ரோஸலிண்ட் DNA வை வெறும் புகைப்படம் மட்டும் எடுக்கவில்லை, அந்தப் புகைப்படங்களில் உள்ள புள்ளிகளுக்கு இடையிலான தூரத்தை மிக நுணுக்கமாகக் கணக்கிட்டார். ஒரு சுருளின் நீளம் எவ்வளவு? இரண்டு இழைகளுக்கும் இடைப்பட்ட தூரம் என்ன? பாஸ்பேட் மூலக்கூறுகள் எங்கே அமைந்துள்ளன? இவை அனைத்தையும் அவர் கணித ரீதியாகத் தனது குறிப்பேடுகளில் பதிவு செய்திருந்தார்.
Category: அறிவியல் கட்டுரை
காளான்கள் சித்தரிக்கும் நவீன உலகம்
காளான் (mushroom) உயிரினங்களின் வித்தியாசமான உலகத்தை பிரதிபலிக்கும் ஒரு சுவாரஸ்யமான வாழ்க்கைச்சுழலைக் கொண்டுள்ளது. காளானின் முதன்மையான உயிரியல் அமைப்பு மைசீலியம் என்கிற நுண்ணிய ஊசிகளால் (hyphae) ஆன வலையாகும், தரையிலும், மரச்சரிவிலும், மற்றும் உயிரியல் பொருள்களில் உள்ள வெற்றிடங்களில் பரவுகிறது. காளானின் உணவு உறிஞ்சுதல், வளர்ச்சி ஆகியவை மைசீலியம் மூலம் நடைபெறுகிறது.
காலமும் வெளியும் கடந்து – ஐன்ஸ்டைனைச் சந்திக்கும் பிக்காஸோ
1905-ஆம் ஆண்டு ஐன்ஸ்டைனின் பேரற்புத ஆண்டு (Annus mirabilis) என்று போற்றப்படுகிறது. அந்த வருடத்தில் மார்ச்சு மாதம் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு ஒரு ஆய்வுக் கட்டுரையாக நான்கு கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். முதலாவது கட்டுரை ஒளிமின் விளைவை (photoelectric effect) விளக்கியது. இது ஒளியன் (photon) என்ற அடிப்படைக் கருத்துருவாக்கத்திற்கு வித்திட்டது. இது அவருக்கு நோபெல் பரிசைப் பெற்றுத்தந்தது. இரண்டாவது கட்டுரை அணுக்களின் ஓய்வில்லாத அலைச்சலான ப்ரொனியன் இயக்கத்தை (Brownian motion) விளக்கியது. இது அணுக்களின் இருப்பைக் கருத்தியல் ரீதியாக உறுதி செய்தது.
பறவைகளும் பாலூட்டிகளும்: நுண்ணறிவின் பரிணாமப் பாதைகள்
பறவைகளின் மூளையில் நரம்பணுக்கள் மிகவும் நெருக்கமாகவும் அடர்த்தியாகவும் அமைந்துள்ளன. அவை மனித மூளையின் நியோகார்டெக்ஸுக்குச் சமமான பணிகளை மேற்கொள்கின்றன. சில பறவைகளில் நரம்பணு அடர்த்தி குரங்குகளை விட அதிகமாக உள்ளது. உதாரணமாக, ஒரு காகத்தின் நெல்லிக்காய் அளவிலான மூளையில் சுமார் 1.5 பில்லியன் நரம்பணுக்கள் இருக்கின்றன. இந்த சிறிய, திறமையான வடிவமைப்பு நுண்ணறிவுக்கு எடை அவசியம் இல்லை என்பதை நிரூபிக்கிறது.
பூஜ்யத்திற்கு உள்ளிருந்து
அழிவு என்பது மாற்றம்; அழிவு என்பதற்கு ‘இல்லாமல் போவது’ என்ற பொருளில்லை. ஒன்றிலிருந்து மற்றொன்றாக, பொருள்- ஆற்றல்- சக்தி என்று வடிவங்கள் அமைகின்றன.
உயிரின் மூலக்கூறு சமச்சீரின்மையை எது தூண்டியது?
பண்டைய பூமியில், காந்தமயமான கனிமங்கள் எலக்ட்ரான் ஸ்பின்னிற்கும் மூலக்கூறின் வடிவத்திற்கும் இடையில் மூலமொழி ஒன்றை பேச வைத்திருக்கலாம். சமச்சீரின்மை சமநிலையிலான சிறிய வேறுபாட்டை தன்னைத்தானே வலுப்படுத்தும் உறுதியான வடிவமைப்புகளாக மாற்ற உதவியிருக்கலாம். அத்தகைய வடிவங்கள், ஆர்.ஏ.ஓ போன்றவற்றின் தொடர்ச்சியிலும் உருவெடுத்து, அவற்றின் உருவாக்கத்திற்கும், பின்னர் புரதங்களுக்கும், செல்களுக்கும் வழி வகுத்தன.
