையும் அறிந்துகொண்டேன். தார்கோவ்ஸ்கியின் Sculpting in Time என்ற புத்தகத்தின் தமிழாக்கமும் அங்கேதான் கிடைத்தது.
இந்துக்கள் கோழைகளா?
“இந்து ஒரு கோழை; முகம்மதியர் இந்துக்களை அச்சுறுத்துபவர்கள்” இதை 29 மே 1924 இளைய பாரதம் இதழில் எழுதியவர் அஹிம்சாவாதி மகாத்மா காந்தி. இந்துக்களை தட்டி எழுப்ப சொல்லப்பட்டதா அல்லது முகம்மதியர்களை மேலும் ஊக்கமூட்டுவதற்கா என்று தெரியவில்லை ஆனால் ஆசிரியர் இந்துக்களின் பலவீனங்களில் கோழைத்தனம் ஒன்றல்ல என்கிறார்
பூ கர்ப்பம்
வானில் தெரிவதற்கெல்லாம் பால் வெளிதான் வீடு என்று நினைத்திருந்தோம். நியூட்டனின் ஈர்ப்பு விதிகளின்படி அகிலம் மாறுதலற்றது, தொடர்வது, எப்போதுமே நிலை பெற்றிருக்கக்கூடும் என எண்ணினோம். ஐன்ஸ்டீனின் பொதுச் சார்பியல் கோட்பாடு காலவெளி நெசவைச் சொன்னது. அவரது கண்டுபிடிப்பு, பேரண்டம் மாறுதலுக்கு உட்பட்டது என்பதைச் சொன்னதோடு நில்லாது கருந்துளைகளை அனுமானித்தது. தற்போதைய அறிவியல் யூகித்துச் சொல்வது என்னவென்றால் இந்த புவனம் கருந்துளையில் இருந்து பிறந்துள்ளது என்பதே.
“அலர்தலும் உதிர்தலும்” – ஹைக்கூ கவிதைகள்
வண்டு மறைக்கும்
சிறுபூக்களின் பின் – உதிர
சிலிர்க்கும் காடு.
அந்த இயல்வாகை மரத்தடியில் கொஞ்ச நேரம்
குரைத்துக் கொண்டே
துரத்தி வந்து
பின்னர் மீண்டும்
அந்த தெருவோர
இயல்வாகை மரத்தடியில்
சென்று படுத்துக் கொள்ளும்
அந்தப் பழுப்பு நிறத் தெருநாயை
மண்ணுக்கடியில்
சாலைகள் என் மண்மீது
நிரவப்பட்டு விரைவாய்
அதன் மீது வாகனங்கள்
இரையாய் நான்
கேளாச்செவிகள்
பத்மபாதருக்கு இரண்டு காதுகளிலும் கடுமையான வலி ஏற்பட்டது. அவரின் மனைவி சிவகாமசுந்தரிதான் அவரை ‘காது, மூக்கு, தொண்டை’ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அவர்களுக்கு முன்பாக மூன்றுபேர் அமர்ந்திருந்தனர். இவர்கள் நான்காவது ஆள். சிப்பந்தி வந்தார். நோயாளரின் பெயரைக் கேட்டு, எழுதிக்கொண்டார்.
அணில்
ரமாவின் மீது நண்பனின் தங்கை என்பது தவிர பெரிய பற்றெதுவும் சங்கருக்கு இல்லை. திரைப்படங்கள் பல உறவுகளை சிக்கலாக்கி விடுகின்றன. பாதிப்படங்கள் நண்பனின் தங்கையை காதலியாகவும் மீதப் படங்கள் தங்கையாகவும் இரு எல்லைகளாக வகுத்துவிடுகின்றன. இது, இரண்டுமில்லாது இருப்பவர்களை பெரும் சங்கடத்தில் தள்ளுகின்றது. சங்கர் கிருஷ்ணனைக் காணச் செல்லும்போது எப்போதாவது எதிர் கொள்வதையன்றி அவளுடன் எந்த தனிப்பட்ட உரையாடலும் நடந்ததில்லை. நண்பனுக்கு ஏற்பட்ட இழப்பே சங்கருக்கு பெரும் துயரை உண்டாக்கியது.
