குமார சம்பவம் மஹா காவ்யம் – 2

பகவானே! நீங்கள் சொன்னது சரியே. எங்களை பொறுப்பு கொடுத்து பதவிகளில் அமர்த்தினீர்கள். அவைகளை எதிரிகள் அபகரித்துக் கொண்டு விட்டனர்.  ஒவ்வொரு உயிரிலும் உங்கள் ஆத்மா உள்ளதே, எப்படி இது வரை நீங்கள் அறியாமல் இருந்தீர்கள்.  உங்களிடம் வரம் பெற்றவன் தான் தாரகன் என்ற அசுரன். மூவுலகையும் ஆட்டி வைக்கும் தூம கேதுவாக வளர்ந்து விட்டான்.  அவன் செய்யும் உபத்ரவம் தாங்க முடியவில்லை.

குமார சம்பவம் மஹா காவ்யம்

ஈசனின் பிரிய பத்னியாக அவருடைய மடியில் அமர ஏதுவாக இருக்கவே என்பது போல இடை பாகமும் பின்னழகும் விளங்கின. அடுத்து அழகிய நாபியும், அதைச் சுற்றி ரோம ராசியும், மேகலையில் பதித்த மணி போலவும், வளித்ரயம் என்ற கோடுகள், அழகிய ஸ்தனங்கள், உத்பலம் போன்ற கண்கள் என  ஒவ்வொரு அங்கமும் யௌவனம் வந்து விட்டதை பறை சாற்றின போலும்