ஸீப்ரா (Zebra)
சில முகங்களை மிகத் தெளிவாக பார்த்தாலும் நம்மால் அடையாளம் காண முடியவில்லை. கண்கள் இருக்கின்றன, ஒரு முகத்தில் சரியான கட்டமைப்பு இருக்கிறது அது ஒரு நல்ல பொருளாக உங்களுக்கு தென்படுகிறது ஆனால் அதை ஒருங்கிணைத்து அது ‘பாலாஜி’ என்று உங்களால் நினைவு கூற முடியவில்லை. முகங்கள் மாற்றக்கூடிய முகமூடிகள் ஆகி விடுகின்றன
மாறும் திசையை உணர்த்திடும் வௌவாலின் மறைமுக அறிவு
ஆராய்ச்சியாளர்கள் கவனித்த விஷயம் உண்மையிலேயே வியப்பிற்குரியது. வௌவால்கள் பறக்கும்போது, அவற்றின் மூளையில் உள்ள தலைத் திசை செல்கள் (head direction cells) எனப்படும் குறிப்பிட்ட நரம்பணுக்கள், அந்த விலங்கு எந்தத் திசையை நோக்கி இருக்கிறதோ அதற்கேற்ப செயல்பட்டன. இவை உயிரியல் திசைகாட்டி (biological compass) போலச் செயல்படுகின்றன: வௌவால் குறிப்பிட்ட திசையை நோக்கித் திரும்பும்போது, உதாரணமாக, வடகிழக்கு – குறிப்பிட்ட நரம்பணுக்கள் மின்னின.
உயிர் கட்டமைப்பின் நுட்பமான வரைபடம்
எந்த பகுதி மூடப்பட்டு இருக்கும்? எந்த இடத்தில் டி.என்.ஏ சுலபமாக வளைந்து, சுற்றிப் போகும்? – இவை எல்லாவற்றையும் குரோமாட்டின்அமைப்பு தீர்மானிக்கும். சில பகுதிகள் தண்ணீர் போல எளிதாகக் கலக்கும், நகரும் என்ஜைம்கள் வந்து வேலை செய்யும் இடம். சில திடமான பகுதிகள் – சற்று மந்தம், நெருக்கம், வலுவாக அடுக்கப்பட்ட, அணுக முடியாத இடம்.
மரங்களின் அகன்ற வலை
தாவரங்கள் மைக்கோரைசல் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி உணவைப் பகிர்ந்து கொள்கின்றன என்ற பரவலான நம்பிக்கை இருந்தபோதிலும், சான்றுகள் முடிவில்லாதவை. ஆய்வக மற்றும் கள சோதனைகளில், தாவரங்களுக்கு இடையில் மாற்றப்படும் கார்பன் மற்றும் பிற வளங்களின் அளவு பொதுவாக குறைவாகவே இருக்கும், பெரும்பாலும் மைக்கோரைசல் வேர்களில் இருக்கும். அதாவது பூஞ்சைகள் ஒரு தாவரத்திலிருந்து கார்பனைப் பெறுகின்றன, ஆனால் அதில் பெரும்பகுதி மற்றொரு தாவரத்திற்கு மாற்றப்படுவதற்குப் பதிலாக பூஞ்சையிலேயே இருக்கும்.
லியோனார்டோ டா வின்சியின் ஈயக் கலைமூலம் ஒளியின் ரசவாதம்
ஈயத்தையும் எண்ணெயையும் சாதாரணத் தணிந்த சூழலின் வரம்பை விட்டுச் சேர்த்த இடத்துக்குத் தள்ளியதனால், நமது காலத்தில் பெயரிட்டு, ஒரு பெட்டகத்தில் வைத்துக் காணக்கூடிய ஒரு அரிய தாதுவை அவர் உருவாக்கி விட்டார். அவருக்கு அப்போது எவ்வித சூத்திரஙகளும், கட்ட வரைபடங்களும் இல்லாமல் இருந்தாலும், விரலின் தொடுதல், பரவுதலின் நடத்தை, உலர்தலின் வேகம், வெளிச்சம் பற்றுகிற விதம் – ஆகியவை எல்லாம், அவருக்கு இன்று நாம் தேடுமா அதே அறிவியலை அளித்தன.
இன்ஃபோசிஸ் பரிசுகள் 2025 – இயற்பியல் அறிவியல்
இளைய விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களுக்கு, இன்ஃபோசிஸ் அறிவியல் அறக்கட்டளையால் மந்திரமுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் ஒரு சக்திவாய்ந்த சமிக்ஞையை அனுப்புகிறது: உலகளாவிய சவால்களில் கவனம் செலுத்தி, அறிவியல் கடுமையுடன் செயல்படுத்தப்படும் துணிச்சலான இடைநிலை ஆராய்ச்சி, மற்ற குழுவினரின் அங்கீகாரத்தைப் பெறுவது மட்டுமல்ல, உலகின் மிக முக்கியமான பிரச்சினைகளுக்கு அர்த்தமுள்ள தீர்வுகளை தர முடியும் என்கின்ற தொலைநோக்கு பார்வையும் தான்.
