பள்ளத்தாக்கு மனிதர்கள்

மிக் அந்தக் கரி எண்ணெயைக் காயத்தின் மேல் ஊற்றி காயத்தைச் சுத்தம் செய்தார், பிறகு தன் மேல் சட்டையால் முன்னங்கையைச் சுற்றினார், அதை ஒட்டும் நாடாவால் சுற்றிக் கட்டினார். ஏதோ, தையல் போடத் தேவை இருக்கவில்லை. மிக் இதற்கு முன்பு ஒரு தரம் சுடப்பட்டிருக்கிறார், மூக்கு உடைபட்டிருக்கிறது, விலா எலும்புகள் உடைந்திருக்கின்றன, காலில் ஒரு வெடிகுண்டின் உலோகத் துண்டு எங்கோ புதைந்திருக்கிறது, ஆனால் கழுதைக் கடி இப்போதுதான் முதல் தடவை.

பலகை அடித்த ஜன்னல்

மர்லாக், மர வீட்டைக் கட்டி முடித்தபின், வலிமையுடன் மரங்களைக் கோடரியால் வெட்டி வீழ்த்திப் பயிரிடும் நிலத்தை உருவாக்கிக் கொண்டான்- துணைக் கருவியாகத் துப்பாக்கியும் வைத்திருந்தான். அப்போது அவன் இளமையும் கட்டுடலும் நம்பிக்கை மிக்க எதிர்பார்ப்பும் கொண்டிருந்தான். கிழக்கு தேசத்திலிருந்து வந்தபோதே அவ்வூர் வழக்கப்படி அவனுக்குத் திருமணம் ஆகிவிட்டது.

ஏதோ நடக்கிறதே அங்கிருந்து சில தபால் அட்டைகள்

என்னோடு வாழும் ஆண், வீட்டுப் பூனைகள் போய் விடும், பிறகு திரும்பாது என்று கவலைப்படுகிறார், ஏனெனில் ஒருக்கால் அவருமே அதையே செய்யக் கூடியவர்தான். ஒரு நாள் அவர் எனக்கு லிடியா டேவிஸின் கதை ஒன்றைப் படித்துக் காட்டினார். அதில் கதை சொல்பவர், விவாஹ ரத்து ஆனவர், தன் கணவரின் தொண்டையில் சிக்கிக் கொண்ட ஒரு மீன் எலும்பை நினைவு கூர்கிறார். ப்ரெட்டும் தண்ணீரும் கொண்டு அதை அகற்றச் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை, அவர்கள் பாரிஸ் நகரத்தின் தெருக்களில் வெளிப்படுகிறார்கள், அங்கே அவர்கள் ஒரு மருத்துவ மனைக்கு வழி காட்டி அனுப்பப்படுகிறார்கள்.