பேரழகி ப்யூ

ஹாட்டெ, ஹோன்ஸ்,லெரிஷ், தங்கக் கடிகாரம் அணிந்த வியாபாரிகள், செல்வம் மிகுந்த பயணிகள், விடுமுறையில் வந்திருந்த போர்வீரர்கள், ஷெரிஃப் அலுவலக எழுத்தர்கள் என வெவ்வேறு சமூக அமைப்பைச் சார்ந்த ஆண்கள் எங்கள் தெரு வழியே கால் கடுக்க நடப்பதைக் காண முடியும். சீரான சிகை அலங்காரத்துடன் அன்ன நடையிடும் அந்தப் பேரழகு “தையல் கலைஞர்” நாநாவிடம் அவர்கள் தங்களுடன் நடனமாட, மாலைப் பொழுதைக் கழிக்க என அழைப்பதைக் காண முடியும்.

துள்ளிவரும் வெள்ளலையே!

நதியின் ஓட்டத்தில் எதிர்ப்படும் பாறை நதியின் பாதையை இரண்டாகப் பிரித்தாலும் பாறையைத் தாண்டியபின் ஒன்றாகக் கூடுவதைப்போல் இப்போது பிரிவை எதிர்கொள்ளும் நாமும் பின்னர் ஒன்று சேர்வோம்.

சாய்ந்து அழ ஒரு தோள்

குழந்தைப் பருவத்தில் இருந்த
என் அன்னையை இன்னொரு உலகில் சந்தித்தேன்.
கை கோர்த்து கடற்கரையில் நடந்தோம்.
உலகில் அவள் நேசித்த
அத்தனை விசயங்களையும் ஆர்வத்துடன் பேசினாள்.
ஆயிரம் அங்கதங்கள்

அதிரியன் நினைவுகள் – 37

This entry is part 36 of 36 in the series அதிரியன் நினைவுகள்

இராணுவத் தலைமை அதிகாரிகளோடு, ஏற்பாடு செய்திருந்த கலந்தாய்வுக் கூட்டமொன்றில் என் மூக்கில் இரத்தம் கசிந்தது ; ஆரம்பத்தில் அவ்வளவாக நான் அதைப் பெரிதுபடுத்தவில்லை, ஆனால் இரவு உணவின்போதும் தொடர்ந்து ஒழுகியது ; அன்றிரவு கண்விழித்தபோது இரத்தத்தில் நனைந்திருந்தேன். அருகிலிருந்த கூடாரத்தில்  செலெர் படுத்திருந்தான், அவனை அழைத்தேன்; அவன் என்னுடைய மருத்துவர் ஹெர்மோஜேனெஸிடம் உடனடியாக இப்பிரச்சினையைக் கொண்டுபோனான்,

கேட்டதும் கிடைத்ததும்

இப்பாடலின் ஆசிரியர் முன்பு தனது காதலியின் வெறுப்பைக் குறைக்கப் போதிசத்துவரிடம் வேண்டியிருக்கிறார். ஆனால் அது குறையாமல் வளர்ந்துகொண்டே வருவதைக்கண்டு அடுத்தமுறை இக்கோயிலுக்கு வந்தபோது இப்பாடலை இயற்றினார். வளர்ந்துகொண்டே வரும் காதலியின் கோபத்தை அதிகரித்துவரும் மலைக்காற்றுடன் ஒப்பிட்டுள்ளார்.

அதிரியன் நினைவுகள் – 36

This entry is part 35 of 36 in the series அதிரியன் நினைவுகள்

நம்முடைய  தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஒரு நீண்டகாலப்போரின் பாதிப்பை எதிர்கொள்ள சக்தி இன்றில்லை; நம்முடைய இன்பவிரும்பிகளுக்கு, தற்போது மகிழ்ச்சி கசக்கிறது. ஒழுக்கநெறிகளை எளிமைபடுத்துதலும், சிந்தனைகளில்  முன்னேற்றமும், கடந்தநூற்றாண்டில் நல்லெண்ணங்கொண்ட  சிறுபான்மையினரின் பணியாக இருந்துள்ளது;  இன்றைக்கும் வெகுசனமென்பது அறியாமையில் உழலும் மக்கள்;முடிந்தபோது தங்கள் கடுஞ்சினத்தை வெளிப்படுத்துகிறார்கள்

மேரா பாரத் மகான்

மணாலியில் இருந்து ரோஹ்தாங் பாஸ் வழியாக ‘லடாக் லெஹ்’ செல்லும் மார்க்கம் குளிர் காலத்தில் முழுமையாக பனியால் மூடப்பட்டிருக்கும். பிப்ரவரி மாத இறுதியில் பனியை நீக்கத் தொடங்கி ஏப்ரல் பதினைந்து தேதிக்குப் பிறகு மீண்டும் போக்குவரத்தை அனுமதிப்பார்கள். அதுமட்டுமின்றி, பியாஸ் நாலா வரை டூரிஸ்ட்டுகளை அனுமதிப்பார்கள் அங்கு வரை அனைவரும் வாகனங்கள் மீது சென்றால் தமக்கு வருமானம் இருக்காது

காதல்மொழிகள் கடலலை போலே!