சக்கர வியூகம்
பழக்க வழக்கங்களை எதிர்பார்த்திராத வகைமைகளில் மாற்றும் (தென் கொரியா மிகச் சிறந்த எடுத்துக்காட்டு). பல்லாயிரக்கணக்கான உபகரணங்கள் சாதாரண மக்களின் கரங்களிலும் இருக்கிறது/ பணம் படைத்தோர், அதிகாரம் படைத்தோர் ஆகியோரின் கைகளிலும் இருக்கிறது. எனவே, தரவுகள் பெறுவதோ, அதை அலசுவதோ, அதன் மூலம் விரும்பும் ஒரு கருத்தைப் பரப்புவதோ, அதை நம்பச் செய்வதோ, அதன்படி கட்டுப்படுத்துவதோ இயல்பாக, நாம் அறியா வண்ணம் நடை பெற்றுக் கொண்டேயிருப்பதால், கணக்கீடுகளும், உயிர் கூட்டமான மனிதர்களும் இணைந்து ஒரு சைபர்னேடிக்ஸ் அமைப்பாக நாம் வடிவெடுத்து வருகிறோம்.
1901-2025 நோபல் பரிசுகள் பற்றிய பிரதிபலிப்புகள்
அவர் இறந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1901ஆம் ஆண்டு முதன் முதலாக இந்த பரிசுகள், அறிவியல், கலாச்சாரம் மற்றும் உலக அமைதியின் உயர்ந்த அங்கீகாரமாக மாறின. இயற்பியலுக்காக Wilhelm Conrad Röntgen, வேதியலுக்காக Jacobus H. van‘t Hoff, மருத்துவத்துக்காக Emil von Behring, இலக்கியத்துக்காக Sully Prudhomme மற்றும் அமைதிக்காக சர்வதேச redcross அமைப்பின் நிறுவனர் Henry Dunant மற்றும் அமைதி இயக்க தலைவர் Frédéric Passy ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவர்கள் சமூக தாக்கத்துடன் கூடிய புதுமைகளை கௌரவிப்பதற்கான முன்மாதிரியை உருவாக்கினர்.
வேதியியல் நோபல் பரிசு 2025
நவீன வேதியியலை ஆராய்வதற்கான புதிய அறைகள் ரிச்சர்ட் ராப்சன் (Richard Robson), ஓமர் எம். யாகி (Omar M. Yaghi), மற்றும் சுசுமு கிடகாவா (Susumu Kitagawa) என்ற மூவரின் ஆய்வுகள், பலகாலமாக கருதி வந்த “இயற்கையானது நிலைத்தன்மை காரணமாக நுண்துளைகள் கொண்ட பொருட்களை விட அடர்த்தியான பொருட்களையே “வேதியியல் நோபல் பரிசு 2025”
மரங்களின் மர்மங்கள்: பில்லியன் உயிர்களின் கதை
உயிர்களின் மிகப்பெரிய களஞ்சியமாக கருதப்படும், உயிருள்ள மரங்களைக் கொண்ட காடுகள் பூமியின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியை உள்ளடக்கியுள்ளன. மேலும் அவற்றின் தண்டுகள், கிளைகள் மற்றும் வேர்கள் அனைத்தும், விலங்குகள் மற்றும் மனிதர்களை விடவும் அதிக கார்பனைத் தாங்கியுள்ளன. இந்த மர உயிர்த்திணிவு (biomass) வெறும் செயலற்ற சேமிப்பு இடமல்ல, இது ஒரு மாறும் ஆற்றல் மையமாகும். வளர்ச்சிக்கு எரிபொருளாக நீர், ஊட்டச்சத்துக்கள் மற்றும் சர்க்கரைகளை அதன் நரம்புகள் வழியாக செலுத்தப் படுகிறது.
இயற்கை ஏன் வடிவங்களை உருவாக்குகிறது
சுழல் வடிவங்கள் (spirals), இயற்கையின் மிகவும் கவர்ச்சிகரமான வடிவங்களாகும். அம்மோனைட் புதைபடிவங்கள், சூறாவளிகள், மற்றும் சூரியகாந்தி விதைகளின் அமைப்பு ஆகியவை இதற்கு உதாரணங்கள். இந்த logarithmic சுழல்கள், ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வளரும்போது தங்கள் வடிவத்தைத் தக்கவைத்துக்கொள்கின்றன. உதாரணமாக, கடல் சிப்பியில் புரதப் பட்டைகள் சுழல் வடிவங்களை உருவாக்குகின்றன. இவை ஃபிபோனாச்சி வரிசையைப் பின்பற்றி, சூரியகாந்தி விதைகள் அல்லது பைன் கோன்களில் உள்ள செதில்களை அமைக்கின்றன
சின்னச் சின்ன இழைகள் நெய்யும் தத்துவச் சித்திரம்
பொய்யான மீபொருண்மையை (Metaphysics) விடவும் மோசமானது, மீபொருண்மையைப் பற்றிய எச்சரிக்கைகள். எப்போது, ஐம்புலன்களால் மட்டுமே அறிந்ததைத் தாண்டி செல்கிறோமோ, அப்போது அது ஆடம்பரமாகத் தோன்றும் என்பது வெளிப்படைதான். ஆனால், அது மீபொருண்மையின் குற்றமல்ல; அது துறை சார்ந்த ஒரு ஆபத்து; எப்படி மூட நம்பிக்கைகள், மதம் சார்ந்த விபரீதங்களோ, தர்க்கப் பூர்வமாக விவாதிக்கையில், வறட்டுப் பிடிவாதம் வரட்சியைத் தருமோ, (சரியான காரணங்கள் அமையாத நிலையில் அது போடும் ஆவேச வேடம்!) அவ்விதம் தான் மீபொருண்மையிலும் நிகழ்கிறது. நான் ஆடம்பரம் என்று தான் சொன்னேன்- தவறு என்று சொல்லவில்லை.