காதல்
அப்படி இல்லை. திமிர்த்தனம் மீதான என் பார்வை வேறு. அறிவு இருக்கும் இடத்தில் செருக்கு இருக்கும். ஆனால், இந்த செருக்கு தான் ஒரு கடிவாளம் போல செயல்படும். உன் விஷயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது. நீ இத்தனை காலமும் கைபடாத ரோஜாவாக இருக்கிறாயெனில் அதற்குக் காரணம் அந்தக் கடிவாளம் தான். எனக்கு விர்ஜின் பயல்களைப் பிடிக்கும். தவிரவும், உன் போன்ற அதிபுத்திசாலிகளைக் கண்டால் இப்படியெல்லாம் நடந்து கொள்ளும் அளவிற்குப் பிடிக்கும். விளைவுகளைப் பற்றி கிஞ்சித்தும் கவலை இல்லை. தவிரவும், இன்னும் முப்பது வருடம் நாம் ஒன்றாக பயணிக்க இருக்கிறோம். உனக்கும் என்னை விட்டால் வேறு மார்க்கமில்லை. பேசாமல் காதலிக்கலாமே?” என்றாள் காமினி தொடர்ந்து
தீபாவளி சிறப்பிதழ் – வாசகர் மறுவினை
ராமையா எழுதிய அடைக்கும் தாழ் சிறுகதை படித்தேன். கதை பின்னோக்கு உத்தியில் சொல்லப்பட்டுள்ளது. பேசாமலே இருந்த ப்ரியா மறதி நோய் உள்ள பாட்டியின் மூலம் அவர்கள் வீட்டிற்குச் சென்று மாமாவின் அன்பால் பேசத் தொடங்குகிறாள். ஆனால் தன் குழந்தைக்குப் பிராமண பாஷை வந்துவிடுமோ என எண்ணிய சரவணன் ப்ரியாவை அங்கு அனுப்ப மறுத்துவிடுகிறான்…
புத்தகக்குறி
இலக்கிய பத்திரிகைகளின் சமீபத்திய வெளியீடுகள் குறித்த சிறு அறிமுகம்: n+1 – Death Wish https://nplusonemag.com/magazine/issue-38/ Stuart Schrader, Lizzie Feidelson, Jeremy O. Harris, Mark Doten, Nan Z. Da, Caleb Crain, Christina Nichol, Mattilda Bernstein Sycamore, Ida Lødemel Tvedt, William “புத்தகக்குறி”
கைச்சிட்டா – 8
இசை பாம்பே நகரத்தில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டிலும் ஹிந்துஸ்தானி இசை எவ்வாறு உருமாறியது என்பதைத் தேஜஸ்வினி நிரஞ்சனா, “மும்பையில் மியுசிகோஃபிலியா” நூலில் தடம் பின்பற்றிப் பதிந்திருக்கிறார். 1950கள் வரைக்கும் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின்கீழ் இருந்தபோதும்; அதன்பின் சுதந்திர, பின்-காலனித்துவ பெருநகரமாக உருமாறியபோதும் – இந்துஸ்தானி இசை குறித்த “கைச்சிட்டா – 8”
ராம் என்றொரு நண்பன்
எழுபதுகளில் இலக்கிய உலகில் இருந்த அனைவரும் வெங்கட் சாமினாதன் மூலம்தான் எனக்கு அறிமுகம். ராமும் அப்படித்தான். கசடதபற பத்திரிகையில் நான் எழுதிய “அம்மா ஒரு கொலை செய்தாள்” கதை வெளிவந்தபின் நான் சென்னை வந்தபோதெல்லாம் அலைந்து திரிந்து வருபவர்களுக்கு தன் வீட்டைத் திறந்து வைத்திருந்தார்கள் ராமும் அவர் தோழி “ராம் என்றொரு நண்பன்”
கர்நாடக சங்கீத உரையாடல்: விதுஷி சீதா நாராயணன்