இடைக்கால ஜப்பானிய இலக்கியங்களில் சட்டையின் கைப்பகுதி நனைவது காதலரின் பிரிவால் வாடும்போது உகுக்கும் கண்ணீரை உணர்த்துவது என்றும் அரண்மனைக் காதல்கள் எல்லாம் குறுகிய வாழ்வை உடையவை என்றும் பார்த்தோமல்லவா? போட்டிப்பாடல் பாடியவர் தனது செயலுக்குக் கடலலையை உவமையாகக் காட்டியதால் இவரும் இப்பாடலில் அத்தகைய பிரிவைக் கடற்கரையில் உடையை நனைக்கும் அலையுடன் இணைத்துப் பாடியிருக்கிறார்

காட்டுப்பன்றி இலச்சினையை நாட்டுப் பன்றியெனத் தவறாகப் புரிந்துகொண்டு…

This entry is part 34 of 36 in the series அதிரியன் நினைவுகள்

காட்டுமிராண்டியான  மித்திரா(Mithra)வுக்குத் தான் அப்பல்லோ கடவுளின் சகோதரர் என்கிற நினைப்பு உண்டு. ஒரே தெய்வமென்கிற கருத்தியத்தின்  குறுகிய எல்லைக்குள் உண்மையை முழுமையாகப்  பூட்டிவைத்து, அனைத்துப் பண்பையும் உள்ளடக்கிய கடவுளின் பன்முகத்தமையை அவமதிக்கும் ஆணவம் இஸ்ரேலியரிடம் மட்டுமே இருந்தது, இதனை உலகில் வேறுமக்களிடம் காணமுடியாது; 

டெர்மினல்

ட்ராமின் ஜன்னல் கம்பிகளின் மீது கனத்த போர்வை போல தூசு படிந்திருந்ததில் நடைபாதையில் இருந்த மரம், விளக்குக் கம்பம் மற்றும் தெருவில் சென்று கொண்டிருந்த மனிதர்கள் எல்லாம் ஏதோ பழைய படத்தின் மீது படிந்திருக்கும் அழுக்கைப் போல வழுக்கியபடி மங்கலாகக் காட்சியளித்தார்கள். ஒவ்வொரு நிறுத்தத்திலும் சில பயணிகள் இறங்கினார்கள். நடத்துநர் மணி கட்டப்பட்டிருந்த கயிற்றை இழுக்கும்போதெல்லாம் ட்ராம் விக்கலுடன் முன்னால் சென்று நின்றது.

குமார சம்பவம் மஹா காவ்யம்

ஈசனின் பிரிய பத்னியாக அவருடைய மடியில் அமர ஏதுவாக இருக்கவே என்பது போல இடை பாகமும் பின்னழகும் விளங்கின. அடுத்து அழகிய நாபியும், அதைச் சுற்றி ரோம ராசியும், மேகலையில் பதித்த மணி போலவும், வளித்ரயம் என்ற கோடுகள், அழகிய ஸ்தனங்கள், உத்பலம் போன்ற கண்கள் என  ஒவ்வொரு அங்கமும் யௌவனம் வந்து விட்டதை பறை சாற்றின போலும்

இரத்தம் வரும்வரைத் தனதுடலைச் சொறிந்துகொள்ளும்…

This entry is part 33 of 36 in the series அதிரியன் நினைவுகள்

சமீபத்தில் கப்படோசியாவின் ஆளுநராக நியமிக்கப்பட்ட அர்ரியன் சமர்ப்பித்த அறிக்கை, காஸ்பியன் கடலோரமுள்ள சிறு இராச்சியத்தை ஆண்டுகொண்டிருந்த பராஸ்மன்ஸ்(Pharasmanès) மீது குற்றம் சாட்டியிருந்தது. இவர், மன்னர் திராயான் காலத்தில் உரோமானிய அரசுக்கு விசுவாசமாக இருக்கத் தவறி, பெரும் இழப்பை ஏற்படுத்தியிருந்தார் ; அதைத் தற்போதும் தொடர்வதாக அறிக்கை தெரிவித்தது.

