Glad,Claude,you did it.

மிக சமீபத்தில் ஆந்த்ரோபிக் நிறுவனம் ஒரு செய்தி வெளியிட்டது. அதன் முகவர் செயலி வியந்து சொன்னது: ‘என்ன ஒரு அற்புதம் இது.’ அது சொன்ன அற்புதம் தான் என்ன?
அந்த நிறுவனம் ஒரு உயிரியல் அறிவியல் ஆய்வகம் ஒன்றை நடத்தி வருகிறது .அதனுடைய முதன்மை குறிக்கோள் ‘உயிரிகள் ஆய்விலே கிளாடின் பங்களிப்பு என்னவாக இருக்கக்கூடும்’ என்பது தான். அடையாளம் காணப்படாத புரத அமைப்புகளை , டி என் ஏ தகவல் தொகுப்புகளை வைத்துக்கொண்டு, புது கருதுகோள்களை உருவாக்க முடியுமா என்று ஆராய்ந்தி ருக்கிறார்கள் .ஒரு அண்மைச செய்தி கிளாட் கண்டுபிடித்த நொதிகள் அமைப்பைப் பற்றியது அது. krispr போன்ற தன்மைகள் உள்ள ஒன்றை கண்டுபிடித்த செய்தியாக இருக்கிறது அடிப்படையில்.
பல்வேறு வகையான மாறுபாடுகள் உள்ள மூலக்கூறு அமைப்பில் இயற்கை காட்டும் விந்தையை பல அறிவியலாளர்கள் அதன் அசாதாரணத் தன்மையை உணர்ந்து கொண்டு அதை அடிப்படை என வைத்து உயிரியல் முன்னேற்றங்களையும் மருத்துவ கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தியுள்ளார்கள். ஒரு உயிரில் ஊடுருவும் தொற்றை எப்படி ஒரு தடுக்கும் புரத நொதி, டி என் ஏ வை குறிப்பிட்ட சில சிறிய தொடர்களில் நீக்கி செயல்படுகிறது என்பது இயற்கை தந்திருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியாகும் .
உயிரியல் தொழில்நுட்பம் என்பது நொதிகளைக் கொண்டு, டிஎன்ஏ வை தேர்வு செய்யப்பட்ட இடங்களில் இருந்து கயிற்று இழைகள் போல பிரித்து நீக்கி ஒரு உயிரியிடம் இருந்து மற்றொரு உயிரினத்திற்கு மாற்றும் செயலாகும். Taq பாலிமர் என்ற ஒரு நொதியானது, மிக அதிகமான வெப்ப நிலையில் டிஎன்ஏ வை மிகப்பெரிய அளவில் படியெடுக்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு அதற்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. எல்லோ ஸ்டோன் வெப்ப நீரூற்றில் இருந்த ஒரு நுண்ணுயிரி கொண்டு இந்த பரிசோதனை நிகழ்த்தப்பட்டது. இதுதான் PCR எனப்படும் இன்றைய நவீன மருத்துவ ஆய்விற்கும் குணப்படுத்துவதற்கும் அடிப்படையாக அமைந்தது. PCR என்பது ஒரு குறிப்பிட்ட டிஎன்ஏ பகுதியை பெருக்கி அதனுடைய பல்வேறு பிரிவுகளை படி எடுப்பதாகும். மேலே குறிப்பிட்டுள்ள TAQ என்பது வணிக ரீதியாகவே கிடைக்கும் பாலிமர். இந்த பாலிமரைத்தான் அதனுடைய வெப்ப நிலை சமத்துவத்திற்காக, PCR ல் டி என் ஏ வை படி எடுக்க ,மரபணுவை கத்தரித்து குறைபாடுகளை நீக்க பயன்படுத்துகிறோம்.
ஒரு சில நுண்ணுயிரிகள், வழமை போல் இல்லாது டி என் ஏ வின் மீள் மீள் தொடரியாக இருப்பதை கண்டறிந்து தான் crispr மரபணு குறை நீக்கும் வழிமுறை உண்டானது.
2026 வசந்தத்தில் ஆந்த்ரோபிக் ஒரு ஆய்வுக் குழுவை நிறுவி, செய்யறிவு மாதிரிகள் இதைப் போன்ற கண்டுபிடிப்புகளை வழிமுறைப்படுத்தி மேலும் பல புதிய கண்டுபிடிப்புகளை விரைவில் செய்வதற்கு உதவுமா என்ற கேள்வியுடன் தொடங்கிநர்.