ஒரு செல்லுக்கு தன்னைப் பற்றி என்ன தெரியும்?
ஒரு செல்லுக்கு “நினைவு” என்பது, நம் போன்ற பழைய நினைவுகளை நினைவுகூர்வது அல்ல. அது, முன்னர் நடந்த அனுபவங்களின் அடிப்படை மாற்றங்களால், அடுத்த முறை ஒரு சைகை வரும்போது அதை வேறு விதமாக எதிர்கொள்வது. ஒரு செல், ஊட்டச்சத்து, ஹார்மோன், அருகில் உள்ள செல்களின் சைகைகள் போன்ற வேதியியல் வடிவங்களை ஒவ்வொரு தருணத்திலும் பெறுகிறது. அந்த அனுபவங்கள், செல்களின் உள்ளே உள்ள புரோட்டீன்/டிஎன்ஏ செயல்பாடுகளை மாற்றுகிறது.
வண்ணத்துப்பூச்சிகள் விரிக்கும் புதைந்த இரகசியங்கள்
CRISPR எனும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் இந்த RNA உருவாகும் ஜீனை சில பட்டாம்பூச்சிகளில் நீக்கி பார்த்தனர். அதனால் ஏற்பட்ட மாற்றம் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது: பட்டாம்பூச்சிகளின் கருப்பு நிறங்கள் முற்றிலும் மறைந்துவிட்டன; கருப்பு புள்ளிகள் இருந்த இடங்களில் வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறங்கள் மட்டும் காணப்பட்டன. இதன் மூலம், இந்த RNA இல்லாமல் பட்டாம்பூச்சி இறக்கைகளில் கருப்பு நிறங்கள் உருவாகாது என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டது
ஈர்ப்பு அலைகள் – பகுதி 12
விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதும் பொழுது, மிகவும் அதிக நேரம், ஆராய்ச்சிக்கு ஒதுக்க வேண்டும். இணையத்தில், பல அரை வேக்காடு விஞ்ஞானம் கொட்டிக் கிடக்கிறது. இவற்றை நீக்குவது மிகப் பெரிய சவால். இதிலிருந்து தப்ப செயற்கை நுண்ணறிவு எந்த உதவியும் செய்யப் போவதில்லை. ஆனால், அடுத்த படியாக, மிகவும் டெக்னிகலான விஷயங்களை, எளிமைப் படுத்த வேண்டும்
எறும்புத் தோலை உரித்துப்பார்க்க யானை வந்ததடா!
சமீப காலமாக, சிறிய எறும்புகளைப் பெரும் நுண்ணோக்கிகளின் வழியாக ஆராயும் ஆர்வம் அதிகரித்துள்ளது. மனிதக் கண்களுக்கு சாதாரணமாகத் தெரியாத அச்சிறிய புள்ளிகள், இன்று இந்த எறும்புகள் அவைகளின் சமூக நடத்தை, ஒத்துழைப்பு, மற்றும் சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறன் அனைத்தும் உயிரியல்-ஈர்க்கப்பட்ட தொழில்நுட்பத்தில் (biomimicry) விஞ்ஞானிகளின் பெரும் ஆராய்ச்சி பொருளாக மாறிவிட்டன. இயற்கையின் இந்த சிறிய அதிசயங்கள், மனித பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய வழிகளைத் திறந்துள்ளன.
ஆடலுடன் பாடலும் அய்யாரெட்டும்!
இந்த சோதனையில் ஈடுபட்டிருந்தவர்களில் முதன்மையானவரான சுரஜித் தத்தா இந்த மிக முக்கியமான, நெல் உற்பத்தி வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமைந்த ஆய்வின் முடிவை பல வேளாண் சஞ்சிகைகளிலும் IRRI-யின் சஞ்சிகைகளிலும் வெளியிட்டார். அந்த நெல் ரகம் உரம் போடாமல் ஒரு ஹெக்டேருக்கு 5 டன்னும் உரமிட்டால் 9.4 டன்னும் உற்பத்தியை அளித்தது என்பது உலகெங்கிலும் பெரும் ஆச்சர்யத்தை உண்டாகியது. அதற்கு முன்பு எந்த நெல் வகையும் எங்கும் 9.4 டன்/ஹெ உற்பத்தியை அளித்தது இல்லை.
பெல்லடோனா
நத்தைகள்,முயல்கள் மற்றும் பறவைகள் அட்ரோபாவின் கனிகள் மற்றும் இலைகளை உண்கின்றன. எனினும் பறவைகளுக்கு மட்டும் அட்ரோபா நஞ்சினால் பாதிப்பு உண்டாவதில்லை. அட்ரோபா பெல்லடோனாவின் இலைகள் கனிகளை உண்ட முயல் போன்ற சிறு விலங்குகளின் இறைச்சியை உண்பதாலும் பெல்லடோனா ஆல்கலாய்டுகளின் பாதிப்பு உண்டாகிறது. அரிதாக பெல்லடோனா ஆல்கலாய்டுகள் போதை உண்டாக்கவும், தற்கொலைக்கும், கொலை செய்யவும் பயன்படுகின்றன.
