காதல்

அப்படி இல்லை. திமிர்த்தனம் மீதான என் பார்வை வேறு. அறிவு இருக்கும் இடத்தில் செருக்கு இருக்கும். ஆனால், இந்த செருக்கு தான் ஒரு கடிவாளம் போல செயல்படும். உன் விஷயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது. நீ இத்தனை காலமும் கைபடாத ரோஜாவாக இருக்கிறாயெனில் அதற்குக் காரணம் அந்தக் கடிவாளம் தான். எனக்கு விர்ஜின் பயல்களைப் பிடிக்கும். தவிரவும், உன் போன்ற அதிபுத்திசாலிகளைக் கண்டால் இப்படியெல்லாம் நடந்து கொள்ளும் அளவிற்குப் பிடிக்கும். விளைவுகளைப் பற்றி கிஞ்சித்தும் கவலை இல்லை. தவிரவும், இன்னும் முப்பது வருடம் நாம் ஒன்றாக பயணிக்க இருக்கிறோம். உனக்கும் என்னை விட்டால் வேறு மார்க்கமில்லை. பேசாமல் காதலிக்கலாமே?” என்றாள் காமினி தொடர்ந்து

ஒளிநகல்

இது எந்த இடம்? எப்படி இங்கு வந்தேன்? டெக்ஸாஸிலிருந்து இங்கே ஏன் வந்தேன்? என்ன ஒரு குழப்பம்?எல்லாமே மாறித் தோன்றுகிறதே? என்னவோ நடக்கிறது, உள்ளிருந்து ஒரு ஊமைக்குரல் கேட்கிறது.புரியவில்லை கடவுளே, என்ன ஆகிக் கொண்டிருக்கிறது எனக்கு? எதிரே ஒரு கோயில்; ஸ்மரண் தன்னை அறியாமல் கை கூப்பினான்.அவனருகில் மாருதி கார் வந்து நின்றது.அழகிய இளம்பெண் ஒருத்தி இறங்கி‘ கெட்இன்’ என்றாள். இவன் திகைத்தான். அவளுடைய இறுக்கமான உடை இவனைப் போல பலரையும் இம்சித்திருக்கக்கூடும். ”இவள் யார்? ஏன் தன்னை காரில் ஏறச் சொல்கிறாள்?

வெற்றிட நிலைகள்

பெருவெடிப்புக்கு முன்னால் பேரண்டத்தில் அறிவுள்ள ஜீவன்கள் இருந்தனவோ என்னவோ. அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை நாம் கற்பனை கூடச் செய்ய முடியாது. அவர்களின் உலகம் பெரும் திணிவும், உயர்ந்த உஷ்ணமும் கொண்டு, மிகச் சிறியதாக இருந்தது; அவர்களின் மொத்தப் பேரண்டமும் ஒரு ஊசியின் கூர்முனையை விடச் சிறிய புள்ளியாக இருந்திருக்க வேண்டும், அவர்கள், நமக்குச் சாத்தியமாகியிருக்கிற கால அளவைகளிலேயே மிகக் குறைந்த நேரத்திற்குள், நூறாயிரம் கோடி (1ட்ரில்லியன்) தலைமுறைகள் வாழ்ந்திருக்கக் கூடும். ஒரு வேளை அவர்களில் ஒருவர், தாம் வாழ்கிற வெற்றிடம் ஒரு போலி வெற்றிடம் என்று உணர்ந்திருக்கக் கூடும், அதனால் அந்த வெற்றிலிருந்து சக்தியை உருவாக்க முடியும் என்று புரிந்து கொண்டிருக்கக் கூடும். ஒரு வேளை ஒருவர் அதை முயன்றாரோ என்னவோ.

உயிரெச்சம்

“பிரியப் பெற்றோரின் பெற்றோர்களே,  
எத்தனை பெரிய இழப்பு நமக்கு.  அவர்கள் இருவரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்.  நீங்களாவது வர மாட்டீர்களா? எலும்புகள் வளரத் தொடங்கிவிட்டன,  ஜெனிடல்ஸ் அமைந்துவிட்டன, கண்களை மூடித் திறக்கப் பயிலுகிறேன்.  நுரையீரலும் தசைகளும் வலுவாக ஆரம்பித்திருக்கின்றன. யுகந்தராவும் நானும் ஏங்குகிறோம்.  எங்கள் உணவை நாங்களே தயாரித்துக் கொண்டிருக்கிறோம், ப்ரசன்னாவின் உதவியோடு. ஆனால் எவ்வளவு நாள்?”