உயிரிகள் ஆய்வுகளில் அவர்களது முகவரி செயலிகளும் மனிதர்களும் இணைந்து செயல்படும்போது சிறந்த முன்னேற்றம் ஏற்படும் என்றும் நினைத்தார்கள்.இதற்காகவே அவர்கள் சொந்த ஆய்வகத்தை நிறுவி, ஒரு குழுவை அமைத்தார்கள். அந்த நிபுணர்கள் கிளாடிற்கு உயிரியல் அறிவியலிலும், ஆய்வக பரிசோதனைகளிலும் செயல்பட வேண்டிய வழிமுறைகளை பயிற்றுவித்தார்கள்.
இன்று அவர்களுடைய முதல் ஆய்வில் வெளியான ஒரு அருமையான செய்தியை அதுவும் கிளாட் தானாகவே கண்டுபிடித்த ஒரு புதுமையான நொதி அமைப்பை குறித்துச் சொல்ல ஆர்வமாக முன்வந்துள்ளார்கள்.. இந்த அமைப்பானது டிஎன்ஏ தொடர்கள் மீள மீள அமைவது போன்ற, ஒன்றை கண்டுபிடித்தது . இதனுடைய செயல்பாடு என்னவென்று இப்போது தெரியவில்லை . எனினும் இப்போது கிளாட் கண்டு அறிந்துள்ள சில அம்சங்கள், வேறு சில குறிப்பிட்ட அமைப்புகளிலும் கூட பயனாகி வருகிறது என்பதும் அறிவியல் உண்மை.அதாவது, அவற்றுக்கு செயல்முறை எழுதலாம், நீக்கலாம், படி எடுக்கலாம், டி என் ஏ வை ஒட்டலாம். இத்தகைய பல முன்னேற்றங்கள் இந்தத் துறையில் ஏற்பட்டு வந்திருக்கின்றன.
இப்போது Claude கண்ட ஒன்று ரிவர்ஸ் ட்ரான்ஸ்கிரிப்டேஸ் (RT- Reverse Transcriptase)என்ற ஒன்றின் அடிப்படையில் இருக்கிறது . இந்த நொதிகள் ஆர் என் ஏ வை, டி என் ஏ வில் படி செய்கின்றன. இந்த மாற்று படியேற்றம் பெரிய நுண்ணுயிரிகளின் தொற்றுத் தாக்குதலில் முன்னரே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், இந்த அமைப்பின் வரைமுறை அம்சங்களை கிளாட் தான் திருத்தமாக சொல்லி இருக்கிறது. அது ,தொடர்புள்ள குறியீடற்ற டி என் ஏ தொடர் கட்டமைப்புகளையும், அத்துடன் கூடவே அணுகத்தக்க ஆனால் என்ன செயல்பாடு என்று இதுவரை விளங்காத புரதத்தையும் கண்டுபிடித்துள்ளது .
ஃபுங் ஷாங் (Feng Zhang) என்ற மரபணுதிருத்த அறிஞர், எம் ஐ டி (M.I.T)
மற்றும் ப்ரோட் அமைப்பில் (Broad Institute, MIT and Harvard University) பேராசிரியராக இருக்கிறார்.
அவர் சொல்கிறார்: ‘செய்யறிவு முகவர் செயலிகள், உயிரியல் துறைக்கு உதவ முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆர்வத்தை தூண்டும் விதமாக ஆர் என் ஏ திருப்பிச் செய்யும் தொடரிகள் மாற்றுப் படியாக்கத்தில் , செயலாற்றுவது ஆர்வத்தை தூண்டும் ஒன்று . இதை மேலும் ஆய்வு செய்ய வேண்டும் தங்களது ஆய்வுகளில் எவ்விதம் செய்யறிவு உதவும் என்பதை பல அறிவியலாளர்கள் இணக்கத்துடன் எடுத்துக்கொள்வார்கள்.’
ஆந்த்ரோபிக் நிறுவனம் எப்படி இந்த செயலியை பயன்படுத்தியது ?
முதலில் அதற்கு மிகப்பெரிய அதிகமான தகவல் தரவுகள் தரப்பட்டன. அவற்றில். டி என் ஏ தொடர்பான அடுக்குகள், மாற்றுப் படியாக்கத்தைக் கண்டறிவதற்காகத் தரப்பட்டன. தகவல் தளத்தை அலசி ஆராய்ந்து எது குறிப்பிடத்தக்க ஆர் டி (RT) குடும்பத்தை சார்ந்தவை என்றும் எது இதில் ஆர்வம் ஊட்டும் ஒரு நபராக இருக்க முடியும் என்றும் தானாகவே ஆராய்ந்து அனுமானித்தது க்ளா(வ்)ட் (Claude) .இ தற்கு 21 மணி நேரம், 210 மில்லியன் டோக்கன்கள், 950 செயலி முகவர்கள் தேவைப்பட்டார்கள். ஒரு முகவர் இதைக்கண்டறிந்தார் .விசித்திரமான தோற்றமுள்ள ஆர் டி யின் அருகே இருந்த மரபணு அருகாமையில் டி என் ஏ தொடரி இருப்பதை இந்த முகவர் கண்டுபிடித்தார். இந்தத் தரவை மீண்டும் ஆராய்ந்து ஆந்த்ரோபிக் ஆய்வகத்தில் பரிசோதித்து இதுவரை நுண்ணுயிர்களில் பாதிப்பு ஏற்படுத்தும் தொற்றுக்களில் அறியப்படாத நொதி அமைப்புள்ள ஒன்றை அறிந்தார்கள். இதை தொடரியுடன் தொடர்புள்ள மாற்றுப்படியாக்கம்(ART) என்று அழைக்கிறார்கள்.