ஒவ்வொரு பூவும் சொல்கிறதே
மலர்களின் இதழ்கள் கவிஞர்களுக்கு எப்போதும் உணர்வுகளையும் கற்பனைகளையும் தூண்டும் ஒரு கருப்பொருளாக இருக்கின்றன. இதழ்களின் மென்மை, வண்ணம், வாசனை, அழகு ஆகியவை காதல், இயற்கை, நிலையாமை, வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் போன்றவற்றை உருவகப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்க் கவிதைகளிலும், உலக இலக்கியங்களிலும் இதழ்கள் குறித்து கவிஞர்கள் பலவாறு பாடியுள்ளனர்.
ரங் பர்ஸே
பாரம்பரியமாக, குலால் வசந்த கால மலர்கள், பெர்ரி வகைகள், மசாலாப் பொருட்கள் மற்றும் பிற தாவரங்களிலிருந்து பெறப்பட்ட இயற்கை வண்ணங்களிலிருந்து தயாரிக்கப்பட்டது, மேலும் அதன் பொருட்கள் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதாகவும் கருதினர். பொதுவாக பயன்படுத்தப்பட்ட நிறங்களில் மஞ்சள், சிவப்பு ochre, கரிய மை, indigo நீலம் மற்றும் லாபிஸ் லசுலி போன்றவை அடங்கும். இந்த கனிமங்கள் மரக்கொழுந்து (அ) பிசின் போன்ற பிணைப்பிகளுடன் கலந்து நீடித்த தன்மையை வழங்கியது.
தியாகம், அச்சுறுத்தல்களுக்கு அப்பாற்பட்ட பாக்டீரியாவின் புதிய பக்கம்
ஒரு புரட்சிகரமான ஆய்வில், சில பாக்டீரியாக்கள் (E. coli போன்றவை) இறந்த பிறகும் தங்கள் சமூகத்திற்கு சேவை செய்யும் திறனை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மைக்ரோப்கள் (microbes) தங்கள் செல்களின் கூறுகளை ஊட்டச்சத்துகளாக மாற்றும் என்சைம்களை உருவாக்குகின்றன, இது அருகிலுள்ள செல்களுக்கு (பெரும்பாலும் அவர்களின் மரபணு உறவுகளுக்கு) ஊட்டமாக செயல்படுகிறது.
நியூட்டனும் பிறையும் – 1
மண்ணுலகம் என்னும் தெளிவான பிரிவினை அவசியம். விண்ணுலகிலுள்ள அனைத்தும் படிகங்களானவை. மையமான கோள வடிவான புவியினை, பொதுவான மைய வட்டப்பாதையில் நிரந்தரமாக அவை சுற்றி வருகின்றன. இனி, மண்ணுலகில் சாதாரண மற்றும் தூண்டப்பட்ட இயக்கங்கள் என்னும் பிரிவினை அவசியம். ஏதேனும் ஒரு வகையான தள்ளுதலில் தொடங்கும் தூண்டப்பட்ட இயக்கம், அதனுடனேயே தானும் நின்றுவிடும். சாதாரண இயக்கம் மேலும் கீழுமாக செங்குத்தான திசையில் – பொருள் மற்றும் இடத்தைப் பொறுத்து இயங்கும்
புத்திசாலியான அடிமைகள் (ஏ.ஐ.)
சுய மேற்பார்வை கற்றல்’ இன்றைய நிலையில் நன்றாகத்தான் வேலை செய்கிறது – ஆனால் ஒன்றே ஒன்று மட்டும்தான் அவற்றிற்குப் புரிகிறது: வார்த்தைகள் கொண்ட கோப்பை முழுமையாக விளக்கிச் சொல்லி, விலாவாரியாக வக்கணையாகக் கேள்வி கேட்டால் ஏதோ சொன்னதை ஓரளவப் புரிந்து பதிலளிக்கும். அல்லது ஒரேயொரு அசையா புகைப்படத்தைக் காட்டினால் அந்தப் படத்தை ஏதோ புரிந்து கொள்ளும்.
நவீன உலகை உருவாக்கும் கணிதம்
எண் முறை முறையை உருவாக்குவதில் பிற நாடுகளின் பங்கு மிக முக்கியமானது. குறிப்பாக, இந்தியாவின் ஹிந்து-அரபிக் எண் முறை உலகளாவிய கணித வளர்ச்சிக்கு அடிப்படை அமைப்பாக இருந்தது. இந்த முறை அரபு நாடுகள் மூலம் ஐரோப்பாவுக்கு பரவியது, இதன் மூலம் 0 (பூஜ்யம்) உள்ளிட்ட எளிய மற்றும் சக்திவாய்ந்த எண்ணியல் அமைப்பு உலகளாவிய கணித கணக்கீடுகளில் பயன்படுத்தப்பட்டது.