பெரம்பூரில் வளர்ந்த எனக்கு விதுஷி சீதா நாராயணனைக் கேட்க இளமையில் நிறைய வாய்ப்புகள் இருந்திருந்தாலும் அதை நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அப்போது எனக்கு கர்நாடக இசையில் பெரிய ஈடுபாடு இல்லை. எனக்கு ஈடுபாடு வந்ததும் நான் துரத்தித் துரத்திக் கேட்டவர்களில் அவர் இல்லை. 2014-ல்தான் அவரை நான் கேட்க “கர்நாடக சங்கீத உரையாடல்: விதுஷி சீதா நாராயணன்”
இராஜேந்திரனின் காதலி
பனங்காடுகள் நிறைந்த அந்த இடத்தின் ஒரு பகுதியில் சம்பந்தப் பெருமானால் பாடப்பெற்ற பனங்காட்டேஸ்வரர் என்ற பெயர் கொண்ட சிவபெருமான் கோவில் கொண்டிருந்தார். ஒரு காலத்தில் பாடல் பெற்று புகழ் கொண்டு விளங்கிய அந்தத் தலத்தின் தற்போதைய நிலை கண்டு ராஜேந்திரன் இதயம் கலங்கியது. கோவிலைப் புனர்நிர்மாணம் செய்ய உத்தரவிட்டான். தவிர அந்தப் பணியை தன்னுடைய அணுக்கியான பரவையே முன்னின்று நடத்தவேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தான். பனங்காட்டேஸ்வரரான ஈசன் ‘பரவை ஈஸ்வரமுடையார் மகாதேவர்’ என்ற பெயராலும் அந்த ஊர் பரவை புரம் என்ற பெயராலும் அழைக்கப்படட்டும் என்று ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.
திருக்கோயில்களில் நவக்கிரகங்களின் அமைப்பு
கோள்களை வழிபடுவது பழைய மரபாயினும் கோள்கள் ஒன்பதையும் ஒருங்கே பீடமேற்றி, ஒன்றாக வழிபடும் முறைமை பிற்கால சோழர்கள் காலத்தில் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்து ஆலயங்களில், குறிப்பாக சிவாலயங்களில் நவக்கிரக சன்னதிகள் பல்வேறு நிலைகளில், வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக, வைதீக மற்றும் ஆகம விதிப்படி இரு வடிவங்களில் நவக்கிரகங்களின் வரிசைகள் அமைக்கப்படுகிறது. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி முதலான ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாகச் சுற்றுகின்றன…
அடைக்கும் தாழ்
பாட்டி சற்று மங்குவது தெரிந்தது. ப்ரியாவைப் பார்த்து, “குழந்தை பேர் என்ன?” என்றாள் மறுபடி.
“கிளம்பிடுங்கோ,” என்றார் தாத்தா. “கொஞ்ச நேரத்துல லங்கிணி ஆயிடுவள்.”
எனக்கு அவர் பேசுவது இன்னும் முழுக்கப் புரியவில்லை. லங்கிணி என்றால் என்ன? கீழ் வீட்டில் கேட்டேன்.
“ராமாயணத்துல அனுமார் தலையில குட்டுவரே, லங்கையோட காவல் தெய்வம்,” என்றாள் காயத்ரி.
எனக்கு இன்னும் புரியாததால், “பாட்டி சாமியாடுவாள்னு அர்த்தம்,” என்றாள்.
பொம்மை விளையாட்டு
அன்றைய காலைப்பொழுது ஏகப்பட்ட அமளியோடு விடிந்தது. லேசாய்த் தலை வலிக்கிறது; எட்டு மணிக்கு மேல்தான் ஓட்டலைத் திறக்கப்போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார் மாமா. தலைமாட்டில் தலையணை சைஸுக்கு இரண்டு மூன்று புத்த கங்கள் வைத்திருந்தார்.
