ஒரு போராட்டத்தின் கதை

தமிழக முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் மார்ச் 21, 2015 அன்று வீட்டில் இல்லை. அன்று சனிக்கிழமை – அலுவலகமும் கிடையாது. எங்கே போயிருந்தாரோ – ஆனால் அவர் இல்லாதது நல்லதாகப் போயிற்று. கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவர் வீட்டு வாசலில் இரண்டு, மூன்று போலீசார் மட்டுமே. போயஸ் கார்டனின் கெடுபிடிக்கு “ஒரு போராட்டத்தின் கதை”

அடைக்கும் தாழ்

பாட்டி சற்று மங்குவது தெரிந்தது. ப்ரியாவைப் பார்த்து, “குழந்தை பேர் என்ன?” என்றாள் மறுபடி.
“கிளம்பிடுங்கோ,” என்றார் தாத்தா. “கொஞ்ச நேரத்துல லங்கிணி ஆயிடுவள்.”
எனக்கு அவர் பேசுவது இன்னும் முழுக்கப் புரியவில்லை. லங்கிணி என்றால் என்ன? கீழ் வீட்டில் கேட்டேன்.
“ராமாயணத்துல அனுமார் தலையில குட்டுவரே, லங்கையோட காவல் தெய்வம்,” என்றாள் காயத்ரி.
எனக்கு இன்னும் புரியாததால், “பாட்டி சாமியாடுவாள்னு அர்த்தம்,” என்றாள்.

தீவு

நான் காத்திருந்தேன்.
“உங்க மனைவி ஆஸ்பத்திரில மார்ச்சுவரி இருக்குல்ல, அங்க என்னை ஒருநாள் கொண்டுபோய் விடமுடியுமா?”
“செத்தாதான் அங்க கொண்டுபோவாங்க.”
“ஹாஹாஹா. அதில்ல தம்பி… கரோனாவோட உண்மை நிலவரம் தெரியணும்னா ஒரு நைட்டு அங்க இருந்தாதான் முடியும்.”
“ஒவ்வொருத்தர் மண்டையா போய்ப் பாக்கப்போறீங்களா?”
“வேற வழியில்லை தம்பி.”

நட்பு

மறு நாள் அகமத் அழுவதை நிறுத்தியிருந்தான். எனவே எப்படியாவது தப்பி விடலாம் என்று நினைத்தேன்.
பி.டி பீரியடில் எல்லாரையும் புட்பால் விளையாடச் சொன்னார்கள். நான் வரப் போகும் ஆபத்து தெரியாமல் ஓரமாக ஓய்வெடுத்தேன்.
அகமத் குட்டியாக இருந்தான். எல்லார் பின்னாலும் ஓடினான். ஒரு நிலையில் பந்து அவனிடம் வந்த போது என்ன செய்வது தெரியாமல் முழித்தான். எல்லாரும் அவனைப் பார்த்துக் கத்தினார்கள்.

விதியின் பிழை காண்: இறுதி பாகம்

ராணியின் கனவில் வந்தது போலவே, ஒரு குழந்தையின் சிரிப்புச் சத்தம் கேட்கிறது. பச்சைப் பசேல் என்று செடி கொடிகள். அவற்றின் இடையே உள்ள கல் பாதை தெரிகிறது. மறுபடியும் குழந்தையின் சிரிப்புச் சத்தம். பாதையில் ஒரு வயதுக் குழந்தை ஒன்று நடந்து வருகிறது. தள்ளாடித் தள்ளாடி சிரித்தவாறே வருகிறது. சிரித்தபடி முன்னால் நிமிர்ந்து பார்க்கிறது. பார்த்து விட்டு அப்படியே நிற்கிறது.

விதியின் பிழை காண் – ஆறு

நீங்கள் கண்ணயர்ந்தது எந்த நேரம்?
தென்னதரையன்: தெரியாது. ராணியின் அலறல் கேட்டு விழித்தேன். மூன்றாம் சாமம் இருக்கும்.
தருமன்: ஆமாம். சிறிது நேரத்தில் என்னைக் கூட்டி வந்தார்கள். நான் வந்தவுடன் ராணியை ஒன்று கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.

விதியின் பிழை காண் – பகுதி 5

அந்தப் பழங்காலக் கோவில் எரிந்து புகைகிறது. அங்கங்கே குள்ளர்களின் சடலங்கள் விழுந்து கிடக்கின்றன. புகையினூடே மூன்று வீரர்கள் நடந்து வருகிறார்கள். வீரர்கள் இரு பக்கமும் பார்த்தவாறே வருகிறார்கள். அவர்களில் முன்னால் வருபவன் அச்சுதன். அந்த வீரர்களில் ஒருவன் முந்திய நாள் நாம் குற்றாலீஸ்வரர் கோவிலில் பார்த்தவன். காட்டில் குள்ளர்களைக் கொடுமை செய்தவன்.

விதியின் பிழை காண் – பகுதி 4

பட்டத்திப் பாட்டி: உன்னிடம் நாலைந்து முறை சொல்ல வந்தேன். நீ இந்தக் காலத்துப் பிள்ளை. பாட்டிகளிடம் தெருவில் நின்று பேச மாட்டாய்.
நாகை: பாட்டி, அவர் என்னிடமே பேச மாட்டேன் என்கிறார். எப்பொழுதும் வீட்டுக்குப் பின்னால் குழி தோண்டிக் கொண்டு இருக்கிறார்.

விதியின் பிழை காண் – பகுதி 3

நாகை : நாமே குழந்தையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தால் என்ன?
தருமன் : எப்படி? என்னிடம் தான் சக்தி எதுவும் இல்லையே? இந்தப் பாட்டியும் தாத்தா கொடுத்த பெட்டியைத் தூக்கிக் கொண்டு போய் விட்டாள்.