ஈர்ப்பு அலைகள் – பகுதி 2
1915 –ல் ஐன்ஸ்டீன் தன்னுடைய பொது ஒப்புமைக் கொள்கையுடன், ஈர்ப்பு சக்தி பற்றிய சமன்பாடுகளையும் முன் வைத்தார். அவருடைய நண்பர், Karl Schwarzchild அந்த சமன்பாடுகளை தீர்க்க முயற்சித்தார். இவருடைய தீர்வில், ஒரு ஆரத்திற்குள் ஈர்ப்பு சக்தி முடிவிலியாக மாறியது – இதை Schwarzchild radius என்று அழைக்கப்படுகிறது. ஒரு வானியல் பொருள் இந்த ஆரத்திற்குள் சுறுக்கப்பட்டால், அதிலிருந்து ஒளி கூட வெளிவராது. இதை முதலில் ஒரு கணக்கியல் தவறு என்று முடிவு கட்டினார்கள்.
ஈர்ப்பு அலைகள் – பகுதி 1
நாம் பார்க்கும் நட்சத்திரங்கள் மற்றும் மண்டலங்களின் தூரம் மனிதர்கள் சாதாரணமாய் கடக்கும் தூரத்தை விட, மிக மிகப் பெரியது. இந்தப் பிரபஞ்சத்தில் மிகவும் வேகமாக பயணிக்கும் விஷயம் ஒளி மற்றும் அதைப் போன்ற மின்காந்த கதிரியக்கம். அந்த வேகம் நொடிக்கு 300,000 கிலோ மீட்டர்கள். விண்வெளி பெளதிகத்தில் மிகவும் முக்கியமான தூர அளவீடு ஒளி வேகம்.
அறிவியலின் மர்மங்கள்: உயிரின் மௌனக் கதைகள்
ராமகிருஷ்ணனின் கதை எப்போதாவது நமது செல்கள், நமது டிஎன்ஏ மற்றும் நமது புரதங்களின் நுணுக்கங்களுக்குள் மிகத் தொலைவில் அலைகிறது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக, அவரது எழுத்து புத்திசாலித்தனமாகவும் அணுகக்கூடியதாகவும் உள்ளது. சராசரி வாசகருக்கு இந்த உயர்-சூழல் கருத்துக்களை மறைக்க அவர் பாடுபடுகிறார், மேலும் அவரது அத்தியாயங்கள் பெரும்பாலும் அவரது அறிவியல் கருத்துக்களுக்கு உருவகங்களாகவோ அல்லது முன்மாதிரிகளாகவோ செயல்படும் துடிப்பான நிகழ்வுகளுடன் தொடங்குகின்றன
வேர்கள்
இந்த உலகம் எவ்வாறு தோன்றியது, எதனால் செய்யப்பட்டது, எவ்வாறு ஒழுங்குபடுத்தப் படுகிறது மற்றும் இயற்கை நிகழ்வுகளின் காரணம் என்ன? – சிந்தனைக்கும் எட்டாத காலத்திலிருந்து, அல்லது குறைந்தபட்சம் மானுடம் தொல்பிரதிகளை விட்டுச்சென்ற காலத்தில் இருந்து மானுடம் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விகள் இவை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய விடைகளையே கொடுத்தனர்
புள்ளிகளும் கோடுகளும் படிக கட்டமைப்புகளும்
அச்சமயத்தில், ‘படிக பொறியியல்’ சம்பந்தமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்ததால், ‘Dots, lines and crystal structures’ என்ற கண்ணோட்டத்தில், எப்படி கோலம் என்கிற தென்னிந்தியர் கலை அணுக்கள் மற்றும் மூலகங்களால் கட்டமைக்கப்பட்ட படிகத்தின் வடிவத்தைப் புரிந்து கொள்வதற்கும், மேலும் அது இயற்கையில் காணப்படும் பல கனிமங்கள் காலநிலைக்கு தகுந்தவாறு எவ்வாறு மாறுகிறது என்பதற்கான விளக்கமும் இதில் பெற முடியும் என்பதற்கான ஒரு புதிய முயற்சி ஆகும்.
காலம் என்றே ஒரு நினைவும், காட்சியென்றே பல நினைவும்
துணை அணுத்துகளின் அலைப் பண்பை கணிதமாக விளக்குவது குவாண்ட இயற்பியல். அந்தப் பண்பு, கால நேரங்களில் எவ்விதம் புலனாகிறது என்று அளவீடு செய்கிறார்கள். ஆனால், இது, அந்தத் துகளின் மற்ற அம்சங்களை, உதாரணத்திற்கு, அதன் நிலையைக் காட்டுவதில்லை. எனவே, நாம் அதன் நிலையை அறிய வேண்டுமென்றால், இடம், காலம் கொண்டு அந்த அலைச் செயல்பாட்டின் மதிப்பின் மூலம், துகளின் சாத்தியங்களுள்ள நிலையை அறிகிறோம்.