உள்ளும் புறத்தும் தனிமையே!

தனிமையின் வெறுமையை விளக்கும் இன்னோர் எளிய பாடல். இத்தொடரில் பல பாடல்கள் தனிமை குறித்தனவாக இருக்கின்றன. பல பாடல்கள் துணையைப் பிரிந்த காதல்வலியையும் சில பாடல்கள் காதல் குறித்த சுட்டலின்றித் தனிமையை மட்டும் குறிக்கின்றன.

குங்கும பரணி

தேடல், பரிசோதனை இரண்டும் வேறுவேறானவை. புதிதாக ஒன்றை அறிவது தேடல். ஏற்கெனவே இருந்து மறைந்தவற்றை மீண்டும் கண்டுபிடிப்பது பரிசோதனை. இரண்டும் வேறுவேறான செயல்கள். இதுவரை யாரும் கண்டுபிடிக்காததை, யாரும் இதுவரை தொடாத ஒன்றை ஆராய்ந்து தெரிவிப்பது மனித இனத்திற்கு நவீன வெளிப்பாடாக இருக்கும்

துக்காராம் கவிதைகள்

எல்லா மனிதர்களும்
எனக்கு கடவுளைப் போன்ற
கடவுளர்கள்!
இனியும் என் கண்களுக்கு
தெரியாது குற்றமும் தவறும்.
இத் துயரமான உலகில் வாழ்க்கை இப்போது முடிவில்லா மகிழ்ச்சி;

வரிசையில் ஒரு சிநேகம்

தன் வாழ்க்கையைப் பற்றி இன்னும் கூட ஏதோ சொல்லிக் கொண்டே போனாள் தபலேய். இருவரும் தங்களுக்குள் ஏதேதோ பேசிப் பகிர்ந்து கொண்டிருந்தனர். பின்னால் நீண்டு தொடர்ந்து போய்க் கொண்டிருந்த வாகன வரிசையின் மீதும் ஒரு கண் வைத்தபடியேதான் இருந்தாள் சகி.  இன்னும் நிறையப் பேர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கக் கூடும் என்றே அவளுக்குத் தோன்றியது.

குடியுரிமை 150 டன் எடைத் தொன்னில்

தோட்டாக்கள் துளைத்து இடிந்து போன சுவரின் மறைவில் சிறிதுகாலம் முன்புதான் யாரோ பயன்படுத்தியிருந்த தரையில் நான் சிறுநீர் கழித்தேன். பாதி அழிந்த ஒரு அரிசிமாவுக் கோலம் இருந்தது. அதன் மீது படிந்திருந்த கறை அநேகமாக இரத்தமாகத் தான் இருக்கவேண்டும். அதன் மீது போக சங்கடப்பட்டு சிறிது நேரம் தயங்கியதும் ‘சீக்கிரம்’ என துரிதப்படுத்தினார் கணவர். இடம் மாறி அமரக்கூட அவர் அனுமதிக்கவில்லை. இடிந்த சுவர்களுக்கும் ஜன்னல்கள் கழன்ற இடைவெளிகளுக்கும் ஊடாக வெளியே இருந்து பார்த்தால் தெரியாத அப்படியான ஒரு மறைவிடம் வேறு இருக்கவில்லை.

குவாரண்டீன்

உயரத்தில் தீச்சுவாலைகள் மாலை நேரத்தின் ஆரஞ்சு நிறம் கலந்த அடிவானத்துடன் கலக்கும் போது, இன்னும் அரைகுறை உயிருடன் இருந்த நோயாளிகள், ஏதோ உலகமே தீப்பற்றி எரிகிறதோ என்று நினைத்தார்கள். குவாரண்டீன் இப்படி மேலும் பல மரணங்களுக்குக் காரணமாக இருந்தது. ஏனென்றால் வலுக்கட்டாயமாக குவாரண்டீன் மையத்தில் அடைக்கப்படும் அச்சத்தினால் மக்கள்  தங்கள் நோயின் அறிகுறியை யாருக்கும் சொல்லாமல் மறைக்கத் தொடங்கினார்கள்.

விழியிலிருந்து நினைவுக்கு

கவிஞர்களை இரு வரிசைகளில் எதிரெதிரே அமர்த்தி இருவர் இருவராகக் கவிதைகள் புனைந்து சிறந்த கவிதையைத் தேர்ந்தெடுக்கும் முறை இருந்தது. கவிஞர் யுய்யே எழுதிய பாடலுக்குப் போட்டியாகப் புனையப்பட்ட இப்பாடல் பரிசை வென்றது. இரு பாடல்களும் உதிர்ந்து கிடக்கும் செந்நிற மேப்பிள் இலைகள் அவ்விடத்தை அழகுபடுத்துவதாகப் புனையப்பட்டவைதான்.