விதியின் பிழை காண் – திரைக்கதை – பகுதி 2

அச்சுதன்: அரையா, இங்கே நன்றாகச் சாப்பிட்டுத் தூங்கி வருகிறாய் போலிருக்கிறது?
தென்னதரையன் (முறைத்தவாறே): அச்சுதரே, நான் தூங்கி மூன்று நாட்கள் ஆயிற்று. அரசர் கூடாரத்தில் உங்களைப் போல அடைந்து கிடக்கும் பழக்கம் எனக்கில்லை.

விதியின் பிழை காண் – திரைக்கதை – பகுதி – 1

வருடம் கி.பி.500. தென் தமிழகத்தில் நூறு வருடங்களாக அமைதி நிலவுகிறது. மதுரையை ஆண்ட களப்பிரரும் திருநெல்வேலிப் பாண்டியரும் போரின்றி ஆட்சி செலுத்துகிறார்கள். இரண்டு நகரங்களுக்கும் நடு வழியில் தூங்கி வழிகிறது சாத்தூர் கிராமம்.கிராமத்தின் அருகே உள்ள காட்டில் வனதுர்க்கை கோவில். தன்னுடைய மனைவி மற்றும் ஒரு வயதுக் குழந்தையுடன் அங்கு படையலிட வர இருக்கிறான் பாண்டியன்…

தந்திப் புரட்சி  – ஒரு ரகசியப் போராட்டத்தின் சரித்திரம்

“ஆஷ் துரையை வாஞ்சி ஐயர் கொன்னதுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?” என்றான் ஆறுமுகம். நம்பியார் மேல்துண்டை வைத்து விசிறிக் கொண்டார். “சரியான கேள்வி அது இல்லை,” என்றார் வாசு. “துரை கொலைக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் என்ன சம்பந்தம் என்பது தான் கேள்வி.” “ஆஹா,” என்றான் ஆறுமுகம்.எனக்குப் புரியவில்லை. ஆனால் கேட்கவும் பயமாக இருந்தது.நம்பியார் கையைத் தூக்கி ஆட்டினார். “காங்கிரசாரை இந்தக் கொலையோடு இணைக்கும் ஒரே ஒரு தந்தி இருக்கிறது என்கிறான் பிரிட்டிஷ் இன்ஸ்பெக்டர் ஆடம். நமசிவாயம் என்று இங்கே மதராஸ் காரியாலயத்தின் ஆள் அனுப்பியது என்கிறான்.” “நமசிவாயம் எங்கே?” என்று கேட்டான் ஆறுமுகம்.

உப்புக் காங்கிரஸ் – தோற்றமும் முடிவும்

தண்டியில் உப்பு எடுக்க மகாத்மா யாத்திரை செய்த சமயம், 1930-ம் வருடம், கல்லிடைக்குறிச்சி ஜூனியர் கிரிக்கெட் கிளப்பைச் சேர்ந்த நாங்கள், கல்லிடைக்குறிச்சி உப்புக் காங்கிரஸை உருவாக்கினோம். நாடெங்கும் சுதந்திரக் காற்று வீசுகையில், எங்கள் பங்குக்கு வெள்ளைக்காரனை உயிரை வாங்க முடிவு செய்தோம்.

[குறுநாவல்] ஒற்றாடல் – பகுதி 1

நான் தஞ்சாவூரில் இருந்து கிளம்பி ஒரு மாதமாகிறது. என்னுடைய அண்ணன்மார்களும், மாமன்மார்களும் அராபியக் குதிரைகளில் ஏறி போர்க்களத்தில் வீரசாகசங்கள் பல புரியும் நேரத்தில், மாட்டு வண்டியிலும், ஓடத்திலும், சில சமயம் நடந்தும் காட்டூர் வந்து சேர்ந்திருந்தோம். குதிரை வாங்கக் காசில்லை என்பது வழுதியின் விளக்கம். ஆனால் சென்றவிடமெல்லாம் பரத்தையர் சமூகத்திற்கு அபரிமிதமாகவே அவனுடைய பங்களிப்பு இருந்தது.

[குறுநாவல்]ஒற்றாடல் – பகுதி 2

வயலூருக்கு அடுத்து உள்ள சிறு படைவீட்டை அவன் வென்றான் என்று சொன்னார்கள். எனக்குப் பெரும் சந்தேகம் கிளம்பியது. பல நாட்களுக்குப் பின்னால், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்தப் படை வீட்டைப் போய்ப் பார்த்தேன். அதன் பிளந்த சுவர்களுயும், உள்ளே இருந்த இடிபாடுகளும் உண்மையை உடனே எனக்கு உணர்த்தின. சுக்ரேசுவரன் நரசிம்மாஸ்திரத்தை போர்க்களத்தில் பயன்படுத்தத் தொடங்கி விட்டான் என்று எனக்குப் புரிந்தது. இந்த ஆயுதத்தின் முன்னால் யாரும் நிற்க முடியாது என்பது எனக்குத் தெரியும். சொல்ல முடியாத துக்கம் என்னை ஆட்கொண்டது.

ரசிகன்

மங்களம் பாடி எழுந்த போது மிருதங்கத்தான் வயலினானைப் பார்த்துக் கண்ணடிப்பது தெரிந்தது. கேலி செய்கிறான்! அடி அடி யென்று மிருதங்கத்தை விளாசிவிட்டு என்னையே கிண்டல் செய்கிறான். கர்நாடகக் கச்சேரி உலகின் முதல் உண்மை எனக்குப் புரிந்தது. கச்சேரி தோற்றால் பழி பாடியவன் பேரில்தான்.