ஈர்ப்பு அலைகள் – பகுதி 12

This entry is part 12 of 12 in the series ஈர்ப்பு அலைகள்

இந்தக் கட்டுரைத் தொடரை எழுத நினைத்த பொழுது, விண்பெளதிகம் பற்றிய ஒரு பல்கலைக்கழக வகுப்பில் சேர்ந்து படித்து முடித்திருந்தேன். அந்த நேரத்தில், எனக்கு மனதில் தோன்றியது இவைதான்:

  • தமிழில் எல்லோருக்கும் புரியும்படி ஈர்ப்பு அலை பற்றிய தொடர் ஒன்றை, எளிமையாக எழுத வேண்டும்
  • ‘சொல்வனம்’ பத்திரிக்கை ஆசிரியர் குழுவிடம், இதை ஒரு மாதத்தில் எழுதி முடித்து விட முடியும் என்று சொல்லி விட்டேன்
  • இந்த ஒரு மாத அவகாசத்திற்கு முக்கிய காரணம், இன்று Generative AI நுட்பங்கள், ஆராய்ச்சியை வெகுவாக எளிமைப் படுத்திவிடும் என்ற குருட்டு நம்பிக்கை!

ஆனால், நடந்தது வேறு!

  • இப்படி வாக்களித்துவிட்டு, கட்டுரைகள் எழுத, விஞ்ஞான  ஆராய்ச்சிக்கு பல நுட்பங்களையும் தேடத் தொடங்கினேன். பல இணையதளங்கள் எந்தப் பயனும் அளிக்கவில்லை
  • கடைசியாக, நான் பயன்படுத்தத் தொடங்கிய முக்கிய AI மென்பொருட்கள், இரண்டு மட்டும்தான். 1) napkin.ai 2) noteslm by Google
  • இக்கட்டுரை எழுதும் பொழுது எந்தப் பொதுவெளிப் படமும் பயன்படுத்தக்கூடாது – எல்லாவற்றையும் napkin மூலம் உருவாக்கிவிடலாம் என்று நினைத்தேன். சில பகுதிகளில் napkin உருவாக்கிய படங்களைப் பயன்படுத்தினாலும், முற்றிலும் அதைப் பயன்படுத்த முடியவில்லை.
  • விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதும் பொழுது, மிகவும் அதிக நேரம், ஆராய்ச்சிக்கு ஒதுக்க வேண்டும். இணையத்தில், பல அரை வேக்காடு விஞ்ஞானம் கொட்டிக் கிடக்கிறது. இவற்றை நீக்குவது மிகப் பெரிய சவால். இதிலிருந்து தப்ப செயற்கை நுண்ணறிவு எந்த உதவியும் செய்யப் போவதில்லை. ஆனால், அடுத்த படியாக, மிகவும் டெக்னிகலான விஷயங்களை, எளிமைப் படுத்த வேண்டும். இதை noteslm செய்யும் என்று முடிவு செய்து. பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை noteslm –ஐ summarize செய்யச் சொன்னேன். எனக்கு மிஞ்சியது ஏமாற்றம்தான்.
  •  சுறுக்குகிறேன் என்று பல மிகவும் சுவாரசியமான விஷயங்களை முழுங்கி விடுகிறது noteslm. குறிப்பாக, சில ஆராய்ச்சிக் கட்டுரைகள் மற்றும் விக்கிபீடியா விளக்கங்கள் noteslm –மிடம் காணாமல் போகிறது. 
  • பொதுவெளியில், மொழி சார்ந்த தொழில்களில், AI எல்லாவற்றையும் மாற்றிவிடும். எழுத்தாளர்களுக்கு வேலையே இருக்காது என்று நீங்கள் படித்திருக்கலாம். எதிர்காலத்தில் அப்படி நேர வாய்ப்பிருக்கலாம். ஆனால், 2025 –ல், என்னுடைய முயற்சிகள் அவ்வளவு பயனளிக்கவில்லை. இத்தனைக்கும், noteslm மற்றும் napkin  இரண்டிடமும் நான் தமிழில் எதையும் எதிர்பார்க்கவில்லை
  • எத்தனைதான் ஊதி வாசித்தாலும், Generative AI ஒரு வளர்ந்து வரும் தொழில்நுட்பம். எதிர்காலத்தில், என்னுடைய ஆராய்ச்சிக்கு உதவினால் சரி, இன்று அதன் பயன், என் எழுத்திற்கு ஒரு சின்ன உதவியாளன் மட்டுமே!

செய்திகளில் நாம் படிப்பது ஒன்று; ஆனால், உண்மைப் பயன்பாடு என்பது இன்னொன்று. போகிற போக்கில் பயன்பாடு என்பது ஒன்று; ஆனால், தொடர்ந்து பயனளிப்பது என்பது இன்னொன்று. தொடர்ந்து பயனளிக்க, இன்னும் சில மாத/வருடங்களாகும் என்பது என் கணிப்பு. தொடர்ந்து, இவ்வகை மென்பொருள்களை பின்பற்றி வருகிறேன். உதாரணத்திற்கு, என்னை கவர்ந்த ஒரு ஆராய்ச்சி கட்டுரை மென்பொருள் Afforai என்ற நிறுவனத்தின் மென்பொருள். ஒரு ஆராய்ச்சியாளனுக்கு தேவையான அனைத்து உதவியையும் செய்கிறது – bibiliography, citations எனறு ஒரு முனைவர் பட்டத்திற்கான கட்டுரைகளுக்கு, உஙகளுக்கு பிடித்த  chatbot -டுடன் (Google, OpenAI, Anthropic) இணைந்து உதவுகிறது. ஆனால், ‘சொல்வனம்’ கட்டுரைக்கு உதவாது!

