மூன்று கவிதைகள்

ஒரு கிராமம் நதிக்குள்ளாக ஒரு கல்லைப்போல விழுகிறது
மேலும் நதி தனது திசையை மாற்றிக்கொள்கிறது
அந்நேரத்திலிருந்து அங்கே குன்றிலிருந்து வழியும் நீரினால் உருவான நீரோடை ஒன்று என் வீடிருந்த இடத்தை பிடித்துக்கொண்டது
நான் மூழ்கவில்லை

ஹையரில் அன்வார் கவிதைகள்

இதுதான் வாழ்வு ஆனால்
அது
தோல்வியை தள்ளிப்போடுவது
இளமையினுடைய கட்டுப்பாடற்ற காதலிலிருந்து
உருவாகித் தழைத்த ”அந்நியமாதல்”

இந்தோநேசியக் கவிஞர்-சபார்டி ஜோகோ தமனோ

பருவகாலங்கள் என்னுடைய கண் இமைகளில்
சாம்பலாகப் படிகின்றன
வானத்தின் குறுக்கே முடிவில்லாத
அலைகளின் தெறிப்பைக் கேட்கிறேன்
இங்குதான் தீராத இச்சையும்
ஒளிவு மறைவற்ற உணர்வுகளும் இருக்கின்றன
நட்சத்திரங்கள் ஓய்ச்சலின்றித் தழைக்கின்றன