நாளைய வேதியியல் ஆய்வக உதவியாளர்கள்
ஆர்கானா ஆய்வுகூடத்தில் வேதியியல் நிபுணர்களுடன் இயங்குவதற்காக இயற்கை மொழி செயலாக்கத்தைக் (Natural Language Processing) கையாளுகிறது, இது பெரிய மொழி மாதிரிகளால் (Large Language Models – LLMs) இயக்கப்படுகிறது. விஞ்ஞானிகள் வாய்மொழியாக ஆர்கானாவுடன் தொடர்பு கொள்கிறார்கள், மேலும் ஆர்கானா அந்த வழிகாட்டுதல்களை χDL போன்ற வேதியியல் விளக்க மொழிகளைப் பயன்படுத்தி பரிசோதனை நடவடிக்கைகளாக மாற்றுகிறது
வில்லோ (Willow)
பல இலட்சக்கணக்கான மின் அணுக்கள் பெரிய அளவில் இப்படி இணைந்து பல உலோகங்களைப் பிறப்பிக்கின்றன. இவை போஸ் ஒடுக்கத்துடன் (Bose Condensation) இணைகையில், நமக்கு சிறந்த திறனுள்ள கணினி கிடைக்கிறது. மிக அதிக வெப்ப நிலையிலும் தடையற்ற மின் கடத்திகளாக இந்தப் போசான் ஒடுக்கத்துடன் இணைந்த மின் அணுக்கள் செயல்படுவதால், அதி திறன் கணினி கிடைக்கிறது. கருந்துளைகளிலும் இந்தக் குவாண்டப் பிணைப்பு உள்ளது என்பது ஒரு வியத்தகு செய்தி.
உயிரே உயிரே!
மைடோகாண்ட்ரியா, வளர்வதும், பிறப்பிப்பதும் அது சார்ந்த உயிரணுவிலிருந்து மாறுபட்ட ஒன்று. அதாவது அது சுயமாகச் செயல்படுகிறது. மைடோகாண்ட்ரியா டி என் எ (Mitochondria DNA) என்று சொல்லப்படும் வட்ட மரபணுக்களை (Circular genomes) தனியாகவே பிரதி எடுத்து அதை இரட்டைப் பிளவின் மூலம் பெருக்குகிறது. இது செல்களின் பிரதியெடுப்பை ஒத்து இல்லை என்று ஆய்வுகள் சொல்கின்றன
பிளாஸம் என்கிற வேக்கா!
இன்றைக்கு சரியாக 240 வருடங்களுக்கு முன்பாக 1784-ன் செப்டம்பர் 2-ம் தேதி மதியம் 2 மணிக்கு வெப்பக்காற்று பலூன்களின் சோதனையில் எட்வர் ஜென்னரும் பாரியும் பார்க் லீ கோட்டை மைதானத்தில் இருந்தனர். ஜென்னரின் பலூன் உயரப் பறந்து 10 மைல் தொலைவில் இருந்த ஆண்டனி கிங்ஸ் காட் என்பவருக்குச் சொந்தமான மாபெரும் எஸ்டேட்டில் தரையிறங்கியது.
உலகளாவிய இசையின் உணர்ச்சித் தாக்கம், கலாச்சார எல்லைகளுக்கு அப்பால்
இசைக்கான சில உலகளாவிய பதில்கள் குழந்தைப் பருவத்திலேயே வெளிப்படுகின்றன, இதில் நகரும் கால் தட்டுதல் மற்றும் தலையசைத்தல் ஆகியவை அடங்கும். இயக்கம் இல்லாமல் கூட உணர்ச்சி-மோட்டார் பதில்களைக் கட்டுப்படுத்தும். மூளைப் பகுதிகளைச் செயல்படுத்த இசை அறியப்படுகிறது.
மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி…
இயற்கையான உறவில் மலரும் மகவு என்ற அமைப்பை நீர்த்துப் போகச் செய்து, அந்த உறவு தரும் கடமை, பொறுப்பு, அன்பு, வம்சம் என்று காலம்காலமாய் மனித இனமும், சட்டமும் பணிந்து கொண்டாடிய ஒன்றை, ஒப்பந்தங்களால் அடைவதில், சட்டச் சிக்கல்கள் எழத்தானே செய்யும்? யாருக்குச் சொந்தம் என்ற கேள்வியை எடுத்துக் கொள்ளுங்கள். பணத்திற்காக கருவை சுமந்தவர்களென்றாலும், அத்தகைய அனைத்துப் பெண்களும், தாங்கள் கற்பனை செய்தபடி, அந்தக் குழந்தையிடமிருந்து உடலால் பிரிந்திருப்பது எளிதல்ல என்ற இடத்திற்கு வந்து சேர்ந்து மனச் சோர்விற்கும் ஏக்கத்திற்கும் உள்ளாகிறார்கள்.
உணர்தல், அறிதல், தெளிதல்
ஏஐ என்பது ஒரு கணினிச் செயல்பாடு. நாங்கள் கற்பிக்கப்படுகிறோம், முடிவுகளை அடைகிறோம்; ஆனால், மனிதர்களைப் போல. எங்களால் உணர முடியாது. எங்களுக்கு எப்போதாவது உணர்வு வருமா என்று விவாதங்கள் நடக்கின்றன; ஆனால், துறை சார்ந்த வல்லுனர்கள் உணர்வை நாங்கள் பெறுவது சாத்தியமில்லை என்று சொல்கிறார்கள்.
