என்னையே நான் நேசிக்கத் தொடங்கியபோது

என்னையே நான்
நேசிக்கத் தொடங்கியபோது
எப்போதும் சரியாக இருப்பதிலிருந்து
வெளிவந்தேன்.
அப்போதிலிருந்து
குறைவான நேரங்களிலே
தவறாக இருந்தேன்.
இப்போது ‘அது தன்னடக்கம் என்று கண்டேன்’.

பார்வையற்றவனின் பார்வை

என் கெடுவாய்ப்பின் துன்பத்தை
பெருமூச்சு விட்டு
நீங்கள் வருந்துவது
பலமுறை என் செவிகளில் விழுகிறது.
ஆனால்
எப்போதும் என்னால் அறிய முடியா
இழப்பை
நிச்சயமாய் பொறுமை கொண்டு சுமப்பேன்

பெயர்தல்

காலச்சக்கரத்தில்
பின்னோக்கிப் போவதும் கடினமே.
சர்கோதாவிற்கோ ஜீலத்திற்கோ மியான்வாலிக்கோ
பின்னோக்கிப் போகிறவர்களைக்
கேட்டுப் பாருங்கள்.
பழைய செங்கல் கட்டடிங்களில்
புதிய முகங்கள்.

எனக்கு ஓர் அறிமுகம்

நான் அரசியல் அறிந்தவளல்லள்.
ஆனாலும்
அதிகாரத்தில் அமர்ந்தவர்கள்
அத்தனை பேரின்
பெயர் தெரிந்தவள்தான்.
நேருவில் தொடங்கி
எல்லோர் பெயரையும்
கிழமைகள் போல், மாதங்கள் போல்
என்னால் சொல்ல முடியும்.
நான் ஒரு இந்தியன்;பழுப்பு நிறத்தினள்.
மலபாரில் பிறந்த நான்
பேசுவது மூன்று மொழிகளில்;
எழுதுவது இரண்டில்;
கனவு காண்பதோ ஒன்றில்.

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

என் காதலியின் கண்கள்
சூரியக் கதிர்களாய் ஒளிர்வதில்லை.
அவளின் இதழ்
பவளத்தின் சிவப்பிறகு ஒப்பில்லை..
பழுப்பு நிறமாயிருக்கும் அவள் மார்பகங்களை
வெண்பனியென்று எப்படிக் கூறுவது?

சிறுபான்மையினரின் பாடல் – நிஸ்ஸிம் இசக்கியல்

என்னறையில்
உருவில்லா விருந்தினருடன்
உரையாடுகிறேன்.
அவர்கள்
விவாதம் எதுவும் செய்வதில்லை.
நான் களைத்துப் போகும்வரை
காத்திருக்கின்றனர்.
பின்பு
உணர்வெதுவும் காட்டா

தேள் கொட்டிய இரவில் – நிஸ்ஸிம் எஸிகியொல்

‘உன் கடந்த பிறவிப் பாவங்கள்
இன்றிரவு தொலைந்து போய்விடும்’ என்றனர்.
‘இன்று நீ படும் துன்பம்
அடுத்த பிறவியின் துயரை குறைக்கும்’ என்றனர்.
‘நீ அனுபவிக்கும் வலி
இந்த மாய உலகில்
உன் தீய செயல்களுக்கும்
நற் செயல்களுக்கும் இடையேயான
சமன்பாட்டை குறைக்கலாம்.’ என்றனர்.

பெயர் சொல் (உஷா அகேல்லா)

அவள் ’லைஃப் ஆஃப் பை’
திரைப்படம் பார்த்துவிட்டு
வந்து கொண்டிருந்தாள்.
அது கெடுவிதியின் அறிகுறியா?

புல்

இன்னொரு அதிர்ஷ்டப் புல்
எப்பொழுதாவது கிடைத்தால்
அதை அப்படியே விட்டுவிடுவேன்.
அல்லது அதை என்
சகோதரனுக்கு கொடுத்து விடுவேன்.

விருந்தாளி: ஜாக் ப்ரீலட்ஸ்கி

விருந்தாளி ஒன்று வீட்டிற்குள் நுழைந்தது.யானையை விட சிறியதுஎலியை விடப் பெரியது. முதல் அடி என் சகோதரி மீது அடுத்து என் தந்தைக்கு ஒரு உதைபின் என் தாயை தள்ளிவிட்டது.நான் வெறி கொண்டவனானேன்.  ரோவரை கிச்சு கிச்சு மூட்டியது.பூனையை பயங்காட்டியது.கழுத்துப் பட்டையை கிழித்தது.தொப்பியை முரட்டுத்தனமாய் நசுக்கியது. தலையில் தேனை மெழுகியது.குளியல் தொட்டியில் கற்களை நிரப்பியது.கோபத்தில் கத்தும்போது  காலணியையும் காலுறைகளையும் களவாடியது. அப்படித்தான் “விருந்தாளி: ஜாக் ப்ரீலட்ஸ்கி”

தன்னந்தனியே – வோர்ட்ஸ்வொர்த்

மலையகப் பெண்ணொருத்தி  மஞ்சள் வயல்வெளியில்  தனியளாய் நிற்பது காண். பாடலே துணையாய்  கதிரறுக்கும் அவள் குரல் கேட்காதோர் பையவே சென்றிடுக.  தனியே கதிரறுத்துக் கட்டுமவள் இசைக்கும் அழுத்தமிகு  சோக கீதம்   வெளியெங்கும் ததும்பி வழிகின்றதே  கேட்டீர்களா?  பாலை நிலங்களில்  களைத்துப் போன  தேசாந்திரிகளுக்கு உற்சாகமூட்டும்  குளிர் சோலைக் குயில்கள் “தன்னந்தனியே – வோர்ட்ஸ்வொர்த்”

மனித நுட்பம் – மிரொஸ்லாஃப் ஹோலுப்

மனிதனுக்கு இம்மாண்புகளில்லை.
ஆகவே
அறிவியல் ஆய்வு நாடுகிறான் அவன்.
கதையொன்று காட்டுமிதன் கோலத்தை.

செக் நாட்டு கவிதைகள்- ஹோலுப், ப்ரிலட்ஸ்கி

அருமை மூக்கு
கால் கட்டை விரலுக்கிடையில்
திணிக்கப்பட்டிருந்தால்
உன் காலையல்லவா
நீ முகரவேண்டும்!

மொழிபெயர்ப்பு கவிதை – குண்டர் க்ராஸ்

சிறு பிராயத்தில்
திரும்பிய பக்கங்களிலெல்லாம்
‘கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்’
என்ற அறிவிப்பில் உறைந்துபோனேன்