இவனுடைய குடும்பம் பற்றி ஏதாவது கேட்டிருக்கலாமோ என்று தோன்றியது. பழுது பார்ப்பவன் வரும் வேலையில்லை என்றால் இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருக்கலாம். இல்லை இவ்வளவு பேசியதே போதும். ஒரு நிறைவு இருக்கும்போது மேலும் ஏன் பேசவேண்டும். பூக்கடையில் செருப்பை மாட்டும்போது ஏன் அவன் கோவிலில் மேலும் சிறிது நேரம் இருப்பதாக சொன்னான் என்று யோசித்தேன்.
Author: வேங்கட ராகவன் நா
குரங்காட்டம்
கடைசியாக இன்னொன்று என்று சொன்னார் அவர். “வெளியில் சென்று வேலை செய்யும் நிமித்தம் இப்போதைக்கு நிச்சயமாக இருவருக்கு தான். ஒன்று நிலத்தில் இறங்கும் விவசாயி. இன்னொன்று களத்தில் இறங்கும் ஸ்விக்கி ஸ்மோட்டோ டெலிவரி மக்கள். இரண்டுமே உணவுக்காக. ஒன்று ஆதி உற்பத்தி. இன்னொன்று அந்தம். இறுதியில் வயிற்றுக்குள் போக” என்று சொல்லி உரக்க சிரித்தார். எல்லாம் பரிணாம வளர்ச்சி. குரங்கிலிருந்து மனிதன் வந்த அந்த பரிணாம வளர்ச்சிக்கு பிறகு மிக வேக பரிணாம வளர்ச்சி கொரோனா வால்தான் என்று அவர் சொன்னபோது மீண்டும் குரங்குகள் எங்கே என்ற யோசனையோடு வண்டியை எடுத்தேன். .