ஒங்க மாமாவுக்குப் படிக்கிறதுக்கு மூடு இல்லேன்னாத்தான் கடையைத் திறப் பார் பாத்துக்கோ.
என்று முன்னொருதடவை மாமி சொன்னது நினைவு வந்தது.
கோன்ராட் எல்ஸ்ட்டின் ‘இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்’
ஆட்டோ வான் பிஸ்மார்க்தான் ஜெர்மனியில் கிறிஸ்துவ தேவாலயத்திடமிருந்து கல்வியாதிக்கத்தைக் கலாசாரப் போர் (kulturkampf) என்ற பெயரிட்டுப் பறிக்க முயன்று தோல்வியடைந்தார். அதுமுதல், பொருளாதாரத்தைத் தவிர்த்து மற்ற அனைத்து சச்சரவுகளுமே கலாசார யுத்தமாகவே எல்லா நாடுகளிலும் கருதப்படுகிறது. சச்சரவுகள் சிலசமயம் ஒரேவிதமாக இருந்தாலும் வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு விதமாக அவற்றை அணுகுகின்றன.
பிணி; தீ; விசுவாசம்- கவிதைகள்
நீரில்
நனைந்ததால்
தலை துவட்டும்
என்னைப் பார்த்து
நீரில்
நனையாதாயினும்
வெயிலில்
நனைந்ததாய்த்
தலை துவட்டும்
என்
நிழலின்
விசுவாசத்தில்
அந்தக்காலத்து தீபாவளி
Any sufficiently advanced technology is indistinguishable from magic. – Arthur C. Clarke தீபாவளி சமயத்தில் ஒவ்வொரு வருடமும் அந்தக்காலத்தில் இந்தப் பண்டிகையை எப்படிக் கொண்டாடுவோம் என்று விவரித்து ஒரு சிறுகதையோ கட்டுரையோ வந்து சேரும். அந்தக்காலம் என்று கருதப்படுவது ஒரு நாற்பது ஐம்பது வருடங்களுக்கு “அந்தக்காலத்து தீபாவளி”
இனிய நினைவு
இயற்கையிலேயே மகாபாரதக் கதையின் மீது எனக்கிருந்த ஆர்வமே பர்வ நாவலை மொழிபெயர்த்ததற்கான முதல் காரணம். பைரப்பாவின் கதைப்பின்னல் எப்போதும் உணர்ச்சிகரமானதும் வேகமும் கொண்டது. அதன் மீது எனக்கு எப்போதும் விருப்பமுண்டு. எங்கோ நடைபெற்ற கதையாக அன்று, நம் கண் முன்னால் நடைபெறுகிற ஒரு கதையாக நம்பகத் தன்மையுடன் அவர் படைப்புகளைப் படிக்கலாம்.
கல்வியும் தமிழ் பிராமணர்களும் – பத்தொன்பதாம் நூற்றாண்டு
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் திராவிடப் பேரறிஞர்களால் சொல்லப்படுவது இது: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழன் கல்வியறிவு பெற்று உலகம் முழுவதற்கும் பாடம் எடுக்கும் திறன் பெற்றிருந்தான். தமிழ்நாட்டில் பிராமணர்கள் நுழைந்து தமிழர் கல்வித் திறனைச் சீர் குலைத்தனர். பிராமணர் அல்லாதாரை படிக்கவிடாமல் தடுத்தனர். இன்றும் பல்வகைச் சூழ்ச்சிகளைச் செய்து “கல்வியும் தமிழ் பிராமணர்களும் – பத்தொன்பதாம் நூற்றாண்டு”
ஆவரேஜ்
கவனியுங்கள். ஸீரீஸ் ஐ காலனி ஆக்கவிடாமல் தடுப்பது அதன் மிக மெல்லிய ஈர்ப்பு விசை. ஆனால் போக்குவரத்துக்கு அதுதான் கச்சிதமான தேவை. ஸீரீஸ் பூமிக்கும் சனி கிரகத்துக்கும் இடையில் சென்று வருமானால், அதன் மீது மனிதர்களுக்கு நீள் உறக்கக் குடுவைகளைக் கட்டமைக்க முடிந்தால் போதுமானது. ஈர்ப்பு விசை இல்லாதிருப்பதால், எந்த ஒரு கலனையும் கொண்டு ஸீரீஸ் மீது இறக்கி ஏற்றலாம். செவ்வாயைப் போன்ற கிரகங்களில் இது சாத்தியமில்லை. செவ்வாய் கிரகத்தின் அதிக ஈர்ப்பு விசைக்கு தரையிறக்கி, ஏற்ற நாம் அதிகமான எரிபொருளைச் செலவிட வேண்டி வரும். ஸீரீஸ்ல் அந்தப் பிரச்சனை இல்லை.”