அதிரியன் நினைவுகள் – 33

This entry is part 32 of 36 in the series அதிரியன் நினைவுகள்

ஏதென்ஸின் அரசியல் சாசன வித்தகரான  கிளிஸ்தனீஸின்(Clisththenes) பழைய குடியரசு அரசியல்  சட்டங்களைத் திரும்பக் கொண்டுவந்ததாக அதைக் கருதமுடியும். அரசு ஊழியர்களின் எண்ணிக்கைக் குறைப்பு, அரசாங்கத்தின் பொதுச் செலவு சுமைகளைக் குறைக்க உதவியது; நிலக்குத்தகை வரியைத் தடைசெய்தேன் ; பெரும் கேட்டினைத் தரக்கூடிய இவ்வரிமுறை துரதிஷ்ட வசமாக இன்னமும் ஒரு சில உள்ளாட்சி நிர்வாகங்களில் பயன்பாட்டில் இருந்தது.  அக்காலக்கட்டத்திலேயே பல்கலைக் கழங்களுக்கு அடிக்கல் நாட்டியதும், நிறுவியதும் ஏதென்ஸ் நகரை ஒரு முக்கியக் கல்வி மையமாக மாற்ற உதவியது.

அதிரியன் நினைவுகள் – 32

This entry is part 31 of 36 in the series அதிரியன் நினைவுகள்

எலியூசிஸில் எனக்குத் தீட்சையளித்த  பூசாரிப் பெண்மணியுடன் பலமுறை « ஆண்ட்டினூஸ் வழிபாட்டுமுறைகள் » ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியாக விவாதித்து விவரங்கள் உறுதிப்படுத்தப்பட்டன;  அப்பெண்மணியின் பெயர் பற்றிய ரகசியம் காக்கப்படவேண்டும் என்பதால், இங்கே அதைக் குறிப்பிட விருப்பமில்லை. எலியூசிஸ் நகரில் மிகச் சிறந்த குறியீடுகளெனக் கருதப்பட்ட  ஒவ்வொன்றும்  தொடர்ந்து எனக்கு அமைதியைப் பருக வாய்ப்பளித்தன. இவ்வுலகு பொருளற்றது 

எனக்கெனவே மலர்ந்தாயோ?

அந்நாளில் புத்தமதத் துறவிகள் பிரார்த்தனையின்மூலம் நோய்களைக் குணப்படுத்துவதற்காகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வார்கள். அதன் ஒரு பகுதியாகப் பல ஆண்டுகள் தொடர்ந்து மனிதர்களையே காணக்கூடாது. இப்பயிற்சி பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டதில்லை.

 எல்லாவற்றையும் மறந்து விடுவதான பாவனையில்

ஏற்கனவே விடிந்துவிட்டது
புத்தரின் பூஜை மேடையின் முன்
கொஞ்சம் சிந்திய அரிசி

பனிவிலகலில் அக்கரை வெண்மை

இந்த நதியின் கரையில் அஜிரோகி என்றொரு வகையான மூங்கில் செடிகள் வளர்கின்றன. மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்படும் முன் இம்மூங்கிலின் பட்டைகளைச் சிறிது இடைவெளியுடன் முறம்போல் பின்னி ஜப்பானியர்கள் மீன்பிடிக்கப் பயன்படுத்தி வந்தார்கள் என்ற தகவலை இப்பாடல் தன்னகத்தே கொண்டுள்ளது.

அதிரியன் நினைவுகள் -31

This entry is part 30 of 36 in the series அதிரியன் நினைவுகள்

கல்லறைக்கான இடத்தை தேர்வுசெய்வதில் எனக்கு இன்னமும் தயக்கமிருந்தது. நாடெங்கும் இறந்தவனுக்காக,  அவனைத் தெய்வ நிலைக்கு உயர்த்தும் சடங்குகள் ; இறுதிச்சடங்கினை முன்னிட்டு விளையாட்டுகள், நினைவு நாணயங்களை அச்சிடுதல், பெதுவெளிகளில் சிலைகளை வைத்தல் முதலான ஏற்பாடுகளுக்கு உத்தரவிட்டபோது, ரோம் நகருக்கு மட்டும் விதிவிலக்களித்தேன் ;  காரணம்,    ரோமுக்குச்  சொந்தமில்லாத மனிதர்களைப் பிரியத்துக்கு உகந்தவர்களாகக் கொண்டாடுகிற எந்தவொன்றும் நகரில் பகையை அதிகரிக்கும் என்கிற பயம் எனக்கிருந்தது. அன்றியும், இக்கல்லறைக்கு நிரந்தரமாக காவலிருக்க என்னாலும் ஆகாது.