கடந்த 12 பகுதிகளில், ஈர்ப்பு அலைகள் பற்றிய ஒரு எளிமையான அறிமுகம் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். . மேலும், இத்துறையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள, சில முக்கிய சுட்டிகள் இங்கே:

நட்சத்திரமதிப்பீடுவிளக்கம்
*ஆரம்பநிலை புரிதலுக்கான சுட்டி
**சற்று விவரமானது. அவ்வளவு டெக்னிகல் அறிவு தேவையில்லை
***மிக விவரமானது. கொஞ்சமாவது டெக்னிகல் அறிவு தேவை
****மிகவும் டெக்னிகலான ஆராய்ச்சிக் கட்டுரை
எண்தலைப்புசுட்டிநட்சட்த்திர மதிப்பீடு
1ஈர்ப்பு அலை என்றால் என்ன?https://en.wikipedia.org/wiki/Gravitational_wave

**
2https://www.ligo.caltech.edu/page/what-are-gw*
3https://www.ligo.caltech.edu/page/gw-sources*
4https://spaceplace.nasa.gov/gravitational-waves/en/*
5https://www.americanscientist.org/article/the-secret-history-of-gravitational-waves*
6ஈர்ப்பு அலை பற்றிய அறிமுக விடியோக்கள்https://www.youtube.com/watch?v=HDSFd17Do2c*
7https://www.youtube.com/watch?v=PCxOEyyzmvQ*
8https://www.youtube.com/watch?v=LfYloEifk2o*
9ஐன்ஸ்டீன் மற்றும் ஈர்ப்பு அலைகள்https://www.space.com/38350-nobel-prize-physics-gravitational-waves-einstein.html**
10https://www.astronomy.com/science/even-einstein-doubted-his-gravitational-waves/**
11ஈர்ப்பு அலை வரலாறுhttps://www.science.org/content/article/gravitational-waves-einstein-s-ripples-spacetime-spotted-first-time**
12https://www.mdpi.com/2218-1997/2/3/22****
13https://www.intechopen.com/chapters/1146649****
14லைகோ வரலாறுhttps://www.ligo.caltech.edu/system/media_files/binaries/313/original/LIGOHistory.pdf**
15https://www.ligo.caltech.edu/page/timeline**
16https://dcc.ligo.org/public/0155/T1800389/001/AdvLIGO_BySubsystem-T1800389.pdf**
17லைகோ டெக்னிகல்https://www.youtube.com/watch?v=X7RJHxeCulY***
18https://www.youtube.com/watch?v=x7rjlm4SH5U***
19விர்கோ வரலாறுhttps://www.virgo-gw.eu/about/virgo-history/
*
20https://www.virgo-gw.eu/science/detector/fighting-noises/***
21https://en.wikipedia.org/wiki/Virgo_interferometer**
22https://www.mdpi.com/2075-4434/10/1/28***
23லைகோ விவரணப் படம்https://www.youtube.com/watch?v=jWkWD1MBXKU***
24ஈர்ப்பு அலை எதிர்காலம்https://www.nature.com/articles/d41586-024-02768-w
25https://phys.org/news/2022-02-opportunities-high-frequency-gravitational.html*
26https://www.aps.org/archives/publications/apsnews/201906/wave.cfm*
27https://www.physicsforums.com/threads/could-gps-satellites-be-used-to-detect-gravitational-waves.545535/***
28https://www.scientificamerican.com/article/tiny-gravitational-wave-detector-could-search-anywhere-in-the-sky/**
29https://www.esa.int/Science_Exploration/Space_Science/LISA/Measuring_gravitational_waves**
30https://www.einstein-online.info/en/spotlight/3-generation-gw-detectors/***
31https://www.space.com/gravitational-wave-detector-in-space-lisa****
32லிசா கலந்துரையாடல்https://www.youtube.com/watch?v=cdLH-TSr-tw****
33லைகோ இந்தியாhttps://www.ligo-india.in/about/*
34GW091415https://www.youtube.com/watch?v=QyDcTbR-kEA***
35GW170817https://www.youtube.com/watch?v=fj7FIfzwEoc***
36அமெரிக்க நகைசுவை நிகழ்ச்சியில் ஈர்ப்பு அலைhttps://www.youtube.com/watch?v=ajZojAwfEbs*
37உலக விஞ்ஞானக் கருத்தரங்கில் ஈர்ப்பு அலைகள்https://www.youtube.com/watch?v=xj6vV3T4ok8****
382017 நோபல் பரிசு பெற்றவர்களின் விஞ்ஞான வெளியீடுகள்https://www.aip.org/science-news/nobel/physics2017/articles*****

முடிவுரை

தமிழில் விண்பெளதிக கோட்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் அதிகம் எழுதப்படுவதில்லை. இது ஒரு கன்னி முயற்சி. இவ்வகை எளிமைப் படுத்தப்பட்ட விஞ்ஞானம், வாசகர்களுக்கு மேலும் படிக்க ஆவலாக இருந்தால், பின்னூட்டங்களில் எழுதுங்கள். அவசியம் வரவேற்பிருந்தால், எழுதலாம்.

ஈர்ப்பு அலைகள்

ஈர்ப்பு அலைகள் – 11

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.