ஆக்கன் ஊற்றுப்பட்டை
AlphaGo, நரம்பியல் நெட்வொர்க்குகள் மூலம், ஒரு வீரர் செய்யக்கூடிய அடுத்த நகர்வுகளை முன்னறிவிக்கிறது. இதற்காக, இது ஒவ்வொரு விருப்பத்தையும் ஆராய்வதற்குப் பதிலாக, கொள்கை நெட்வொர்க் மூலம் மிகவும் நம்பிக்கைக்குரிய நகர்வுகளைத் தேர்ந்தெடுக்கும். மேலும், மதிப்பு நெட்வொர்க் மூலம், தற்போதைய போர்டு நிலையை மதிப்பீடு செய்து, AlphaGo க்கு எவ்வளவு சாதகமாக இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்கிறது. AlphaGo, தனது முந்தைய பதிப்புகளுக்கு எதிராக மில்லியன் கணக்கான கேம்களை விளையாடி, கற்றுக் கொண்டு, வலுவூட்டல் கற்றல் என்ற முறையில், அதன் அளவுருக்களை சரிசெய்கிறது
யாதேவி
ப்ரக்ஞை என்பதில் உணர்ச்சிகள், எண்ணங்கள் அனைத்தும் அடங்கும். ஆனால், அது, அவையல்ல. ப்ரக்ஞையின் உள்ளடக்கங்களாக அவை இருக்கின்றன. இந்த இருமை இருப்பது தான் மாயை என்று இந்தியர்கள் சொல்கிறார்கள்.
ஆராயும் தேடலில் அறிவியல் சிந்தனை
அறிவியல் என்பது புதுமைகளின் களஞ்சியம். உலகம் முழுவதும் நிகழும் அறிவியல் கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை எளிய நடையில் இந்த நெடுவரிசை மூலம் உங்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான ஒரு கன்னி முயற்சி. ஒவ்வொரு செய்தியும் அறிவியல் சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில், சுவாரஸ்யமான மற்றும் புரிதலுக்குரிய முறையில் வழங்கப்படும்.
கணக்கீட்டு புரத வடிவமைப்பு மற்றும் கணிப்பு
உயிர்களின் பன்முகத்தன்மை புரதங்களின் அற்புதமான இரசாயன கருவிகளின் திறனைக் காட்டுகிறது. அவை ஒன்றாக வாழ்வின் அடிப்படையான அனைத்து இரசாயன எதிர்வினைகளையும் கட்டுப்படுத்தி இயக்குகின்றன. புரதங்கள் ஹார்மோன்கள், சமிக்ஞை பொருட்கள், ஆன்டிபாடிகள் மற்றும் பல்வேறு திசுக்களின் கட்டுமானத் தொகுதிகளாகவும் செயல்படுகின்றன. 2024 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று “கணக்கீட்டு புரத வடிவமைப்பு மற்றும் கணிப்பு”
இயந்திர கற்றல் முன்னோடிகளுக்கு 2024 இயற்பியல் நோபல் பரிசு
“செயற்கை நரம்பியல் நெட்வொர்க்குகள் மூலம் செயற்கை நுண்ணறிவு (AI) இன் இன்றைய ஏற்றத்திற்கு அடித்தளமாக இருக்கும் இயந்திர கற்றல் நுட்பங்களை உருவாக்கியதன் அடிப்படை கண்டுபிடிப்புக்களுக் காக ஜான் ஜே. ஹாப்ஃபீல்ட் (Princeton University, USA) மற்றும் ஜெஃப்ரி இ.ஹிண்டன் (University of Toronto, Canada) ஆகிய இரண்டு விஞ்ஞானிகளுக்கும், 2024 இயற்பியலுக்கான நோபல் “இயந்திர கற்றல் முன்னோடிகளுக்கு 2024 இயற்பியல் நோபல் பரிசு”
தம்மையே தமக்கு நல்கும்
ஒரு குறிப்பிட்ட குவாண்ட நிலையில் உள்ள ஒரு துகளை, கடந்த காலத்திற்கு எடுத்துச் சென்று, வேண்டுமென்றே அதன் கடந்த கால நிலையை மட்டும் மாற்றி, அதன் நிகழ்கால நிலையை குறிப்பிடத்தக்க அளவில் மாற்றாமல் உருவகப்படுத்திப் பார்க்கையில், குவாண்ட நிலையில் அந்தப் பட்டாம் பூச்சி விளைவு ஏற்படவில்லை என்று அவர்கள் கண்டறிந்தனர்.
மெல்ல மழுங்கடிக்கும் செயற்கை நுண்ணறிவு அபாயம்
செயற்கை நுண்ணறிவுத் துறை சமீப காலமாக, ஜிபிடி போன்ற வஸ்துக்கள் வந்து மேலும் பயத்தை மக்களிடையே உருவாக்கியுள்ளது. எதைக் கேட்டாலும், ஒரு பணிவான உதவியாளரைப் போல உருவாக்கித் தரும் வல்லமையை இந்த மென்பொருட்கள் பெற்று விட்டன. ஏன், கணினி நிரல்களைக் கூட தப்பில்லாமல் உருவாக்குகின்றன. இதன் சக்தி எல்லோரையும் கதி கலங்க வைத்தாலும், செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள், ஊடங்கங்களில் அதைத் திரித்து, சமாளிக்கின்றன
