எறும்புத் தோலை உரித்துப்பார்க்க யானை வந்ததடா!

சமீப காலமாக, சிறிய எறும்புகளைப் பெரும் நுண்ணோக்கிகளின் வழியாக ஆராயும் ஆர்வம் அதிகரித்துள்ளது. மனிதக் கண்களுக்கு சாதாரணமாகத் தெரியாத அச்சிறிய புள்ளிகள், இன்று இந்த  எறும்புகள் அவைகளின் சமூக நடத்தை, ஒத்துழைப்பு, மற்றும் சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறன் அனைத்தும் உயிரியல்-ஈர்க்கப்பட்ட தொழில்நுட்பத்தில் (biomimicry) விஞ்ஞானிகளின் பெரும் ஆராய்ச்சி பொருளாக மாறிவிட்டன. இயற்கையின் இந்த சிறிய அதிசயங்கள், மனித பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய வழிகளைத் திறந்துள்ளன.