ஷெர்லி ஹாஸர்ட் (1931-2016) – ஓர் அறிமுகம்
ஹாசர்டின் உரைநடை, பழமொழிகளைப்போலச் சுருங்கச் சொல்வதாகவும், ரத்தினக் கற்களை வெட்டுவதுபோலக் கூர்மையான விளிம்புகளோடும் இருப்பது – அது இத்தகைய குறிப்புகளிலிருந்து உருப்பெற்றது. அக்குறிப்புகள் எங்கோ கேட்டவை, அல்லது கனவாகப் பெறப்பட்டவை, பிறகு எழுதி வைக்கப்பட்டவையாக இருந்தன.
ட்ரம்ப் விட்டுச் செல்லும் எச்சங்கள்
பழமை விரும்பும் நீதிமன்றத்தை அமைத்துச் சென்ற டிரம்ப் பரபரப்புக்கு பஞ்சமில்லாத அமெரிக்க அதிபர் தேர்தலுக்குச் சில தினங்களே இருந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் ட்ரம்ப் அரசு காட்டிய ஆர்வமும் அவசரமும் ஜனநாயக கட்சியினரிடையே பல கேள்விகளை எழுப்பியது. மறைந்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரூத் கின்ஸ்பெர்க்கின் “ட்ரம்ப் விட்டுச் செல்லும் எச்சங்கள்”
அமெரிக்கா உண்மையில் உலகில் எவ்வளவு நல்லது செய்திருக்கிறது?
கத்தோலிக்கக் கிறித்தவர்களும், கத்தோலிக்கக் கொள்கையை மறுத்துப் பிரிந்துசென்று போப்பாண்டவரின் ஆட்சிக்கு எதிரான கொள்கையைப் பின்பற்றுகிற பிராடஸ்டன்டுகளும் உடன்படிக்கையில் கையெழுத்திடுகிறார்கள். குண்டு வெடிப்புகளும் தீவிரவாத அச்சுறுத்தல்களும் மறைந்து அரசியல் போட்டி உருவாகிறது.
ஹையரில் அன்வார் கவிதைகள்
இதுதான் வாழ்வு ஆனால்
அது
தோல்வியை தள்ளிப்போடுவது
இளமையினுடைய கட்டுப்பாடற்ற காதலிலிருந்து
உருவாகித் தழைத்த ”அந்நியமாதல்”
உயிர் பெற்றெழும் மறைந்த மொழிகள்
இந்தக் குழுவின் இறுதி இலக்கு என்பது, பல்லாண்டுகளாக மொழியியலாளர்களுக்கு வசப்படாத தொலைந்த மொழிகளைச் சில ஆயிரம் சொற்களைக்கொண்டு கட்டமைக்க முயல்வதுதான்.