வேட்டை நாய்

முதுகிலும், கைகளிலும் பட்டிருந்த காயங்களின் வலிக்கடுமை பிரெலைப் பாதித்துக் கொண்டிருந்தது.  அவர்கள் அவனை வலுவாகத் தாக்கி அடித்துப் போட்டுவிட்டுப் போயிருந்தார்கள்.  அவனோ ஒரு முட்டாளைப்போல் இங்கே நின்று கொண்டு தன் பிரச்சினைகளுக்கு மிக எளிதான ஒரு பதிலை யோசித்துக் கொண்டிருக்கிறான்.  தனது அம்மாவும் தங்கையும் வாத்துகளை விட  முக்கியமில்லாதவர்களாக மாறிவிட்டிருக்கிறார்களா என்ன?

காவலும் தாண்டுவது காதல்

இசே கோயிலினுள் கடுங்காவல் வைக்கப்பட்ட காதலி மசாகோவுக்கு வெளியிலிருந்து இப்பாடலைத் தூதாக அனுப்புகிறார். எப்படி அனுப்பினார் என்ற விவரங்கள் தெரியவில்லை. கடைசியாக ஒருமுறை பார்க்க இயலாவிட்டால் நான் இறந்து விடுவேன் என்று இளவரசிக்கு உணர்த்தும் இப்பாடல் இடையில் வேறொருவர் கையில் கிடைத்துவிட்டால் என்ன செய்வது?

அதிரியன் நினைவுகள் -30

This entry is part 29 of 36 in the series அதிரியன் நினைவுகள்

அக்கறையுள்ள ஒரு தொழிலாளி உன்னத படைப்பொன்றை  மிகுந்த கவனத்துடன் நகலெடுப்பது போல, மூர்க்கத்துடன் என் நினைவிலிருந்து, எவ்வ்த ஒழுங்கிற்கும் இணக்கமற்ற அவனுடைய துல்லிய வடிவை உயர்ந்த அவனுடைய மார்பை கவசம் போல உருவாக்க முனைந்தேன், ஆனால் கண்ட பலன் பூஜ்யம். சிற்சில சமயங்களில் படிமங்கள், காட்சிகள் தானாக வெளிப்படும்; அப்படியொரு சூழல், இனிமை வெள்ளத்தில் மிதந்தேன்;

இடம் மாறினும் மணம் மாறுமா?

அதிர்ச்சியுற்ற இவர் துணிந்து உடனடியாக சக்குராவின் எட்டடுக்குகளை அரண்மனையின் ஒன்பதடுக்குகளுடன் இணைத்து இப்பாடலை இயற்றி அனைவரது பாராட்டையும் பெற்றார். தலைநகரானது ஒன்பதடுக்குப் பாதுகாப்பால் சூழப்பெற்றுள்ளது என்றும் அரண்மனை ஒன்பது வாயில்களைக் கொண்டுள்ளது என்றும் இருவிதமாகப் பொருள்கொள்கிறார்கள்.

அதிரியன் நினைவுகள் -29

This entry is part 28 of 36 in the series அதிரியன் நினைவுகள்

சூரியன் மேற்கில் மறையும் நேரம், கடைசி  நீர்த்தேக்கத்தின் விளிம்பில், ஷப்ரியாஸ் மடித்த  ஆடையொன்றையும், மிதியடிகளையும் பார்த்தார். வழுக்கும் படிகளில் நானும் இறங்கினேன். சேறு மூடிய உடல் நீரின் அடியில் படுத்திருப்பதுபோல நதியில் கிடந்தது. உடலை எடுத்தபோது பாறாங்கல்போல திடீரென்று கனத்த பேதிலும் ஷப்ரியாஸ் உதவியுடன் உடலைத் தூக்க என்னால் முடிந்தது.   அவர் படகோட்டிகளை கூவி அழைத்தார், அவர்களும் கிடைத்த துணியைக்கொண்டு ஒரு தூக்குப் படுக்கையை உருவாக்கியிருந்தார்கள்

புல்வெளியில்

பட்டுடைகளுடன் ஆரம்பம்; வானத்துக்கு எதிராக
எண்ணிக்கைகள் மற்றும் சிறுகுடைகள்: வெளியில்
விமானப்படையை ஒத்தக் காலி வாகனங்களின் அணிவகுப்பு, வெப்பம்,
மற்றும் குப்பைக் கூளமாகப் புல்வெளி: அதன்பின் அந்த நீண்ட ஆரவாரம்
அமைதியற்று அலைந்து, மெல்ல மெல்ல அடங்க –
தெருவெங்கும் பத்திரிகையாளர்கள்

நிலவினும் நெடிது!