ஆந்த்ரோபிக் ஆய்வகம்
இங்கே பணிபுரியும் குழு பல ஆண்டுகளாக, வழமையில் இல்லாத புரதங்களை கண்டறிந்து வருவதை முதன்மையாக கொண்டுள்ளார்கள். கணக்கீடுகள் , செய்யறிவின் உதவியுடன் சிறப்பாக டி என் ஏ வை ஆராய்வதும், அது எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்பதும் மேலும் உயிரியல் துறையில் அதன் சிறப்பம்சங்களை எவ்வாறு கண்டெடுக்க முடியும் என்பதிலும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. Crispr அமைப்புகள், மரபணு மற்றும் திசுக்களின் சிகிச்சை முறையில் புதிய செயல்முறைகளை,புதிய நொதிகள் கொண்டு வளர்ப்பதும் ஒழுங்கீநங்களை டி என் ஏ வில் அகற்றுவதும் போன்ற துறைகளில் இவர்களுடைய அனுபவம், இந்த ஆய்வகத்தில் இணைந்தவுடன் செய்யறிவு உதவியுடன் கைகோர்த்து நடை பயில்கிறது. புது மருந்துகள் கண்டுபிடிப்பதும் வேதியியல் மற்றும் உயிரியலில் கிளாட்டை பயிற்று வைப்பது இங்கே நடைபெறுகிறது.
ஒரு மூலக்கூறு இயல் ஆய்வகம் போலவே இவர்களது ஆய்வகம் இருக்கிறது. நோயை ஏற்படுத்தும் கிருமிகளை இங்கே கையாள்வதில்லை. ஆய்வகத்தின் அனைத்து நிலைகளிலும் மனிதர்கள் இயங்குகிறார்கள். செய்யறிவை பயன்படுத்தி பரிசோதித்திருந்தாலும், உயிர் பாதுகாப்பு என்ற கவசத்துடன் தான் இயங்குகிறது.
எப்படித்தான் செயல்படுகிறார்கள்?
புரதத் தொடர்புள்ள டி என் ஏ தொடரி களை முதலில் Claude கண்டறிகிறது. அதிலும் அந்தப் புரதத்தின் செயல்பாடுகள் முன்னர் அறியப்படாதவையாக இருக்க வேண்டும். கொடுக்கப்பட்ட புரத தொகுப்பிலிருந்து மாதிரி புரதம் கொண்ட தொகுப்பு எடுக்கப்படுகிறது. அதைப் பற்றிய அனைத்து தகவல்களையும் அது படித்து ஏற்கனவே வெளியான விடைகளுடன் ஒத்துப் போகிறதா என்பதையும் சரி பார்க்கிறது. பிறகு ஒரு குறிப்பிட்ட அமைப்பில் சேராத மரபணுகளில் இருக்கும் செய்திகளை படித்து சிறு குறிப்பாக மனிதர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அதனுடைய செயல்பாடு என்ன அதற்கான ஆதாரம் என்ன என்பதையும் சொல்கிறது. மாதிரிக்காக எடுக்கப்பட்ட பல புரத தொகுப்புகள் இதில் வெளியேற்றப்படுகின்றன. ஒரே ஒரு புரத தொகுப்பு கூட மேற்கொண்டு ஆய்வு செய்வதற்கு பயன்படுத்தப்படலாம்.
இப்படி கண்டறியப்பட்ட ஒரு தொகுப்பை ஆய்வகத்தில் ஆராய்ந்து அதில் இருக்கும் புரதம் என்ன என்பதை உயிர் வேதியியல் மூலமாகவும் கட்டமைப்பின் மூலமாகவும் செய்யறிவின் மூலமாகவும் அலசி ஆராய்வது நடக்கிறது. இதற்கு கிளாட் அறிவியலும் அதன் குறியீடு ம் உதவுகின்றன. இவைகள் அனைத்து அறிவியலாளருக்கும் கிடைக்கும். ஒருங்கிணைப்புகள் நடக்கும்.