விஞ்ஞானத் திரித்தல்கள் – சக்தி சார்ந்தன
6. கடந்த 100 ஆண்டுகளாக நடந்துவரும் இதுபோன்ற நடவடிக்கைகளை, ஒரு எண்ணெய்த் தொழில் தில்லாலங்கடி என்றே சொல்லவேண்டும். விஞ்ஞான முறைப்படி அணுகினாலும் இவர்களுடைய அணுகுமுறையில் எந்தவிதமான பயனும் இல்லை. ஆயினும், இவர்கள் நடத்தும் நாடகம் ஒவ்வொரு முறையும் சற்று வேறுபட்டு இருந்தாலும் கடைசியில் வெற்றி பெற்றுவிடுகிறார்கள்.
கைச்சிட்டா – 7
கதையில் வரும் அத்தைகளும் மாமாக்களும் அமெரிக்க முதலியத்தில் திளைந்துக் கொழிக்கும் சித்தப்பா / பெரியப்பாகளும் இஸ்லாம் மீண்டும் தலைதூக்கும் என்று தீவிரமாக நம்புகிறார்கள். அக்தரின் பெற்றோர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.
அமைதியின் அழிப்பு
“அழிப்புன்னா, என்ன அர்த்தத்துல?”
“அதைச் சூறையாடறதா. கொள்ளை அடிக்கிறதா புரிஞ்சுக்கணும். அதை ஒரு கவிதையில படிச்சேன். நம் தலைமுறை எப்படி ‘அமைதியின் சூறையாடலை,தேவாலயங்கள் வெறுமையாவதை, குதிரைப்படை கடந்ததை, உணர்ச்சிக் குழப்பத்தோடு பார்த்தோம்.’ …….
“ஊருக்குள்ளே குதிரைகள் இருந்ததெல்லாம் எனக்கு நினைவு இருக்கு.”
“ஆ, எனக்கும்தான் நினைவு இருக்கு. வண்டிகளை இழுத்துப் போகும் குதிரைகள். காலில் நிறைய முடியோடிருக்கும் க்ளைட்ஸ்டேல் குதிரைகள். எப்போதும் ஜோடிகளாகவே இருக்கும். … எல்லா உற்பத்தியும் தொழில் மயமாவதற்கு முன்பு நாம் எத்தனை நல்ல காலத்தை அனுபவித்தோம்.”
அமிழ்தல்
அக்கா, முன்பு நீ தேடிக்கொண்டிருந்த சுட்டுப் பெயர்; உன் புத்தியிலிருந்து மறைந்துவிட்டதாகத் தோன்றுகின்றவற்றில் அதுவும் ஒன்று. நீ வார்த்தைகளைப் பெறப் போராடுகிறாய்; ஆனால் அந்த அமிழ்த்தி உனக்குக் கொடுப்பவை எல்லாம் நடுவாந்திரமாக, தொடர்பறுந்த வகைச் சுட்டுப் பெயர்களாகவே உள்ளன, அவற்றில் ஒன்று உனக்கு உள்ளுணர்வால் உடனே தெரிகிறது, தவறான சொல் என்று – அதை வெளிதேசத்தவரும், அன்னியரும்தான் இந்த மாதிரிச் சூழல்களில் பயன்படுத்துவார்கள். “அக்கா,” நீ அந்தச் சுட்டுப்பெயரை, இறுதியில், திரும்பச் சொல்கிறாய், ஏனெனில் உனக்கு வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை.
மனுசி
கீள வுளுந்துடப் போறானோங்கிற கெலியும் அவளுக்குப் புடிச்சது. நல்லவேளயா அஞ்சல அங்கயே நின்னுருந்தா. அந்தப் பொண்ணு பாக்குற மாதிரித் தெரியல. தெவ்வானைக்குப் பின்னாடி ரெண்டு மூணு பேரு வந்து நின்ன பொறவு அவ, தாயீன்னா. தலையத் தூக்கிப் பாத்த அது இவளப் பாத்து மொறச்சதுல வாப்பேச்சிக் கெளம்புவேனான்னது. ஒனக்குப் புண்ணியமா போவுதும்மா… இம்புட்டு நாளிக் காத்துக் கெடக்கேன்னு கண்ணுத் தண்ணியவுட்டா. பொறவு அது சீட்டு எளுதிக் குடுத்திச்சி.