மனைவியின் வீட்டுக்குக் கணவன் இரவில் மட்டும் வந்து செல்வது வழக்கமாக இருந்த காலத்தில் ஒவ்வொரு இரவும் கணவன் தம் வீட்டுக்கு வருவாரா அல்லது வேறொரு மனைவியின் வீட்டுக்குச் சென்றுவிடுவாரா எனப் பெண்கள் தவித்திருப்பார்கள். கணவன் வரும்போது கொண்டுவரும் பரிசுப்பொருட்கள் அப்பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருப்பவை.

லோர்க்கா கவிதைகள்

நான்கு நிலவுகள் தகிக்கும் இரவு
ஒரே ஒரு மரம்
அதன் ஒரே ஒரு நிழல் அங்கே ஒரே ஒரு பறவை.
உன் உதடுகளின் வழித்தடத்தை
என் தேகத்தில் தேடுகிறேன் காற்றை தீண்டாமல் முத்தமிடுகிறது
நீர் தாரை

ஒருமுறை வந்து பாராயோ?

நிலவொளியை ரசித்துக் கொண்டிருந்தபோது நாம் தற்செயலாகச் சந்தித்தோம். ஆனால் உன்னை நான் கண்டுணர்வதற்குள் நிலவு மேகத்துக்குள் ஓடி மறைந்ததுபோல் சென்றுவிட்டாய்.

அதிரியன் நினைவுகள் -28

This entry is part 27 of 36 in the series அதிரியன் நினைவுகள்

இருபத்தாறு வயதில், உரோம் நகர வீதிகளில், வியப்புக்குரிய அவர் அழகை இளைஞர்கள் கொண்டாடியதுண்டு, அந்த அழகில் கிட்டத்தட்ட எதையுமே அவர் இழந்தவரில்லை. தொடர்ந்து அபத்தம், முரண்பாடுகள்,  மகிழ்ச்சி என்று வாழ்நாளை கழித்த மனிதர். அந்நாட்களில் அவரிடம் கண்ட சுயநலம் இன்று முற்றியிருந்தது. பயணம் மேற்கொள்கிறபோதெல்லாம் தனது தலைமை சமையற்காரரை உடன் அழைத்துசெல்வார்; அவரது தோட்டக்காரர்கள் கப்பலில் கூட அவருக்காக, அரிய மலர்களைக் கொண்டு வியக்க வைக்கும் படுக்கைகளை உருவாக்கினார்கள்

தேவாலயம் செல்லுதல்

ஆயினும் நான் நின்று பார்க்கிறேன்: உண்மையில் அடிக்கடி செய்கிறேன்,
ஒவ்வொரு முறையும் ஒருவித இழப்பில் முடிகின்றது இதே போல,
எதைப் பார்ப்பது என வியக்கிறேன்; மேலும், வியக்கிறேன்
எப்போது தேவாலயங்கள் முழுமையாகப் பயனற்றுப் போகும் என,
அவற்றை என்னவாக நாம் மாற்றப் போகிறோம் என

அதிரியன் நினைவுகள் – 27

This entry is part 26 of 36 in the series அதிரியன் நினைவுகள்

காதல், உடலைப் பிரிந்த ஒரு ஆன்மாவை மீண்டும் பூமிக்குக் அழைத்து வந்து, தற்காலிகமாக அதற்கு ஒரு உடலைக் கொடுப்பதாகும். அளவில் வேறுபாடுகள் இருப்பினும் இக்கதையின் ஆழம் எங்கள் மனதை நெகிழச் செய்தது.  எங்களில் அனேகர் இக்கதையை ஒத்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்பினர் : சத்தீரஸ் தனது குரு  நாவன்மை படைத்த அஸ்பாசியஸை (Aspasius) நினைவு கூர்ந்தார் (இவர் சிஷ்யருக்கு சில வாக்குறுதிகளை அளித்திருந்தார்

நெஞ்சம் மறப்பதில்லை

மேலோட்டமாகப் பார்க்கும்போது நீர்வீழ்ச்சியைப் போற்றும் பாடலாகத் தெரிந்தாலும் புலவரின் சொந்த வாழ்க்கையுடன் பொருத்திப் பார்க்கும்போது வேறுபொருள் புலப்படுகிறது. புலவரின் மகள் இறந்தவுடன் அரசவைப் பதவியைத் துறந்து துறவு வாழ்க்கை வாழத் தொடங்கினார் என்பது அவரது மகள்மீது வைத்திருந்த அதீத அன்பை வெளிப்படுத்துகிறது. நீர்வீழ்ச்சியை வாழ்க்கையாகவும் அதன் நீரை மகிழ்ச்சியாகவும் புகழை நினைவாகவும் உருவகித்தால்…

