- ஜப்பானியப் பழங்குறுநூறு
- துயரிலும் குன்றா அன்பு
- உனக்காக உறைபனியில்
- நீ காத்திருக்கப் பொறுக்கிலேன்
- கடவுளும் காணா அதிசயம்
- கனவிலேனும் வாராயோ?
- எத்தனை காலம்தான் தனித்திருப்பேனோ?
- உயிரையும் தருவேன் உனைக்காண
- நீ வருவாயென!
- மலைவளி வீழ்த்து தருக்கள்!
- துயர் கூட்டும் நிலவு
- செவ்விழையினும் உயர்ந்த செவ்விலை
- ஊற்றுநீர் அன்ன தூய இதயம்
- குளிரில் தனிமை கொடிது
- வெண்பனியா வெண்மலரா?
- பிரிவினும் உளதோ பிரிதொன்று?
- நிலவு ஒரு பனியாகி
- மலையாற்றின் இலையணை
- சக்குராவின் சலனம்
- நீண்ட வாழ்வே சாபமோ?
- மனித மனமும் மலர் மணமும்
- கோடைநிலா எங்கே?
- புல்நுனியில் பனிமுத்து
- கொடிவழிச் செய்தி
- இறை நின்று கொல்லுமோ?
- காணும் பேறைத் தாரீரோ?
- சொல்லாத காதல் எல்லாம்
- காதல் மறைத்தாலும் மறையாதது
- காற்றினும் கடியது அலர்
- மறவேன் பிரியேன் என்றவளே!
- காதல்வலி விதைக்கும் வெறுப்பு
- தேடலும் மறத்தலும்
- ஜப்பானிய பழங்குறுநூறு 47-50
- வலிவிடு தூது
- வாள்போல் வைகறை
- நெஞ்சம் மறப்பதில்லை
- நிலவினும் நெடிது!
- இடம் மாறினும் மணம் மாறுமா?
- காவலும் தாண்டுவது காதல்
- பனிவிலகலில் அக்கரை வெண்மை
- எனக்கெனவே மலர்ந்தாயோ?
- விழியிலிருந்து நினைவுக்கு
- உள்ளும் புறத்தும் தனிமையே!
- காதல்மொழிகள் கடலலை போலே!
- கேட்டதும் கிடைத்ததும்
- துள்ளிவரும் வெள்ளலையே!
- இடம்பெயரும் புள்ளினங்காள்!
- மைக்குழற் செறிவன்ன காதல்
- துயரறுத்தலே துயரமோ?
- உள்ளத்தில் உள்ளேனா?
- தூவானமும் வெண்வானமும்
- ரகசியமானது காதல்
- உடைகளும் சுமையடி தனிமையிலே!
- காலமென்ற தேரே, ஓடிடாமல் நில்லு!
- துன்பம் போக்குவதே தூயப்பணி
- எரிதழல் உள்ளம்
- துயர்சூழ் உலகில் தனிமை

மூலப்பாடம்:
கான்ஜி எழுத்துருக்களில்
もろともに
あはれと思へ
山桜
花よりほかに
知る人もなし
கனா எழுத்துருக்களில்
もろともに
あはれとおもへ
やまざくら
はなよりほかに
しるひともなし
ஆசிரியர் குறிப்பு:
பெயர்: மதகுரு க்யோசொன்
காலம்: கி.பி 1055-1135.
இவர் தனது 10 வயதில் தந்தையை இழந்து 12 வயதில் துறவியானவர். மிக்யோ எனும் புத்தமதப் பிரிவில் சேர்ந்த இவர், தற்போதைய ஷிகா மாகாணத்தின் ஓமினே மற்றும் குமானோ மலைத்தொடர்களில் ஷூகெந்தோ எனப்படும் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார். பல ஆண்டுகள் தொடர்ந்த பயிற்சிக்குப் பின்னர் தெந்தாய் என்ற புத்தமதப் பிரிவுக்குத் தலைவரானார். பேரரசார் டோபா அரியணை ஏறியபோது அரசவையின் தலைமை மதகுருவாக நியமிக்கப்பட்டார். அரசவையில் சிலருக்குத் தீர்க்கமுடியாத சில நோய்களைப் பிரார்த்தனைகளால் குணப்படுத்தியதால் மிகவும் புகழ்பெற்றார். அரசவையிலிருந்து ஓய்வு பெற்றபின்னர் கவிஞராக வாழ்க்கையைத் தொடர்ந்தார். தனது 81வது வயதில் இறந்தார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 48 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.
பாடுபொருள்: தனிமைக்குத் துணையாதல்.
பாடலின் பொருள்: ஏ! அழகிய சக்குரா மலரே! என் தனிமையைப் போக்கவே நீ வந்தாயோ? உனக்கு யாரும் துணையில்லாமல் தனிமையில் பூத்திருப்பதுபோல் எனக்கும் யாரும் துணையில்லை.
இயற்கையை வியக்கும் ஓர் எளிய பாடல். அந்நாளில் புத்தமதத் துறவிகள் பிரார்த்தனையின்மூலம் நோய்களைக் குணப்படுத்துவதற்காகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வார்கள். அதன் ஒரு பகுதியாகப் பல ஆண்டுகள் தொடர்ந்து மனிதர்களையே காணக்கூடாது. இப்பயிற்சி பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டதில்லை. ஓமினே மலைத்தொடரில் தனிமையில் கடுமையான பயிற்சிக்கிடையில் ஓய்வு தேவைப்படும் நேரத்தில் திடீரென்று ஒரு காட்டுப்பூ கண் சிமிட்டினால் ஏற்படும் புத்துணர்ச்சியால் இயற்றப்பட்டது இப்பாடல் என்று கூறுகிறார்கள். யாரும் காணாத அழகு தன் கண்களுக்கு மட்டும் விருந்தாகிறதே என்ற உணர்வு நிச்சயம் புத்துணர்ச்சியைத்தான் தரும்.