நேர்த்திக் கடன்
கொடிகளில் ஆடிய கலர் கலரான தொப்பிகள் என்று விஸ்தாரமாக விரிந்து கிடந்தது ஊர் கடை தெருவு. இத்தாம் பெரிய ஊரா நம்மூரு என்பது அவனுக்கு பிரமிப்பாக இருந்தது. அத்தனை பெரிய கடை தெருவில் தொப்பிகள் மீது மட்டும் அவன் கண் இருந்தது. தொப்பிகளை கண் இரைப்பைகள் விம்ம விழுங்கி கொண்டிருந்தான். மனதில் சட்டென ஒரு ஆசை. ஒரு தொப்பி வேணும்! அதோ அந்த தொப்பி தான். கருப்பு கலர்ல.
குரங்காட்டம்
கடைசியாக இன்னொன்று என்று சொன்னார் அவர். “வெளியில் சென்று வேலை செய்யும் நிமித்தம் இப்போதைக்கு நிச்சயமாக இருவருக்கு தான். ஒன்று நிலத்தில் இறங்கும் விவசாயி. இன்னொன்று களத்தில் இறங்கும் ஸ்விக்கி ஸ்மோட்டோ டெலிவரி மக்கள். இரண்டுமே உணவுக்காக. ஒன்று ஆதி உற்பத்தி. இன்னொன்று அந்தம். இறுதியில் வயிற்றுக்குள் போக” என்று சொல்லி உரக்க சிரித்தார். எல்லாம் பரிணாம வளர்ச்சி. குரங்கிலிருந்து மனிதன் வந்த அந்த பரிணாம வளர்ச்சிக்கு பிறகு மிக வேக பரிணாம வளர்ச்சி கொரோனா வால்தான் என்று அவர் சொன்னபோது மீண்டும் குரங்குகள் எங்கே என்ற யோசனையோடு வண்டியை எடுத்தேன். .
உரைகல்; கடந்த வழி -கவிதைகள்
பற்றிலேதும் வரவின்றி
உதித்து விரைந்து
உதிரும் நாட்களுக்குள்
கணக்கேதுமின்றி
எதையும் பதியாமல்
தடமெதுவும் இல்லாமல்
மகிழ்வேதும் தாராமல்
துயரதுவும் கொள்ளாமல்
மறைந்து போவது
குறைவென்பதா அன்றி அதுவே
நிறைவென்பதா
தத்துவப் பூனை
மூட நம்பிக்கையைச் சாடி தன் ‘கீதப் பூங்கொத்து’ பாடல் நூலில் பிரும்ம ராயர் இப்படிச் சொல்கிறார்:
‘போகும் வழியிலோர் பூனைதான்
எந்தப் புறம் சென்றால் உனக்கென்ன?
அந்தந்த ஜீவன் இயற்கையாம்-இதில்
அச்சங் கொண்டேகுதல் ஏனடா?’
பெயரில் என்ன இருக்கு?
நான் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த நேரத்தில், சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்த அக் கல்லூரியில் ‘செல்லப்பா’ என்ற பெயர் கொண்டவன் நான் ஒருவனாகத் தான் இருந்தேன் என்று மங்கலாக ஒரு நினைவு. சுப்பிரமணியன்களும் ஸ்ரீநிவாசன்களும் கோலோச்சிக் கொண்டிருந்த அந்த வேளையில், ஒரு வித்தியாசமான பெயருடன் இருந்ததால் சிறிது “பெயரில் என்ன இருக்கு?”