அதிரியன் நினைவுகள் -26

This entry is part 25 of 36 in the series அதிரியன் நினைவுகள்

மார்க்-ஆண்ட்டனிக்கு அவருடைய இறுதி  யுத்தத்திற்கு முன்பாக சில சகுனங்கள் தோன்றின அதுபோல அன்றைய இரவும், காவல் தெய்வங்கள் பணிநேரம் முடிந்து விடைபெறும்போது ஒலிப்பவை என சொல்லப்படுகிற  இசை மெல்லமெல்ல விலகிச்செல்வதைக் காதில் வாங்கினேன்… ஆனால் அதை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளத் தவறினேன்.

வாள்போல் வைகறை

ஜப்பானிய அரசகுடும்பத்தின் திருமணங்கள் பெரும்பாலும் பலதாரமணங்களாகவே இருந்தன. அரசியல் காரணங்களும் அடங்கும். பெண்ணின் தந்தையும் அரசரும் சேர்ந்து இதை முடிவு செய்வார்கள். மணமுறிவுகளும் அதிகம் இருந்தன. அதிகச் சிக்கல் இல்லாத முறிவுமுறையும் வழக்கத்தில் இருந்தது.

அதிரியன் நினைவுகள் -25

This entry is part 24 of 36 in the series அதிரியன் நினைவுகள்

இத்தகைய தருணத்தில் ஒழுக்கவாதிகளுக்கு என்னை வெற்றிகொள்ள ஓர் எளிதான வாய்ப்பு கிடைத்தது. நான் படும் இன்னல்களுக்கு, என்னுடைய மிதமிஞ்சியபோக்கும், நெறிமுறைகளில் நான் இழைத்த தவறுகளும் காரணம் என்பது என்னை விமர்சிக்கும் மனிதர்களின் குற்றசாட்டு. ஆனால் எனக்கோ நெறிமுறைகளில்தவறுதல், மிதமிஞ்சியபோக்கு என்பதெல்லாம்  கடினமான விஷயங்கள், அத்தகைய சிரம்ங்கள், அவர்கள் கருத்திற்கு  முரண்படும் விஷயத்திலும் இருந்தன. எனது குற்றத்தை, அப்படியொன்று உண்டெனில், கூடுதல் குறைவின்றி திரும்ப பரிசீலிக்க விருப்பம். இக்காலத்தில், தற்கொலை என்பது அடிக்கடி நடக்கும் சம்பவம், அதிலும் இருபது வயதில் இறப்பது பரவலாக நிகழ்கிறது.

வலிவிடு தூது

இப்பாடலில் சில சொற்கள் இரட்டுற மொழிதலாகப் (சிலேடையாக) பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, えやはいぶき என்ற சொல்லின் இறுதியில் வரும் いぶき என்பதற்கு இயூபெக்கி – சொல்ல வேண்டியது என்றும் இபுக்கி – மலையின் பெயர் என்றும் இருபொருள் கொள்ளலாம். சஷிமொ என்ற சொல் மூன்றாம் அடியிலும் நான்காம் அடியிலும் இருவேறு பொருள்களில் பயின்று வந்துள்ளது.

அதிரியன் நினைவுகள் – 24

This entry is part 23 of 36 in the series அதிரியன் நினைவுகள்

இக்காட்சியை குறைத்து மதிப்பிடாமலிருக்கக் கடுமையாகப் போராடினேன்.  இன்றைக்கும்  எண்ணிப் பார்க்கிறபோது அந்நினைவு எத்தனை வலிமையானது என்பதை உணர்கிறேன். பெரும்பாலான மனிதர்களைக் காட்டிலும் மிகவும்  நேர்மையான மனிதன் நான், எனவே  இம் மகிழ்ச்சிக்கான ரகசிய காரணங்களை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறேன்: மனதின் செயல்பாடுகள் மற்றும் ஒழுக்கங்களுக்கு மிகவும் ஏற்ற இந்த அமைதி, அன்பின் மிக அழகான விளைவுகளில் ஒன்றாக எனக்குத் தோன்றுகிறது

ஜப்பானிய பழங்குறுநூறு 47-50

னித மனங்கள் வேண்டுமானால் மாறலாம் ஆனால் இயற்கை எப்போதும் மாறுவதே இல்லை என்று பார்த்தோம். அதேபோன்ற கருத்தை உடைய பாடல் இது. ஜப்பானிய இலக்கியங்களில் இலையுதிர்காலம் தனிமையின் குறியீடு என்பதைக் கண்டோம். இப்பாடலில் இலையுதிர்காலம் வந்தது என்பதைத் தனிமை சூழ்ந்தது என்னும் பொருளிலும் பொருத்திப் பார்க்கலாம்.