கிளாட் தரும் கருதுகோள்கள் மிகவும் ஆழமாகவும் பரந்துm இருப்பதால் அதை படிப்பதே ஒரு செயல்பாடு ஆகிறது. பல நூறு புரதங்களில் இந்தப் புரதத்தை மற்றவற்றைப் புறக்கணித்து தேர்ந்தெடுத்த காரணங்களையும் ஆராய்கிறார்கள்.
கிளாட் கண்டறிந்த ART
கடந்த சில ஆண்டுகளாக பல RT , நுண்ணுயிரியில் கண்டறியப்பட்டுள்ளன . இவை நோய் எதிர்ப்பு சக்தியில் அங்கமாகவும் இருக்கின்றன. பல RT மரபணு ஆய்வுகளில் அல்லது மரபணு சேகரிப்புகளில் பங்காற்றுகிறது.
CLAUDE முகவர்கள் 200000RT சேகரித்தார்கள். அதிலிருந்து 3500 புதிய RT தேர்ந்தெடுக்கப்பட்டது. அதிலிருந்து சுவாரஸ்யமான 20 மாறுபாடுள்ள RT தேர்ந்தெடுக்கப்பட்டு மனிதர் உணர்ந்து கொள்ளும் வகையில் அறிக்கை தயாரானது. இந்தத் துறையில் இருக்கும் வல்லுநர்களுக்கு கூட இதை செய்வதற்கு மாதக்கணக்கில் ஆகும்.
இதை செய்து கொண்டிருக்கும் போது தான் கிளாட் ஒரு வித்தியாசமான தொகுப்பை படித்தது. அதை தீவிரமாக ஆராய்ந்தது. அதிசயப்பட்டது. ஒன்றன்பின் ஒன்றாக மீளும் ஒரு வரிசையை கண்டறிந்தது. ஒரு மனித விஞ்ஞானி எவ்வாறு இதை அணுகுவாரோ அப்படியே இதுவும் செயல்பட்டது. எத்தனை மீள்கைகள், அவைகளுக்கு இடையே உள்ள இடைவெளி என்ன, முன்னரே அறிந்துள்ள RT அமைப்புடன் இது எவ்வாறு ஒத்துப் போகிறது என்றெல்லாம் ஆய்வு செய்த பிறகே ஒரு புது உயிரியல் அமைப்பை கண்டறிந்துள்ளோம் என்று அந்த முகவர் தீர்மானித்து மனிதர்கள் அதை மறு பார்வையிட சமர்ப்பித்தது.
ART , அது கண்டுபிடித்த அமைப்பில் , குறிப்பாக தொற்று பாதித்த நுண் உயிரில் மூன்று பகுதிகளாக காணப்படுகிறது. RT , அதன் பின்னே உள்ள பங்குதாரர் மரபணு, சரியான இடைவெளி உள்ள மீளும் டி என் ஏ கட்டமைப்புகள் ஆகிய மூன்றே அவை.
Crispr-Cas அமைப்பை, உயிரியல் தொழில்நுட்ப செயல்முறை கருவியாக அமைப்பதில் வேறுபட்ட ஆர் என் ஏ தொடர்ந்த அமைப்புகள் எவ்விதம் செயல்படுகிறதோ அவ்விதமே இந்த மீள் மீள் தொடர் அமைப்புகள் காணப்படுகின்றன. இவர்களது முதல் பரிசோதனையில் ART தொடரிகளும் மாறுபட்ட குறிப்பிடத்தக்க சிறிய ஆர் என் ஏ தொடரி போல் இருப்பதால் இரண்டிற்கும் இடையே ஒரு ஒற்றுமை இருக்கக்கூடும்.
இந்த ART எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றி மேலும் பரிசோதனைகள் நடந்து வருகின்றன.
இதில் குறிப்பிடத்தக்கது கிளாட் ஒழுங்கீனமான மூலக்கூறுகளையும், கண்டறிந்து உயிரியல் துறையில் சிறந்த செயல்பாட்டை கொண்டு வரும் என்று நம்பிக்கையும், செய்யறிவும், இயற்றறிவும் உயிரியல் துறையில் சிறந்த பங்காற்ற முடியும் என்றும் தெரியவந்துள்ளது.
‘அணுவிற்கணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி’ – திரு விநாயகர் அகவல்.
உ சாவி
https://www .anthropic.com/news/claude-discovers-novel-enzyme-systems
Discover more from சொல்வனம் | இதழ் 378 | 08 நவ 2026
Subscribe to get the latest posts sent to your email.