கதை கதையாய்; கடுந்துறவு; தோன்றாத் துணை- கவிதைகள்
ஒரு கணமும்
ஓய்வதில்லை
தலைக்கு மேல்
வானத்தை
சூடிக்கொண்ட
அந்த கிளைகளின்
நடனம்
பொய்கையாழ்வார் அனுபவித்த திருவேங்கடம்
எம்பெருமான் நாராயணன் இப்பூவுலகில் வந்துதித்த போதில் அவரின் திருப்பாதங்கள் முதன் முதல் பட்ட இடம் திருவேங்கடம்தான். அத்தகு தெய்வத் தன்மை பொருந்திய திருவேங்கடத்தை ஆழ்வார் பெருமக்கள் பலர் மங்களாசாசனம் செய்து அனுபவித்திருக்கின்றனர். மூவாழ்வார்களில் முதலாம் ஆழ்வாரான பொய்கையாழ்வார் தம் முதல் திருவந்தாதியில் பல இடங்களில் திருவேங்கடத்தைப் போற்றிப் பாடி “பொய்கையாழ்வார் அனுபவித்த திருவேங்கடம்”
பலகை அடித்த ஜன்னல்
மர்லாக், மர வீட்டைக் கட்டி முடித்தபின், வலிமையுடன் மரங்களைக் கோடரியால் வெட்டி வீழ்த்திப் பயிரிடும் நிலத்தை உருவாக்கிக் கொண்டான்- துணைக் கருவியாகத் துப்பாக்கியும் வைத்திருந்தான். அப்போது அவன் இளமையும் கட்டுடலும் நம்பிக்கை மிக்க எதிர்பார்ப்பும் கொண்டிருந்தான். கிழக்கு தேசத்திலிருந்து வந்தபோதே அவ்வூர் வழக்கப்படி அவனுக்குத் திருமணம் ஆகிவிட்டது.
கசப்பு; யாரு சாமி நீ- கவிதைகள்
கீழே சிந்திய தேனை
பருக வந்திருக்கும்
எறும்புகளை
பாவம் என்றெண்ணுவதற்குள்
மெல்ல எட்டிப் பார்க்கிறது
பொறாமை.
மனக்கோட்டை – லூயீஸ் க்ளிக் கவிதை
அதுவே ஓர் துவக்கம்தான்.
ஒவ்வொரு நாளும் அடக்கத் தலத்தில்,
புதிய விதவைகள் பிறக்கிறார்கள்
புதிய அனாதைகளும். அவர்கள்
கைகள் கட்டி அமர்கிறார்கள்,
இந்தப் புதிய வாழ்வைப் பற்றி யோசிக்க.
நேரம் சரியாக: மனித முன்னேற்றத்தின் மந்திரச் சாவி
‘விஞ்ஞானம் என்றால் என்ன?’ எனக் கேட்டால், நம்மில் பலர், புதிய கண்டுபிடிப்புகளைச் செய்பவர்கள் என்போம். நாம் யார் எனத் தொடங்கி, நம்மையும், நம் சுற்றத்தாரையும், நாம் வாழும் பூமி தொடங்கி பிரபஞ்சம் முழுமையையும் அறியும் துடிப்பு மிகுந்த ஒவ்வொருவரையும் ஒரு விஞ்ஞானி என சொல்லலாம். ‘என்னடா! விஞ்ஞானிகளைப் பற்றி “நேரம் சரியாக: மனித முன்னேற்றத்தின் மந்திரச் சாவி”
நாஞ்சில் நாடன் கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்
நாஞ்சில் நாடனின் இந்தக் கட்டுரைக்குள் ஒவ்வொரு பாட்டையும் சொல்வனம் இணையதளத்தார் இடைச் சொருகியே தந்திருக்கிறார்கள். இசை கேட்கக் கேட்க மயிர் சிலிர்க்கிறது. பத்தாததுக்கு கட்டுரையில் நாஞ்சில் நாடன் திரட்டித் தருகிற புலனனுபவம். அது ஒரு களவுச் சொப்பனம் போல ஆளை ஆழ்த்தும். கூடவே யாழ்பாணத்துச் சித்தர் யோகரின் பத்து கண்ணியில் வரும் பவனம், பருதி, பரவை ஆழி எல்லாமும் தாண்டி அதிலுள்ள ‘எடி’ என்கிற தொனியையும் விட்டுவிடாமல் ஒரு பிடி பிடித்து வைக்கிறார்…