மொழியும் மண்ணும்

அவனுக்கு அனைத்துமே மிகப் பெரிதெனத் தோன்றியது.
அவன் அன்னையின் மார்பு,
எருது வெளியிடும் வெப்ப மூச்சு,
மூன்று சிறந்த ஞானிகளான கேஸ்பர், பால்தாஸர், மெல்கியர், ஆகியோர்
சிறிது திறந்த கதவின் அருகே குவித்த பரிசுகள்.

அதிரியன் நினைவுகள் -23

நட்பின் அடிப்படையில் அமைத்துக்கொண்ட எனது சந்திப்புகளில் விலைமதிக்கமுடியாததென்று ஒன்றிருக்குமானால் அது நிகோமீடியாவைச் சேர்ந்த அர்ரியன்(Arrian) என்பவருடன் ஏற்பட்ட சந்திப்பு. சுமார் பன்னிரண்டு வருடங்கள் என்னைக்காட்டிலும் வயதில் சிறியவர், இருந்தும் அந்த இளம் வயதிலேயே அரசியல், இராணுவம் இரண்டுதுறையிலும் சாதித்து தொடர்ந்து தமது கௌவுரவத்தை உயர்த்திக்கொள்ளும்வகையில் பணியாற்றி வந்தார்

என் குழந்தைகளின் புகைப்படங்கள்

‘‘எங்கேதான் இருப்பாங்க அவங்க? ஏன் இவ்வளவு நேரம் ஆகுது? வெளியே போயிட்டா போதும், எப்ப திரும்பி வரணுங்கிறதே அவருக்குத் தெரியாது’ என்று கணவரை மனதுக்குள் குறை சொல்லிக் கொண்டிருக்கிறாள் அவள்.  எண்ணெய் விளக்கை ஏற்றி வைத்தபடி கதவருகே உட்கார்ந்து அவர்கள் எப்போது வருவார்கள் என்று தன் விழிகளால் துருவிப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

டோமஸ்  டிரான்ஸ்டிராமரின் ஹைக்கூ கவிதைகள்

கடையிலிருந்து வரும் சப்தமும்  

கண்காணிப்புக் கோபுரத்தின் கனத்த காலடிகளும்

காட்டைக் குழப்புகின்றன

இறுதி சல்யூட்

தங்கள் கிராமத்தைப் பற்றியும், இருவரும் சேர்ந்து விளையாடிய குழந்தைப் பருவ விளையாட்டுக்கள் பற்றியும், பள்ளியில் பரிமாறிக் கொண்ட கதைகள் பற்றியும், 6/9 ஜாட் ரெஜிமெண்ட் பற்றி, அதன் தலைமை அதிகாரிகள் பற்றியும், விசித்திரமான பல நகரங்களில் அவர்கள் இருவரும் ஒன்றாகப் போய் உறவு கொள்ள நேர்ந்த விசித்திரமான பெண்கள் பற்றியும் பேசிக்கொண்டே இருந்தான். இடையில் கடுமையான வலியால் பேசுவதை நிறுத்தி உரக்கக் கதறினான்.

அதிரியன் நினைவுகள் -22

This entry is part 22 of 36 in the series அதிரியன் நினைவுகள்

அந்த முகம் அழகானது, அதில் எவ்வித ஒளிவுமறைவுமில்லை, இருந்தும் அதைப் பற்றி நான் இதுவரை எதுவும் சொல்லாததற்கு, முற்றிலுமாக தன்னை  அவனிடம் இழந்திருந்த மனிதனொருவனின் தயக்கமாக இதனை பார்க்கக்கூடாது. எவ்வளவு தீவிரமாக தேடினாலும், நாம் தேடுகின்ற முகங்கள் நமக்குக் கிடைப்பதில்லை, தப்பிவிடுகின்றன, அப்படித் தேடி  அலுத்து கிடைத்த கணமொன்றில் கண்டதே அவனுடைய முகம்: கருத்தடர்ந்த தலைமுடியின் கீழ் சாய்வாக ஒருதலை, அதில் கண்ணிமைகளுக்கு இசைவாக நீண்டும், வளைந்துமிருக்கும் விழிகள், இளம் முகமோ அகன்று, அவ்விழிகளுக்கென்று அமைந்ததுபோலவும் இருக்கும்