இசக்கி மாதிரி ஆட்கள் எல்லாம் ஒரு காலத்தில் அரிசிக்குத்தான் கீரை விற்றுக் கொண்டிருந்தார்கள். இசக்கி ஒரு குத்து அரிசிக்கு இரண்டு கை கீரையை அளைந்து குத்தாகத் தாராளமாகவே போடுவாள். கொஞ்சம் கொசுறாகவும் நாலு விரற்கடை அளவு போடுவாள். இரண்டு கை கீரை வாங்கினால் அன்றையக் கறிப்பாடே கழிஞ்சுரும், கொஞ்சம் கீரையை உப்புப் போட்டு, மசியக் கடைஞ்சு, ரெண்டு இணுக்கு கறிவேப்பிலை காயம், கடுகு உளுந்தம் பருப்பு, புளி கரைச்சு விட்டு, காரமும் சேர்த்துத் தாளிச்சா, புளிக்கீரைன்னு சோத்துக்குப் போட்டு பிசைஞ்சு சாப்பிடலாம்.
Author: கலாப்ரியா
மீன்
நாகேஷ் மெதுவாக, “மாப்பிள்ளை கொஞ்சம் முரடரா,” என்றார் பாவனாசத்திடம். “அதெல்லாம் இல்லை, அவன் கொஞ்சம் பயந்து போயிருந்தான், பொண்ணு நல்ல லட்சணமா, வாட்ட சாட்டமா இருக்கா அதனாலோ என்னவோ அவனுக்கு கொஞ்சம் காம்ப்ளெக்ஸ்,” என்று சொல்லிக் கொண்டே விரைந்தான்.
ஞாபகக் காற்று
அம்பை தமிழின் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர். அவர் தீவிரமான பெண்ணியவாதியானாலும் அழகியலோடு விளங்குபவை அவர் கதைகள். என்னைப் பொருத்து பெண்ணிய எழுத்தோ அல்லது வேறு விதக் கோட்பாட்டு எழுத்தோ வீரியமாக இருக்க அழகியலைத் துறந்தாலும் தவறில்லை. அம்பையிடம் இரண்டும் இயைந்து வந்தன
