பைடனின் ஆட்சிக்காலம்: ஆண்டறிக்கை

நாட்டின் சாலைகள், பாலங்கள், தண்டவாளங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றில் நீண்ட கால மேம்பாடுகளை “பில்ட் பேக் கட்டமைப்பு” திட்டத்துடன் இணைந்து ஆண்டுக்கு சராசரியாக ஒன்றரை மில்லியன்(1,500,000) புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது சாத்தியமா என்பது மில்லியன் டாலர் கேள்வி! இதற்காக ஒரு ட்ரில்லியன் டாலர் உள்கட்டமைப்பு மசோதாவையும் சிரமப்பட்டு இரு கட்சிகளின் ஒப்புதலுடன் நிறைவேற்றியதை பைடன் அரசின் சாதனையாக ஜனநாயக கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள்.

வளர்ந்து வரும் பத்து சிறந்த தொழில் நுட்பங்கள் – 2020

கடந்த இருபது ஆண்டுகளாக, முன்னுதாரணங்கள் சொல்ல இயலாத வகையில், தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள், கணினியில், செயற்கை நுண்ணறிவியலில், உயிரியல் சார்ந்த துறைகளில் காட்டும் வேகம் அளப்பரியது. உலகளாவிய சவால்களை எதிர் கொண்டு ஏற்புடைய தீர்வுகளை அளிக்கும் சாத்தியங்கள் உள்ள இந்த நுட்பங்கள், தவறாகப் பயன்படுத்தப்படுமாயின் என்ன கேட்டினைக் கொண்டு வருமென்றும் சிந்திக்க வேண்டும்.

P.O.T.S – ஒரு மீள் பார்வை

சில ஆண்டுகளாக POTS (Plain Old Telephone System – வெற்று வயோதிகத் தொலைபேசி அமைப்பு) என்ற பெயரால் பரிகசிக்கப்பட்டுவரும் தரைவழித் தொலைபேசி அமைப்பு, அடிப்படையில் முறுக்கு இணை (twisted pair) தாமிரக் கம்பிகள்மூலம் இடையறாது குரல் குறிகைகளை அனுப்புதலாகும். இது 1876-ல் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமாக நிலைத்திருக்கும் தொழில் நுட்பம் .