குழந்தைப் பருவத்தில் இருந்த
என் அன்னையை இன்னொரு உலகில் சந்தித்தேன்.
கை கோர்த்து கடற்கரையில் நடந்தோம்.
உலகில் அவள் நேசித்த
அத்தனை விசயங்களையும் ஆர்வத்துடன் பேசினாள்.
ஆயிரம் அங்கதங்கள்
Tag: இரா. இரமணன்
என்னையே நான் நேசிக்கத் தொடங்கியபோது
என்னையே நான்
நேசிக்கத் தொடங்கியபோது
எப்போதும் சரியாக இருப்பதிலிருந்து
வெளிவந்தேன்.
அப்போதிலிருந்து
குறைவான நேரங்களிலே
தவறாக இருந்தேன்.
இப்போது ‘அது தன்னடக்கம் என்று கண்டேன்’.
புனித கெவினும் கரும்பறவையும்
புனித கெவின் தனது குடிலில்
மண்டியிட்டு கை விரித்து
பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார்.
குடிலோ மிகக் குறுகியது.
ஆதலால்
விரித்த உள்ளங்கைகள் குறுக்கு சட்டமாய்
வெளியில் நீண்டிருந்தது.
அந்த நேரம்
கரும்பறவை ஒன்று அதில் முட்டையிட்டு
அடைகாக்கத் தொடங்கியது.
பெயர்தல்
காலச்சக்கரத்தில்
பின்னோக்கிப் போவதும் கடினமே.
சர்கோதாவிற்கோ ஜீலத்திற்கோ மியான்வாலிக்கோ
பின்னோக்கிப் போகிறவர்களைக்
கேட்டுப் பாருங்கள்.
பழைய செங்கல் கட்டடிங்களில்
புதிய முகங்கள்.
ஓஸிமாண்டியாஸ்
பழம்பெரும் நிலத்திலிருந்து வந்த
பயணி ஒருவன் கூறினான்
‘அந்தப் பாலை நிலத்தில்
கல்லில் செதுக்கிய
பெருத்த இருகால்கள்
உடலில்லாமல் நிற்கின்றன.
அதனருகில்
முறைத்த பார்வையும்
சுழித்த உதடும்
கொடும் கட்டளை பாவனையும்
அன்பின் தனிமை
ஞாயிற்றுக் கிழமைகளிலும் என் தந்தை
அதிகாலையில் எழுந்து
விறைக்கும் குளிரில் ஆடைகளை சரி செய்து கொள்கிறார்.
வார நாட்களின் உழைப்பில்
வெடித்துப் போன விரல்களினால்
குவித்திருக்கும் தணல்களை
எரிய விடுகிறார்.
யாரும் ஒருபோதும்
அவர்க்கு நன்றி சொன்னதில்லை.
அனாமதேயமாக காப்பி குடித்தல்
என் நினைவின் ஓரங்களில்
காப்பியின் பழுப்பு
சிற்றலையாய் மோதுகிறது.
சொகுசான தூக்கத்தில் புரண்டு கொண்டிருக்கும் நான்
முழுவதும் விழிப்பதை சில நொடிகள் தள்ளிப் போட முயற்சிக்கிறேன்.
‘ காபி ‘ என்றவள் புன்னகைக்கும் குரலில் கேட்கிறாள்.
எனக்கு ஓர் அறிமுகம்
நான் அரசியல் அறிந்தவளல்லள்.
ஆனாலும்
அதிகாரத்தில் அமர்ந்தவர்கள்
அத்தனை பேரின்
பெயர் தெரிந்தவள்தான்.
நேருவில் தொடங்கி
எல்லோர் பெயரையும்
கிழமைகள் போல், மாதங்கள் போல்
என்னால் சொல்ல முடியும்.
நான் ஒரு இந்தியன்;பழுப்பு நிறத்தினள்.
மலபாரில் பிறந்த நான்
பேசுவது மூன்று மொழிகளில்;
எழுதுவது இரண்டில்;
கனவு காண்பதோ ஒன்றில்.
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
என் காதலியின் கண்கள்
சூரியக் கதிர்களாய் ஒளிர்வதில்லை.
அவளின் இதழ்
பவளத்தின் சிவப்பிறகு ஒப்பில்லை..
பழுப்பு நிறமாயிருக்கும் அவள் மார்பகங்களை
வெண்பனியென்று எப்படிக் கூறுவது?
போகிற போக்கில் வரும் கேள்விக்கு ஒரு பதில்
ஒலிப்பெருக்கம்;
விரிந்த வெளியும் ஒளியும் கலந்த உணர்வு.
இரவின் தூரங்களை வெளிச்சப்படுத்தும்
இரயிலின் மாபெரும் மஞ்சள் கண்கள்.
குறு முள்எலி,கம்பளிப் பூச்சி,குழி எலி,
சிறு பெரணிகள் எல்லாம் சரிதான்.
ஆனால் எனக்கு வேண்டியது
பூ மரங்கள், நீளும் படர் கொடிகள்,
பரவும் ஒட்டுண்ணிகள்.
தேள் கொட்டிய இரவில் – நிஸ்ஸிம் எஸிகியொல்
‘உன் கடந்த பிறவிப் பாவங்கள்
இன்றிரவு தொலைந்து போய்விடும்’ என்றனர்.
‘இன்று நீ படும் துன்பம்
அடுத்த பிறவியின் துயரை குறைக்கும்’ என்றனர்.
‘நீ அனுபவிக்கும் வலி
இந்த மாய உலகில்
உன் தீய செயல்களுக்கும்
நற் செயல்களுக்கும் இடையேயான
சமன்பாட்டை குறைக்கலாம்.’ என்றனர்.
ராம்கரூவின் வாரிசுகள்
துன்புறுவது மடமை என்று
களித்திருக்கும் மக்களே!
துக்கித்திருப்பது
ராம்கரூசியர்களின் உரிமை.
அதை மறுக்காதீர்.
புல்
இன்னொரு அதிர்ஷ்டப் புல்
எப்பொழுதாவது கிடைத்தால்
அதை அப்படியே விட்டுவிடுவேன்.
அல்லது அதை என்
சகோதரனுக்கு கொடுத்து விடுவேன்.
தன்னந்தனியே – வோர்ட்ஸ்வொர்த்
மலையகப் பெண்ணொருத்தி மஞ்சள் வயல்வெளியில் தனியளாய் நிற்பது காண். பாடலே துணையாய் கதிரறுக்கும் அவள் குரல் கேட்காதோர் பையவே சென்றிடுக. தனியே கதிரறுத்துக் கட்டுமவள் இசைக்கும் அழுத்தமிகு சோக கீதம் வெளியெங்கும் ததும்பி வழிகின்றதே கேட்டீர்களா? பாலை நிலங்களில் களைத்துப் போன தேசாந்திரிகளுக்கு உற்சாகமூட்டும் குளிர் சோலைக் குயில்கள் “தன்னந்தனியே – வோர்ட்ஸ்வொர்த்”
கவிதைகள்
கணினியில் ஏதோ தட்டிக்கொண்டிருப்பான்
வாய்க்கு வராத பெயரிலிருப்பவற்றை
வாய்க்குள் திணித்து
நவநாகரிகத் தொட்டிலுக்குள்
சவப்பெட்டியாகக் கிடப்பான்
மனித நுட்பம் – மிரொஸ்லாஃப் ஹோலுப்
மனிதனுக்கு இம்மாண்புகளில்லை.
ஆகவே
அறிவியல் ஆய்வு நாடுகிறான் அவன்.
கதையொன்று காட்டுமிதன் கோலத்தை.