வெண்பா:
தனிமையில் வாடிடும் உன்னிதழால் என்னை
இனிமையில் மூழ்கிட வைத்த – வனிதையும்
நீயே மலைக்காட்டில் புத்துணர்வு தந்தாயே
யாரும் ரசிக்கா மலர்
அலர்கூட்டும் வசந்தகாலக் கனவு
மூலப்பாடம்:
கான்ஜி எழுத்துருக்களில்
春の夜の
夢ばかりなる
手枕に
かひなく立たむ
名こそ惜しけれ
கனா எழுத்துருக்களில்
はるのよの
ゆめばかりなる
たまくらに
かひなくたたむ
なこそをしけれ
ஆசிரியர் குறிப்பு:
பெயர்: சேடிப்பெண் சுவோ
காலம்: பிறப்பு தெரியவில்லை. கி.பி 1110ல் இறந்தார்.
இவரது இயற்பெயர் நகாக்கோ. இவரது கணவர் சுவோ மாகாணத்தின் ஆளுநராக இருந்ததால் இப்பெயர் பெற்றார். அறிவிற் சிறந்து விளங்கிய பெண்களை அந்தப்புரத்தில் பட்டத்தரசிகளின் அந்தரங்க உதவியாளர்களாக நியமிக்கும் வழக்கம் இருந்தது எனப் பார்த்தோமல்லவா? இவர் தொடர்ச்சியாக கோரெய்சோ (1045-1068), சான் ஜோ (1068-1073), ஷிராகவா (1073-1087), ஹொரிகவா (1087-1107) ஆகிய நான்கு பேரரசர்களின் அரசியருக்கு உதவியாளராக 68 ஆண்டுகாலம் பணிபுரிந்தார். கி.பி 1108ல் புத்தமதத் துறவியாக மாறினார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 35 பாடல்களும் இவர் பெயரிலேயே தனிப்பாடல் திரட்டு ஒன்றும் இடம்பெற்றிருக்கின்றன. காலத்தால் அழியாத 36 பெண்பாற்கவிஞர்கள் வரிசையிலும் 36 பிற்காலப் புலவர்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார்.
பாடுபொருள்: அலருக்கு ஆளாக விரும்பாமை.
பாடலின் பொருள்: உங்கள் வேண்டுகோளை ஏற்று வசந்தகால இரவில் வரும் குறுங்கனவு போன்ற காதல் வாழ்க்கையை வாழ்ந்தால் நீங்கள் பிரிந்தபிறகு ஊர் என்னைத்தான் தூற்றும்.
ஜப்பானிய அரசவைக் காதல்களின் வாழ்வு குறுகியது என்று உணர்த்தும் இன்னொரு பாடல். இப்பாடல் இயற்றப்பட்ட பின்னணியை சென்சாய்ஷூ என்ற இலக்கியம் கூறுகிறது.
பிப்ரவரி மாத முழுநிலவின்போது தலைநகர் கியோத்தோவில் இருக்கும் நிஜோ-இன் என்ற கோயிலில் மக்கள் கூடுவார்கள். ஆடல், பாடல், விருந்து எனத் தடபுடலான ஏற்பாடுகளில் மகிழ்ச்சிக்கடலில் திளைத்து இரவு முழுவதும் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். நள்ளிரவு தாண்டி அதிகாலை விடியும் முன்பு களைத்துப் போயிருந்த இப்பாடலாசிரியர் ஒரு திரைச்சீலை அருகில் ஒதுங்கிப் பணிப்பெண் ஒருவரிடம் ஒரு தலையணை இருந்தால் நன்றாக இருக்கும் எனக் கூறுகிறார். திரைச்சீலைக்குப் பின்னால் இருந்த ததாய்யே என்றோர் அதிகாரி, “நீங்கள் உறங்கத் தயார் என்றால் என் கையையே தங்களுக்குத் தலையணையாகத் தரத்தயார்” என்கிறார். இதன் உட்பொருள் தன்னை மணந்துகொள்ளத் தயாரா என்பதாகும். அதற்கு எதிர்வினையாக எழுதப்பட்டதுதான் இப்பாடல்.
அரசவைக் காதல்கள் எல்லாம் குறுகிய காலத்திலேயே முடிந்துவிடும் என முந்தைய பாடல்களில் பார்த்தோமல்லவா? அது இப்பாடலிலும் உறுதிப்படுகிறது. அவசியம் ஏற்பட்டாலன்றிப் பெண்கள் காதலை நிராகரித்திருக்கிறார்கள். இப்பாடலில் அலருக்கு அஞ்சிய ஜப்பானிய மகளிரின் நிலைப்பாடு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
வெண்பா:
காதலும் தோன்றிடில் மாயும் விரைவினில்
ஆதலின் தோன்றிடும் பேரலர் – சேதமில்
வாழ்வது வேண்டியே வேண்டேன் இனியிவ்
வசந்த இரவுக் கனவு
(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
